புவி வெப்பமடைவது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எந்த நாட்டின் அரசாங்கமும் இதைத் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை எனக் குறை கூறுவதில் துளியும் விருப்பமில்லை. இதற்கெல்லாம் முழுக் காரணம் படித்த மக்களின் அறியாமை என்றுதான் சொல்வேன்.
நம்மைப் போன்றவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன் படுத்தத் தொடங்கிய பல பொருட்கள் இன்று நம் அழிவிற்கு துணை நிற்கின்றன.குளிர் காலத்திலும் ஏ.சி போட்டு உறங்குபவர்கள் நம்மில் பலர். இந்த புவி வெப்பமாதல் குறித்து பல ஊடகங்கள் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தாலும் நித்யானந்தர் பிரச்சினை அளவிற்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப் படவில்லை.
இதைத் தடுக்க பல ஊடகங்கள் சொன்ன வழிமுறைகளை நம்மில் எத்தனை பேர் பின் பற்றியிருக்கிறோம்? இரண்டு சதம் கூட இருக்காது. இதைத் தடுக்க நம்முடைய அன்றாட செயல் பாடுகளை நெறிமுறை படுத்தினாலே போதும். சரி இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
இவை பலர் சொன்னதுதான். ஆனால் இவற்றை எப்படி நடைமுறை படுத்தலாம் என்பதற்கு சில வழிமுறைகள்
மின்சார பயன்பாட்டைக் குறைத்தல்
- நம்மில் பலர் உபயோகிக்கும் "குண்டு பல்ப்" அதிக அளவு மின்சாரம் உறிஞ்சக் கூடியது. இதனைத் தவிர்த்து இன்று மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய எனர்ஜி சேவர் பல்புகளை பயன்படுத்த வேண்டும். இத்தகைய குண்டு பல்புகள் அதிக அளவு கார்பன்டை-ஆக்சைடு வாயுவை வெளியிடுகிறது.
- வீட்டு உபயோகப் பொருட்களான ஏ.சி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை தேவையில்லாமல் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக ஏ.சி என்பது வெப்பமிகு நாட்களில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். என்னைக் கேட்டால் அதை நாம் முற்றிலும் தவிர்த்து மாற்று ஏற்பாடாக மின்சாரக் காத்தாடிகளை பயன்படுத்தலாம். அதோடில்லாமல் வெப்பமிகு நாட்களில் வீட்டின் மேல் தண்ணீர் தெளித்து வெப்பத்தை தணிக்கலாம்.
- ஏ.சி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை வாங்கும் போது அவற்றின் எனர்ஜி சேவர் சதவீதம் பார்த்து வாங்க வேண்டும். இதன் மூலம் கூட கார்பன்டை-ஆக்சைடின் வெளியேற்றத்தைக் குறைக்க முடியும்.
- நாம் உபயோகிக்கும் வாட்டர் ஹீட்டர் என சொல்லக் கூடிய தண்ணீரை சூடுபடுத்தும் கருவிதான் நம் முதல் எதிரி. இவை வெளியிடும் கார்பன்டை-ஆக்சைடு பன்மடங்கு அளவிலானது. இதற்கு மாற்றாக சோலார் வாட்டர் ஹீட்டிங் முறையை பயன்படுத்தலாம்.
யோசித்துப் பாருங்கள் இதைக்கூட செய்ய இயலவில்லை என்றால் நாம் மனிதர்களாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
மீதமுள்ள மூன்று முறைகளைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன். இவை சொல்லுக்காக அல்ல நாம் செயல் படுத்துவதற்காக. இந்தப் போரில் நாடு மொழி, மதம், இனம் பாராமல் நாம் பங்கேற்க வேண்டும். கை கோர்க்கத் தயாராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.
நன்றி http://www.eartheasy.com
பி.கு: கதிர் அண்ணனின் ஆதங்க வெளிப்பாடான "சுடும் வெம்மை" படித்த பிறகு நாம் அறிந்த வழிமுறைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் எழுதியதுதான் இந்த பதிவு. பலரை சென்றடைந்து சிலரையாவது சிந்திக்க வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

வாகனங்களை பராமறித்தல்
அன்றாட பழக்க வழக்கங்களில் சிறு மாற்றம் செய்தல்
மரங்களை வளர்த்தல்

- தேவையற்ற நேரங்களில் மின் விளக்குகள், கனினிகளை அனைத்து வைத்தல்
- வீட்டு உபயோகப் பொருட்களான ஏ.சி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை தேவையில்லாமல் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக ஏ.சி என்பது வெப்பமிகு நாட்களில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். என்னைக் கேட்டால் அதை நாம் முற்றிலும் தவிர்த்து மாற்று ஏற்பாடாக மின்சாரக் காத்தாடிகளை பயன்படுத்தலாம். அதோடில்லாமல் வெப்பமிகு நாட்களில் வீட்டின் மேல் தண்ணீர் தெளித்து வெப்பத்தை தணிக்கலாம்.
