கடவுளை மற..மனிதனை நினை..

21 June 2010

தமிழை வளர்ப்போம்(?) மரங்களை வெட்டுவோம்!


இன்று உலகின் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கேள்விக்குறியாய் இருக்கும் நிகழ்வு நடக்கப் போகும் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு". இந்த மாநாடு தேவைதானா என யோசிக்காத தமிழர் ஒருவரும் இல்லை. நம்மைப் போன்ற மக்களின் வரிப்பணத்தில் 200 கோடிக்கும் மேல் செலவு செய்யப் பட்டிருக்கிறது.

இதில் 118 கோடி ரூபாய் 3840 அடுக்ககங்கள் அமைப்பதற்கும், 59.85 கோடி சாலை சீரமைப்பு பணிகளுக்கும் பயன் படுத்தப் படுகின்றனவாம். மேலும் அங்கு பாதுகாப்பு பணிக்காக ஒரு பலூனில் நான்கு கேமராக்கள் பொருத்தப் பட்டு விண்ணில் பறக்க விடப் பட்டுள்ளது. ஒரு கேமராவின் விலை மட்டும் 50 லகரம்.

இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் 200 கோடி என்பது சும்மா என்றே தோன்றுகிறது. எத்தனை கோடிகள் ஆனதோ? இன்னும் எத்தனை ஆகுமோ? நாட்டில் விவசாயப் படுகொலைகள், பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படிப் பட்ட மாநாடு இவ்வளவு பொருட் செலவில் தேவைதானா?

3840 அடுக்ககங்கள் இவ்வளவு விரைவில் சாத்தியமாகும் போது ஏழை மக்களுக்கும், சுனாமியால் வீடிழந்தோருக்கும் கட்டிக் கொடுக்கப் படும் வீடுகள் மட்டும் ஏன் வருடக் கணக்காகிறது?

இத்தனை கோடிகள் செலவில் இவ்வளவு நாள் கவனிப்பாறற்றுக் கிடந்த சாலைகள் துரிதமாக சீரமைக்கப் படும் போது, இவ்வளவு நாள் செய்யப் படாதது ஏன்?

இதுவரை சாலைகள் சீரமைப்பு என்ற பெயரில் கோவையை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன.ஊட்டி சாலையில் 600க்கும் மேற்பட்ட மரங்களும், திருச்சி செல்லும் சாலையில் 200க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டித் தள்ளியிருக்கின்றனர். இங்கு வெட்டப் பட்டவை வெறும் மரங்கள் அல்ல. நம் மனிதமும் தான்.

மரங்களைக் கொன்று இப்படி ஒரு விழா தேவைதானா? மரங்களுக்காக மக்கள் ஏங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கும் போது இவ்வளவு மரங்கள் கொலை செய்யப் பட்டு ஒரு தலைவனின் ஆசைக்கு விழா எடுப்பது நியாயம் தானா?

"ஒரு பக்கத்து மரங்களை மட்டும் வெட்ட சொல்லிருக்கோம், தேவைப் பட்டா இன்னொருப் பக்க மரத்தையும் வெட்ட சொல்லிருக்கொம்" என கலக்டர் முன்னர் கூறியிருந்தார். மரங்களை வெட்டி மனிதம் அழிக்கும் இந்த மிருகப் பணிக்கு எடுக்கப் படும் விழாவிற்கு பெயர் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு".

இதெல்லாம் பார்த்தப் பின்பும் நம் மக்கள் ஒரு ரூபாய் அரிக்காகவும், ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத கலர் டி.விக்காகவும் மீண்டும் வாககளிக்கப் போவது உறுதியே. என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தேர்தலின் போது என்ன சொல்லி ஓட்டு வாங்கலாம் என்பது அந்த அரசியல்வியாதிகளுக்குத் தெரியும்.

"இந்த மாநாட்டின் மூலம் எத்தனைப் பேருக்கு வேலைக் கிடைச்சிருக்குத் தெரியுமா?" என என் நண்பன் கேட்டான்.

