கடவுளை மற..மனிதனை நினை..

19 June 2010

இராவணன் - சொல்லப் படாதவை

12:35:00 PM Posted by புலவன் புலிகேசி , , , 29 comments

மேட்டுக்குடித் தனத்தையும் அவர்களால் ஒடுக்கப் பட்டோரின் போராட்டத்தையும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தயாரிப்பில் படமாக எடுத்தால் இப்படித்தான் இருக்குமோ? என வருத்தப் பட வைத்து விட்டார் இயக்குனர் மணிரத்னம். வீரா என்ற ஒடுக்கப் பட்ட வர்க்கத்தை சேர்ந்த கதா நாயகன், ராகினி என்ற மேட்டுக்குடியில் பிறந்த பெண், இவள் மேட்டுக்குடித் தனமுடைய அரசாங்க(அரசியல்வியாதிகளின்) அடிமையான போலீஸ் தேவின் மனைவி. இவர்கள் மூவரை மையப் படுத்தி நகர்கிறது படம்.

வீரா ஏன் ஒடுக்கப் படுகிறான். அவன் ஏன் தீவிரவாதி என அறிவிக்கப் பட்டான் என்பதற்கு பெரிதாய் ஒன்றும் விளக்கம் இல்லை.

விடுதலைப் புலிகளாகட்டும், அது போன்ற வேறு எந்த அமைப்பாகட்டும் ஏதோ ஒரு உரிமைப் பறிக்கப் படுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் ஒடுக்கப் படுவதை எதிர்த்து நிற்கிறார்கள். மக்களின் பார்வை அவர்களின் நியாயம் பக்கம் திரும்பும்.

எங்கே அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைத்து விடுமோ என அஞ்சும் அரசியல்வாதிகள் அவர்களின் அரசியல் தந்திரத்தின் மூலம் அந்த அமைப்புகள் பற்றி மக்களிடையே ஒரு தவறான அபிப்ராயம் ஏற்படுத்த முயல்வர். உதாரணத்திற்கு பொது மக்கள் அதிகமுள்ள இடங்களில் குண்டு வைப்பது, இரயில் தண்டவாளங்களைத் தகர்ப்பது போன்றவற்றை நீதிக்காக போராடும் எந்த ஒரு அமைப்பும் செய்யாது.

ஆனால் அவற்றை இந்த அரசியல்வாதிகளே அரங்கேற்றுவர். மக்கள் பலர் கொல்லப் படுவர். கேட்டால் இது அந்த அமைப்பினரின் தீவிரவாத செயல், அவர்கள் ஒடுக்கப் பட வேண்டும் என அறிக்கை விடுவர். மக்களுக்கு அது போன்ற செய்திகளை நம் விளம்பர செய்தி ஊடகங்களும் கொஞ்சம் கூட கூச்சமின்றி போட்டுக் காட்டி அந்தந்த அமைப்புகள் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தி விடும்.

இவற்றை சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் நம் அரசியல்வாதிகள் அவர்களின் கையாட்களான காவல்துறை, இராணுவம் கொண்டு அவர்களை அழிக்கப் புறப்பட்டு விடும். இது போன்ற அரசியல்வியாதிகளின் அடக்கு முறைகள், அவர்களின் அயோக்யத்தனங்கள் அனைத்தும் இந்தப் படத்தில் சொல்லப் படாமல் மறைக்கப் பட்டிருக்கின்றன (ஒரு வேளை சொல்லப் பட்டிருந்தால் இந்தப் படத்தையும் அடக்கியிருப்பார்களோ என்னவோ?).


படத்தின் துவக்கக் காட்சிகளில் வீராவின் ஆட்கள் காவல்துறையினர் சிலரை கட்டிப் போட்டு தீ வைக்கின்றனர். இங்கு ஒரு விடயம் சொல்லியாக வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால் இது மிகப் பெரிய தவறாகவேத் தெரியும். தவறும் கூடதான். இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் உண்மை நிலை என்ன? இது போன்ற போராட்ட அமைப்புகளைப் பொறுத்த வரையில் அவர்கள் காவலர்கள் அல்ல. அவர்களின் கூட்டத்தை அழிக்க வந்த எதிரிகள். அவ்வளவே. இதை நான் நியாயப் படுத்த விரும்பவில்லை. குற்றம்தான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அவர்க்ளை அப்படி ஒரு செயல் செய்யும் அளவிற்கு மாற்றியது இந்த அரசியல் தந்திரிகள்.

