கடவுளை மற..மனிதனை நினை..

29 March 2010

டரியல் (29-மார்ச்-2010)

7:46:00 AM Posted by புலவன் புலிகேசி 39 comments

சனிக்கிழமை நடந்த "தமிழ் வலைபதிவர்கள் குழும" விவாதத்திற்கு சில காரணங்களால் என்னால் செல்ல இயலவில்லை. மறுநாள் கேபிளாரிடம் பேசியும், சிலரது வ்லைப்பூ மூலமும் அங்கு நிலவிய குழப்பங்களையும், இறுதியாக எடுக்கப் பட்ட முடிவையும் தெரிந்து கொண்டேன். என்னைப் பொறுத்த வரை இந்தக் குழு மக்களுக்கு பயன்படும் நல்ல விடயங்களையும், உதவிகளையும் தன் பணிகளாக அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குழுமத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள்

மின்னஞ்சல் செய்ய வேண்டிய முகவரி: tamilbloggersforum@gmail.com
தமிழ் வலைப்பதிவர்கள் கூகுல் குழுமம் tamizhbloggersforum@googlegroups.com

புகைப்பட உதவி: சுகுமார்
---------------------------

என் நண்பன் ஒருவன் சென்னையின் முக்கியமானப் பகுதியில் போக்குவரத்து காவல் அதிகாரியாக (டிராஃபிக் எஸ்.ஐ) பணியாற்றி வருகிறான். நண்பர்களில் சிலர் அவனது துடிப்பான பணியையும், நேர்மையையும் கவனித்திருக்கிறார்கள். அவன் பணியில் இருந்ததால் பேசாமல் வீடு திரும்பியிருக்கிறார்கள். ஒரு எஸ்.ஐ தனியாக சாலையில் நின்று விதி மீறுபவர்களைப் பிடித்துக் கொண்டிருப்பது ஆச்சர்யமளித்ததாகவும் சொன்னார்கள். அதன் பின் ஒரு நாள் என் அறைக்கு வந்தான். அவனுக்கு லஞ்சம் பெறுவதில் விருப்பமில்லாததால் கான்ஸ்டபிள்கள் மற்றும் ஏட்டுகள் அவனுடன் வருவதில்லையாம். லஞ்சம் இல்லை என்றால் பணி செய்ய அவர்கள் தயாராக இல்லை என்பது புரிந்தது. இவர்கள் எல்லாம் சேர்ந்து என் நண்பணை மாற்றாமல் இருக்க வேண்டும். காவல் துறை என்றாலே லஞ்சத் துறை என்றாகிப் போனதற்கு இது போன்றவர்கள்தான் காரணம்.

---------------------------

மூன்றாண்டுகளுக்குப் பிறகு நான் முன்னர் பணி செய்த நிறுவனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தது. கையில் குழந்தையுடன் வந்திருந்தார். ஆனால் வேறு ஒரு தோழியின் மூலம் விபரமறிந்தேன், பத்து ஆண்டு காலம் காதலித்து திருமணம் செய்து பிள்ளை பெற்றிருக்கிறார்கள். இப்போது திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் "விவாகரத்து" செய்ய முடிவெடுத்து வின்னப்பமிட்டிருக்கிறார்கள். இந்தக் காதலின் அர்த்தம் எனக்கு இன்று வரை சரிவரப் புரிந்ததில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

---------------------------

சென்னையில் பல இடங்களில் பாலங்கள் கட்டப் பட்டு சாலைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் சென்னையின் முக்கிய சாலையில் ஐ.ஐ.டி க்கு அருகில் உள்ள சாலையின் நிலை கவலைக்கிடமானது. வகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனே கடந்து செல்கின்றனர். புதிய சாலைகள் அமைப்பதில் கிடைக்கும் லஞ்சம் பழையவற்றை புதுப்பிப்பதில் கிடைக்கவில்லையோ?

---------------------------
இந்த வாரப்பதிவர்: திசைக்காட்டி ரோஸ்விக்


இதனை சிலர் தமிழாக்கம் செய்து ரோசாப்பொய்முடி என கலாய்ப்பார்கள். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் வாழ்வியல் நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே இருக்கும். உறவுகள் பற்றியும் அழகாக சொல்லியிருப்பார்.

