"பாலாவின் பக்கங்கள்" என்ற வலைப்பூவில் எழுதிவரும் பதிவர் பாலா பதிவுலக விவாதங்கள் குறித்து சில சந்தேகங்கள் எழுப்பியிருந்தார். அவருக்கு என்னால் கொடுக்க முடிந்த விளக்கமே இந்தப் பதிவு.
அவரின் பதிவு: பதிவுலகமும் சில சந்தேகங்களும்...
//. "ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி செய்கிறாயே?" என்று கேட்டால் வரும் பதில் என்னவாக இருக்கிறது? "அதென்ன பெண்ணாக இருந்து கொண்டு? அப்படியானால் ஆண் செய்தால் தவறில்லையா?" என்பதுதான் எதிர் கேள்வியாக இருக்கிறது. கேட்பவரின் தொனி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோக்கம் ஒன்றுதானே? இது ஆணாதிக்கமா? ஆண் என்பவன் உணர்வுரீதியாக அதிகம் சிந்திப்பதில்லை. பெண் அதிகமாக சிந்திப்பது உணர்வுரீதியாகத்தான். உணர்வு ரீதியாக சிந்திப்பவர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள். அந்த தொனியிலேயே ஒரு பெண்ணாக இருந்து கொண்டு என்ற வார்த்தை வருகிறது.//
பெண்கள் உணர்வு ரீதியாக சிந்திப்பவர்களாகவே இருக்கட்டும். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டுதான் இது போன்ற கேள்விகள் எழுப்பப் படுகின்றனவா? என்றால் நான் அடித்து சொல்வேன் நிச்சயம் இல்லை என்று. இது போல் பெண்களைப் பார்த்துக் கேட்டவர்கள் பலர் இருக்கின்றனர். ஏன் என்னையும் கூட சேர்த்துக் கொள்ளலாம். யாருக்கும் அவள் ஒரு பெண் என்ற எண்ணமே மேலோங்கி நின்று இது போல் "பெண்ணாக இருந்து கொண்டு இப்படி செய்கிராயே" என்ற கேள்வியை எழுப்புகிறது. இது நிச்சயம் ஆணாதிக்கத்தில் ஊறிப் போன மன்ப்பான்மையே.
//இதே போல பெண்ணுக்கு சமஉரிமை என்று சொல்பவர்கள் சொல்லும் முதல் வார்த்தை நாங்களும் ஆண்களுக்கு இணையாக பல செயல்கள் செய்கிறோம் என்பது. ஒருவர் மாதிரி இன்னொருவர் செய்வது எப்படி சம உரிமை ஆகும். ஆண்கள் போல் உடை உடுத்துதல், அவர்கள் செய்யும் தம்மடித்தல், தண்ணியடித்தல் போன்ற காரியங்கள் செய்யவே இன்றைய இளம் தலைமுறையினர் சம உரிமை என்ற சொல்லை கையில் எடுக்கிறார்கள் என்பது என் கருத்து. இதனை சுட்டிக்காட்டுபவன் ஒரு ஆணாக இருந்துவிட்டால், ஆணாதிக்கமா//
இன்று ஆண்களைப் போல் தம்மும், தண்ணியும் அடிக்கும் பெண்கள் எத்தனைப் பேரை உங்களுக்குத் தெரியும்? சதவீதத்தில் சொல்ல முடியுமா? அப்படியே இருந்தாலும் தம்மோ, தண்ணியோ ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தவறுதான். ஆனால் நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் விடயத்திலேயே ஒரு ஆணாதிக்கம் தெரிகிறது. இது போன்ற செயல்களை ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யலாமா? என்பதே உங்கள் கேள்வி எனப் புலப்படுகிறது. இது தீயப் பழக்கம் இருவரும் செய்யக் கூடாது என சொல்லியிருந்தால் உங்கள் வாதம் ஒத்துக் கொள்ளக் கூடியதாய் இருந்திருக்கும். இப்போது சொல்கிறேன் நிச்சயம் உங்களை அறியாமலே ஆணாதிக்கம் உங்களுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது.
//என் நண்பன் ஒருவன் இருந்தான். மருத்துவராவது அவன் கனவு. ஆனால் முடியவில்லை. காரணம் அவன் பிராமணன். அவனை விட குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் கிடைத்துவிட்டது. பிராமணனாக பிறந்ததுதான் அவன் செய்த தவறா?//
நண்பரே இது நிச்சயம் ஒரு மேட்டுக்குடி சிந்தனையாகவேத் தோன்றுகிறது. மருத்துவக் கனவு யாரோ ஒரு நண்பனுக்கு போனது கண்டு எரிச்சலடையும் நீங்கள், ஒன்றாம் வகுப்பு கூட படிக்க இயலாமல் கஷ்டப் படும் குழந்தைகளைப் பற்றி சிந்தித்ததுண்டா? நிச்சயம் கிடையாது. காரணம் தனக்குத் தேவையான உணவு,உறைவிடம், கல்வி, கொஞ்சம் சொகுசு அனைத்தும் கிடைத்த நடுத்தர அல்லது மேல்த்தர வர்க்கத்தை சேர்ந்த யாருக்கும் அவர்களுக்குத் தெரியாதவர்களின் பிரச்சினைகள் வெறும் செய்தியே. அதுவே அவர்களின் உறவு அல்லது நட்பு வட்டாரத்திற்கு நிகழும் போது அது பிரச்சினையாகி விடுகிறது. பார்ப்பனீயப் பிரச்சினைகளை கையிலெடுத்து பேசக் கூடாது. ஏன் இது பற்றி விவாதிக்கிறீர்கள் என்க் கேட்பது உங்களின் அறியாமையின் அடையாளமாகத் தோன்றுகிறது. பார்ப்பனீயம் என்பது எவ்வளவு கொடூரமான தீவிரவாத செயல் என்பது ஒடுக்கப் பட்ட மக்களுக்கும், அவர்களைப் பற்றி கவலைப் படும் உள்ளங்களுக்கும்தான் தெரியும். உங்களைப் போன்றவர்களுக்குத் தெரியாமற் போனதில் ஒன்றும் வியப்பில்லை.