- ஏ.சி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை வாங்கும் போது அவற்றின் எனர்ஜி சேவர் சதவீதம் பார்த்து வாங்க வேண்டும். இதன் மூலம் கூட கார்பன்டை-ஆக்சைடின் வெளியேற்றத்தைக் குறைக்க முடியும்.
- நாம் உபயோகிக்கும் வாட்டர் ஹீட்டர் என சொல்லக் கூடிய தண்ணீரை சூடுபடுத்தும் கருவிதான் நம் முதல் எதிரி. இவை வெளியிடும் கார்பன்டை-ஆக்சைடு பன்மடங்கு அளவிலானது. இதற்கு மாற்றாக சோலார் வாட்டர் ஹீட்டிங் முறையை பயன்படுத்தலாம்.
யோசித்துப் பாருங்கள் இதைக்கூட செய்ய இயலவில்லை என்றால் நாம் மனிதர்களாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
மீதமுள்ள மூன்று முறைகளைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன். இவை சொல்லுக்காக அல்ல நாம் செயல் படுத்துவதற்காக. இந்தப் போரில் நாடு மொழி, மதம், இனம் பாராமல் நாம் பங்கேற்க வேண்டும். கை கோர்க்கத் தயாராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.
நன்றி http://www.eartheasy.com
பி.கு: கதிர் அண்ணனின் ஆதங்க வெளிப்பாடான "சுடும் வெம்மை" படித்த பிறகு நாம் அறிந்த வழிமுறைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் எழுதியதுதான் இந்த பதிவு. பலரை சென்றடைந்து சிலரையாவது சிந்திக்க வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
37 விவாதங்கள்:
அய்யா நான்தான் பர்ஸ்ட் !
மீண்டும் வருவான் பனித்துளி !
சமூக அக்கறை உள்ள சிறந்த புனைவு நண்பரே ! வாழ்த்துக்கள் !
நானும் இதைப் பற்றி விரைவில் ஒரு பதிவு எழுதுகிறேன் . நம்மால் இயன்ற விழிப்புணர்வுகளை நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் ஏற்படுத்து வோம் . நாம் வாழும் உலகத்தை நாம் காக்காவிட்டால் வேறு யார் காப்பாற்றுவார்கள் .
தேவையான பதிவு நண்பா..
நண்பர் கதிர் அவர்களின் பதிவும் படித்தேன்..
சிந்திக்கத்தூண்டும் பதிவுகள்.
இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் ஓட்டுயிட இயலவில்லை . ரூம் சென்று இட்டுவிடுகிறேன் .
மீண்டும் வருவான் பனித்துளி !
இந்த விழிப்புணர்ச்சி மிக அவசியமானதொன்று. பகிர்வுக்கு நன்றி.
நல்ல பதிவு.
கண்டிப்பா பூங்கொத்து!
சரியாக சொன்னீர்கள் புலவரே.
அக்கரையுள்ள மிக நல்ல இடுகை.... என்னிடமிருந்தும் இத்தைகய செயல்கள் தொடங்கவேண்டும....
//குளிர் காலத்திலும் ஏ.சி போட்டு உறங்குபவர்கள் நம்மில் பலர்//
நண்பரே நீங்கள் கூறியது 100% உண்மை, என் ஆபிசிலும் ஒருவன் இருக்கிறான். ஒரு ஏசி போதாது என்று இரண்டு மின்விசிறிகளை அவனை சுற்றி வைத்து கொள்வான். கேட்டால் நான் தான் முதலாளி என்கிறான். என்ன பண்ணுவது இவர்களை
நல்ல பகிர்வு நண்பா..
விரைவில் அடுத்த வழிமுறைகளையும் பதிவிடுங்கள்..
மிக மிக அவசியமான பதிவு.. எல்லோரும் பின்பற்ற வேண்டும். இப்படி ஒரு உபயோகமான பதிவுல நித்தியானந்தா பேரு தேவையா?
@கவிதை காதலன்
//இப்படி ஒரு உபயோகமான பதிவுல நித்தியானந்தா பேரு தேவையா?//
அது நம் ஊடகங்களின் கேவலமான நிலையை குறிப்பதற்காக நண்பா..
தேவையான பதிவு
கார்த்திக்
http://eluthuvathukarthick.wordpress.com/
ஆமாம் உங்கள் பதிவும் கதிருடைய பதிவும் மிக அருமை புலவரே
பல்ப் படமும்,படத்தோட கதையும் முன்பே படிச்ச மாதிரி ஒரு பல்படிக்குது எனக்கு.பல்ப் சுடலையே:)
எப்படியோ படத்துல இருக்குற பல்புதான் இப்ப உபயோகத்துல.அதுபாட்டுக்கு கண்சிமிட்டாம,தூங்காம கடும் உழைப்பாளி.