எத்தனை பேருக்கு?
எவ்வளவு நாளைக்கு?
எவ்வளவு ரூபாய்க்கு? என்றேன்.

அவனிடம் பதிலில்லை.

எத்தனை உயிர்கள் இலங்கையில் அழிக்கப் பட்டது தெரியுமா?
எத்தனை மரங்கள் கோவையில் கொல்லப் பட்டது தெரியுமா?
அதனால் என்ன நடக்கப் போகிறது எனத் தெரியுமா?
விவசாயப் படுகொலைகள் பற்றித் தெரியுமா?
பட்டினி என்றால் என்னவென்றுத் தெரியுமா?
உழைக்கும் வர்க்கத்தின் நிலைத் தெரியுமா? என்றேன்.

என்னை ஏளனமாகப் பார்த்து விட்டு எதற்கும் பதில் சொல்லாமல் திரும்பிப் போனான்.


21 விவாதங்கள்:

பனித்துளி சங்கர் said...

இது போன்ற பதில்களற்ற கேள்விகள் மட்டுமே எஞ்சியிருக்கிறது பலரின் இதயங்களில் !

Chitra said...

"ஒரு பக்கத்து மரங்களை மட்டும் வெட்ட சொல்லிருக்கோம், தேவைப் பட்டா இன்னொருப் பக்க மரத்தையும் வெட்ட சொல்லிருக்கொம்" என கலக்டர் முன்னர் கூறியிருந்தார். மரங்களை வெட்டி மனிதம் அழிக்கும் இந்த மிருகப் பணிக்கு எடுக்கப் படும் விழாவிற்கு பெயர் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு".

.....மரங்களை வெட்டாமல் இதை செய்ய முடியவில்லையா? :-(

sathishsangkavi.blogspot.com said...

//இதுவரை சாலைகள் சீரமைப்பு என்ற பெயரில் கோவையை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன//

மக்கள் தொகையும், வாகனங்களின் எண்ணிக்ைகும் அதிகமாகும் போது சாலைகள் நிச்சயம் பெரிதாக்க வேண்டும் இல்லை என்றால் போக்குவரத்து நெறிதல் அதிகமாகும்.. அதனால் மரங்களை வெட்டித்தான் ஆக வேண்டும்... ஒரு மரத்தை வெட்டினால் அதற்காக பத்து மரக்கன்றுகளை நட்டு இருந்தால் இன்னும் சந்தேசாம்....

ஸ்ரீராம். said...

பனித்துளி சங்கரையும், சங்கவியையும் எதிரொலிக்கிறேன்...

புலவன் புலிகேசி said...

//Sangkavi said... 3
//இதுவரை சாலைகள் சீரமைப்பு என்ற பெயரில் கோவையை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன//

மக்கள் தொகையும், வாகனங்களின் எண்ணிக்ைகும் அதிகமாகும் போது சாலைகள் நிச்சயம் பெரிதாக்க வேண்டும் இல்லை என்றால் போக்குவரத்து நெறிதல் அதிகமாகும்.. அதனால் மரங்களை வெட்டித்தான் ஆக வேண்டும்... ஒரு மரத்தை வெட்டினால் அதற்காக பத்து மரக்கன்றுகளை நட்டு இருந்தால் இன்னும் சந்தேசாம்....
June 22, 2010 5:03 AM //

இவ்வளவு நாட்கள் இல்லாமல் இப்போதுதான் அங்கு மக்கள் தொகை அதிகமாகி விட்டிருக்கிறதா? ஒரே நேரத்தில் இத்தனை மரங்களை வெட்டித் தள்ள. பத்து இல்லீங்க, ஒன்னு நட்டாலும் யார்ப் ப்ராமறிப்பார்கள்.

திருவாரூர் சரவணா said...