//"நாட்டில் நடக்கும் அத்தனை வன்முறைகளுக்கும் தீவிரவாத இயக்கங்கள் காரணம் இல்லை, அரசுதான் மக்களை திசை திருப்ப இப்படி நாடகம் ஆடுகிறது, மக்கள் மட சாம்பிராணிகள்!!!" என்று தேர்தல் அன்று ஓட்டு போட செல்லாமல் வீட்டுக்குள் உட்கார்த்து பதிவு எழுதுகிறார்களே இவர்கள்தான் நல்லவர்களா? ஒரு சினிமாவை கூட அரசியல் நோக்கோடு, உர்ரென்று பார்த்துக்கொண்டிருந்தால் மன இறுக்கம் வந்து பைத்தியம் பிடித்து விடாதா?//
இங்கு நீங்கள் யாரைத் தீவிரவாதி எனக் கூறுகிறீர்கள் எனத் தெளிவுப் படுத்த வேண்டும். எந்த பதிவரும் அஜ்மல் கசாப்பையோ, ஒசாமாவையோ ஆதரித்து எழுதியதில்லை. அவர்களின் எழுத்துக்களெல்லாம் ஒடுக்கப்படும் பாமர மக்களின் இயக்கங்களான விடுதலைப்புலிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் குறித்தே இருந்திருக்கிறது. இவர்களை நீங்கள் தீவிரவாதிகள் எனக் கருதினால் நிச்சயம் மேம்போக்காக செய்திகள்ப் படிக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தில் நீங்களும் ஒருவர் என்பதே உண்மை. தன் உரிமைக்காகப் போராடும் எந்த ஒரு அமைப்பின் போராட்டமும் அரசுக்கு எதிராகவே இருக்கும். நிச்சயம் மக்களுக்கு எதிராக இருக்காது. அவர்களை ஒடுக்குவதற்கு இந்த அரசும் பல முதலாளித்துவ நிறுவனங்களுடன் கை கோர்த்து பல செயல்களை செய்து பழியை அவர்கள் மீது போடுவது சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் அறிந்ததே. அப்புறம் யாரும் முத்லாளிகளுக்கு கீழ் பணி செய்ய வில்லையா? எனக் கேட்டீர்களே, அது ஒரு நல்லக் கேள்வி. பதிலைப் புரிந்து கொள்ளுங்கள் யாரும் முதலாளிகளுக்கு கீழ் வேலை செய்யக் கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. முதலாளிகளின் முதலாளித்துவக் கொள்கைகள் மாற வேண்டும். தொழிலாளிக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம். இது தவறு என நினைத்தால் அதுவும் நிச்சயம் நடுத்தர வர்க்க சிந்தனையே.
// கடவுள் மறுப்பாளர்கள் எல்லோருமே கடுமையான வார்த்தைகளால் கடவுளை திட்டுகிறார்களே இது எதற்காக? பொதுவான, வேரிலேயே ஊறிப்போன ஒரு அடிப்படை நம்பிக்கையை உடைக்க வேண்டுமானால் எவ்வளவு பக்குவம் பொறுமை வேண்டும்? மோசமான ஒரு தாய்க்கு பிறந்த ஒரு மகனிடம் சென்று "உங்கம்மா ஒரு தே...." என்றால் அவன் என்ன செய்வான்? அடிக்கத்தான் வருவான். நான் உண்மையைதானே கூறினேன்? என்று வாதம் செய்வது எந்த வகையில் நியாயம்? ஒரு வலைத்தளத்தில் நான் பார்த்த பெரியாரின் வாசகம் இது.//
நீங்கள் எதைக் கடவுள் என நம்புகிறீர்கள் எனத் தெரியவில்லை. முதலிலேயே சொல்லி விடுகிறேன் எனக்கு மதம் சார்ந்த எந்தக் கடவுள் மீதும் நம்பிக்கைக் கிடையாது. என்னைப் பொறுத்த வரைக் கடவுள் என்பது மனிதம் என்ற குணமாக இருக்க வேண்டும். அப்படி அல்லாத ஒன்றும் கடவுள் இல்லை. மற்றபடி நீங்கள் சொல்வது போல் கடவுளை எதிர்க்கும் எல்லோரும் கடவுளைத் திட்டுவதில்லை. அந்தக் கடவுள்களின் உண்மை நிலையை விளக்கும் பலர் உண்டு. ஆனால் சிலர் சும்மாத் திட்டிப் பதிவெழுதுவர். அவர்களின் பதிவுகளில் எனக்கும் உடன் பாடில்லை.
