கடவுளை மற..மனிதனை நினை..

06 July 2010

நேற்று நடந்தது போராட்டமா? இல்லைப் போட்டியா?

7:32:00 AM Posted by புலவன் புலிகேசி , , 10 comments

இது வரை எத்தனையோ முறை விலைவாசி உயர்வு நடந்தேறியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் அதை எதிர்த்து பந்த் அறிவித்திருக்கின்றன. ஆனால் நடந்தது ஒன்றும் இல்லை. பொது மக்கள் பாதிக்கப் பட்டதைத் தவிற. இது போன்ற பந்த் பொது மக்களுக்கு அரசியல் கட்சிகளின் மீது வெறுப்பையேத் தந்திருக்கின்றன.

போராட்டங்கள் அரசியல் ஆதாயத்தை நோக்கி நடத்தப் பட்டு வருகின்றன. எதிர்க் கட்சிகள் நடத்தும் போராட்டங்களை ஆளும் கட்சிகளோ அல்லது ஆளும் கட்சிகள் நடத்தும் போராட்டங்களை எதிர்கட்சிகளோ ஆதரிப்பதில்லை. இங்கு மக்களுக்காகப் போராடும் கட்சிகள் இல்லை என்பதை இதுவே புலப் படுத்தும்.

தன் கட்சியின் ஆதிக்கத்தையும், பெருமையையும் நிரூபிப்பதற்காக ஆளும் கட்சிகள் பந்த் நடத்தி அடக்கு முறைகளை கைகொண்டு அதில் வெற்றி பெறும். எதிர் கட்சிகள் பந்த் தோல்வியடையும் என்பது தெரிந்தும் தத்தமது அரசியல் ஆதாயங்களுக்காகவும், தேர்தல் கூட்டனித் திட்டங்களை மனதிற் கொண்டும் இது போன்ற போராட்டங்களை அறிவிக்கின்றன.

இது போன்ற போராட்டங்கள் எல்லாம் அரசியல் கட்சிகளின் சொத்துக்களாக மாறிப் போயிருக்கின்றன. உண்மையில் இங்கு போராட வேண்டியவர்கள் யார்? பாதிக்கப் பட்ட நம்மைப் போன்ற பொது மக்கள். இது போன்ற பெட்ரோல், டீசல் விலையுயர்வுகளால் அத்யாவசிய பொருட்களின் விலையிலும் மாற்றம் நிகழ்வது தவிர்க்க முடியாத ஒன்று.

இதனால் பாதிக்கப் படப் போவது பாமர மக்களும், நடுத்தர மக்களும் தான். ஆனால் நடுத்தர மக்களைப் பொறுத்த வரையில் அவர்களால் அந்த பட்ஜெட்டை சமாளிக்க முடியும். அதனால் இது பற்றி வருத்தம் மட்டும் அடைந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுகிறார்கள்.

அடித்தட்டு மக்களுக்கோ இது பற்றி எடுத்துக் கூறி அணித் திரட்டி போராட்டம் நடத்த யாரும் துணை நிற்பதில்லை. இது போன்ற விலையுயர்வால் நேரடியாக பெருமளவில் பாதிக்கப் படுவது அடித்தட்டு மக்களே. இதே நிலை நீடித்தால் அத்யாவசியப் பொருட்களின் விலை உயர்வு நடுத்தர மக்களை அடித்தட்டு மக்களாக மாற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை.

என்ன நடந்தா என்ன? எனக்கு மூனு வேலை சாப்பாடு இருக்கு என்ற சுய நல எண்ணத்தில் வழ்ந்து பழகிப் போய் விட்ட மாக்களாக இருந்து வருகிறோம். ஒரு வேலை சோற்றுக்கு கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கும் சாமான்ய மக்களின் நிலை பற்றி யாரும் கவலைக் கொள்வதில்லை. அந்த நிலை நமக்கு வரும் நாள் வெகுத் தொலைவில் இல்லை என்பதையும் மறந்து போகிறோம்.