ஆயிரம் ரூபாய் செலவழிப்பது பெரிதில்லை. ஆனால் பத்தாயிரம் ரூபாய் வருமானம் ஈட்டத் தெரிந்தால்தான் ஆயிரத்தை செலவழிக்க யோக்கியதை உண்டு என்று என் தாத்தா சொல்வார். இந்த பழக்கம் தனி மனிதர்களிடமே மிக குறைவு. ஊரான் பணம்தானே என்று நினைத்து செலவழிக்கும் அரசியல் புள்ளிகளிடம் மட்டும் இதை எதிர்பார்க்க முடியுமா என்ன?

மரங்கள் விஷயத்திலும் இப்படித்தான்.

முனைவர் இரா.குணசீலன் said...

அந்த ஏளனப் பார்வையின் பொருள்....

நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க?

என்பது தான்!

ஆட்டு மந்தைகள் போல வாழ்வோர் நடுவே நாம் அவர்களுக்கு விந்தையாகத் தெரிவது இயற்கையே..

செம்(மறியாட்டு) செம்மொழி மாநாடு என்ற பெயரில் கட்சி மாநாடுதான் நடக்கிறது.

விலங்குகளிடம் மனிதத்தை எதிர்பார்ப்பது நம் தவறுதான் நண்பரே..

அங்கு சுயநலம் மட்டுமே மிஞ்சி நிற்கும் என்பது என் கருத்து.

ரிஷபன்Meena said...

மர வெட்டினதுக்கு கூட மன்னிப்பு கொடுக்கலாம், வரிப் பணத்தை வாரி இறைத்ததுக்கு கூட சரி அரசியல்வாதின்னா இப்படின்னு உட்டுடலாம்

ஆனா..............

செம்மொழியான தமிழ்மொழியாம்னு காட்டுக் கூச்சலில் ஒரு கிரகம் வருதே அதை மட்டும் மன்னிக்கவே முடியாது

MathiSudhanan said...

For freedom kumaran held the flag and died, there lies some valuable reason.

For Growing Tamilism(No comments on this as everybody knows it.), they are killing the Environment.

In Tamil a famous saying is there (oru naal Koothukku Mesaya Seraicha Kathai.) That is happening here.

Who is going to suffer? The climate will change. Who cares?

Be a Tamilian (just watching whatever happens).

அன்புடன் நான் said...

சாட்டையடி பதிவு.... உங்க ஆதங்கம் மற்றும் கேள்விகள் நேர்மையானது. பதில்?????

சசிகுமார் said...

இந்த மாநாட்டில் கலந்துக்க ஒரு நாளைக்கு 250 ரூபாய் ,பிரியாணி, குவாட்டர் என்ற வீதத்தில் ஆள் பிடிக்கிறாங்க.
டே மானங்கெட்ட மக்களே நீங்க இன்னுமாடா திருந்தல. இந்த அந்த கேவலமான அரசியல் வாதிங்க பின்னாடி ஏண்டா போறீங்க.

Kumar said...

//மக்கள் தொகையும், வாகனங்களின் எண்ணிக்ைகும் அதிகமாகும் போது சாலைகள் நிச்சயம் பெரிதாக்க வேண்டும் இல்லை என்றால் போக்குவரத்து நெறிதல் அதிகமாகும்.. அதனால் மரங்களை வெட்டித்தான் ஆக வேண்டும்//

Sangkavi, the infrastructure can be built without cut the trees.. If you see the CM's house in the gopalapuram, there is a shed in front of the home without cut the trees (put the hole on the roof).

If it is possible in CM's home, then why not in the street????

க‌ரிச‌ல்கார‌ன் said...

இன்னொரு க‌ண்டுபிடிப்பு பார்த்தீங்க‌ளா???

ஜுன் என‌ப‌தை சூன் என‌ எழுதினால் அது செம்மொழித் த‌மிழாம்!

பெட்டிக்க‌டைக‌ள் வ‌ரை த‌மிழில் பெய‌ர் மாற்ற வேண்டும் என‌ கூறி விட்டு அவ‌ங்க‌ இன்னும் "ரெட் ஜெய‌ண்ட் மூவிஸ்" என்று தான் தொட‌ர்கிறார்க‌ள்...