அவர்களின் அடக்கு முறைகளுக்கு பலிகடாவாக்கப் படுவது இந்த காவலர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் இது போன்ற போராட்ட அமைப்பினர். ஆனால் இது குறித்து தெளிவான விளக்கமில்லாமல் ஒரே ஒரு காட்சியில் வீரா ஆவேசமாகப் பேசும் போது வரும் இடைச் செறுகல் வச்னம் போல "அவங்க கத்தியை எடுத்தாங்க நாங்களும் எடுத்தோம்" என அழுத்தமில்லாமல் ஒளிவு மறைவாக சொல்லி விட்டிருக்கிறார்.

போராட்டங்களின் போது போலீஸிடமோ, ராணுவத்திடமோ அந்த எதிர் அமைப்பை சேர்ந்த பெண் சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதையும், அவர்களின் அட்டூழியங்களையும் கூட மிக சுலபமாக அழுத்தமின்றி சொல்லி விட்டிருக்கிறார். போர் புரியுமிடத்தில் எதிரியின் தங்கையை மட்டும் தூக்கிக் கொண்டு மற்றவர்களை விட்டு விடும் அளவுக்கு அக் காவலர்களில் பலர் நல்லவர்களாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றனர். சிலர் ஆந்தப் பெண்ணை சீரழிக்கும் கெட்டவர்களாக சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள்.

உண்மையில் போராட்டங்களில் அப்படி நடக்குமா? இலங்கையில் எவ்வளவுப் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப் பட்டிருக்கிறது? இவற்றையெல்லாம் அழுத்தமாக சொல்ல முடியாத அளவுக்கு மணிரத்னம் ஒன்றும் சாதாரன இயக்குனர் அல்ல.

ஆனால் சொல்லாததற்கு காரணம் என்னவாக இருக்கும்? நிச்சயம் அரசியல் வாதிகள் மீதான பயமே. அப்படி சொல்லப் பட்டிருந்தால் இன்று இந்தப் படம் வெளி வந்திருக்காது.

ராமாயணக் கதையில் கூட ராவணன் நல்லவன் என எண்ணுபவன் நான். அந்த வகையில் இந்த ராவணனும் நல்லவனே. ஆனால் அந்த வீரா பாத்திரத்திற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கத் தவறிய (அ) பயந்த மணிரத்னத்தால் அந்த ராவணன் பெரிதாக மனதில் பதியவில்லை.

மற்றபடி தங்கையை சீரழித்ததற்காக காவலன் ஒருவனின் மனைவிக் கடத்தல், பின் அப்பெண் மீதுக் காதல், அந்தப் பெண்ணை வைத்தே நாயகன் அழிக்கப் படும் "சுப்ரமணியபுரம்" க்ளைமேக்ஸ் என படம் முழுக்க கமர்சியலாக வந்திருக்கிறது. வேறொன்றும் சொல்லிக் கொள்வதற்கு இல்லை.

29 விவாதங்கள்:

அகல்விளக்கு said...

நேர்மையான விமர்சனம் தல...

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா அனல் பறக்கிறது விமர்சனம் . CORPERATE கம்பெனி கூட சேர்ந்து எப்படி moovoist
கருத்துக்கள் பேச முடியும் .......இரண்டாவது மக்கள் பிரச்னையை தனிநபர் பிரச்சனையாக
மாற்ற நினைக்கும் அயோக்கியத்தனம் .......................... வடகிழக்கில் பெண்கள் கொத்து கொத்தாய் தான் கற்பழிக்க படுவார்கள் ........அவர்களின் நியாயம் என்ன என்பதை மறைத்து ......
வெறும் ஒரு பெண்ணிற்கான போராட்டமாய் சித்தரித்து .........போராளிகளை அசிங்க படுத்துகிறார் மணி சார் ....நான் எழுத நினைத்ததை எழுதிவிட்டாய் அருமையான பதிவு

