"என்னடா பயளுவ வயலுக்குப் போய்ட்டானுங்களா?" என பல் தேய்த்து கொண்டே கேட்டான் பண்ணையார் பரமசிவம். "ஐயா, எல்லாரும் போயி அறுவடை காலைல ஆறு மணிக்கே ஆரம்பிச்சிருச்சிங்க" என்று கைகட்டியவாறே சொன்னான் கணக்கன் குப்புசாமி.
அந்த அழகிய கிராமத்தில் காலை பத்து மணி வரை உறங்கும் ஒரே ஆள் இந்த பரமசிவமாகத்தான் இருக்க முடியும். அங்குள்ள மனிதர்களுக்கு விவசாயம் தவிற ஒன்றும் தெரியாது. ஊரெங்கும் பசுமை நிறைந்து செழிப்புடன் இருக்கும். முழுக்க முழுக்க இயற்கையையும், உழைப்பையும் மட்டுமே நம்பியிருக்கும் ஊர் அது.
"ஏண்டா மொக்க என்னடா அருவா வச்சிருக்க, போயி அந்தக் கல்லுல தீட்டிட்டு வந்து அறுடா" என்றவாறு சுறுசுப்பாய் அறுவடையில் ஈடு பட்டிருந்தான் சுப்பையன். சுப்பையன் உழவு செய்யும் உடம்பு, உடற் பயிற்சி நிலையம் என்றால் என்னவென்றே தெரியாத அவன் உடம்பில் ஆறு அடுக்கு கட்டமைப்பு(six packs).
பல் தேய்த்து முடித்து "அடியேய் பாண்டியம்மா சுடுதண்ணி வச்சியா இல்லையா?" என கடுகடுத்தான் பரமசிவம். "இதோ வரேங்க" என ஒரு குரல் மட்டும் கேட்டது. சிறிது நேரத்தில் கந்தாங்கிச் சேலையுடன் கையில் சுடுதண்ணி பாத்திரம் சுமந்து வந்தாள் பாண்டியம்மா. "சரி சரி வச்சிட்டு போயி ஒரு டீயைப் போடு" என்றான்.
அறுவடை முடியும் வரை சுப்பையனுக்கு வேறு எது பற்றிய எண்ணமும் இருந்ததில்லை. அறுவடை முடித்து வீடு திரும்பும் போது அவனது நடை வீட்டை நோக்கி என்பதை விட குப்பாயி போடும் அந்த பாலில்லா டீத்தண்ணியை நோக்கிதான் என சொல்ல வேண்டும். செல்லும் போது வழியில் காண்போரிடம் கூட "அவன் வாய் மட்டுமே பேசும் மனம் முழுதும் அந்த டீத்தண்ணியில்தான் இருக்கும்".
சுக்கு, பனங்கல்கண்டு சேர்த்து இடித்து பாலை அடுப்பில் வைத்து அதில் கலந்து, டீத்தூள் சேர்த்து கொதிக்கும் தருவாயில் போடப்பட்ட உடைத்த ஏலத்தின் வாசனையுடன் டீத் தயாரித்துக் கொண்டிருந்தாள் பாண்டியம்மா.
ஒரு ரூபாய் சக்கரை, சுடுதண்ணீரில் போடப்பட்ட டீத்தூளுடன் தன் மூச்சுக்காற்றை ஊதி அடுப்பைப் பற்ற வைத்து காந்தல் வாசனையுடன் பாலில்லா டீத் தயாரித்துக் கொண்டிருந்தாள் குப்பாயி.
குளித்து முடித்து ஒரு வேஷ்டியை அணிந்து வந்து சாய்நாற்கலியில் அமர்ந்தான் பரமசிவம். பாண்டியம்மா கம கம வாசனையுடன் டீயைக் கொண்டுவந்து கொடுத்தாள். கையில் அன்றைய தினசரி இதழ் ஒன்றை எடுத்தவாறே டீயை அருந்தத் தொடங்கினான். "என்னடி டீப் போட்டுருக்க...ஒரே தண்ணியா இருக்கு" என டீயைக் குடிக்காமலே வைத்து விட்டான். பாண்டியம்மா உள்சென்று மீண்டும் டீ போட ஆரம்பித்திருந்தாள்.
நேரம் பதினொன்றைக் கடந்திருந்தது. டீத்தண்ணித் தேடி வீடு நுழைந்தான் சுப்பையன். சுடச்சுட குப்பாயி கொடுத்த டீத்தண்ணியை நாவில் உமிழ்நீர் சொட்ட சொட்ட ஊதி ஊதி கடைசி சொட்டு வரைக் குடித்ததும், எதோ அமிர்தம் அருந்தியது போல் இருந்தது அவனுக்கு. மீண்டும் ஒரு சுறுசுறுப்பு வந்தவனாய் எழுந்தோடி தன் இரண்டு மாடுகளையும் மேய்ச்சலுக்கு விரட்டிச் சென்றான்.
பி.கு: சென்றமாத வெள்ளி நிலா இதழில் வெளிவந்த எனது சிறுகதை.
19 விவாதங்கள்:
நல்லாயிருக்குங்க உங்க டீத்தண்ணி.....
ம்ம்ம்.....இரண்டு
"வகையான" தேநீர்.
ம்ம்ம்...உழைப்புக்குப் பின் உணவு அமிர்தம்!
தேநீரின் சுவை உழைப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும்....
அருமை தல...
இரு பார்வைகளில் தேநீர்..., நல்லாருக்கு புலிகேசி!
பிரபாகர்.
நல்லாருக்குங்க புலிகேசி... கிராமத்து வாசத்தோட இந்த டீத்தண்ணி... உண்மையும்தாங்க...
Congratulations!
கிராமத்து மசாலா மணம் கொண்ட டீ. சூப்பர்!
வாழ்த்துக்கள்.
மண் மணக்கும் தேநீர்.
தேநீர் இனிக்கிறது.
பால்சேர்க்காமல் பக்குவமாய் தயாராகும் பிளேன் ரீ (தேநீர்) மிகுந்த சுவையைத் தரும்.
வாழ்த்துக்கள்!!
நல்லா இருக்கு புலவரே...
நல்லாருக்கு..! வாழ்த்துக்கள்...!!
தேநீரின் சுவை உழைப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும்....
அருமை தல...
velli nillavil theneeri aruntha koduththa ungalukkum. theneerai ellorukkum pakirnthu koduththa velli nilavukkum vazhththukkal nanba.
அருமையான டீ" சூப்பர்..............
ஏற்கெனவே படிச்ச மாதிரி இருக்கேன்னு பார்த்தேன். வெள்ளி நிலாவில் படித்தேன்.
உழைக்கிரவனுக்க்த் தான் உண்மையான சுவை தெரியும். பழைய சோற்றிலும் அருமையான சுவை உணருவான்...
தேனீர் தேனாய்.
//புலி நீராடவருவதேயில்லை//
மிகவும் அருமை நண்பரே .ரசிக்கும் வகையில் சொல்லி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி !
Post a Comment