கடவுளை மற..மனிதனை நினை..

24 May 2010

டரியல் (25-மே-2010)

11:22:00 PM Posted by புலவன் புலிகேசி 24 comments
மங்களூர் விமான விபத்தில் குழந்தைகள் உட்பட 159 பேர் பலி. இதற்கான காரனம் வழக்கம் போல் இன்னும் தெளிவு பட வெளி வர வில்லை. எது எப்படியோ போன உயிர்கள் போனதுதான். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவில் சிதைந்து போயிருக்கின்றன. சில நொடி கவனக் குறைவு எவ்வளவு உயிர்களை பலி கொண்டு விட்டது.
---------------------

நேரு மற்றும் ராஜாஜியின் புத்தகங்களை வெளியிட மத்திய அரசால் ஒதுக்கப் பட்ட ஐந்து கோடி சிறப்பு நிதி சோனியா காந்தியைத் தலைவராக கொண்ட ஒரு தனியார் அறக்கட்டளைக்கு சட்ட விரோதமாக திருப்பி விடப் பட்டுள்ளதாக தனிக்கைக் குழு தெரிவித்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த அறக் கட்டளையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரு அறங்காவலராம். என்ன கொடுமை சரவணன் இது???
---------------------


குஷ்புவை தி.மு.க தாங்குமா? என்ற ஆனந்த விகடனின் கேள்விக்கு தமிழினத் தலைவனின்(?) பதில் "தி.மு.க தாங்குமோ? இல்லையோ? விகடன் அட்டைப் படம் தாங்கிக் கொண்டுதான் வந்திருக்கிறது" என்பதாகும். யப்பா இந்தம்மவுக்கும் ஓட்டு போட்டு உச்சில கொண்டு போய் உக்கார வச்சி நாட்ட நாறடிச்சிறாதீங்க. இப்ப இருக்குற நாத்தமே தாங்க முடியல.
---------------------

இந்த வீடியோவில் வரும் குழந்தையின் யதார்த்தமான அழகான ஆட்டத்தைப் பாருங்கள். நான் மெய் மறந்து ரசித்து கொண்டேயிருக்கும் நடனம். ஆர்குட்டில் ஒரு சகோதரி இதைப் பார்த்து விட்டு "விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என கருத்து தெரிவித்திருந்தார். நீங்களும் பாருங்க.


---------------------

இந்த வாரப் பதிவர்: "தாராபுரத்தான்"


பொன். பழனிச்சாமி ஐயா அவர்கள் வாசகனாக இருந்து பதிவராக மாறியவர். நண்பர் பாலாசியின் மூலம் இவரது வலைப்பூ அறிமுகம் கிடைத்தது. இவர் அதிகம் எழுதுவதில்லை. மாதத்திற்கு மூன்றோ, ஐந்தோ எழுதுகிறார். தனது அனுபவத்தை எழுதிவரும் இவரது "பொண்ணு பார்த்த கதையை விட்டுறாதீங்க" (இவருக்கு அந்த பாக்கியமில்லைன்னு வருத்தம் வேற). போய் படிச்சிப் பாருங்க.

இவரது வலைப்பூ: தாராபுரத்தான்.
---------------------

இந்த வார டரியல் நண்பர் பாலாசி அவர்களின் "வெட்டிவேரு வாசம்". சாக்கடை அள்ளும் தொழிலாளியின் வாழ்வியலை வட்டார மொழியில் இயல்பாக எடுத்தியம்பும் இந்த கதை என்னை வெகுவாக கவர்ந்தது. படிக்கலைன்னா போய் படிச்சிப் பாருங்க.
---------------------

24 விவாதங்கள்:

க ரா said...

டரியல் நல்லா இருக்கு புலவரே.

dheva said...

வெட்டி வேரு வாசம் சூப்பர் கலக்கல்தானுங்கோ.... நம்ம பாலாசி பின்னி எடுத்திருப்பாபுல.....!

