கடவுளை மற..மனிதனை நினை..

10 March 2010

உன் சிரிப்பினில் - 3


ஒரு வருடம் முன் அழைத்த அதே குரல். தேர்வுக்கான் அறையை நோக்கி நடந்த போது, அவளைக் கடைசியாக பார்ந்த்த அந்தக் கண்ணாடி அறையை நோக்கினான். அங்கு அவள் இல்லை. அந்த இடம் வெறிச்சோடிப் போனதாகத் தோன்றியது அவனுக்கு. இவனுக்கான அறைக் கதவைத் திறந்து "மே ஐ கம் இன்" என்றான்.

"எஸ்" என்றவாறுத் திரும்பினாள் அந்தப் பெண். ஆம் அவளேதான். அவளைக் கண்டுபிடித்து விட்டான். மகிழ்ச்சியில் செய்வதறியாமல் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சென்று அவள் எதிரில் அமர்ந்தான். அவளுக்கு இவனை யார் எனத் தெரியவில்லை.

"அவள் அன்று வந்தது டீம் லீட் பதவிக்கு. வேலையும் பெற்று விட்டாள் எனப் புரிந்தது. அப்படியென்றால் நம்மை விட வயது மூர்த்தவளா இவள். இர்க்கட்டுமே சச்சின், தனுஷ் எல்லாம் இல்லையா" என மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

அவள் தேர்வுக்கானக் கேள்விகளைத் தொடுத்த வண்ணமிருந்தாள். அவளது குரலையும் இதழசைவையும், மறக்க முடியா அந்தக் கன்னக்குழி சிரிப்பையும் ரசித்துக் கொண்டே பதிலளித்துக் கொண்டிருந்தான். இந்த ஒரு வருடத்தில் அவன் கற்ற விடயங்களேக் கேள்விகளாய்த் தொடுக்கப்பட்டது.

அவள் கேட்டதால் பதில்களை பட்பட்டென கொடுத்தான். எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் இருந்தான். அனைத்துக் கேள்விகளையும் முடித்து "யூ ஆர் செலக்டட் இன் திஸ் ரவுண்ட்" என அந்த பலிங்கு சிலை சொன்னது. இது போலவே "யூ ஆர் செலக்டட் அஸ் மை ஹஸ்பன்ட்" என சொல்ல மாட்டாளா என நினைத்துக் கொண்டான்.

சொல்லியவள் எழுந்து நின்று அவனுக்குக் கைக் கொடுத்தாள். அவள் ஸ்பரிசம் பட்டதும் இவன் வலது கை பிறவிப் பலனை அடைந்து விட்டதாக இடது கையிடம் தம்பட்டமடித்துக் கொண்டது. "யூ வில் பீ கால்டு ஃபார் த நெக்ஸ்ட் ஹெச்.ஆர் ரவுண்ட். ப்ளீஸ் வெயிட் அவுட் சைட்" என்றாள்.

அவளிடம் "தேங்க் யூ" என சொல்லிவிட்டுத் திரும்பியவன் ஏதோ மனதில் பட சட்டெனத் திரும்பி அவள் கால்களைப் பார்த்தான். அவன் இதயமே வெடித்துப் போனது போல் உணர்ந்தான் ஆம் அவள் கால்களில் அந்த மெட்டி இருந்தது. கழுத்தை மறைத்து சுடிதார் அணிந்திருந்ததால் தாலி இவன் கண்களில் படவில்லை.

நடைபிணம் போல் வெளியேறி ஒரு இருக்கையில் அமர்ந்தான். எதுவும் தோன்றவில்லை அவனுக்கு. ஏன் இங்கு உட்கார்ந்திருக்கிறோம் என்ற யோசனை கூட இல்லை. அப்போதுதான் அந்தக் குரல் "எக்ஸ் க்யூஸ்மி..யூ கேன் லீவ் னவ். வீ வில் கால் யூ பை டுமாரோ ஃபார் யுவர் னெக்ஸ்ட் ரவுண்ட்" என்றது. எந்த பதிலும் சொல்லாமல் எழுந்து வெளியேறினான்.

மறுநாள் அலைபேசி ஒலிக்க எடுத்தான். "யுவர் நெக்ஸ்ட் ரவுண்ட் வில் பீ பை டுமாரோ. வீ வில் சென்ட் த மெயில் டூ யூ" என்றவாறு வந்த அழைப்பு அறிவுறுத்தியது. மின்னஞ்சலைப் பார்த்தான். பின்பு ஏதோ முடிவு செய்தவனாய் சென்று தேவையான சான்றிதழ்களை எடுத்துப் பையில் வைத்து விட்டு அன்றைய பொழுதை கலக்கத்துடன் கழித்தான்.

மறுநாள் காலை முன்னரே எழுந்து குளித்து வேலைக்கானத் தேர்வுக்கு புறப்பட்டான். அவர்கள் சொன்ன சரியான நேரத்தில் அந்த நிறுவனத்தின் அருகிலிருந்த டி.சி.எஸ் சென்று நுழைந்தான். இப்போது அவளைத் தேடும் நோக்கம் இல்லை. வேலை பெறுவது மட்டுமே நோக்கமாக இருந்தது.