இவரது வலைப்பூ: திசைக்காட்டி

---------------------------

இந்த வார டரியல், இந்த வாரப் பதிவர் ரோஸ்விக் எழுதிய "பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்)...". தேவையானப் பதிவு. உலக அழிவில் நம் பங்கு என்ன என்பதை சொல்லியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

---------------------------

39 விவாதங்கள்:

பிரபாகர் said...

டரியல் வழக்கம்போல் அருமை புலிகேசி. தம்பி ரோஸ்விக் அறிமுகம் அசத்தல்.

பிரபாகர்.

மணிஜி said...

present sir

ரோஸ்விக் said...

என்னை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு மிகுந்த நன்றிகள் நண்பரே!

இன்று பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்) - 2 வெளியிட்டுள்ளேன்.

மிக்க நன்றி. :-)

Unknown said...

நல்ல டரியல்..:)

Paleo God said...

டரியல் அருமை புலவரே. ரோஸ்விக் அறிமுகம் நன்று.

வாழ்த்துகள்.:)

Chitra said...

திசைகாட்டி ரோஸ்விக் - வாழ்த்துக்கள்!

நல்ல பதிவு தொகுப்பு!

vasu balaji said...

அட நம்ம ரோஸ்விக்:)

திவ்யாஹரி said...

//புதிய சாலைகள் அமைப்பதில் கிடைக்கும் லஞ்சம் பழையவற்றை புதுப்பிப்பதில் கிடைக்கவில்லையோ?//

சரியாகச் சொன்னீர்கள்.. உண்மை அதுவாக தான் இருக்கும்..

//இந்தக் காதலின் அர்த்தம் எனக்கு இன்று வரை சரிவரப் புரிந்ததில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்//

நிறைய பார்ப்புடன் காதலித்து பின் ஏமாற்றமடைவதால் தான் இந்த நிலை.. காதலில் அன்பை மட்டுமே எதிர்ப்பார்க்க வேண்டும்..

ரோஸ்விக் நல்ல அறிமுகம்..

திவ்யாஹரி said...

உங்கள் நேர்மையான நண்பர்க்கு எங்கள் பாராட்டுக்களை சொல்லுங்கள்.. நம்மை போன்றவர்களின் பாராட்டுகள் தான் அவர்களுக்கு கிடைக்கும் உற்சாகம்..

பனித்துளி சங்கர் said...

இந்த வார டரியல் கலக்கல் !
ரோஸ்விக் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் !

Romeoboy said...

ஏன் ஆப்சென்ட் ?? அடுத்த தடவை பதிவர் சந்திப்புக்கு வரும் போது உங்க அப்பாகிட்ட கையெழுத்து வாங்கின லீவ் லெட்டர் ஓட வரணும்.

க.பாலாசி said...

உங்களது நண்பருக்கு எனது வாழ்த்துக்களையும் பகிருங்கள்.. அவரது பணி மேன்மேலும் சிறக்கட்டும்....

அகல்விளக்கு said...

உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள் தல....

தொடருங்கள்...

:-)

அன்புடன் மலிக்கா said...

அருமையான டயரியல் அறிமுகமும் சூப்பர்..

அப்புறம் புலி.
//இந்தக் காதலின் அர்த்தம் எனக்கு இன்று வரை சரிவரப் புரிந்ததில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்//

அவர்களிடமே கேட்போமா. ஏனென்றால் அவர்களுக்குதானே தெரியும் காதல் ஏன் தோன்றது என்று.
சாரி காதலித்தவர்கள் ஏன் தோற்றார்களென்று.. சரிதானே..

மங்குனி அமைச்சர் said...

சே... போடா மனுகுனி, நல்லதா யோசிச்சு கமன்ட் போடலாம்னு பாத்தா, அதுக்கு முன்னாடியே நாம நினைச்சது எல்லாத்தையும் ஏற்கனவே போட்டாங்க
ரோஸு வாழ்த்துக்கள்பா (வேற என்னா பண்றது )

Sukumar said...

டரியல் அருமை....பதிவர் சந்திப்பில் உங்களை சந்திக்கலாம் என்று இருந்தேன்...

