கடவுளை மற..மனிதனை நினை..

09 March 2010

உன் சிரிப்பினில் - 2


முதல் பகுதி படிக்க: உன் சிரிப்பினில்-1

அதன் பின் அவள் சிரிப்பதை நிறுத்தவில்லை. இவனும் ரசிப்பதை நிறுத்தவில்லை. ஒரு சிகப்பு நிற சுடிதாருடன், பச்சை நிறத் துப்பட்டா, அவளுக்காகவே வடிவமைக்கப் பட்டதாகத் தோன்றியது. தேவதை என்றால் வெள்ளை ஆடை மட்டும்தான் அணிய வேண்டுமா? என அந்த சுடிதார் இவனைப்பார்த்து கேட்டதாய்த் தோன்றியது.

முகத்தில் எந்த வித ஆடம்பர அலங்காரங்களும் இல்லை. நிலவிற்கு பொட்டு வைத்தாற்போல் இருந்தது அவள் நெற்றி. அந்த சாதாரனம் அவனுக்குள் இருந்தக் காதலை அதிகப் படுத்தியிருந்தது.

"கவிதா ப்ளீஸ் கம்" என்ற குரல் இவனுக்குப் பின்னாலிருந்து ஒலிக்க கோபமாய்த் திரும்பினான். அவள் நேர்முகத் தேர்வு அறைக்கு அழைக்கப் பட்டாள். எழுந்து இவனைக் கடக்கும் முன் ஒரு கன்னக்குழி புன்னகையை இவனுக்கு பரிசளித்தாள். "ஹாய்" என சொல்ல முயற்சித்தான். அதற்குள் இவனைக் கடந்து சென்றது அந்த தேவதை. சட்டென அவள் கால்களைப் பார்த்தான். அதில் மெட்டி இல்லை.

அவள் சென்ற பின் அவள் அமர்ந்திருந்த இருக்கையைப் பார்த்தான் அங்கே அவளது கைப்பை இருந்தது. நிம்மதிப் பெருமூச்சிட்டான். அடுத்த சில நிமிடங்களில் "முருகன் ப்ளீஸ் கம்" என்று அதே குரல் கேட்டது. இவன் புன்னகைக்க அங்கே அவள் இல்லை. கைப்பையைப் பார்த்துக் கொண்டே உள் நுழைந்தான்.

ஒரு கண்ணாடி அறைக்குள் பலிங்கு சிலை ஒன்று அமர்ந்து சைகையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தது. அதை ரசித்துக் கொண்டே இவனுக்கான அறையில் நுழைந்தான். அங்கு கேட்கப் பட்ட கேள்விகளுக்கு இவனிடம் பெரும்பாலும் மவுனம் மட்டுமே பதிலாய் இருந்தது. அவன் நினைவு முழுதும் அந்தக் கைப்பை மீதே இருந்தது.

இவன் தேர்வாகவில்லை. அது அவனுக்கு பெரிதாகத் தோன்றவில்லை. வெளியில் வந்தவன் நேரே ஒடி அவள் இருக்கையைப் பார்த்தான். அங்கே அது இல்லை. அவள் சென்றிருக்க கூடும். அந்த அலுவலகம் விட்டு வெளியேறினான். அவளை வெளியில் தேடி நொந்து போனான். அவள் இல்லை.

வீடு வந்து சேர்ந்தான். "என்னடா ஆச்சு" என அம்மா கேட்டாள். "கிடைக்குமான்னு தெரியலை" என்று அந்தப் பெண்ணை மனதில் வைத்து சொல்லிவிட்டு உள் சென்றான். அவளை எங்குத் தேடலாம் என யோசித்தான். திடீரென ஒரு எண்ணம் தோன்ற அன்று முதல் எங்கு வேலைக்கான தேர்வு நடந்தாலும் தவறாமல் செல்ல முடிவு செய்தான். அவளைத் தேட, வேலையை அல்ல.

ஒரு வருடம் கடந்திருந்தது. இந்த ஒரு வருடம் அவனை நிறையவே மாற்றியிருந்தது. இந்த ஒரு ஆண்டில் அவன் குறைந்த பட்சம் ஐம்பது நிறுவனங்களாவது அலைந்திருப்பான். இதுவரை வேலையும் கிடைக்கவில்லை. அவளும் கிடைக்கவில்லை. அப்போது அவனுக்கு அந்த மின்னஞ்சல் வந்திருந்தது.

அவன் அவளை சந்தித்த அந்த நிறுவனத்திலிருந்து வேலைக்கான தேர்வு நடைபெறுவதாகவும், அதில் கலந்து கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது. சரி ஒரு வேளை அவளை அங்கு சந்திக்க நேர்ந்தால் என எண்ணிக் கொண்டு புறப்பட்டு சென்றான். மீண்டும் அதே அறை.