உங்கள் சந்தேகங்களுக்கு ஓரளவு பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். மேலும் இருந்தால் நிச்சயம் பின்னூட்டத்தில் விவாதிக்கலாம்.

37 விவாதங்கள்:
இந்தப் பதிவுலக நாட்டாமைகள் தொல்லை தாங்கமுடியலப்பா. ஏன்சார் நல்லாத்தானே எழுதிட்டிருந்தீங்க சிறுகதை அது, இதுன்னு. இப்ப என்ன திடீருன்னு ஒரு மார்க்கமா? பிரபலமாகணுமா?
நல்ல விளக்கம். நல்லார்க்கு
இன்று ஆண்களைப் போல் தம்மும், தண்ணியும் அடிக்கும் பெண்கள் எத்தனைப் பேரை உங்களுக்குத் தெரியும்? சதவீதத்தில் சொல்ல முடியுமா? அப்படியே இருந்தாலும் தம்மோ, தண்ணியோ ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தவறுதான். ஆனால் நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் விடயத்திலேயே ஒரு ஆணாதிக்கம் தெரிகிறது. இது போன்ற செயல்களை ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய்யலாமா? என்பதே உங்கள் கேள்வி எனப் புலப்படுகிறது. இது தீயப் பழக்கம் இருவரும் செய்யக் கூடாது என சொல்லியிருந்தால் உங்கள் வாதம் ஒத்துக் கொள்ளக் கூடியதாய் இருந்திருக்கும். இப்போது சொல்கிறேன் நிச்சயம் உங்களை அறியாமலே ஆணாதிக்கம் உங்களுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது.
//
நல்ல விளக்கம்.
வணக்கம் நண்பா...
என் சந்தேகங்களுக்கு மதிப்பளித்து ஒரு பதிவிட்டதற்கு முதலில் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
ஆணாதிக்கம் இல்லை என்று சொன்னால் என்னைப்போல் ஒரு முட்டாள் இருக்க மாட்டான். தவறு யார் செய்தாலும் தவறுதான். இதை முதலியே என் பதிவில் அடைப்புக்குள் கொடுத்திருந்தேன். எல்லா இடத்திலும் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றே விட்டுவிட்டேன். ஆணாதிக்கம் இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஆணாதிக்கமாக பார்க்கப்படுகிறதே என்றுதான் சொல்கிறேன். ஒரு பெண்ணிடம் சாதாரணமாக ஒரு ஆண் சொல்லும் அறிவுரைகள் ஆணாதிக்கமாகாதுதானே? ஆணாதிக்கம் என்ற வார்த்தையை ஒரு excuse ஆக பயன்படுத்தக்கூடாதுதானே?
@Bala
நண்பரே அது அவர் சொல்லும் அறிவுரையைப் பொறுத்தது. நீ ஒரு பொட்ட புள்ள நீ இப்புடியெல்லாம் இருக்கக் கூடாது அப்புடின்னி சொன்னா அது நிச்சயம் ஆணாதிக்கமே. அறிவுரைகள் பெண்மையை முன்னிறுத்தி இருக்கக் கூடாது. அது பொதுப்படையானதாய் இருந்தால் ஆட்சேபனை இல்லை.
பார்ப்பனீயம் பற்றி பேசக்கூடாது என்று யார் சொன்னது? எல்லாவற்றையுமே அதில் இருந்து தொடங்கலாமா என்றுதான் கேட்டேன். ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். (அஜித்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. பொதுவான ஒரு பெயர் என்று பயன் படுத்தினேன்) அஜித் ஒரு பார்ப்பனர் அதனால் அவர் கெட்டவர் . இந்த வாதம் சரியா? பெரும்பாலான பதிவர்கள் இந்த நோக்கத்தில்தான் எழுதுகிறார்கள். ஒருவர் தவறு செய்தால் முதலில் அவர் பார்ப்பனரா என்று பார்க்கிறார்கள். இருந்துவிட்டால் ஒரே கொண்டாட்டம் (நான் அவரை சொல்ல வில்லை). பார்ப்பனன் புத்தி இப்படித்தான் போகும் என்கிறார்கள். இல்லாவிட்டால் ஒருவர் பார்ப்பனர் என்று தெரிந்து விட்டால் எப்படா இவர் மாட்டுவார் என்று காத்திருக்கிறார்கள். இது உண்மைதானே. சமூக ஏற்றதாழ்வுகள் இட ஒதுக்கீடு இவற்றை நான் விமர்சிக்கவில்லை. எல்லோரும் தவறு செய்பவர்கள்தான். ஆனால் அவன் பார்ப்பனராக இருந்தால் மட்டும் அதை சுட்டிக்காட்ட யாரும் மறப்பதில்லை.