தாரபுரத்தான் கூட ஒரு எதார்தமான பதிவர்தாங்கோ...!

வாழ்த்துக்கள் புலிகேசி!

Thenammai Lakshmanan said...

வெட்டி வேரு வாசம் அருமை புலிகேசி...குட்டிப் பொண்ணின் நடனமும் கூட.. தாராபுரத்தான் நல்லா இருக்கு

vasu balaji said...

சூப்பர் டரியல். குட்டிப்பாப்பா டேன்ஸ் வெகு அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.

Chitra said...

ஒவ்வொரு விஷயமும் கலக்கலா இருக்குதுங்க..... இந்த வார பதிவருக்கு, வாழ்த்துக்கள்!

கலகலப்ரியா said...

டரியல் நல்லாருக்கு... அந்த வாண்டு சூப்பர்.. செம க்யூட்...

பாலாசியும் சூப்பரு..

தாராபுத்திரன் அறிமுகத்திற்கு நன்றி..

Unknown said...

டரியல் நன்று.

ILLUMINATI said...

மங்களூர் விமான விபத்து...

என் நண்பன் என்னிடம் ஆதங்கப்பட்டான்.
'எந்த நாட்டில பிரச்சனை வந்தாலும் உடனே சரி செய்யப் பார்ப்பாங்க.நம்ம நாட்டுல மட்டும் 'blame game' ஸ்டார்ட் ஆகும்.நான் பழிய ஒருத்தன் மேல போடறேன்,அவன் அடுத்தவன் மேல போடுவான்...இப்படியே போகும்.ஆனா பொறுப்பா எவனும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டான்.'
எவ்ளோ உண்மை.அதிலும் இந்த மாதிரி சம்பவங்கள் இன்னும் கேவலம்.pilot செத்துப்போயட்டானா....
போடு அவன் மேல பழிய...
எப்ப தான் பொறுப்பு வருமோ இவனுங்களுக்கு.....
அப்புறம்,மன்மோகன் எப்ப பிரதமர் ஆனாரோ,அப்பவே அவர் நேர்மை காணாம போச்சு..இனிமே எது நடந்தாலும் ஆச்சர்யப்படாதிங்க.ராஜாவுக்கு அவர் சப்போர்ட் பண்ணினதையும் சேர்த்து....

shortfilmindia.com said...

good..:)
cablesankar

அகல்விளக்கு said...

வழக்கம் போலவே டரியல் அருமை...

க.பாலாசி said...

முதல் விசயம் ரொம்ப கொடுமைதாங்க...

குஷ்ப்ப்ப்ப்ப்பூ பேரக்கேட்டாளே சும்மா.......

அந்த வாண்டு என்னா ஆட்டங்க அது......

தாராபுரத்தான் மற்றும், எனது கதைக்கான அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே....வாழ்த்தியவர்களுக்கும் மிக்க நன்றி...

விஜய் said...

டரியல் அருமை

வாழ்த்துக்கள்

விஜய்

விக்னேஷ்வரி said...
This comment has been removed by the author.
விக்னேஷ்வரி said...

உங்களுக்கென்ன அவ்ளோ கோபம் குஷ்பூ மேல புலிகேசி? அவங்க ஜெயிச்சா நாடு நாறிடுமா.. நல்லா இருங்க பகுத்தறிவாதிகளே.

Ahamed irshad said...

குஷ்புக்கு என்னா தகுதியில்ல.. அது நிறைய சினிமாவுல நடிச்சிருக்கு... நமக்குத்தான் வீட்ட விட சினிமா முக்கியமாச்சே. தமன்னாவ எம்.பியாக்கரவரை ஒயப்போறதில்ல...

ஸ்ரீராம். said...

அரசாங்கத்தில் பல நிதி ஒதுக்கீடுகள் அதன் ஒரிஜினல் காரணத்துக்குப் போவதில்லை..மன்மோகன் இதில் மட்டுமா காம்ப்ரமைஸ் செய்கிறார்..?