அவளைத் தேடத் தொடங்கினான். அங்கு அவளைக் காணவில்லை. இதற்கு மேல் அங்கே அமர்ந்திருக்க அவனுக்கு விருப்பமில்லை. புறப்பட எத்தணித்து எழுந்த போது "முருகன் ப்ளீஸ் கம்" என ஒரு குரல் கேட்டதும் சட்டென திரும்பிப் பார்த்தான்.

(தொடரும்)

26 விவாதங்கள்:

வெற்றி said...

//கிடைக்குமான்னு தெரியலை" என்று அந்தப் பெண்ணை மனதில் வைத்து சொல்லிவிட்டு//

//அன்று முதல் எங்கு வேலைக்கான தேர்வு நடந்தாலும் தவறாமல் செல்ல முடிவு செய்தான். அவளைத் தேட, வேலையை அல்ல.//

ஹா ஹா ஹா..அருமை தல :)

பிரியமுடன்...வசந்த் said...

தூள்..

சுவாரஸ்யமா இருக்குப்பா அடுத்து அவள பாத்தானா இல்லியா?

ஸ்ரீராம். said...

ஆஹா..காதல் ஒருவரை என்னென்ன செய்ய வைக்கிறது...எப்படி எல்லாம் சிந்திக்க வைக்கிறது.

பிரபாகர் said...

சுவராஸ்யமா போகுது புலிகேசி! சீக்கிரம் அடுத்த பாகம்...

பிரபாகர்.

ஜெட்லி said...

திரும்புனா...அந்த பெண்....:))
அப்புறம்....

thenammailakshmanan said...

புலிகேசி இதுவரை நீங்க எழுதாத பாணியில் இருக்கு ...ம்ம்ம்.. காதல் ஒருவனை எப்படி எல்லாம் மாற்றி விடுது

Chitra said...

அதன் பின் அவள் சிரிப்பதை நிறுத்தவில்லை. இவனும் ரசிப்பதை நிறுத்தவில்லை.

.........still jolling...... ;-)

சைவகொத்துப்பரோட்டா said...

ம்ம்ம்......அழைத்தது அந்த பெண்தானே.

இன்றைய கவிதை said...

ரொம்ப நல்லா இருக்கு, அழைத்தது அந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்திருக்கிறது, அவளாக இருந்தால் இவனுக்கு ஞானம் பிறக்குமா? ஒரு விடலை சபலம் போல் உள்ள இந்த ஆசை தேடல் வியர்த்தம் என உணர்த்துவீர்களா? அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்

நன்றி
ஜேகே

ஜெரி ஈசானந்தா. said...

ரசித்தேன்.

திவ்யாஹரி said...

இவ்வளவு suspense-ல கொண்டு வந்து நிறுத்திட்டிங்களே .. அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க..

முனைவர்.இரா.குணசீலன் said...

அழைத்தது அவள் தானே!!

அகல்விளக்கு said...

//அன்று முதல் எங்கு வேலைக்கான தேர்வு நடந்தாலும் தவறாமல் செல்ல முடிவு செய்தான். அவளைத் தேட, வேலையை அல்ல.//

:-)


அழைத்தது அவள்தானே....

ரொம்ப சஸ்பென்ஸா இருக்கு தல...

சீக்கிரம் அடுத்து என்னன்னு சொல்லுங்க...

வானம்பாடிகள் said...

அடுட்த்த பகுதி வரட்டும்:)

க.பாலாசி said...

அடுத்ததையும் அறிந்துகொள்ள ஆவல்...

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

:) continue continue....

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

ஆஹா காதல் பற்றிக்கொண்டதால் . இங்கு கதைகூட கவிதை பாடுதே !

டக்கால்டி said...

க்ளைமாக்ஸ் என்னால ஊகிக்க முடியுது சார். இறுதியில் முருகன் கம் இன் என்று கூப்பிட்டது அந்த பெண் கவிதா தானே.

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. அழைத்தது அவள் தானே!! ..//

அப்படித்தானா..??

விக்னேஷ்வரி said...

என்னாச்சு காதல் பக்கம் காத்து வீசுது. ம், நடத்துங்க.

கலகலப்ரியா said...

கூப்ட்டது கவிதாவா... ரொம்ம்ம்ப த்ரில்லிங்கா இருக்கே.... பாப்பம்..

சி. கருணாகரசு said...

திரும்பி பார்த்தா.... கவிதான்னு அரம்பிப்பிங்க... அப்படிதானே?

~~Romeo~~ said...

நன்றாக இருக்கிறது. சஸ்பென்ஸ் முடிங்க சீக்கிரம்.

ஈரோடுவாசி said...

ரொம்ப சஸ்பென்ஸா இருக்கு தல

சீக்கிரம் அடுத்து என்னன்னு சொல்லுங்க....

தியாவின் பேனா said...

நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்

தாராபுரத்தான் said...

இப்போது அழைப்பது அந்த குரல் தானோ?