தீவிரவாத இயக்கங்கள் என்று வார்த்தை ஆயுதம் ஏந்துபவர்கள் என்று குறிப்பிடுவதற்காக சொன்னது. அரசு மக்களை திசை திருப்ப இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறது என்பதும் பெரும்பாலும் ஆதாரம் இல்லாமல் தானே எழுதப்படுகிறது. முதலாளிகள் பற்றி எழுதுபவர்கள் எழுத்தினை படிக்கும் போது முதலாளிகள் எல்லோரும் அயோக்கியர்கள் என்ற எண்ணத்தை தூண்டுவது போலதானே எழுதுகிறார்கள்.
கடவுள் நம்பிக்கையை கிண்டல் செய்து பலர் எழுதுகிறார்கள் அதை நான் எதிர்க்கவில்லை. கடவுளை திட்டிவிட்டு வேண்டுமானால் உங்கள் கடவுளை தண்டிக்க சொல் பார்க்கலாம் என்கிறார்கள். எவ்வளவுதான் பண்புடன் பதிவிட்டாலும் ஏதாவது ஒரு இடத்தில் திட்டாமல் இருப்பதில்லை. தனி நபரை சுட்டிக்காட்டுகிறேன் என்று நினைக்காதீர்கள். ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். ஒரு நண்பர் சிவபெருமான் என் குசுவுக்கு சமம் என்றார். உடனே கொதித்தெழுந்த இந்துவாதி ஒருவர் இந்து கடவுள் என்பதால் இப்படி சொல்கிறாயா என்றதற்கு, இயேசு அல்லா எல்லா மயிரும் எனக்கு ஒண்ணுதான் என்றார். பொதுவில் எதிர்த்தாலும் பண்பு, நாகரீகம் கிடையாதா. மேடையில் அசிங்கமாக பேசும் அரசியல்வாதிக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
//தம்மோ, தண்ணியோ ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தவறுதான். //
ஏன் என்றுத் தெரிந்துக் கொள்ளலாமா?
நான் வழிமொழிகிறேன்
@sanjaygandhi ஏன் இல்லைனு நான் தெரிஞ்சிக்கலாமா
ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமைக்கு போராட யாருமில்லையென நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், சட்டென புயலாய் எழுந்தருளிருக்கும் புலிகேசி என்னும் முருகவேலை வணங்குகிறோம்.
//Bala said... 6
பார்ப்பனீயம் பற்றி பேசக்கூடாது என்று யார் சொன்னது? எல்லாவற்றையுமே அதில் இருந்து தொடங்கலாமா என்றுதான் கேட்டேன். ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். (அஜித்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. பொதுவான ஒரு பெயர் என்று பயன் படுத்தினேன்) அஜித் ஒரு பார்ப்பனர் அதனால் அவர் கெட்டவர் . இந்த வாதம் சரியா? பெரும்பாலான பதிவர்கள் இந்த நோக்கத்தில்தான் எழுதுகிறார்கள். ஒருவர் தவறு செய்தால் முதலில் அவர் பார்ப்பனரா என்று பார்க்கிறார்கள். இருந்துவிட்டால் ஒரே கொண்டாட்டம் (நான் அவரை சொல்ல வில்லை). பார்ப்பனன் புத்தி இப்படித்தான் போகும் என்கிறார்கள். இல்லாவிட்டால் ஒருவர் பார்ப்பனர் என்று தெரிந்து விட்டால் எப்படா இவர் மாட்டுவார் என்று காத்திருக்கிறார்கள். இது உண்மைதானே. சமூக ஏற்றதாழ்வுகள் இட ஒதுக்கீடு இவற்றை நான் விமர்சிக்கவில்லை. எல்லோரும் தவறு செய்பவர்கள்தான். ஆனால் அவன் பார்ப்பனராக இருந்தால் மட்டும் அதை சுட்டிக்காட்ட யாரும் மறப்பதில்லை//
இன்றைய நிலையிலும் இந்தப் பார்ப்பனர்களில் 90 சதவீதத்தினர் தன் என்ற எண்ணமும், தன் குலம் பெரிது என்றத் திமிரும் கொண்டவர்களாக இருந்து வருகின்றனர். அதனால் அவர்கள் சாடப் படுவதில் தவறொன்றும் இல்லை. மீதமிருக்கும் பத்து சதவீதத்தில் இருக்கக் கூடிய சில நண்பர்களும் எனக்குண்டு. மற்றபடி நீங்கள் சொல்வது போல் சாடுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கும் சில அரசியல் அழுக்குகளும் பதிவுலகில் இல்லாமல் இல்லை.
