அன்று அவனுக்கு உடல் சுகமில்லை. அதனால் அலுவலக குளிர்சாதனம் அவனுக்குப் பிடிக்கவில்லை. இரண்டு மணி நேரம் அனுமதிப் பெற்று முன்னரே புறப்பட்டான். ஐந்து நிமிட தாமதத்தால் ஆறு மணி அலுவலகப் பேருந்தைத் தவற விட்டான். வெளியில் வந்து குமரன் நகர் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தான்.
நிறைய மக்கள் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அவனும் அவர்களுடன் ஐக்கியமானான். 19B பேருந்து வந்து நின்றது. கூட்டத்தில் அடித்துப் பிடித்து உள் சென்று நிற்பதற்கு ஒரு இடத்தைத் தேடிப் பிடித்துக் கொண்டான். அவன் உடல்நிலை அமர்ந்திருப்பவர்களை எதிரிகளாகப் பார்க்க வைத்தது. எரிச்சலுடன் பயணம் தொடங்கிய 10வது நிமிடத்தில் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வந்து நின்றதுப் பேருந்து.
அங்கு அந்தப் பேருந்தில் பலர் ஏறினர். ஏனோ இவனுக்கு அந்த விப்ரோ நிறுவனப் பெண் மட்டும் தனியாகத் தெரிந்தாள். சிறிது நேரம் இவனருகில் நின்றிருந்தாள். அவளின் உதட்டு வழி வந்த செய்கையில் அவளும் எரிச்சலுடன் நிற்பதை எதிர்த்திசைக் கண்ணாடியில் பார்த்துத் தெரிந்து கொண்டான்.
சில நிமிடங்களில் அவளுக்கு இருக்கைக் கிடைத்ததும் அமர்ந்து கொண்டாள். இவன் எதிரில் நின்று ஒளிவு மறைவாக அவளை ரசித்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்ததும் ஏனோ அவனுக்கு பாரதியார் நினைவு வந்து சென்றார்.
மாநிறத்திலிருக்கும் அவளது முகத்தில் செங்குத்தாக ஒரு அழகான சிகப்பு நிறப் பொட்டு. காதில் கோபுரம் போன்ற ஒருத் தங்கத் தோடு, சிகப்பு நிறச் சுடிதார் அவளுக்காகவே வடிவமைக்கப் பட்டதாய்த் தோன்றியது அவனுக்கு. ஒற்றைக்கை சிகப்பு நிற பிளாஸ்டிக் வளையல், கால்களில் வெள்ளிக் கொளுசு என அவளின் அழகு சாதனங்கள் அனைத்தும் அவளை மேலும் அழகாகக் காட்டின.
இவன் காதுகளில் செல்ஃபோன் மூலம் எஃப்.எம் கேட்டுக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் செல்ஃபோனில் யாருடனோப் பேசிக் கொண்டு உதடு சுழித்தாள். எஃப்.எம்-மில் "உசிரே போகுதே! உசிரே போகுதே! உதட்ட நீக் கொஞ்சம் சுழிக்கையிலே" என்ற வரிகள் ஓட இவன் வாய்விட்டுப் பாடி விட்டான். அவள் மெல்லியப் புன்னகையுடன் இவனைப் பார்த்து விட்டுத் திரும்பி அமர்ந்து கொண்டாள்.
அதன்பின் அந்தப் பேருந்தில் எத்தனையோ அழகானப் பெண்கள் ஏறியிருக்க கூடும். ஆனால் இவனுக்கு அவளைத் தவிற வேறு யாரையும்ப் பார்க்கத் தோன்றவில்லை. துரைப்பாக்கம் நிறுத்தத்தில் ஏறிய இருப் பெண்கள் அவளை மறைத்து நிற்க அவர்களை எதிரி போல் பார்த்தான். சிறிது நேரம் அவளைப் பார்க்க இயலவில்லை.
சுங்கச்சாவடி வந்ததும் அமர்ந்திருந்த ஒருவர் இறங்கிக் கொள்ள இவனுக்கு இருக்கைக் கிடைத்தது. அமர்ந்த பின் கூட்ட நெறிசலின் ந்டுவில் அவளின் முகம் மட்டும் இவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ரசித்துக் கொண்டிருக்கையில் எஸ்.ஆர்.பி டூல்ஸ் நிறுத்தத்தில் ஏறினாள் கைக்குழந்தையுடன் ஒரு பெண்மணி. நெறிசலில் குழந்தையுடன் இவன் இருக்கைக்கு அருகில் நின்றிருந்தாள்.
