கடவுளை மற..மனிதனை நினை..

12 March 2010

டரியல் (13-மார்ச்-2010)

10:01:00 PM Posted by புலவன் புலிகேசி 33 comments
ZYlog Systems Ltd என்ற நிறுவனத்தில் எனக்கு மென்பொருள் பொறியாளனாகப் பணிக் கிடைத்துள்ளது. 12-ஏப்ரல்-2010 அன்று பணியில் சேரப் போகிறேன். இப்பொழுது பணிபுரியும் TNQ நிறுவனத்திலிருந்து 10-ஏப்ரல்-2010 உடன் விடை பெறுகிறேன். இந்த நிறுவனம் தான் என் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இங்குள்ள பல அதிகாரிகள், நண்பர்கள் அனைவருக்கும் எனது வெற்றிகளில் பங்கு உண்டு. அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

----------------------

ஐ.பி.எல் தொடங்கி விட்டது. இனி அரசுத் தேர்வெழுதப் போகும் மாணாக்கரின் பெற்றோர்கள் பாடு திண்டாட்டம்தான். இந்த ஐ.பி.எல் போட்டிகள் தேர்வுகளுக்குப் பின்னர் நடை பெற்றால் நன்றாக இருக்கும். இது போன்ற போட்டிகளில் எனக்கு அதிகம் ஈடுபாடு இல்லை. ஏனெனில் இங்கு பணம் மட்டுமே குறிக்கோள் என்பதால்.

----------------------


நாளைக்கு சட்டசபைத் தொறக்குறாங்க. அவ்வளவுதான் யாரும் சரியான நேரத்துக்கு எங்கும் செல்ல முடியாது. நம்ம ஆளுங்கதான் தற்பெருமைக்காகவே திறப்பு விழாக்களை நடத்தி விட்டு அப்புறம் தம்பட்டமடித்துக் கொள்வது "எங்க விழாவால எவ்வளவு போக்குவரத்தை நிறுத்தி வச்சோம் தெரியுமில்ல" அப்புடின்னு. கட்டப் பட்டவை அமைதியாகத் திறக்கப் படும் காலம் எப்போதுதான் இந்தியாவிற்கு வரப் போகிறதோ...? இது போன்ற திறப்பு விழாக்களுக்கு செய்யப் படும் வீண் செலவுகளைக் கணக்கிட்டால் சாமான்ய மக்களில் குறைந்தது ஆயிரம் பேராவது ஒரு மாத காலத்திற்கு மேல் சாப்பிட முடியும். இதை எல்லாம் யோசிப்பார்களா...?

----------------------

பசுமை என்ற சொல்லுக்கு இன்னும் சில காலம் கழித்து அகராதியில்தான் பொருள் தேட வேண்டியிருக்கும்.


இன்று பச்சை பசேல் என்ற இடங்களைக் காண்பது ஏதோ சுற்றுலா செல்வது போல் ஆகி விட்டது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் நமது ஆசைகள் தான் இடம் வாங்குதல், வீடு கட்டுதல், காகிதங்களை வீணாக்குதல். இவை எல்லாம் அளவுக்கு மீறி செய்து கொண்டிருக்கிறோம். இதனால் பாதிக்க படப் போவது நமது சந்ததிகள் தான். தேவைக்கு அதிகமக ஆசைப் படும் குணம் நம்மிடையேப் பெருகி வருகிறது. அதுவே இவ்வுலகின் அழிவிற்கும் துணை நிற்கிறது. காகிதங்களையாவது வீணாக்காமல் பயன்படுத்த முயற்சிப்போம்....!

----------------------

இந்த வாரப் பதிவர்: தியா


"தியாவின் பேனா பேசுகிறது" என்ற இவரின் வலைப்பூவில் கவிதைகள் மிக அழகாக வெளிப்பட்டிருக்கும். இவரதுக் கவிதைகளைத் தேடிப் பிடித்துப் படிக்கலாம். நிச்சயம் உங்கள் மனதில் நிற்கக் கூடும். முக்கியமாக எளிதில் புரியக்கூடிய கவிதைகள்.

