கடவுளை மற..மனிதனை நினை..

21 May 2010

முத்தம் வெட்கம் சப்தம்

7:23:00 AM Posted by புலவன் புலிகேசி 28 comments

முத்தம்

ஆளரவமற்ற அன்றைய மாலையில்
அவள் கொடுத்தது எடுத்து சென்றது
என் உயிரை
நடை பிணமாய்
அலைகிறேன் அவளைத் தேடி
என் உயிரை மீட்க!

வெட்கம்

இதழ் பதித்து இட்ட
போது இச் என்ற சப்தம்
அருகாமை நாய் அதை
அழைத்ததாய் எண்ணி வந்த
போது அவளிடம் ஒரு சிரிப்பு
இதுதான் வெட்கமோ!

சப்தம்

சப்தமிட்டு சொல்லாதே
நீ என் காதலி என்று
பறவைக் கூட்டம் என்னைத்
தேடிக் கொல்ல்க் கூடும்

28 விவாதங்கள்:

எல் கே said...

//
சப்தமிட்டு சொல்லாதே
நீ என் காதலி என்று
பறவைக் கூட்டம் என்னைத்
தேடிக் கொல்ல்க் கூடும்///

கவிதை.. அருமை நண்பரே

மோனி said...

..//இதழ் பதித்து இட்ட
போது இச் என்ற சப்தம்
அருகாமை நாய் அதை
அழைத்ததாய் எண்ணி வந்த
போது அவளிடம் ஒரு சிரிப்பு
இதுதான் வெட்கமோ!//..

வெட்கமெல்லாம் ஒண்ணுமில்லை.
இதையே நாய்க்கு கொடுத்திருந்தா நாயோட நிலைமை என்னாகும்-னு யோசிச்சிருப்பாப்டீ...

Chitra said...

காதல் கவிதைகள்..... அருமை. .... பாராட்டுக்கள்!

சௌந்தர் said...

அருமையான கவிதை வாழ்த்துகள்

Paleo God said...

படம், தலைப்பு, வரிகள் எல்லாமே அருமைதான் புலவரே! :)

vasu balaji said...

மூன்றும் அருமை

VELU.G said...

கவிதைகள் மிகவும் அருமை

இருந்தாலும் புலவர்க்கு பொய்யுரை தேவையில்லை

ஜில்தண்ணி said...

\\நடை பிணமாய்
அலைகிறேன் அவளைத் தேடி
என் உயிரை மீட்க!\\

சீக்கிரம் மீட்டுட்டு வாங்க
ரசித்தேன்!!

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமை நண்பரே ! ஆனால் உங்களின் மூன்றாவது கவிதை சற்று எனக்கு பிடிபடவில்லை !

அகல்விளக்கு said...

மூன்றுமே முத்துக்கள் தல...

சுசி said...

சப்தம் ரொம்ப நல்லாருக்கு புலவரே..

சசிகுமார் said...

சூப்பர் நண்பா, கவிதை அருமையாக உள்ளது. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

வெட்கம் அனுபவமோ!!!???

Priya said...

வாவ், முத்தம் வெட்கம் சப்தம் கவிதை அருமையாக இருக்கிறது!

Unknown said...

மூன்றும் மூன்று முத்துக்கள்

மாதேவி said...

கவிதைகள் நன்று.

கமலேஷ் said...

நல்லா இருக்குங்க....

க.பாலாசி said...

நல்லாருக்குங்க நண்பரே.... வெட்கம் வெரு அருமை....

ஸ்ரீராம். said...

கவிதைகள் நல்லா இருக்கு...ஆமாம், முன்னால ஒரு பொண்ணைப் பத்தி சொன்னீங்களே...மீண்டும் சந்தித்தீர்களோ..?

CINEMA GALLARY said...

ஸ்ருதி ஹாசன் ஹாட் - Sruthi Hasan Hot http://cinema-gallary.blogspot.com/2010/05/sruthi-hasan-hot.html

Thenammai Lakshmanan said...

வெட்கம் அருமை புலவரே

G.Ganapathi said...

முத்தத்திற்கு சத்தம்
இருக்கிறதோ இல்லையோ
சக்தி இருக்கிறது சாப்பாடே தேவையில்லை

செந்தில்குமார் said...

முருகவேல்......

இதழ் பதித்து இட்ட
போது இச் என்ற சப்தம்
அருகாமை நாய் அதை
அழைத்ததாய் எண்ணி வந்த
போது அவளிடம் ஒரு சிரிப்பு
இதுதான் வெட்கமோ!

வெட்கப்படுது உங்கள் கவிதை வரிகள்

செந்தில்குமார்.அ.வெ

செந்தில்குமார் said...

புலவன் புலிகேசி

புலமை போங்கட்டும் இன்னும்........

cheena (சீனா) said...

அன்பின் முருகவேல்

மூன்றும் முத்தான சத்தான குறுங்கவிதைகள் - அருமை - சிந்தனை நன்று

நடைப்பிணமாய் அலைய விட்டாளா ஒரு முத்தத்தினால் ...... சத்தம் இடை விடாது கேட்க வாழ்த்துகள்

நல்வாழ்த்துகள் முருகவேல்
நட்புடன் சீனா

Ungalranga said...

கவிதைகள் அருமை..!!
ரசித்தேன்..வியந்தேன்.

:)

அன்புடன் நான் said...

மூன்றும் முத்துக்கள் பாராட்டுக்கள்.

sujisittampalam said...

மூன்றும் முத்தான கவிதைகள்...

பயமேன்...
பறவை கொல்லாது
உம்மை
மனமார வாழ்த்தும்
என்னைப்
போல...

இனைப்பு என தவறுதலாக எழுதிவிட்டீர்கள் என நினைக்கிறேன்...