கலகலப்ரியா said...

:)

துளசி கோபால் said...

சங்கவியின் பின்னூட்டத்தை வழிமொழிகின்றேன்.

vasan said...

எதையும் த‌ங்குவான் த‌மிழன்.
இன‌ம‌ழிந்த‌த‌ற்கே, இர‌ண்டும‌ணி
உண்ணாவிர‌த‌ம், ஓரிரு க‌டு'தாசி'.
ம‌ர‌ம‌ழிவுக்கா மருகுவான் ம‌ர‌த்த‌மிழன்
(எழுத்துப்பிழைய‌ல்ல‌) இய‌லாமை.

பிரத்யூஷ் said...

முத்தமிழ் பதில்கள்

எத்தனை உயிர்கள் இலங்கையில் அழிக்கப் பட்டது தெரியுமா?

என்ன ஒரு ரெண்டு லட்சம் பேர்

எத்தனை மரங்கள் கோவையில் கொல்லப் பட்டது தெரியுமா?

பக்குத்துலே நீலகிரிமலை இருகுஇல்லே அதை பொய் முதலே பாரு மொட்டை அடிச்சுஇருகோம் அங்கே மரம் இல்லப்பா இருந்த ஏன் உருக்குள்ள வரேன்

அதனால் என்ன நடக்கப் போகிறது எனத் தெரியுமா?
wrong question answer last

விவசாயப் படுகொலைகள் பற்றித் தெரியுமா?
இனிமேல் ஊருக்குள்ளே ஒரு பயலுக சாவ மாட்டானுக விவசாயம் இருக்காது ,விவசாயியும் இருக்கமாட்டான் ,நம்ம பயலுகதான் எல்லாம் ரியல் எஸ்டேட் போட்டாச்சு

பட்டினி என்றால் என்னவென்றுத் தெரியுமா?உழைக்கும் வர்க்கத்தின் நிலைத் தெரியுமா?

தம்பி எந்த ஊர்ல இருக்கீங்க
ரெண்டு ரூபாய்க்கு அரிசி ,
உழைகரவங்க கஷ்டபட்டு வரும்போது மான் ,மயில் ஆடறதையும் பார்க்க கலர் டீவி, ஏழைகள் கஷ்ட பட்டா என் மனசும் தாங்காது நம்ம கழக குடும்பத்திலும் யாருக்கும் தாங்காது அதனாலே தான் வெயில் மழை என்று பாராது கஷ்ட படுவீர்கள் என்று பயந்து அந்த ரெண்டு ஏக்ரா நெலம் மட்டும் நம்ம கையில் இனியும் இருக்குங்க , என்ன தப்பா

now answer my questions

எத்தனி லெட்டர் எழுதி இருக்கிறேன் ஈழ பிரச்சனைக்கு தெரியுமா?

யார் தமிழ் ராசாவை காப்பாதணும்?எனக்கு பிறகு தமிழகதிக்கு யார் ?

தமிழர்களையும் தமிழையும் காப்பாற்ற இத்தாலிய தெய்வம் அருள் புரியட்டும்

அஹோரி said...

ஒரு மயி** ரும் தெரியாம கோடி கணக்குல சொத்து சேர்த்துட்டான். குஸ்கா வுக்கு அலையிற நாய்களை பத்திதான் நாம கவலை படனும்.

Thenammai Lakshmanan said...

தேர்தலின் போது என்ன சொல்லி ஓட்டு வாங்கலாம் என்பது அந்த அரசியல்வியாதிகளுக்குத் தெரியும்//

இதுதான் உண்மை புலவரே..

Anbu said...

@Sangkavi

கூமுட்டை!

Anonymous said...

;0 Cool Dude."Marathi Tamilanukku ulla viyathi". 2011 varaikumavathu Marakkama irukka... Enumm Niraiya "pulavan PULIKESI" thevai tamil nattukku.