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே,
ரோஸ்விக் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

காதலித்தவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட கூடாதா... அப்படி ஒரு வேளை ஏற்பட்டால் கூட வெளியே காட்டிக் கொள்ளாமல் போலியாக நடித்து வாழ்வது காதல் என்றா நினைக்கிறீர்கள்
-மணி

butterfly Surya said...

பகிர்விக்கு நன்றி.

சந்திப்பில் எதிர் பார்த்தேன்.

வாழ்த்துகள்.

butterfly Surya said...

சென்னையில் ஒரு நாளைக்கு 15 -20 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன என வக்கீல் நண்பன் கூறினான்.

வரதராஜலு .பூ said...

//இவர்கள் எல்லாம் சேர்ந்து என் நண்பணை மாற்றாமல் இருக்க வேண்டும். //

ஆனால் பிழைக்கத்தெரியாதவர் என்ற பெயரை இறுதிவரை பெற்றிருப்பார்.

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த நேர்மையான காவல்துறை நண்பருக்கு, எனது
வாழ்த்துக்களை தெரிவியுங்கள் நண்பரே.

திவ்யாஹரி said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் புலவரே..

அன்புடன் அருணா said...

டரியல் சூப்பர்!அறிமுகம் நன்று.வாழ்த்துக்கள்!

புலவன் புலிகேசி said...

//Anonymous said...

காதலித்தவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட கூடாதா... அப்படி ஒரு வேளை ஏற்பட்டால் கூட வெளியே காட்டிக் கொள்ளாமல் போலியாக நடித்து வாழ்வது காதல் என்றா நினைக்கிறீர்கள்
-மணி
//

பத்து வருடம் காதலித்த போதே தெரிந்திருக்க வேண்டும்..ஒரு மாயையில் சிக்கிப் பிழைப்பதாக் காதல்?

Anonymous said...

என்னுடைய கேள்விகள் இரண்டு

ஒத்த கருத்துள்ளவர்களுக்கிடையில் வேறுபாடுகள் தோன்றுவது தவறா அல்லது அதனை மறைப்பது தவறா

திருவாரூர் சரவணா said...

//என் நண்பன் ஒருவன் சென்னையின் முக்கியமானப் பகுதியில் போக்குவரத்து காவல் அதிகாரியாக (டிராஃபிக் எஸ்.ஐ) பணியாற்றி வருகிறான். நண்பர்களில் சிலர் அவனது துடிப்பான பணியையும், நேர்மையையும் கவனித்திருக்கிறார்கள். அவன் பணியில் இருந்ததால் பேசாமல் வீடு திரும்பியிருக்கிறார்கள். ஒரு எஸ்.ஐ தனியாக சாலையில் நின்று விதி மீறுபவர்களைப் பிடித்துக் கொண்டிருப்பது ஆச்சர்யமளித்ததாகவும் சொன்னார்கள்.//

நானும் ஒரு நேர்மையான போலீஸ்காரரை சந்தித்திருக்கிறேன்.இதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், அவருடன் ஒரு இரண்டு நாட்கள், பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்டதுதான்.(நான் போலீஸ் இல்லீங்கோ...காலேஜ் என். எஸ். எஸ் மூலமா இந்த வாய்ப்பு. (2001 ம் வருஷம்.)

ஸ்ரீராம். said...

காதல் பற்றிய கவலை நியாயமானதுதான்...

கலகலப்ரியா said...

நல்லாருக்கு புலிகேசி.. ))மீட்டிங் படங்கள்ல யாரோ புலிகேசின்னு யாரோட படத்தையோ எனக்கு காண்பிச்சாய்ங்கப்பு... நான் இது கேசியும் இல்லை புலியும் இல்லைன்னு சொல்லிப்ட்டேன்ல..

||//Anonymous said...