குட்டிப் பொண்ணு டான்ஸ் ஜாலியாய் இருந்தது..

karthickeyan said...

குட்டிப் பொண்ணு டான்ஸ் சூப்பர்...!

Ashok D said...

அட அள்ளிட்டியப்பா... எல்லாம் நன்று... :)

புலவன் புலிகேசி said...

//விக்னேஷ்வரி said... 14

உங்களுக்கென்ன அவ்ளோ கோபம் குஷ்பூ மேல புலிகேசி? அவங்க ஜெயிச்சா நாடு நாறிடுமா.. நல்லா இருங்க பகுத்தறிவாதிகளே.
//

அட சூப்பருங்க. நீங்க டெலிட் செஞ்ச கமெண்ட்டையும் படிச்சேன். மிக்க மகிழ்ச்சி. என்ன தெரியும் இந்த குஷ்புவுக்கு. சாமான்யனோட தண்ணிப் பிரச்சினை, சாப்பாடு இதெல்லாம் தெரியுமோ. எத்தனி நாளைக்குத்தான் இந்த சினிமாக் காரங்க கிட்டயே ஆட்சியைக் கொடுக்கப் போறீங்களோ? பெண் என்பதற்காக வக்காளத்து வாங்குவதுதான் பகுத்தறிவுன்னு சொன்னீங்கன்னா நிச்சயமா நான் பகுத்தறிவு வாதி இல்லீங்க. எனக்குத் தெரிஞ்ச பகுத்தறிவுல்லாம் ஆண் பெண் பேதமின்றி சமமாக பாவிப்பது தான். ஏன் இந்த அரசியலமைப்பு இப்புடி இருக்குன்னு என்னக்கும் யோசிச்சிப் பாத்ததில்ல. எவன் நின்னா என்னன்னு ஓட்டுப் போடுறது. என்று மாறுமோ இந்த நிலை.......? ரொம்ப கஷ்டமப்பா...

அஹோரி said...

//குஷ்புவை தி.மு.க தாங்குமா? //

குட்டைக்கு ஏத்த மட்டை.

ஆமா ,
தி மு க வுல ஏன் படிச்சவன் எவனும் சேர மாட்டேங்குறான்.

சுசி said...

குட்டிப் பாப்பா சூப்பர்..

ஜெயசீலன் said...

டரியல்.... டரியலே!!! பின்னிடிங்க... இவ்ளோ தாமதமா வந்ததுக்கு... ரொம்ப வருந்துறேன்... முதல் விஷயம் இனி நடக்கவே கூடாது...
இப்ப இருக்குற நாத்தமே தாங்க முடியல==> சரிதான்.... தாராபுரத்தான் கலக்கிட்டார்... குழந்தையோட ஆட்டத்த பாகுறப்போ... மனசு றக்க கட்டிபறககுது... பெண் பிள்ளை பிறக்க கொடுத்துவைக்கணும்... வெட்டி வேரு வாசம் சும்மா தூக்குது.... பகிர்தலுக்கு நன்றி நண்பா...

ஜெயசீலன் said...

டரியல்.... டரியலே!!! பின்னிடிங்க... இவ்ளோ தாமதமா வந்ததுக்கு... ரொம்ப வருந்துறேன்... முதல் விஷயம் இனி நடக்கவே கூடாது...
இப்ப இருக்குற நாத்தமே தாங்க முடியல==> சரிதான்.... தாராபுரத்தான் கலக்கிட்டார்... குழந்தையோட ஆட்டத்த பாகுறப்போ... மனசு றக்க கட்டிபறககுது... பெண் பிள்ளை பிறக்க கொடுத்துவைக்கணும்... வெட்டி வேரு வாசம் சும்மா தூக்குது.... பகிர்தலுக்கு நன்றி நண்பா...

தாராபுரத்தான் said...

வேடிக்கை பார்த்திட்டு இருக்கிறவனை பதிவர் பட்டத்தை கொடுத்து வெளிச்சம் போட்டு காட்டிடீங்களே தம்பி...நன்றிங்க.