புவி வெப்பமாதல் குறித்து பல ஊடகங்கள் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தாலும் நித்யானந்தர் பிரச்சினை அளவிற்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப் படவில்லை. //
சரியா சொன்னீங்க. :(
நல்ல அவசியமான பதிவு புலிகேசி. எங்கள் வீட்டில் புவி வெப்பமடைவதைக் குறைக்கும் அனைத்து வழிகளையும் பெரும்பாலும் கடைபிடிக்கிறோம்.
இயற்கையின் அழிவில் இன்பம் காண்போம் - பாகம் 1
இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம்!
http://poar-parai.blogspot.com/2006/07/1.html
அழிவில் லாபமும், லாபத்தால் அழிவும் - பாகம் II
http://poar-parai.blogspot.com/2006/07/ii.html
புவிச் சூடேற்றத்துக்கு முக்கியக் காரணம் நாம் நமக்கு தேவையானதை உற்பத்தி செய்வதில் நிகழும் அராஜகமே. இந்த அராஜகத்தின் அடிப்படை லாப வெறியுடன் சந்தைக்காக உற்பத்தி செய்யும் முதலாளித்துமே ஆகும்.
விசயம் இப்படியிருக்க, மின்சாரம், குப்பை என்று புண்ணுக்கு புனுகு தடவும் ஏமாற்று வேலைகளுக்கு நாம் விட்டொழிப்பது எப்போது?
நல்ல பதிவு.அவசியம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டியது.
@Anonymous
//இயற்கையின் அழிவில் இன்பம் காண்போம் - பாகம் 1
இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம்!
http://poar-parai.blogspot.com/2006/07/1.html
அழிவில் லாபமும், லாபத்தால் அழிவும் - பாகம் II
http://poar-parai.blogspot.com/2006/07/ii.html
புவிச் சூடேற்றத்துக்கு முக்கியக் காரணம் நாம் நமக்கு தேவையானதை உற்பத்தி செய்வதில் நிகழும் அராஜகமே. இந்த அராஜகத்தின் அடிப்படை லாப வெறியுடன் சந்தைக்காக உற்பத்தி செய்யும் முதலாளித்துமே ஆகும்.
விசயம் இப்படியிருக்க, மின்சாரம், குப்பை என்று புண்ணுக்கு புனுகு தடவும் ஏமாற்று வேலைகளுக்கு நாம் விட்டொழிப்பது எப்போது?//
நண்பரே ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். முதலாளித்துவம் எல்லாம் சரிதான்...இல்லை என்று சொல்லவில்லை. முதலில் என்னிடம் உள்ள குப்பைகளைத் தூர்வாற வேண்டும். அதை செய்தாலே பாதியளவு வெற்றி கிட்டும். வெறுமனே முத்லாலித்துவம் எதிர்த்து இயற்கையை காப்போம் என குரல் கொடுக்கும் சாதாராண மனிதனாக இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. நம் செயல்களில் நம்மை நெறிப் படுத்தியும் இயற்கையை காக்க முடியும்...பேச்சு வீரர்களை எனக்குப் பிடிக்காது..
@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
நன்றி நண்பா..விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் கடமை
@முனைவர்.இரா.குணசீலன்
நன்றி நண்பரே
@வானம்பாடிகள்
நன்றி ஐயா...
@Chitra
நன்றி சித்ரா
@அன்புடன் அருணா
வாங்கிக்கறேன் அருணா..நன்றி
@சைவகொத்துப்பரோட்டா
நன்றி நண்பா
@க.பாலாசி
தொடங்குங்கள் நண்பரே..மிக்க மகிழ்ச்சி
@சசிகுமார்
இது போன்றவர்கள் பலர் இருக்கின்றனர் சசி..நன்றி
@திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்).
நிச்சயம் எழுதுகிறேன். இது என் கடமை..
@கவிதை காதலன்
நன்றி நண்பா
@கார்த்திக்
நன்றி கார்த்திக்
@thenammailakshmanan
நன்றி தேணம்மை
@ராஜ நடராஜன்
பல ஊடகங்கள் முன்னரே சொன்னது. யார் பின்பற்றினோம்...நன்றி நண்பா
@விக்னேஷ்வரி
மிக்க மகிழ்ச்சி தோழி
@மாதேவி
நன்றி மாதேவி...
பின்பற்றுவோம் நண்பா !
அவசியமான பதிவு.. அனைவரும் அவசியம் பின்பற்ற வேண்டியது..
பேநா மூடி
@வெற்றி
நன்றி வெற்றி
@பேநா மூடி
நன்றி ஆனந்த்
நல்ல விஷயங்களை என்னை மாதிரி?? தொடர்ந்து
எழுதிட்டு வரீங்க புலிகேசி....
