பசுமை என்பது பிற்காலத்தில் ஒரு நாள் அகராதியில் தேடிப் பார்க்கக் கூடிய சொல்லாக மாறக்கூடும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது. இன்றைய நிலையில் விவசாயத்தில் கொடிகட்டிப் பறந்த கிராமங்களில் கூட பசுமையைக் காண முடியவில்லை. என் டரியலில் சொன்னது போல் பசுமை என்பது சுற்றுலாத் தளங்களில் மட்டுமே இயற்கையாகவும், பல இடங்களில் செயற்கையாகவும் காண முடிகிறது.
பசுமைத் தமிழகம் என்பதெல்லாம் வெறும் பேச்சில் மட்டுமே இருக்கிறது. இந்த நிலைக்கு யார்க் காரணம்? என ஆராய்ந்து ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லித் திரிவதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. இத்தகைய நிலைக்கு நானும் ஏதோ ஒரு வகையில் காரணம் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இங்கு நான் என்பது நான் மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதனும் தான்.
தனி மனிதனின் நியாமான ஆசையான வீடு வாங்குதல், அதை பெற்றதும் நின்று விடுவதில்லை. அடுத்து இதை விட பெரிய இடமாக வாங்க வேண்டும். அதில் அடுக்ககம் அமைத்து பணம் சேர்க்க வேண்டும் என நீண்டு கொண்டே போகிறது. பலர் எதற்காக பணம் சேர்க்க வேண்டும் எனத் தெரியாமல் அளவுக்கு அதிகமாக அதை சேர்ப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறோம்.
இத்தகைய ஆசைகளுக்காக நாம் பலி கொடுப்பது பல மரங்கள் மற்றும் நிலங்கள். ஒரு காலத்தில் நல்ல விளை நிலங்களாக இருந்த இடங்கள் பல இன்று அடுக்ககங்களாக மாற்றம் பெற்றிருக்கின்றன. இதை வளர்ச்சி எனப் பெருமையடித்துக் கொண்டாலும் யோசித்துப் பார்த்தால் இது ஒரு மாபெரும் வீழ்ச்சி என்பது புரியும்.
மனிதனின் பரிணாம வளர்ச்சி அளவுக்கு மீறி சென்று கொண்டிருக்கிறது. அது நஞ்சில் சென்று முடியும் நாள் வெகுத் தொலைவில் இல்லை. இவற்றைக் கட்டுபடுத்த பலருக்கு நிச்சயம் மனம் வரப் போவதில்லை. நாம் அனைவரும் இந்த விடயத்தில் சுய நலவாதிகளாகவே இருக்கிறோம். எல்லோரும் ஆசைப் படும் போது நான் ஆசைப் படுவதில் என்ன தவறு? என வினா எழுப்புகிறோமே தவிற, இது நமக்குத் தேவையா என யோசிப்பவர்கள் மிகச்சிலரே.
பதினெட்டம் நூற்றாண்டில் ரெனி டீ ரீமர் என்பவர்தான் மரத்துகள்களில் இருந்து காகிதங்கள் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தார். அதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது குழவிப் பூச்சி தான். அவற்றின் செய்ல்பாடுகளில் இருந்துதான் மரத்துகளை உபயோகிக்கும் முறையைக் கண்டறிந்தார்.
ஆக்கத்திற்காக அவர் கண்டு பிடித்ததை இன்று அளவுக்கு அதிகமாகவும், தேவையில்லாமலும் வீணாக்கி இயற்கை வளமான மரங்களின் அழிவிற்கு துணை நிற்கிறோம். மரங்கள் அழியப் பெற்றால் நிலச்சரிவுகள் கட்டுபடுத்த முடியாமல் உயிரிழப்புகள் தொடர்வது நிச்சயம். அதோடில்லாமல் காற்றைக் கூட காசு கொடுத்து வாங்கி சுவாசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதும் உறுதி.
இதைப் பற்றி பேசிக் கொண்டேயிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. நாம் இங்கு கைகோர்த்து செயல்பட வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். இவற்றின் அழிவைத் தடுக்கும் ஆரம்பமாக குறைந்தது தேவையில்லாமல் காகிதங்களை வீணாக்க மாட்டேன் என்ற உறுதியாவது எடுத்துக் கொள்ளப் பட வேண்டும்.