//Bala said... 7
தீவிரவாத இயக்கங்கள் என்று வார்த்தை ஆயுதம் ஏந்துபவர்கள் என்று குறிப்பிடுவதற்காக சொன்னது. அரசு மக்களை திசை திருப்ப இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறது என்பதும் பெரும்பாலும் ஆதாரம் இல்லாமல் தானே எழுதப்படுகிறது. முதலாளிகள் பற்றி எழுதுபவர்கள் எழுத்தினை படிக்கும் போது முதலாளிகள் எல்லோரும் அயோக்கியர்கள் என்ற எண்ணத்தை தூண்டுவது போலதானே எழுதுகிறார்கள்// இது ஏதோ மழுப்பலான பதிலாகத் தோன்றுகிறது. யாரைத் தீவிரவாதிகள் எனக் கூறுகிறீர்கள் எனப் புரியவில்லை. அரசால் நிகழ்த்தப் படும் அநியாயங்களை அப்பட்டமாக நிரூபிக்க முடிந்திருந்தால் இன்று ஒடுக்கப் பட்டவர்கள் இருந்திருக்கப் போவதில்லை. அரசின் செயல்பாடுகளைஉம், அது போன்ற போராட்ட இயக்கங்களின் செயல் பாடுகளையும் உற்று நோக்கும் எண்ணம் இந்த மேட்டுக்குடி வர்க்கத்த்டிற்கு வருவதே இல்லை. வெறும் செய்தியாகப் படித்து விட்டு அந்த இயக்கங்களின் மீது வெறுப்புக் கொள்கின்றனர். அதை சாதகமாகப் பயன் படுத்தும் அரசும் அந்த இயக்கத்தை சேர்ந்த மக்களை பார பட்சமின்றி கொன்று குவிக்கிறது. பல விடயங்களில் நமக்கு ஒரு ஆழ்ந்த சிந்தனை வேண்டும். மேம்போக்காக யோசிப்பதை விடுங்கள்.
//Bala said... 8
கடவுள் நம்பிக்கையை கிண்டல் செய்து பலர் எழுதுகிறார்கள் அதை நான் எதிர்க்கவில்லை. கடவுளை திட்டிவிட்டு வேண்டுமானால் உங்கள் கடவுளை தண்டிக்க சொல் பார்க்கலாம் என்கிறார்கள். எவ்வளவுதான் பண்புடன் பதிவிட்டாலும் ஏதாவது ஒரு இடத்தில் திட்டாமல் இருப்பதில்லை. தனி நபரை சுட்டிக்காட்டுகிறேன் என்று நினைக்காதீர்கள். ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். ஒரு நண்பர் சிவபெருமான் என் குசுவுக்கு சமம் என்றார். உடனே கொதித்தெழுந்த இந்துவாதி ஒருவர் இந்து கடவுள் என்பதால் இப்படி சொல்கிறாயா என்றதற்கு, இயேசு அல்லா எல்லா மயிரும் எனக்கு ஒண்ணுதான் என்றார். பொதுவில் எதிர்த்தாலும் பண்பு, நாகரீகம் கிடையாதா. மேடையில் அசிங்கமாக பேசும் அரசியல்வாதிக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?// இந்த மக்களை மடையர்க்ளாக்கும் கடவுள் நம்பிக்கைக் குறித்து நான் பதிவிலேயேக் கூறியிருக்கிறேன்.
நல்லா விளக்கியிருக்கீங்க!
Adichittu sagungada...
//"ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி செய்கிறாயே?"//
என்ற வாதம் இதற்கு நீங்கள் குறிப்பிடும் விளக்கம் வியப்பாய் இருக்கிறது. பொதுவாக தாய் நாட்டில் தான் தாயை வணங்கும் அதிகமானவர்கள் பெண்ணை மட்டமாக பார்ப்பதில்லை. மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் நீ இப்படி செய்யலாமா என்றுதான் அதிகமான இடத்தில் பொருள் படும்.
//இது நிச்சயம் ஒரு மேட்டுக்குடி சிந்தனையாகவேத் தோன்றுகிறது. மருத்துவக் கனவு யாரோ ஒரு நண்பனுக்கு போனது கண்டு எரிச்சலடையும் நீங்கள், ஒன்றாம் வகுப்பு கூட படிக்க இயலாமல் கஷ்டப் படும் குழந்தைகளைப் பற்றி சிந்தித்ததுண்டா? //
ஒம்பதாம் வகுப்பு படிக்க முடியாத மாணவனும் மருத்துவம் படிக்க வசதியுள்ள [MBC]மாணவனும் எப்படி ஒன்றாவார்கள்? இந்த மாணவனுக்கு சீட்டுக் கொடுப்பதால் அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் படித்துவிடுவானா? சம்மந்தமில்லாமல் முடுச்சுக்கள் போடாதீர்கள். அனைவரும் சமம் என்று யோசியுங்கள். நல்ல திறமையிருந்தும் இட ஓதிக்கீட்டால் நாட்டு ஒரு விஞ்ஞானியை இழக்க வேண்டுமா? அறிவியல், தொழிற்நுட்பம் ஆகிய இடங்களில் சாதிப் பார்க்காமல் எவராகயிருந்தாலும் திறமையின் அடிப்படையில் தான் சேர்க்க வேண்டும்.
உண்மையாக பெண்ணை மட்டமாக பேசும் நபர்களை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்கிறீர்களே! உங்களுக்கு டெஸ்டோஸ்டீரோன் அளவு கம்மியாக இருக்கிறது என நினைக்கிறேன்.
மேலும் இது சம்மந்தமாக படிக்க
http://linguamadarasi.blogspot.com/2010/06/35.html
// எதற்கெடுத்தாலும் ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்கிறீர்களே! உங்களுக்கு டெஸ்டோஸ்டீரோன் அளவு கம்மியாக இருக்கிறது என நினைக்கிறேன்.//
அதிகமாக பேசிவிட்டேன் என நினைத்தால் மன்னித்துவிடுங்கள்.