காதலித்தவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட கூடாதா... அப்படி ஒரு வேளை ஏற்பட்டால் கூட வெளியே காட்டிக் கொள்ளாமல் போலியாக நடித்து வாழ்வது காதல் என்றா நினைக்கிறீர்கள்
-மணி
//

பத்து வருடம் காதலித்த போதே தெரிந்திருக்க வேண்டும்..ஒரு மாயையில் சிக்கிப் பிழைப்பதாக் காதல்?||

புலிகேசி.. உங்களுக்கு இது புரிய கொஞ்சம் அல்லது ரொம்பவே காலம் தேவைப்படும்னு தோணுறது... வாழ்க்கைய யாரும் எழுதி வைக்கலை.. காதலை யாரும் எழுதி வைக்கலை... இதுதான் காதல்.. இது இப்டிதான் இருக்கணும்னு ரெசிபி பார்த்து பண்ணா நல்லா இருக்குமா தெரியலை.. ஒவ்வொரு கால கட்டத்தில அவரவர்க்கு ஏற்படும் அனுபவம் அலாதியானது...

மணியின் விவாதம் மிக நியாயமா எனக்குப் படுது... அதனாலயே உங்க வாதம் நியாயமில்லைன்னு சொல்லலை... இது உங்க பார்வை... உங்க பார்வை வட்டத்தின் ஆரை சில அடிகள் நகரலாம்...

சாரி.. இது உங்களுக்கு புரியுமா அப்டிங்கிறது சந்தேகம்தான்.. பல தடவை இங்கு இவ்வாறான கலாச்சார சம்மந்தமான கருத்துகள் பார்த்துத் தவிர்த்திருக்கிறேன்... ஒரு தடவையாவது.. இது பற்றிக் குறிப்பிடனும்னு தோணிடுத்து.. உங்களால சிந்திக்க முடியும்.. இன்னிக்கு இல்லைன்னாலும் எப்போவாவது..

நட்புடன்
ப்ரியா..

கலகலப்ரியா said...

//Anonymous said...

என்னுடைய கேள்விகள் இரண்டு

ஒத்த கருத்துள்ளவர்களுக்கிடையில் வேறுபாடுகள் தோன்றுவது தவறா அல்லது அதனை மறைப்பது தவறா//

ஒரு ஆரோக்யமான விவாதத்திற்கு முக்காடு எதற்கு மணி.. இவ்வாறு சமூகத்தின் போர்வையில் ஒளிந்து கொள்வதால் ஆகப் போவதொன்றுமில்லை..be bold to express yer views & be yerself...!

ILLUMINATI said...

காதலின் போது வளர்த்துக் கொள்ளும் அதிகப்படியான எதிர்பார்ப்பும்,விட்டுக் கொடுத்துச் செல்லும் பழக்கமின்மையும்,யார் சொல்வது சரி என்ற ஈகோ யுத்தமுமே மனங்களும்,காதலும் உடையக் காரணம்.

புலவன் புலிகேசி said...

//Anonymous said...

என்னுடைய கேள்விகள் இரண்டு

ஒத்த கருத்துள்ளவர்களுக்கிடையில் வேறுபாடுகள் தோன்றுவது தவறா அல்லது அதனை மறைப்பது தவறா//

அதில் தவறொன்றும் இல்லை நண்பரே...தீர்க்க முடியா அளவு பிரச்சினைகள் வருவதும், பின் விவாலரத்தில் முடிவதும் பெரும்பாலும் காதல் திருமணங்களில் தான். அது தான் ஏன்?

புலவன் புலிகேசி said...

//Blogger ILLUMINATI said...

காதலின் போது வளர்த்துக் கொள்ளும் அதிகப்படியான எதிர்பார்ப்பும்,விட்டுக் கொடுத்துச் செல்லும் பழக்கமின்மையும்,யார் சொல்வது சரி என்ற ஈகோ யுத்தமுமே மனங்களும்,காதலும் உடையக் காரணம்.//

இது தான் என் கருத்தும்...

புலவன் புலிகேசி said...

//மணியின் விவாதம் மிக நியாயமா எனக்குப் படுது... அதனாலயே உங்க வாதம் நியாயமில்லைன்னு சொல்லலை... இது உங்க பார்வை... உங்க பார்வை வட்டத்தின் ஆரை சில அடிகள் நகரலாம்...