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா அனல் பறக்கிறது விமர்சனம் . CORPERATE கம்பெனி கூட சேர்ந்து எப்படி moovoist
கருத்துக்கள் பேச முடியும் .......இரண்டாவது மக்கள் பிரச்னையை தனிநபர் பிரச்சனையாக
மாற்ற நினைக்கும் அயோக்கியத்தனம் .......................... வடகிழக்கில் பெண்கள் கொத்து கொத்தாய் தான் கற்பழிக்க படுவார்கள் ........அவர்களின் நியாயம் என்ன என்பதை மறைத்து ......
வெறும் ஒரு பெண்ணிற்கான போராட்டமாய் சித்தரித்து .........போராளிகளை அசிங்க படுத்துகிறார் மணி சார் ....நான் எழுத நினைத்ததை எழுதிவிட்டாய் அருமையான பதிவு

விக்னேஷ்வரி said...

இனி தான் பார்க்கணும்.

அத்திரி said...
This comment has been removed by the author.
அத்திரி said...

நச் விமர்சனம்

அத்திரி said...

நச் விமர்சனம்

ஜானகிராமன் said...

உங்களுடைய மாறுபட்ட பார்வை அழுத்தமாயிருக்கிறது. ஆனால் படத்தின் மேக்கிங்கைப் பற்றியும் மெனக்கெடலைப் பற்றியும் கொஞ்சம் பாராட்டியிருக்கலாம்.

ஸ்ரீராம். said...

சூடான விமர்சனம்...!

சசிகுமார் said...

படம் பார்த்துட்டு வந்து சொல்றேன் எப்படி உங்களோட விமர்சனம் என்று

vels-erode said...

யாரங்கே,? நாடு கடத்தபபட அடுத்த ஆள் ரெடி...!

vels-erode said...

யாரங்கே,? நாடு கடத்தபபட அடுத்த ஆள் ரெடி...!

அழகிய அனானி said...

புலிகேசி ... வெண்ணிற இரவுகள் கூட சேந்ததுலேருந்து உங்க போக்கு சரியில்ல....பாத்து கட்டம் கட்டிட போறாங்க...

புலவன் புலிகேசி said...

// அழகிய அனானி said...
புலிகேசி ... வெண்ணிற இரவுகள் கூட சேந்ததுலேருந்து உங்க போக்கு சரியில்ல....பாத்து கட்டம் கட்டிட போறாங்க...//

நண்பரே நான் வெண்ணிற இரவுகள் கூட நிறைய சண்டையிட்டிருக்கிறேன். அதனால் அவன் பதிவுலகம் விட்டு வெளியேறவும் முயற்சித்திருக்கிறான். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கு சமீப காலமாக நிறைய விடயங்களில் நடக்கும் உள்குத்துக்களை எதிர்க்க வேண்டும் என தோன்றுகிறது. வெறுமனே எழுதிக் கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. நமக்கு தோன்றுபவைகள் ஒருவருக்காவது போய் சேர்ந்து யோசித்தால் நலம். அவ்வளவே. இதற்காக கட்டம் கட்டி ஒதுக்கி வைப்பவர்கள் பற்றி கவலையில்லை. நல்ல விடயங்கள் எதிர்க்கப் பட்டால் நிச்சயம் அவர்களின் இயலாமை அல்லது மேட்டுக்குடித் தன்மை காரணமாக இருக்கும். ஏனென்றால் நானும் அப்படி இருந்தவன் தானே...

தாராபுரத்தான் said...

படம் பார்த்தே ஆகவேண்டும் போல் இருக்கிறதுங்கு உங்க........

புலவன் புலிகேசி said...

//தாராபுரத்தான் said... 15
படம் பார்த்தே ஆகவேண்டும் போல் இருக்கிறதுங்கு உங்க........
June 19, 2010 7:13 PM //

ஐயா, என்ன சொல்ல வரீங்க முழுசா சொல்லுங்க.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.

அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?

சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.

இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?

புலவன் புலிகேசி said...