நமக்கு பயன்படாக் காகிதங்கள் குப்பையாக மாற்றப் படாமல் ரீசைக்கிள் என்று சொல்லக் கூடிய மறு தயாரிப்பு முறைக்கு உபயோகப் படுத்தப் பட வேண்டும்.
ஒரு மரம் வெட்டும் முன்
ஒரு மரக் கன்றாவது
ஊன்றப் பட வேண்டும்!
நாம் தேவையில்லாமல் வீணாக்கும்
காகிதங்களில் மரங்களை அழித்துக்
கொண்டிருக்கிறோம்!
மரம் வளர்ப்போம்! உயிர்க் காப்போம்!
ஒரு மரக் கன்றாவது
ஊன்றப் பட வேண்டும்!
நாம் தேவையில்லாமல் வீணாக்கும்
காகிதங்களில் மரங்களை அழித்துக்
கொண்டிருக்கிறோம்!
மரம் வளர்ப்போம்! உயிர்க் காப்போம்!
36 விவாதங்கள்:
ஆக்கப்பூர்வமான பதிவு. நன்றி.
good
நல்ல பதிவு.
மரம் வளர்க்காவிட்டாலும், வெட்டாமல் இருந்தாலே பெரிய தொண்டுதான், அவசியமான
இடுகை புலவரே.
@இராமசாமி கண்ணண்
நன்றி நண்பரே...
@என் நடை பாதையில்(ராம்)
நன்றி ராம்...
@மன்னார்குடி
நன்றி மன்னார்குடி..
@சைவகொத்துப்பரோட்டா
ஆமாம் நண்பா..அப்படியே தவிர்க்க முடியாமல் வெட்ட நேர்ந்தாலும் அதற்கு மஅறாக ஒரு மரக்கன்றூ நடலாம்....
நமக்கு பயன்படாக் காகிதங்கள் குப்பையாக மாற்றப் படாமல் ரீசைக்கிள் என்று சொல்லக் கூடிய மறு தயாரிப்பு முறைக்கு உபயோகப் படுத்தப் பட வேண்டும்.
........சமூதாய அக்கறையுடன் எழுதப்பட்ட அருமையான பதிவு.
எல்லோருமே கண்டிப்பா வளர்க்கனும்..
நான் வளர்ப்பேன் புலவரே..:))
என்னையும் சேர்த்து இந்த இடுகையை படிச்சவங்களிலே கூட எத்தனைப் பேரு இனிமேலாவது இதை செயல்படுத்திக் காட்டப்போகிறார்கள் என்று தெரியல..
ஆனா இது போன்ற இடுகை அதை செய்ய ஊக்கமளிக்கும் என்பது மட்டும் திண்ணம்..
ரியல் எஸ்டேட் ரியல் எஸ்டேட் என்று சொல்லி சில தொழில் அதிபர்களால் தான் பெரும்பாலும் மரங்கள் வெட்டபடுகின்றன. அவர்கள் திருந்தவேண்டும். நல்ல பதிவு நண்பா தொடரட்டும் உன் பணி
தோழரே சராசரியாக எத்தனையோ பல விஷயங்களை உயிர் தேவையாக எண்ணும் நமக்கு இதுபோன்ற நம்மால் நிச்சயம் செய்ய முடியும் என்ற இச்செயளையாவது செய்ய முயற்சிக்கலாம். தேவையற்ற காகிதம் என்று எண்ணாமல் அந்தந காகிதமும்கூட நம் உயிர்மூச்சு என்ற உங்கள் தொலைநோக்கு சிந்தனை நிச்சயம் நம்மில் சிலரையாவது சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. உங்கள் முயற்சி ஒருவரின் ஒரு மணிநேர மூசுக்காற்றையாவது காப்பாற்றும் என்று நம்புகிறேன். வளர்க உங்களின் சிந்தனை படைப்பு.
சிறப்பான கட்டுறை... மரங்களின் அவசியம் உணரவேண்டிய தருணம். உணர்வோம்....