சாரி.. இது உங்களுக்கு புரியுமா அப்டிங்கிறது சந்தேகம்தான்.. பல தடவை இங்கு இவ்வாறான கலாச்சார சம்மந்தமான கருத்துகள் பார்த்துத் தவிர்த்திருக்கிறேன்... ஒரு தடவையாவது.. இது பற்றிக் குறிப்பிடனும்னு தோணிடுத்து.. உங்களால சிந்திக்க முடியும்.. இன்னிக்கு இல்லைன்னாலும் எப்போவாவது..
//

மணியின் வாதம் நியாயமானது ப்ரியா. நான் இல்லை என்று சொல்லவில்லை. நான் விவாகரத்துக்கள் தவறு என ஒரு போதும் சொல்லவில்லை. ஆனால் இது அதிகம் நடப்பது காதல் திருமணங்களில்தான். காதலிக்கும் போது இருந்த அந்யோன்யம், அன்பு, காத்திருப்பு இவை திருமணத்திற்கு பின் காணமாற் போய் விடுகிறது. அதனால் இருவருக்குள்ளும் மனக் கசப்புகள் உருவாகி ஒரு ஒப்பீடு வருகிறது. பின்னர் அதுவே விவாகரத்துக்கும் காரணமாகிறது. இது மனித குணம் என்பது என்னால் ஒப்புக் கொள்ள இயலவில்லை...

புலவன் புலிகேசி said...

காதலின் போது தோன்றும் ஊடல்கள் திருமணத்திற்கு பின் பிரச்சினையாக பாவிக்கப் படுகிறது...

பரிசலின் டைரிக்குறிப்பு புத்தகத்தில் "ஜெனிஃபர்" என்ற சிறுகதையில் வரும் வரிகள் இவை

"காதல் கல்யாணத்துல முடிஞ்சதுன்னு சிலர் சொல்வாங்க..என் காதல் முடியக்கூடாது"

"அப்புடி கல்யாணம் செஞ்சா என் ரசனைக்கு அவர் தலையாட்டுவாரு..அவர் ரசனைக்கு நான் தலையட்டுவேன். விட்டுக் கொடுத்து வாழறதுல சுகம்னு டயலாக் பேசனும்."

இப்படி வாழ்ந்தாலும் சமுதாயம் வேறு பெயர் வைத்து விடுகிறது. அவரவருக்கான வாழ்க்கையை வாழக்கூட சுதந்திரமில்லாத சமுதாயம் இது. சமுதாயத்தின் இத்தகைய நிலை மாற்றப் பட வேண்டும். காதலும் கல்யாணமும் பிரித்தறியப் பட வேண்டும்.

'பரிவை' சே.குமார் said...

டரியல் வழக்கம்போல் அருமை புலிகேசி.

Thenammai Lakshmanan said...

டரியல் வழக்கம் போல் அருமை
நம்ம ரோஸ்விக்கை அப்படியெல்லாமா சொல்லுறாங்க ..முதல்ல என்னன்னு கேளுங்க ரோஸ்விக்

இன்றைய கவிதை said...

டரியல் அருமை புலிகேசி ...

எல்லா பதிவுகளும் அருமை, காவல்துறை நண்பருக்கு நம் ஊக்குவிப்பு அவசியம் இல்லையேல் விரக்தி அடைய நிரம்பவே வாய்ப்பு இருக்கிறது ..இவர்கள் எல்லாம் அரிதான் மனிதர்கள் போற்ற வேண்டும்

காதல் தாம்பத்தியம் ஆகி இடையில் பிள்ளை வரை வளர்ந்து வந்த பின் கொண்டாடுதல் விட்டு பிரிவது விநோதம் தான் , சகிப்புத்தன்மை குறைந்து விட்டதோ என்று தோன்றுகிறது, விட்டுக்கொடுத்தல் தான் வாழ்க்கை அதன் சுகம் அறியாதோர்க்கு நிதமும் நரகம் தான் ...
ரோஸ்விக் அறிமுகம் அழகு, நன்றி உங்களுக்கு அறிமுகம் செய்ததற்க்கு...

நன்றி ஜேகே

kunthavai said...

//இவர்கள் எல்லாம் சேர்ந்து என் நண்பணை மாற்றாமல் இருக்க வேண்டும்.
உங்களுடைய நண்பருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும்.