@ஆட்டையாம்பட்டி அம்பி நண்பரே அம்பி ராமாயணம் ஒன்றும் போற்றப் பட வேண்டிய அளவுக்கு உன்னத காவியம் அல்ல. ராமனும் ஒன்றும் நல்லவன் அல்ல. என் மீது கோபம் வந்தால் தயவு செய்து அறிஞர் அண்ணாவின் "கம்பரசம்" என்ற புத்தகம் வாங்கிப் படியுங்கள். ராமாயன யோக்யதை புரியும். நான் சொல்ல வந்த விடயம் புரியாமல் சம்பந்தமே இல்லாமல் இந்து மதம் அது இது என புலம்பியிருக்கிறீர்கள்.

Unknown said...

@வெண்ணிற இரவுகள்....!

'CORPORATE' கம்பெனியோட 'CO-OPERATE' பண்ணலைனா பாக்ஸ்-ஆபீஸ் HIT ஆகாமல் 'BUT' டாகி, கடன் கட்ட இது ஒன்னும் GV பிலிம்ஸ் அல்ல...மெட்ராஸ் டாக்கீஸ் ங்க அண்ணோவ்.......
இன்னைக்கு படம் பண்றதே காசுக்காகத்தான்...
கடன் பட்டு கலங்கினான் இலங்கை வேந்தன் என்று பாட இது 'MGR' காலம் அல்ல...
3000 கோடி மொழி மாநாடு வசூல் நடத்திய நிதி-கள் காலம்...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

@புலவன் புலிகேசி

I understood what you wrote. I had a general question. So I asked this. Do you have an answer for this question?

இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?

புலவன் புலிகேசி said...

@ஆட்டையாம்பட்டி அம்பி

இந்து முன்னனி, முஸ்லீம் முன்னேற்ற கழகம் போன்ற ஜாதி, மதம் சார்ந்தவர்களை எனக்குப் பிட்க்காது. ராம கோபாலன் என்ன சொல்லியிருப்பார்? நிச்சயம் எதிர்ப்புத் தெரிவித்திருப்பார் அல்லது வழக்கு. வேறென்ன?

UFO said...

தரமான விமர்சனம்.
நன்றி. புலிகேசி ஐயா.

prince said...

//ராமாயணக் கதையில் கூட ராவணன் நல்லவன் என எண்ணுபவன் நான். //

சும்மா நச்சின்னு இருக்கு விமர்சனம்.

Meerapriyan said...

manirathnathidam richness irukkum. aanaal nermaiyaana pathivai ethirparkkalaama? raavanan nallavan enkiraaraa keddavan enkiraaraa?-meerapriyan

தம்பி தாமிரன் said...

சோரம் போகாத விமர்சனம் ...வாழ்த்துக்கள்ண்ணே!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//.ராமாயணம் ஒன்றும் போற்றப் பட வேண்டிய அளவுக்கு உன்னத காவியம் அல்ல. ராமனும் ஒன்றும் நல்லவன் அல்ல//.//ராமாயணக் கதையில் கூட ராவணன் நல்லவன் என எண்ணுபவன் நான். //

ராவணனை நல்லவனாக பார்க்கும் உங்கள் மனது
ராமனை மட்டும் தீயவனாக ஏன் நினைக்க தோன்றுகிறது.
இது உங்கள் மனதின் கோளாறு....

புலவன் புலிகேசி said...

@மணி (ஆயிரத்தில் ஒருவன்) ஹா ஹா ஹா... மிக்க நன்றி நண்பரே...

ஜெயசீலன் said...

@மணி (ஆயிரத்தில் ஒருவன்)
@ஆட்டையாம்பட்டி அம்பி

அறிஞர் அண்ணாவின் நீதி தேவன் மயக்கம் படிங்க.... கம்பனோட பார்வையில மட்டும்தான் ராமன் நல்லவன்....

@ புலவன் புலிகேசி

தேர்ந்த விமர்சனம்....

Anonymous said...

@மணி (ஆயிரத்தில் ஒருவன்)

ராமன் ஒரு சமூக விரோத கிரிமினல் ஆதரங்கள்:

http://terrorinfocus.blogspot.com/2007/10/rama-rama.html