அவள் மீது பரிதாபத்திற்கு பதில் கோபமே வந்தது அவனுக்கு. அந்தப் பெண்மணி இவன் முகபாவனையைப் புரிந்து கொண்டவளாய் உள் சென்றாள். இவன் மீண்டும் அந்த விப்ரோ பெண்ணை ரசிக்கத் தொடங்கினான். மத்ய கைலாஷ் நிறுத்தம் வந்ததும் அழுகின்ற குழந்தையுடன் ஒரு பெண்மணி இவனை முறைத்துக் கொண்டே கீழிறங்கினாள். அவன அதை கவனிக்கவில்லை. அழகு மனிதம் மறக்க செய்திருக்க கூடும்.
அந்த பேருந்துக் காதல்(?) சைதாப்பேட்டை நிறுத்தம் வரைத் தொடர்ந்தது. அவள் இறங்கி சென்று விட்டாள். இவனும் தி.நகரில் இறங்கி அறை வந்து சேர்ந்தான். இப்போது காய்ச்சல் விட்டிருந்தது அவனுக்கு. மீண்டும் ஒருநாள் அதேப் பேருந்துப் பயணம். சோழிங்கநல்லூர் வந்ததும் இவன் கண்கள் தானாக அவளைத் தேடியது.
அவள் வரவில்லை. மாறாக வேறு ஒரு விப்ரோ பெண் ஏறினாள். நல்ல அழகாக இருந்தாள். மெல்லத் தனக்குள் சிரித்துக் கொண்டு சன்னலோரம் திரும்பி உட்கார்ந்தான். துரைப்பாக்கத்தில் கைக்குழந்தையுடன் ஏறினாள் ஒரு பெண். இப்போது அவள் அவனுக்குப் பரிதாபமாய்த் தோன்ற குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டான். அன்றையப் பயணத்தில் அந்தக் குழந்தை மட்டுமே அவகனுக்கு அழகாகப் பட்டது.
18 விவாதங்கள்:
அன்றையப் பயணத்தில் அந்தக் குழந்தை மட்டுமே அவகனுக்கு அழகாகப் பட்டது.
...... :-)
cute :-).
இறுதியில் மிகவும் அழுத்தமாக முடித்து இருக்கிறீர்கள் மிகவும் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி நண்பரே
முடிவு சூப்பர் பாஸ்...
வழி நெடுக காதல் விழியில்
பின் மனதில் மனித நேயம்
முடிவாய் யதார்த்தம்
அருமை தோழரே
பகிர்வுக்கு நன்றி
ஜேகே
//துரைப்பாக்கத்தில் கைக்குழந்தையுடன் ஏறினாள் ஒரு பெண். இப்போது அவள் அவனுக்குப் பரிதாபமாய்த் தோன்ற குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டான். அன்றையப் பயணத்தில் அந்தக் குழந்தை மட்டுமே அவகனுக்கு அழகாகப் பட்டது.//
காதல் கண்ணை மறைத்ததோ, நம்ம ஆளுங்க நெறைய பேர் இப்படி தான் இருக்காங்க.
கவிதையைச் சிறுகதை வடிவில் படித்து முடித்தபோது வாழ்வியல் நுட்பம் ஒன்று அழகான சிந்தனையாக..
அருமை நண்பா..
பதிவு ரொம்ப நன்றாக இருக்கிறது.
பதிவு ரொம்ப நன்றாக இருக்கிறது.
யதார்த்தம்!
அழகு....
இவன்
செந்தில்குமார்.அ.வெ http://naanentralenna.blogspot.com
நெசத்தை சொல்லியிருக்கீங்க
19B ONLY UPTO Saidapet except AC Bus 19B.PLZ CHECK IT.
Just for GK
Nalla kadai pathi ellam namakku vimarsanam... eluda theriyadu... adanala simplyyyy superrr
யதார்த்தம்...
ரைட்டு நடத்துங்க
ரசித்தேன்
நடை அருமை
எனக்கு என்னமோ அந்த மனுசன் நீதான் என்று தோனுது.
Post a Comment