இவரின் வலைப்பூ: தியாவின் பேனா

----------------------

இந்த வார டரியல் நம்ம பாலாசி எழுதின "ஒன்று சேர்ந்த....". சமீப கால இளவயது ஈர்ப்பினால் பாதிக்கப் படும் மனித வாழ்க்கையை பழ மொழிகளுடன் விளக்கியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

----------------------

33 விவாதங்கள்:

குலவுசனப்பிரியன் said...

Z80 அறிமுகப் படுத்திய நிறுவனமா? வாழ்த்துக்கள்.

மன்னார்குடி said...

வாழ்த்துக்கள்.

Paleo God said...

வாழ்த்துகள் புலவரே..:)

சட்டசபை .. ஹும்ம்..

மரங்களின் அவசியங்கள் மரங்களே புரிய வைக்கும்.

vasu balaji said...

வாழ்த்துகள் புலிகேசி

Unknown said...
This comment has been removed by the author.
திவ்யாஹரி said...

வாழ்த்துக்கள் புலவரே..

கலகலப்ரியா said...

ஜமாய்ங்க... வாழ்த்துகள்... தியாவுக்கும்...

தாராபுரத்தான் said...

வாழ்த்துக்கள் தம்பி்.

சைவகொத்துப்பரோட்டா said...

புதிய நிறுவனம்........ வாழ்த்துக்கள் தல.

புலவன் புலிகேசி said...

//குலவுசனப்பிரியன் said...

Z80 அறிமுகப் படுத்திய நிறுவனமா? வாழ்த்துக்கள்.
//

நன்றி நண்பா...

//மன்னார்குடி said...

வாழ்த்துக்கள்.
//

நன்றி மன்னார்குடி..

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

வாழ்த்துகள் புலவரே..:)

சட்டசபை .. ஹும்ம்..

மரங்களின் அவசியங்கள் மரங்களே புரிய வைக்கும்.
//

நிச்சயம் புரிய வைக்கும்..நன்றி ஷங்கர்..

//வானம்பாடிகள் said...

வாழ்த்துகள் புலிகேசி
//

நன்றி ஐயா..

//Chitra said...

வாழ்த்துக்கள்.
//

நன்றி சித்ரா..

//திவ்யாஹரி said...

வாழ்த்துக்கள் புலவரே..
//

நன்றி திவ்யா..

//கலகலப்ரியா said...

ஜமாய்ங்க... வாழ்த்துகள்... தியாவுக்கும்...
//

நன்றி லகலகா..

//தாராபுரத்தான் said...

வாழ்த்துக்கள் தம்பி்.
//

நன்றீ ஐயா..

//சைவகொத்துப்பரோட்டா said...

புதிய நிறுவனம்........ வாழ்த்துக்கள் தல.
//

நன்றி நண்பா..

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் முருகவேல்

ஸ்ரீராம். said...

zylog... PC க்களுக்கு முதலில் சிப்செட் தயாரித்த நிறுவனம்?
வாழ்த்துக்கள்.
IPL ..நல்ல வேளை என் மகனுக்கு முக்கிய பரீட்சைகள் முடிந்து விட்டன..!
பசுமைக் குறிப்புக்கு கறுப்பு வெள்ளைப் படம் ஐடியா அருமை

சசிகுமார் said...

//இன்று பச்சை பசேல் என்ற இடங்களைக் காண்பது ஏதோ சுற்றுலா செல்வது போல் ஆகி விட்டது.//

உண்மை நண்பா, உன் வார்த்தையை நான் ஆமோதிக்கிறேன்.

குலவுசனப்பிரியன் said...

//zylog... PC க்களுக்கு முதலில் சிப்செட் தயாரித்த நிறுவனம்?//
நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அது Zilog, Inc.

வெள்ளிநிலா said...

:-)

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...

//பசுமைக் குறிப்புக்கு கறுப்பு வெள்ளைப் படம் ஐடியா அருமை//

வழிமொழிகிறேன்.

தியாவுக்கு பாலாசிக்கும் வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புதிய வேலைக்கு வாழ்த்துகள் புலிகேசி.

கண்ணகி said...

வாழ்த்துக்கள்...