ஐடியா நிறுவனம் தரும் ஐடியாவை
பயன்படுத்தலாம்.....
நல்ல பதிவு...அவசியமும் கூட..
நல்ல பகிர்வு
{{{{{{{ பசுமை என்பது பிற்காலத்தில் ஒரு நாள் அகராதியில் தேடிப் பார்க்கக் கூடிய சொல்லாக மாறக்கூடும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது.}}}}}}}}}}
அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் .
பகிர்வுக்கு நன்றி !
உபயோகமான பதிவு. பள்ளி இறுதி ஆண்டு சான்றிதழ் பெறுமுன் ஒவ்வொரு மாணவனும் குறைந்தது இரண்டு மரங்கள் எங்காவது நட்டு, அதை உறுதி செய்திருக்க வேண்டும் என்று சட்டமே கொண்டு வரலாம். அதை அவரவர் பெயரில் வளர்த்தால் அவர்களுக்கே அக்கறையும் கூடும்.
அருமையான பகிர்வு...
ஒரு மரம் வெட்டவேண்டும் என்றால் இரண்டு மரங்களாவது நடவேண்டும்.
நல்ல கருத்து. நல்ல எழுத்து. ஃபினிஷிங் டச் மட்டும் இன்னும் சிரத்தையா பண்ணீங்கன்னா, உங்க கட்டுரை ரொம்ப நல்லா வரும் புலிகேசி.
Plan அப்ரூவ் பண்ணும்போது, எத்தன ஃப்ளாட் இருக்கோ / ஃப்ளோர்ர் இருக்கோஅத்தனை மரம் நட்டு, அதுக்கு இடம் விட்டே ஆகணும்னு சட்டம் வரணும்.
மரம் வளர்ப்போம்! உயிர்க் காப்போம்!
நல்ல பகிர்வு நண்பா..
//ஒரு மரம் வெட்டும் முன்
ஒரு மரக் கன்றாவது
ஊன்றப் பட வேண்டும்!//
இது நடைமுறைச் சாத்தியம்தான்... ஆனா......... ம்ம்.. நல்லாருக்கு பதிவு...
நல்ல சிந்தனை.நல்ல பதிவாக வந்திருக்கிறது. ’பசுமைத்தமிழகம்’ஒரு கூட்டுமுயற்சியாக அனைவரின் மனதில் மாற்றம் வரவேண்டும்...
உபயோகமான பதிவு.
அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான்....
நல்ல விழிப்புணர்வு பதிவு புலவரே....
இங்க இவ்ளோ வசதி செஞ்சு குடுத்தும் ரீசைக்கிள்ள போடாம குப்பையிலதான் காகிதக் குப்பையேம் வீசறாங்க.. :(((
உண்மை புலவரே மரம் வளர்ப்போம் உயிர் காப்போம்
உண்மையிலே நல்ல பதிவு
மரம் வளர்ப்போம்! உயிர்க் காப்போம்.
மிக நல்ல கருத்து புலி..
மரம் வளர்க்க வேண்டிய கட்டாயத்தை சொல்லும் இந்த பதிவு அவசியமானது, இதுவரை இரண்டே இரண்டு மரங்களை நட்டு இருக்கிறேன், உங்கள் பதிவு ஊக்கம் ஊட்டும் விதமாய் அமைந்திருகிறது.
என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .
மீண்டும் வருவான் பனித்துளி !
சென்னையில் தினமும் எங்காவது மரம் வெட்டி கொண்டே தான் இருக்கிறார்கள்.
புதிய தலைமை செயலகத்துக்காக கூட நிறைய மரங்கள் வெட்டபட்டதாக செய்திகள் படித்தேன்.
அவசியமான பதிவு.
வாழ்த்துகள்.
//ஒரு மரம் வெட்டும் முன்
ஒரு மரக் கன்றாவது
ஊன்றப் பட வேண்டும்!//
மரம் எல்லாம் கரக்டா நட்டுறாங்க (அரசியல் பண்ணணும்ல ) சார் , என்னா அத தண்ணி ஊத்தி பாதுகாக்கிறது இல்ல
Post a Comment