கடவுளை மற..மனிதனை நினை..

15 March 2010

வேலைக்காரி

4:30:00 AM Posted by புலவன் புலிகேசி 23 comments

ஒரு கோடி ஒரு தரம், ரெண்டு தரம், மூனு தரம். ரம்யாவின் வீடு மற்றும் சொத்துக்கள் ஏலம் விடப் பட்டாகி விட்டது. ரம்யா ஒரு பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசு. கடன் தொல்லையால் வீடு மற்றும் சொத்துக்கள் ஏலத்திற்கு வந்து விட்டன. ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் விடப் பட்டு கடன்கள் அடைக்கப் பட்டன.

ரம்யா குழந்தகள் மற்றும் கணவனுடன் நடுத்தெருவிற்கு வந்தாள். ஒரு குப்பத்திலுள்ள பொறம்போக்கு இடத்தில் கையிலிருந்த பணம் கொண்டு குடிசை அமைத்து குடி புகுந்தனர். இடம் கிடைத்து விட்டது சோற்றுக்கு என்ன செய்வது என்ற நிலை. ரம்யாவின் கணவன் முத்து ஒரு ஊதாறி. ரம்யா வீட்டு வேலைக்கு செல்வதாய் முடிவு செய்தாள்.

அருகிலுள்ள பங்களாவில் வேலைக்கும் சேர்ந்தாள். வீடு பெருக்குதல், துணி துவைத்தல், சமையல் இவைதான் அங்கு வேலை. அரை வயிற்று கஞ்சிக்கு வருமானமும் கிடைத்தது. அவ்வப்போது சமைப்பதில் கொஞ்சம் இவள் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

ஒரு நாள் "ஏண்டி ரம்யா! ஏண்டி நேத்து வேலைக்கு வரலை?"

"அம்மா குழந்தைக்கு உடம்பு சரியில்லம்மா"

"இந்த மாதிரில்லாம் காரணம் சொல்லிக் கிட்டிருந்தீன்னா உன்னைய வேலையை விட்டுத் தூக்கிட்டு வேற ஆளத்தான் பாக்கனும்"

"மன்னிச்சிருங்கம்மா இனிமே சரியா வந்துடுறேன்" என சொல்லிக் கொண்டே பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள். பாத்திரங்கள் இவள் கண்ணீரில் இன்னும் பளபளப்பாகிக் கொண்டிருந்தன. அவைகளுக்கு பலமுறைக் கண்ணீரை உணவளித்திருக்கிறாள்.

"என்னடி அழுது கிட்டிருக்க! ஒழுங்கா வேலையைப் பாரு இல்லைன்னா வீட்டுக்கு கெளம்பு இனிமே நீ வர வேணாம்."

திடுக்கென போர்வையை விலக்கி எழுந்தாள் ரம்யா. கனவில் நடந்த அந்த விடயங்கள் அவளுக்கு நினைவில்லை. நேரம் பார்த்தாள் எட்டாகியிருந்தது. எழுந்து வெளியில் வந்தாள். அப்போதுதான் வேலைக்கு வந்தாள் ரஞ்சனி.

"என்னடி ரஞ்சனி மணி எட்டாகுது. இதுதான் வேலைக்கு வர்ற நேரமா?" என்றாள் ரம்யா.

"கொழந்தைக்கு உடம்பு சரியில்லைம்மா" என்றாள் ரஞ்சனி.

"இந்த மாதிரிக் காரணமெல்லாம் சொல்லாத. அப்பறம் வேற எடத்துல வேலைத் தேடுறா மாதிரி இருக்கும். போ போய் வேலையைப் பாரு" என்றாள் ரம்யா.

பாத்திரங்களுக்கு வழக்கம்போல் உணவு கிடைத்தது. ரஞ்சனியிடமிருந்து.

23 விவாதங்கள்:

Anonymous said...

திருந்தவே மாட்டங்க சிலர் . நல்ல நடை

என் நடை பாதையில்(ராம்) said...

அது சரி....

ஜெட்லி... said...

கடைசி வரி...நச்..

Chitra said...

பாத்திரங்களுக்கு வழக்கம்போல் உணவு கிடைத்தது. ரஞ்சனியிடமிருந்து.


........உணர்வுகள், மனிதரின் நிலை பார்த்து வருவதில்லை. மனித நேயத்தை பல நேரங்களில் பணம் கொன்று விடுகிறது. :-(

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை நண்பா..

'பரிவை' சே.குமார் said...

அருமை நண்பா..

Anonymous said...

PLS READ IT........
PLS READ IT........
PLS READ IT........
PLS READ IT........
PLS READ IT........

http://vennirairavugal.blogspot.com/2010/01/blog-post_24.html

PLS READ IT........
PLS READ IT........
PLS READ IT........
PLS READ IT........
PLS READ IT........

புலவன் புலிகேசி said...

//Anonymous said...

PLS READ IT........
PLS READ IT........
PLS READ IT........
PLS READ IT........
PLS READ IT........

http://vennirairavugal.blogspot.com/2010/01/blog-post_24.html

PLS READ IT........
PLS READ IT........
PLS READ IT........
PLS READ IT........
PLS READ IT........
//

ரொம்ப நன்றிங்க இப்பத்தான் படிச்சேன்...

க.பாலாசி said...

நல்ல கதை... இந்த நிலைமை கொஞ்சம் மாறியிருக்குன்னு நினைக்கிறேன்....

டக்கால்டி said...

கலக்கல்...

Unknown said...

நல்லமுங்க

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல நடை.

சைவகொத்துப்பரோட்டா said...

இதுதான் உண்மையில் நடக்கிறது.

பனித்துளி சங்கர் said...

நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் .

Menaga Sathia said...

நல்ல கதை!!

ஸ்ரீராம். said...

திருந்தவே மாட்டாங்கங்கறீங்க...

மணிஜி said...

நல்லாயிருக்கு நண்பா.

Unknown said...

அருமை...

புலவன் புலிகேசி said...

நன்றி நண்பர்களே...

பனித்துளி சங்கர் said...

உண்மைதான் எத்தனையோ இதயங்கள் இப்படித்தான் உள்ளுக்குள்ளே சொல்ல இயலாமல் பல வலிகளுடன் வாழ்வின் தினங்களை நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள் .
பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவான் பனித்துளி

சசிகுமார் said...

உங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்
http://vandhemadharam.blogspot.com/2010/03/blog-post_9950.html

Thenammai Lakshmanan said...

தனக்கும் இப்படி நிகலழாம் என்பதை கருதி மனிதாபிமானத்தோடு இருப்பவர்கள் மிகச் சிலரே புலவரே

anu said...

kadhai arumai!