என் கேள்விக்கு பதில் இல்லையே புலிகேசி..
//@sanjaygandhi ஏன் இல்லைனு நான் தெரிஞ்சிக்கலாமா //
மொட்டக் கடுதாசிக்கு நான் பதில் சொல்றதில்லை பாஸ்.. உங்க அடையாளத்தோட வாங்க.. விரிவா விவாதிக்கலாம்..
////"ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இப்படி செய்கிறாயே?"//
என்ற வாதம் இதற்கு நீங்கள் குறிப்பிடும் விளக்கம் வியப்பாய் இருக்கிறது. பொதுவாக தாய் நாட்டில் தான் தாயை வணங்கும் அதிகமானவர்கள் பெண்ணை மட்டமாக பார்ப்பதில்லை. மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் நீ இப்படி செய்யலாமா என்றுதான் அதிகமான இடத்தில் பொருள் படு//
அப்படி இருப்பதெல்லாம் பத்து சதம் கூடக் கிடையாது. ஒரு பெண் ஓடிப் போய் விட்டால் "பொட்டக் கழுதை திமுர் பிடிச்சி ஓடிப் போய்ட்டா" ன்னுதான் பேச்சு வருது. இதில் கொடுமை என்னன்னா இந்த வார்த்தைகள் ஆணிடம் மட்டுமல்ல பெண்களிடமிருந்தும் வருகிறது.
//ஒம்பதாம் வகுப்பு படிக்க முடியாத மாணவனும் மருத்துவம் படிக்க வசதியுள்ள [MBC]மாணவனும் எப்படி ஒன்றாவார்கள்? இந்த மாணவனுக்கு சீட்டுக் கொடுப்பதால் அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் படித்துவிடுவானா? சம்மந்தமில்லாமல் முடுச்சுக்கள் போடாதீர்கள். அனைவரும் சமம் என்று யோசியுங்கள். // அதை முதலில் நீங்கள் யோசியுங்கள் நண்பரே. நாம் சிந்திக்க வேண்டியது படிப்பறிவில்லாத, படிக்கவியலாமல் தவிக்கும் மக்களுக்காக. அதை விடுத்து என் நண்பனுக்கு இல்லை என நடுத்தர வர்க்க சிந்தனையோட யோசிக்காதீங்க.
//நல்ல திறமையிருந்தும் இட ஓதிக்கீட்டால் நாட்டு ஒரு விஞ்ஞானியை இழக்க வேண்டுமா? அறிவியல், தொழிற்நுட்பம் ஆகிய இடங்களில் சாதிப் பார்க்காமல் எவராகயிருந்தாலும் திறமையின் அடிப்படையில் தான் சேர்க்க வேண்டும்.// இது நிச்சயம் மேட்டுக்குடி சிந்தனை என்பதை என்னால் அடித்து சொல்ல முடியும். ஒரு காலத்துல இந்தப் பார்ப்பனீயர்கள் மக்களை அடிமைப் படுத்தி வச்சிருந்தாங்க. படிச்சவனெல்லாம் அந்த வர்க்கத்தை சேர்ந்தவனாவே இருந்தான். ஒடுக்கப் பட்ட மக்களை படிக்க விட்டதில்லை. அந்த நிலையை மாற்ற கொண்டு வரப் பட்டதுதான் இந்த இட ஒதுக்கீடுகள். நீங்க சொல்ற மாதிரி திறமையின் அடிப்படையில் கொடுக்கலாம். ஆனா அங்கயும் ஒரு விடயம் யோசிக்கனும். எல்லா வசதியும் படைத்தவனுக்கு திறமை இருப்பது ஒன்றும் பெரிய வியப்பில்லை. எந்த வசதியும் இல்லாமல் வெலைப் பார்த்துக் கொண்டும் சாப்பாடு கிடைக்காமலும் படிக்கும் ஒருவனது மதிப்பெண்கள் குறைவதிலும் வியப்பில்லை. அதை வைத்து அவனை திறமையற்றவன் என முடிவு செய்வது நியாயமா? நம்ம மெக்காலே கல்வி முறையில மதிப்பென் எல்லாம் மனப்பாடத்துக்குத்தான் திறமைக்கு நிச்சயமா இல்லை. இதைப் பற்றி யோசிக்கத்தவறுவது ஏன்?
//உண்மையாக பெண்ணை மட்டமாக பேசும் நபர்களை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்கிறீர்களே! உங்களுக்கு டெஸ்டோஸ்டீரோன் அளவு கம்மியாக இருக்கிறது என நினைக்கிறேன்.
மேலும் இது சம்மந்தமாக படிக்க
http://linguamadarasi.blogspot.com/2010/06/35.html// ஆணாதிக்கம் என்பது மட்டமாகப் பேசுவது மட்டுமல்ல. மட்டமாக நினைப்பதும்தான். எனக்கு எது வேணா கம்மியா இருக்கட்டும். ஆனா உண்மையின் நிலையறியும் குணம் இருக்கிறது. அது போதும். இந்த ஆணாதிக்கம், பெண்ணடிமை எல்லாம் பல நூற்றாண்டுகளா நம்ம மக்கள் மனசுல ஊறிப் போச்சு. அப்புடி ஊறிப்போன இடத்துல இந்த மாதிரி விளக்கங்கள் அதை அழிப்பதாகவே இருக்கனும். அதிகப் படுத்துற மாதிரி மேம்போக்கா இருக்கக் கூடாது.
