கடவுளை மற..மனிதனை நினை..

07 March 2010

உன் சிரிப்பினில்

"டேய் எருமை, இன்னைக்கு இன்டர்வியூ இருக்குன்னு ரமேஷ் சொல்லிருக்கான் எட்டு மணி வரைக்கும் தூங்கிக் கிட்டிருக்கியே!" என்ற தாயின் இனிமையான் வசைபாடலுடன் கண்திறந்து எழுந்தான் முருகன். முருகன் ஒரு மென்பொருள் முதுகலை பட்டதாரி. படிப்பு முடிந்து மூன்று மாத காலத்தில் இதுவரை அவன் வேலை தேடியதில்லை.

அவனுக்கு அதில் விருப்பமும் இருந்ததில்லை. காரணம் அவனது குறிக்கோள் ஒரு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என்பது. ஆனால் எப்படி என இதுவரை யோசித்ததில்லை. தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணமிருந்ததே தவிற என்ன தொழில், முதலீடு எப்படி சேர்ப்பது என்ற முயற்சியோ, சிந்தனையோ இல்லாமலிருந்தான்.

எழுந்து பல் துலக்கி குளித்து உடை மாற்றி தனது சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றான். இவனது முதல் வேலைக்கான தேர்வு. அந்த இடம் அவனுக்கு புதிதாகத் தெரிந்தது. வந்திருந்தவர்கள் எல்லாம் கையில் காகிதங்களை வைத்து எதையோ படித்துக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் அங்கு வந்து நுழைந்தாள் அந்தப் பெண். தேவதைகள் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. கட்டுக்கதை என சொல்லிக் கொண்டிருப்பான். அவளைப் பார்த்ததும் தேவதைக்கான அர்த்தம் கிடைத்ததாகத் தோன்றியது. முதல் பார்வையில் காதல் வரும் என்பதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை.

அவளைப் பார்க்காமல் திரும்பி உட்கார்ந்து கொண்டான். தேர்வு நடத்துபவர், வந்திருப்பவர்களின் வருகையை சரிபார்க்க சுயவிவர குறிப்புகளை எடுத்து ஒரு ஒரு பெயராக அழைக்க ஆரம்பித்தார். இவனுக்கு அவள் பெயரைத் தெரிந்து கொள்ள ஆசை. அவள் பக்கம் திரும்பி பார்வையை அவளிடம் கொடுத்து செவியை அந்த வாசிப்பாளரிடம் கொடுத்திருந்தான்.


"கவிதா" என்றதும் அந்த பதுமை மெல்ல கைகளை உயர்த்தியவாறு இவனைப் பார்த்தது. அவளின் முதல் பார்வையில் இவனுக்குள் பட்டாம்பூச்சி பறக்கத் தொடங்கியது. அந்தப் பார்வையில் இவனுக்கு காதல் வந்திருக்க வேண்டும். அப்படி ஒரு அழகானப் பார்வை அது. மீன் போன்ற விழிகள் எனப் பிதற்றுபவர்களை ஏளனம் செய்திருக்கிறான். இப்போது அவர்களைத் தேடிப்பிடித்து நன்றி சொல்லத் தோன்றியது அவனுக்கு.

அதன்பின் அவள் மீதிருந்த பார்வையை திருப்ப இவனுக்கு மனமில்லை. இவன் பார்ப்பதை அவளும் கவனித்திருக்க கூடும். அடிக்கடி இவன் தன்னைத்தான் பார்க்கிறானா என்ற சந்தேகத்தில் அவளும் இவனைப் பார்த்தாள். தன் தோழியிடம் ஏதோ கிசுகிசுக்க அவள் தோழி இவனைத் திரும்பிப் பார்த்தாள். இப்போது பார்வையை வேறு இடத்திற்கு மாற்றினான். ஆனால் கண்கள் இவன் பேச்சைக் கேட்கவில்லை.

கவிதா கருப்பும் இல்லை சிவப்பும் இல்லை என சொல்லக்கூடிய நிறத்தில் அழகிய தேவதை. அவளின் முகத்தில் இவன் லயித்திருந்தான். இதற்கு முன் ஒரு பெண்ணிடம் இது போல் மயங்கியதில்லை. ஆனால் இவளிடம்....


அவள் இவன் பார்வையை சரிபார்த்துக் கொண்டே தோழியிடம் ஏதோ சொல்லி சிரிக்க கன்னத்தில் ஒரு அழகிய குழி விழுந்ததை கண்டதும் "படார்" என ஒரு சப்தம் இவனுக்கு மட்டும் கேட்டது. பொதுவாக வெடி வெடித்தால் குழி விழும். ஆனால் அவள் கன்னக்குழி இவனுக்குள் ஒரு வெடியைப் பற்ற வைத்திருந்தது.

(தொடரும்)

31 விவாதங்கள்:

திருவாரூர் சரவணா said...

//"டேய் எருமை, இன்னைக்கு இன்டர்வியூ இருக்குன்னு ரமேஷ் சொல்லிருக்கான் எட்டு மணி வரைக்கும் தூங்கிக் கிட்டிருக்கியே!" என்ற தாயின் இனிமையான் வசைபாடலுடன்//

அது சரி...எருமைன்னா அது இனிமையான வசைபாடலா? புலவர் எங்கயோ மாட்டிகிட்டார்.