எம்.எம்.அப்துல்லா said...

புதிய பணிக்கு வாழ்த்துகள்.

வினோத் கெளதம் said...

புதுவேலை கலக்குங்க.;)

சுசி said...

வாழ்த்துக்கள் புலவரே..

//இன்று பச்சை பசேல் என்ற இடங்களைக் காண்பது ஏதோ சுற்றுலா செல்வது போல் ஆகி விட்டது.//

சரியா சொன்னீங்க.

மதுமிதா said...

Congratulations!!!!
~Madhumitha~

மதுமிதா said...

Congratulations!!!!
~Madhumitha~

மதுமிதா said...

Congratulations!!!!
~Madhumitha~

புலவன் புலிகேசி said...

//ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் முருகவேல்
//

நன்றி தல..

//ஸ்ரீராம். said...

zylog... PC க்களுக்கு முதலில் சிப்செட் தயாரித்த நிறுவனம்?
வாழ்த்துக்கள்.
IPL ..நல்ல வேளை என் மகனுக்கு முக்கிய பரீட்சைகள் முடிந்து விட்டன..!
பசுமைக் குறிப்புக்கு கறுப்பு வெள்ளைப் படம் ஐடியா அருமை
//
இல்ல தல அது zilog....நன்றி...

//சசிகுமார் said...

//இன்று பச்சை பசேல் என்ற இடங்களைக் காண்பது ஏதோ சுற்றுலா செல்வது போல் ஆகி விட்டது.//

உண்மை நண்பா, உன் வார்த்தையை நான் ஆமோதிக்கிறேன்.
//

நன்றி நண்பா...

//குலவுசனப்பிரியன் said...

//zylog... PC க்களுக்கு முதலில் சிப்செட் தயாரித்த நிறுவனம்?//
நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அது Zilog, Inc.
//

ஆமாம் தல...நான் செல்லும் நிறுவனம் சென்னையில் Wi-Fi ஐ பிரபலமாக்கிய நிறுவனம்.

//வெள்ளிநிலா ஷர்புதீன் said...

:-)
//

நன்றி

புலவன் புலிகேசி said...

//ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...

//பசுமைக் குறிப்புக்கு கறுப்பு வெள்ளைப் படம் ஐடியா அருமை//

வழிமொழிகிறேன்.

தியாவுக்கு பாலாசிக்கும் வாழ்த்துக்கள்!
//

நன்றி தோழி

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

புதிய வேலைக்கு வாழ்த்துகள் புலிகேசி.
//

நன்றீ தோழி

//கண்ணகி said...

வாழ்த்துக்கள்...
//

நன்றீ கண்ணகி

//எம்.எம்.அப்துல்லா said...

புதிய பணிக்கு வாழ்த்துகள்.
//

நன்றி அப்துல்லா அண்ணே...

//வினோத்கெளதம் said...

புதுவேலை கலக்குங்க.;)
//

நன்றீ வினோத்

//சுசி said...

வாழ்த்துக்கள் புலவரே..

//இன்று பச்சை பசேல் என்ற இடங்களைக் காண்பது ஏதோ சுற்றுலா செல்வது போல் ஆகி விட்டது.//

சரியா சொன்னீங்க.
//

நன்றி சுசி..

//மதுமிதா said...

Congratulations!!!!
~Madhumitha~
//

மூன்று முறை சொன்னமைக்கு மூன்று நன்றிகள்...

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துகள் புலிகேசி

புலவன் புலிகேசி said...

//சே.குமார் said...

வாழ்த்துகள் புலிகேசி
//

நன்றி நண்பரே...

இனியாள் said...

வாழ்த்துக்கள்.

டக்கால்டி said...

புதிய வேலை அருமையாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள்...

Unknown said...

புதிய பணிக்கு வாழ்த்துகள் நண்பரே..

Thenammai Lakshmanan said...

வாழ்த்துக்கள் புலவரே வாழ்த்துக்கள் தியாவுக்கும்

இளமுருகன் said...

புதிய இடத்தில் நல்ல பெயர் பெற்று தலைமை இடத்திற்கு வர வாழ்த்துகள்

இளமுருகன்
நைஜீரியா