//SanjaiGandhi™ said... 20
என் கேள்விக்கு பதில் இல்லையே புலிகேசி..
//@sanjaygandhi ஏன் இல்லைனு நான் தெரிஞ்சிக்கலாமா //
மொட்டக் கடுதாசிக்கு நான் பதில் சொல்றதில்லை பாஸ்.. உங்க அடையாளத்தோட வாங்க.. விரிவா விவாதிக்கலாம்.// என்ன பதில் எதிர் பாக்குறீங்க? ஏன் தப்பில்லைன்னு சொல்ல முடியுமா?
தப்புன்னு சொன்னது நீங்க தான்.. அதுக்கு எதும் காரணம் இருக்குமில்லை. அதை சொல்லுங்க. நான் இப்போ வரைக்கும் அது சரின்னு சொல்லவே இல்லையே.. என்கிட்ட ஏன் சரி என்பதற்கு காரணம் கேக்கறிங்க? அது ஏன் தவறு என தெர்ந்துக் கொள்ளவே கேட்கிறேன்.
arasiyalla idhellam sagajamappa, less tension more work
@Sanjaygandhi உங்களின் பதிலுக்கு நன்றி.
//நண்பரே இது நிச்சயம் ஒரு மேட்டுக்குடி சிந்தனையாகவேத் தோன்றுகிறது. மருத்துவக் கனவு யாரோ ஒரு நண்பனுக்கு போனது கண்டு எரிச்சலடையும் நீங்கள், ஒன்றாம் வகுப்பு கூட படிக்க இயலாமல் கஷ்டப் படும் குழந்தைகளைப் பற்றி சிந்தித்ததுண்டா?//
மிகச்சரியான கேள்வி தோழரே!
@SanjaiGandhi™ போதைப் பொருட்களூக்கு அடிமையாகி குடும்பமிழந்தவர்கள், உயிரிழந்தவர்கள் பலர். அது மட்டுமல்ல இன்று ஒரு சாதாரண சாமான்யன் சம்பதிக்கும் சில்லரைகளையும் இதற்கு செலவிட்டால் குடும்பம் எப்படி நடத்துவதாம்?
///நாம் சிந்திக்க வேண்டியது படிப்பறிவில்லாத, படிக்கவியலாமல் தவிக்கும் மக்களுக்காக. அதை விடுத்து என் நண்பனுக்கு இல்லை என நடுத்தர வர்க்க சிந்தனையோட யோசிக்காதீங்க///
மீண்டும் புதிராக இருக்கிறது. உங்கள் கணக்குப் படிப் பார்த்தால் ஒதிக்கீடு வருமானம் அடிப்படையில் அல்லவா இருக்கணும் மாறாக சாதி அடிப்படையில் இருக்குதே!. அப்ப ஒதிக்கீடு கிடைக்கப் பட்ட சாதியில் பணக்காரர்கள் இல்லையா? அல்லது ஒதிக்கீடு இல்லாத சதியில் ஏழைகள் இல்லையா?
உண்மைஎன்றால் புள்ளிவிவரக் கணக்கைக் காட்டவும். நாட்டில் ஒதிக்கீடுக் கொண்டுவந்து அறுபது ஆண்டுகள் ஆகிறது இன்னும் ஓதிக்கீடுப் பெற்ற சாதிகள் முன்னுக்கு வரவில்லையா? இன்னும் வரவில்லைஎன்றால் ஏன் அந்த ஒதிக்கீடையே பிடித்திருக்க வேண்டும்?
//இது நிச்சயம் மேட்டுக்குடி சிந்தனை என்பதை என்னால் அடித்து சொல்ல முடியும். ஒரு காலத்துல இந்தப் பார்ப்பனீயர்கள் மக்களை அடிமைப் படுத்தி வச்சிருந்தாங்க.//
எனக்குத் தெரிந்து பல்லவர்கள், கடைகால சோழர்கள் நாயக்கர்கள், சேதுபதிகள், மொகலாயர்கள், வெள்ளைக் காரன் இப்படித் தான் அதிகாரம் இருந்ததாக வரலாறு சொல்கிறது. ஒரு பணக்காரன் தனக்கு கீழ் வேலை செய்பவரை அடிமையாக வைத்தான் என்று சொன்னால் நம்பமுடியும் ஆனால் மிக குறுகிய மக்கள் தொகைக் கொண்ட ஒரு சாதி அடிமையாக வைத்து என்றால் பெரிய பொய்யாக தெரியவில்லையா?
[இந்தக் கேள்விகளுக்கு வால்பையனும் பதிலதரலாம்.]

/
@SanjaiGandhi™ போதைப் பொருட்களூக்கு அடிமையாகி குடும்பமிழந்தவர்கள், உயிரிழந்தவர்கள் பலர். அது மட்டுமல்ல இன்று ஒரு சாதாரண சாமான்யன் சம்பதிக்கும் சில்லரைகளையும் இதற்கு செலவிட்டால் குடும்பம் எப்படி நடத்துவதாம்?