******

//"படார்" என ஒரு சப்தம் இவனுக்கு மட்டும் கேட்டது. //

வெடி சத்தம் மட்டுமா கேட்கும்....இனி அணுகுண்டே வெடிக்கும். நடக்கட்டும் ராசா....

முனைவர் இரா.குணசீலன் said...

சிறுகதை என்று வந்தேன் தொடர்கதையா?

தொடரட்டும் நண்பரே நன்றாகவுள்ளது.

வெற்றி said...

முருகன் - முருகவேல் - புலிகேசி ?

என் நடை பாதையில்(ராம்) said...

அந்த கம்பெனில கவிதா அண்ணிக்கு தான வேலை கிடச்சுது?

Prathap Kumar S. said...

அந்த அம்மணி படத்தை முழுசா போட்டிருக்கலாமே தல...
பதிவை இனிதான் படிக்கனும் :))

நினைவுகளுடன் -நிகே- said...

அழகு
உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன்

ஜெட்லி... said...

ரைட்....ஊறுதி ஆயிடுச்சு.....

பிரபாகர் said...

தம்பி புலிகேசியிடமிருந்து முதல் தொடர்!

நல்லாருக்கு தம்பி... அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்...

பிரபாகர்.

பனித்துளி சங்கர் said...

அழகாய் வார்த்தைகள் தொடுத்து தொடரட்டும் நண்பரே அருமை வாழ்த்துக்கள் !

சுசி said...

வெடி கலக்கல் புலவரே..

எல்லாம் சிரிப்பு செய்ற வேலை..

ரொம்ப நல்லா இருக்கு.

vasu balaji said...

நல்ல ஆரம்பம்.

சைவகொத்துப்பரோட்டா said...

கலக்கல் புலவரே, இந்த கதை நாயகிதான் நீங்கள் பார்த்த பெண்ணா!!

அகல்விளக்கு said...

கலக்கல் நண்பா...

ஸ்டார்ட் மியூசிக்...

Anonymous said...

கவிதா கருப்பும் இல்லை சிவப்பும் இல்லை என சொல்லக்கூடிய நிறத்தில் அழகிய தேவதை//

என்ன பொண்ணுடாஆஆஆஆஆஆஆஆஆஆ

திவ்யாஹரி said...

புலவரே.. உங்க வர்ணிப்பை படிக்கும் போதே அந்த பெண்ணை பார்க்க வேண்டும் போல உள்ளது.. கொடுத்து வைத்த பெண்.. மறுபடியும் அவங்களை சந்திக்க வாழ்த்துக்கள்..

செந்தில் நாதன் Senthil Nathan said...

நல்லா போகுதே...அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்.. :)

க.பாலாசி said...

முதல் பகுதி இறுதியில் முடித்தவிதமும் அருமை.... தொடருங்கள்....

ஈரோடு கதிர் said...

தொடருங்கள்

Unknown said...

ஆரம்பம் நல்லாருக்குங்க ..

Romeoboy said...

நல்ல தொடக்கம்.

நசரேயன் said...

//அவள் கன்னக்குழி இவனுக்குள் ஒரு வெடியைப் பற்ற வைத்திருந்தது.
//

புலவரு எப்படி எல்லாம் யோசிக்கிறாரு!!

பெசொவி said...

ஆரம்பம் அமர்க்களமா இருக்கு.............தொடருங்கள், காத்திருக்கிறேன்

DREAMER said...

நல்லாயிருக்கு புலவரே...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்.

-
DREAMER

மதுமிதா said...

காதல் வயப்பட்ட புலவரே,
தொடர்கதை தங்களிடம் நான் எதிர்பார்த்த ஒன்று.
நன்றாக இருக்கிறது நண்பா.
தொடருங்கள்......
தொடரும் வரை காத்திருக்கும்.....

-மதுமிதா

க ரா said...

நல்ல ஆரம்பம்.

Chitra said...

பொதுவாக வெடி வெடித்தால் குழி விழும். ஆனால் அவள் கன்னக்குழி இவனுக்குள் ஒரு வெடியைப் பற்ற வைத்திருந்தது.


........நீங்கள், காதல் வெடி வெடித்த குழியில் மாட்டியதால், இங்கு ஒரு அருமையான தொடர் கதை. எல்லோரும் கவிதை தான் எழுத வேண்டுமா என்ன? அசத்துங்க.

தாராபுரத்தான் said...

சிரிப்பில் நிறுத்திட்டீங்களே...ம்..அப்புறம்..

புலவன் புலிகேசி said...

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...

ஸ்ரீராம். said...

அருமையான ஆரம்பம்..

அன்புடன் மலிக்கா said...

ஆக கன்னக்குழிக்குள் விழுந்தாச்சி..ம்ம் ஆரம்பமே அசத்தல்தான் நடத்துங்க...

Thenammai Lakshmanan said...

எங்கே கன்னக் குழி ...போட்டோவில காணோம் புலவரே