இந்தக் கட்சிகள் நடத்தும் போராட்டங்களின் உள் அரசியலால் அந்தந்தக் கட்சிகள் வலுப்படலாம். ஆனால் மக்கள் நலிந்தவர்களாக மாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இங்கு பெருமளவில் பாதிக்கப் படும் லாறி உரிமையாளர்கள், வணிகர்கள் சார்ந்த தொழிற் சங்கங்கள் ஒன்று கூடி எந்த அரசியல் ஆதாயக் கட்சிகளின் துணையுமின்றி மக்களைத் திரட்டி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும்.

தமிழகத்தில் செம்மொழி மாநாட்டிற்கு மக்களை ஒரு அரசியல் கட்சியால் திரட்ட முடிந்த போது ஏன் அரசுக்கு எதிராக மக்களின் நியாத்திற்காக மக்களைத் திரட்ட முடியாது? பொது மக்களின் ஓட்டுக்களைக் கொண்டு ஆட்சி நடத்தும் இவர்களை பொது மக்களால் மட்டுமே அச்சுறுத்த முடியும். நமக்கான நியாயம் நம்மால் மட்டுமே பெற முடியும்.

10 விவாதங்கள்:

Unknown said...

தலைப்பை வழி மொழிகிறேன்.

Jey said...

மக்கள் ஒருங்கினைந்து காட்டியிருக்க வேண்டிய ஆதரவு, அரசியல் கட்சிகளின் சுயனலத்தால் கிடைக்கவில்லை. கடைசியில் பதிகபடுவது கடை நிலை மக்கள்தான்........

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

//லாறி உரிமையாளர்கள், வணிகர்கள் சார்ந்த தொழிற் சங்கங்கள் ஒன்று கூடி எந்த அரசியல் ஆதாயக் கட்சிகளின் துணையுமின்றி மக்களைத் திரட்டி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும்.//

அப்ப பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் வராதா நண்பரே,?

vasu balaji said...

இத்தனை கோடி நஷ்டமும் ஏழை தலையில்தான் விடியும். ஆளும்கட்சி ஆதரவின்றி பந்த் நடத்த முடியாது என்பதோடு, பந்தினால் எந்த போராட்டமும் வெற்றியடைந்ததாக நினைவில்லை. :(

'பரிவை' சே.குமார் said...

//தமிழகத்தில் செம்மொழி மாநாட்டிற்கு மக்களை ஒரு அரசியல் கட்சியால் திரட்ட முடிந்த போது ஏன் அரசுக்கு எதிராக மக்களின் நியாத்திற்காக மக்களைத் திரட்ட முடியாது?//

ungal kootru 100/100 sariyanathu pulikesi.

Ahamed irshad said...

நேற்று நடந்தது போராட்டமா? இல்லைப் போட்டியா?///

ஜெயா டிவியில் "வெற்றி" சன்டிவியில "தோல்வி"... வெளிநாட்டில இருக்கிறதுநால இதான் தெரியும் நண்பா..

ஷர்புதீன் said...

:(

Bibiliobibuli said...

http://www.youtube.com/watch?v=TD3lF0ZSgb8

Don't miss what Charlie says! Watch it.

புலவன் புலிகேசி said...

//தமிழ் வெங்கட் said... 1
//லாறி உரிமையாளர்கள், வணிகர்கள் சார்ந்த தொழிற் சங்கங்கள் ஒன்று கூடி எந்த அரசியல் ஆதாயக் கட்சிகளின் துணையுமின்றி மக்களைத் திரட்டி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும்.//

அப்ப பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் வராதா நண்பரே,?
July 6, 2010 10:06 AM //

பொது மக்கள் ஒன்று கூடினல் அரசால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி இருக்கையில் என்ன பாதிப்பு வரும்?

அ.சந்தர் சிங். said...

தமிழகத்தில் செம்மொழி மாநாட்டிற்கு மக்களை ஒரு அரசியல் கட்சியால் திரட்ட முடிந்த போது ஏன் அரசுக்கு எதிராக மக்களின் நியாத்திற்காக மக்களைத் திரட்ட முடியாது? பொது மக்களின் ஓட்டுக்களைக் கொண்டு ஆட்சி நடத்தும் இவர்களை பொது மக்களால் மட்டுமே அச்சுறுத்த முடியும். நமக்கான நியாயம் நம்மால் மட்டுமே பெற முடியும்.


100%unmai ithuthan.ithai purinthal

aduththa aatchil intha karunanithi

kaanaamal poi viduvan.