/
அப்ப இது என்ன பள்ளத்துகுடி சிந்தனையா??
(மேட்டுகுடி சிந்தனைக்கு ஆப்போஸிட்)
:))
//மீண்டும் புதிராக இருக்கிறது. உங்கள் கணக்குப் படிப் பார்த்தால் ஒதிக்கீடு வருமானம் அடிப்படையில் அல்லவா இருக்கணும் மாறாக சாதி அடிப்படையில் இருக்குதே!. அப்ப ஒதிக்கீடு கிடைக்கப் பட்ட சாதியில் பணக்காரர்கள் இல்லையா? அல்லது ஒதிக்கீடு இல்லாத சதியில் ஏழைகள் இல்லையா?
உண்மைஎன்றால் புள்ளிவிவரக் கணக்கைக் காட்டவும். நாட்டில் ஒதிக்கீடுக் கொண்டுவந்து அறுபது ஆண்டுகள் ஆகிறது இன்னும் ஓதிக்கீடுப் பெற்ற சாதிகள் முன்னுக்கு வரவில்லையா? இன்னும் வரவில்லைஎன்றால் ஏன் அந்த ஒதிக்கீடையே பிடித்திருக்க வேண்டும்?// முன்னுக்கு வரவில்லைன்னு யார் சொன்னா? இன்னும் முழுமையடையவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. கிராமப் புறங்களில் இன்றும் கூட கீழ் சாதியினர் எனக் கூறி அவர்கள் ஒடுக்கப் படுகின்றனர். வருமானம் அடிப்படையில்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த சாதியைத் திணிச்சி இழிவுபடுத்தி வச்சதால (இன்னும் கூட இருக்கு) சாதி அடிப்படையில போக வேண்டியதாயிருச்சி.
//எனக்குத் தெரிந்து பல்லவர்கள், கடைகால சோழர்கள் நாயக்கர்கள், சேதுபதிகள், மொகலாயர்கள், வெள்ளைக் காரன் இப்படித் தான் அதிகாரம் இருந்ததாக வரலாறு சொல்கிறது. ஒரு பணக்காரன் தனக்கு கீழ் வேலை செய்பவரை அடிமையாக வைத்தான் என்று சொன்னால் நம்பமுடியும் ஆனால் மிக குறுகிய மக்கள் தொகைக் கொண்ட ஒரு சாதி அடிமையாக வைத்து என்றால் பெரிய பொய்யாக தெரியவில்லையா?
// ஹா ஹா ஹா நன்றாக இருக்கிறது உங்கள் குறைபாடுள்ள சிந்தனை. பார்ப்பனீயர்களின் கொடுமைகளை வரலாறில் எழுத அதிகாரத்திலிருக்கும் பார்ப்பனன் விட மாட்டான். வரலற்றை மட்டும் தான் நம்புவேன் நிஜத்தில் நடந்ததை, நடந்து கொண்டிருப்பதை நான் நம்ப மாட்டேன் என நீங்கள் சொன்னால் நிச்சயம் ஒரு மேட்டுக்குடி சிந்தனைதான் உங்களிடம் உள்ளது. நீ இந்த சாதி எங்க வீட்டுக்குள்ள வரக்கூடாது, எங்களத் தொடக்கூடாது, ஆச்சாரம் அது இதுன்னு பேசுறவங்க இன்னைக்கும் இல்லைன்னு சொல்ல முடியுமா? உங்களால்.
//ஒரு பணக்காரன் தனக்கு கீழ் வேலை செய்பவரை அடிமையாக வைத்தான் என்று சொன்னால் நம்பமுடியும் ஆனால் மிக குறுகிய மக்கள் தொகைக் கொண்ட ஒரு சாதி அடிமையாக வைத்து என்றால் பெரிய பொய்யாக தெரியவில்லையா?//
பொருளாதார தேவைகள் தாண்டிய கடவுள் பயம் தான் பார்பனீயர்களின் தில்லாலங்கடிக்கு காரணம், சமஸ்கிருதம் தேவலிபி என்றும் அவற்றை மட்டுமே கடவுள்களால்!? புரிந்து கொள்ள முடியும் என்றும் கயிறு திரித்து பல நூற்றாண்டுகள் ஓசி தீனி தின்னாச்சு, இன்னும் ஒரு சில குடுமிகள் அடங்காமல் வர்ணாசிரமம் பார்த்து கொண்டு திரியுதுங்க, அதுக்கு சிகிச்சை அளித்துவிட்டால் நாடு நலம் பெறும்!
ஆண் ஆதிக்கம், சிலரின் முன்னேற்றம்(உங்களை போல் கூற வேண்டும் என்றால், சிலரின் முன்னேற்றத்தை ஒடுக்குவது) பற்றி எல்லாம் இங்கு பலர் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். வரவேற்க தக்கது தான்.. ஆனால் தங்களின் கருத்துகளில் ஒரு வெறி தெரிகிறதே தவிர, ஒரு நல எண்ணம் தோன்ற வில்லை. அதுக்கு சிகிச்சை அளித்துவிட்டால் நாடு நலம் பெறும்!
Post a Comment