(முற்றும்)

25 விவாதங்கள்:

சைவகொத்துப்பரோட்டா said...

வி.தா.வரு. மாதிரி அதிர்ச்சியான முடிவு தல.

பித்தனின் வாக்கு said...

காதல் கத்திரிக்காய் எல்லாம் விட்டுட்டுப் பொழப்பைப் பாருடான்னு அழகாய் சொல்லி இருக்கிங்க. மிக்க நன்றி.

இனியாள் said...

சுவாரஸ்யமான பதிவு.

Chitra said...

கனவு கலைஞ்சு போச்சா? :-(

அகல்விளக்கு said...

ஹாஹாஹாஹா....

கடைசில இப்படி ஆயிடுச்சே தல....

விடுங்க.... பொழப்ப பாப்போம...

vasu balaji said...

இப்படி ஆகிப்போச்சா?

மன்னார்குடி said...

புலிகேசி, கேபிள், கார்க்கி-னு எல்லாரும் காதல் கடல்-ல நீந்திக்கிட்டு இருக்கீங்க. சபாஷ்.

மதுமிதா said...

என்ன நண்பரே,
அதற்குள் முடித்து விட்டீர்களே!!!!!!
"கவிதா" இல்லேன்னா "கமலா"....
முதல் பகுதியை விட இரண்டு மற்றும் மூன்றாம் பகுதிகள்
மிக அழகு.
தொடருங்கள்.............
தங்கள் தொடர்களை என்றும் எதிர்நோக்கும்.....
-மதுமிதா

சசிகுமார் said...

மூன்று பதிவுகளையும் பார்த்தேன் நண்பா, நல்ல கற்பனை வளம் உங்களுக்கு தொடர்ந்து எழுதி பல சாதனைகளை புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

டக்கால்டி said...

முடிவு தான் எதோ சப்புன்னு ஆயிடுச்சுங்க...
சேர்த்து வெச்சுருக்கலாம்..

Unknown said...

என்ன இப்பிடி விரைவா முடித்து விட்டீர்கள் புலிகேசி அவர்களே

காதல் முடியாது

திருவாரூர் சரவணா said...

மிஸ் ஆன பொண்ணப் பத்தியும் மிஸ் ஆனா பஸ்ஸைப் பத்தியும் கவலையே படக்கூடாது தல. அடுத்த பொண்ணு, அடுத்த பஸ்சு.

ஜெட்லி... said...

t.c.s ஆ....இல்ல t.n.q வா புலிகேசி??

திவ்யாஹரி said...

புலவரே முடிவு ரொம்ப சோகம்.. உங்க love story-ன்னு சந்தோஷமா படிச்சேன்.. இப்போ உங்களோடதா இருக்க கூடாதுன்னு இறைவனை வேண்டிகிறேன்.. :((

sangeetha said...

hi,intha mudivu unakum thane? poi polapa paaru!!!

மந்திரன் said...

TCS கொ. ப .செ நீங்கதானா ..
காதல் கதை என்றாலே சோகமான முடிவு தானா ?
அது என்ன அழகான பொண்ணுங்களுக்கு உடனே கல்யாணம் ஆகிவிடுகிறது ?

சரி விடுங்க . Quarter/Half/Full இருக்க பயமேன் ?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அடடே !!!

ஈரோடுவாசி said...

இதுக்குத்தான் முகத்தை மட்டும் பார்க்ககூடாது.
கொஞ்சம் காலையும் பார்க்கணும் ....

புலவரே.... காதலை விட்டு வேலையப்பாருன்னு கடைசியா சொன்னது சூப்பர் ....

Thenammai Lakshmanan said...

"யூ ஆர் செலக்டட் இன் திஸ் ரவுண்ட்" என அந்த பலிங்கு சிலை சொன்னது. இது போலவே "யூ ஆர் செலக்டட் அஸ் மை ஹஸ்பன்ட்" என சொல்ல மாட்டாளா என நினைத்துக் கொண்டான்.//

ஹாஹாஹா அப்படியா புலவரே

வெற்றி said...

வட போச்சேன்னு கவலை படாதீங்க தல..டீ இன்னும் வரல :)

பிரபாகர் said...

எதிர்ப்பாராத முடிவு புலிகேசி...

அருமை.

பிரபாகர்.

ஸ்ரீராம். said...

என்னங்க இது...ஐயையே....சரி நல்லதுக்குதான்.

'பரிவை' சே.குமார் said...

உங்களது சில இடுகைகளை இன்னும் படிக்கவில்லை நண்பரே. அறை மாற்றம் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக வேலைகள். இன்று நண்பர் வீட்டுக்கு வந்து நண்பர்களின் தளங்களை பார்த்து பின்னூட்டம் இடுகிறேன்.

முடிவு அருமை.

பனித்துளி சங்கர் said...

இந்த வார டரியல் கலக்கல் .

Anonymous said...

புலிகேசி

மிஸ் பண்ணிட்டீங்களே... அவங்க கேரளாவுள எதோ ??? கம்யூனிட்டியான்னு கேளுங்க•.. அங்க கல்யாணத்துக்கு முன்னாடி கூட மெட்டி அணிவாங்க•.. என்ன பாஸ் போன் பண்ணிருக்கலாம்லா.. சுத்த வேஸ்டுப்ஆ