வாழ்த்துக்கள்....
போரா....எங்கே வாள்...அப்புறம் எங்கே ரவுண்டா இருக்குமே
அது பேர் என்ன??...அது எல்லாம் இருந்தா தான்
நாங்க வருவோம்.......
அவசியம்... அவசரம்...
நல்ல பதிவு. கை கோர்க்கிறேன்.. :-)
நல்ல பகிர்வு நண்பரே.நன்றி.
நல்லா இருக்கு சகா ..
தேவையான பதிவு நண்பா..
ஈரோடு கதிர் அவர்களின் பதிவிற்கு தொடர் பதிவுகாக இதைப்படித்தால் புண்ணியம் கிடைக்கும்.
நல்ல சிந்தனைகள்.உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.
@ ஜெட்லி
நன்றி ஜெட்லி
@ மேனகாசத்யா
நன்றி சகோ
@ ரோஸ்விக்
நன்றி ரோஸ்விக்
@இராமசாமி கண்ணண்
நன்றி இராமசாமி கண்ணண்
@~~Romeo~~
நன்றி சகா
@ சே.குமார்
நன்றி நண்பா
@ தாராபுரத்தான்
நன்றி ஐயா
@ மயில்ராவணன்
நன்றி மயில்
நாம் உபயோகிக்கும் வாட்டர் ஹீட்டர் என சொல்லக் கூடிய தண்ணீரை சூடுபடுத்தும் கருவிதான் நம் முதல் எதிரி. இவை வெளியிடும் கார்பன்டை-ஆக்சைடு பன்மடங்கு அளவிலானது. இதற்கு மாற்றாக சோலார் வாட்டர் ஹீட்டிங் முறையை பயன்படுத்தலாம்.//
நல்ல உபயோகமான பதிவு நண்பா.. பின்பற்றுகிறோம்.. பிறருக்கும் எடுத்து சொல்றோம்.. சோலார் வாட்டர் ஹீட்டிங் எங்க கிடைக்கும் நண்பா..
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்..
புலவன் புலிகேசியே...
தங்களின்...
"புவி வெப்பமானால்....."
ஓர் சமூக அக்கறை.... ஏற்றுகொள்கிறோம்....
ஆனால்....
நீங்கள் சென்னைவாசிதானே...
புவி வெப்பமாவதை தடுக்க சிறந்த வழி....
ஓர் எடுத்துக்காட்டு....
நம் சென்னையில் ஓர் செல்வந்தர் வீட்டில் ஆறு பேர் இருந்தால் ஆறு வாகனம்... இதில் கொடுமை என்னவென்றால் ஒரே அலுவலகம் அல்லது நிறுவனத்திற்கு செல்லும் தந்தை, சகோதரர் இருவர், என ஒரே இடத்திற்கு செல்லும் மூவரும் ஓர் வாகனத்தில் சென்றால் எரிபொருள் சிக்கனம், புவி வெப்பமாவதை தடுத்தல் அதோடு, இந்திய பொருளாதாரம் மேம்படும்..
அதைப்போல நடுத்தர குடும்பங்கள் வசிக்கும் தெருக்களில் பார்த்தால், ஓர் குடியிருப்பில் பத்து குடித்தனங்கள் இருந்தால், சுமார் 40 பேர் வசிக்கும் அக்குடியிருப்பின் வாசலில் தெருவையே அடைத்துக்கொண்டு சுமார் 60 இருசக்கர வாகனம் இருக்கும். இது தேவையா... அப்பாவுக்கு, அம்மாவுக்கு, மகனுக்கு, மகளுக்கு என்று வெட்டி பந்தாவுக்காக வாகனங்களை (குறிப்பாக கடனில் வாங்கியதுதான் அனைத்து வாகனமும்) பயன்படுத்துவதை நிறுத்தினாலேயே எரிபொருள் சிக்கனம், புவி வெப்பமாவதை தடுத்தல் அதோடு, இந்திய பொருளாதாரம் மேம்படும். நம் வீடும், நாடும், உலகும் மேம்படும். ஆரோக்கியத்துடன் அனைவரும் வாழலாம்.. "வெட்டி பந்தா" வேரோடு மனதிலிருந்து பிடுங்கி எரியச் சொல்லுங்கள்....
எனக்கு வாகனம் வாங்க வசதி இருந்தும் இன்று வரை பேருந்திலேயே அலுவலகம் சென்று வருகிறேன்.. காரணம்.. கஞ்சத்தனமல்ல... "வெட்டி பந்தா"வால் நானுக் கெட்டு, நாடுங் கெட்டு, நம் சமுதாயமும் கெட்டு, உலகும் கெடும்..
ஆயினும் தங்கள் சமுதாய மற்றும் உலக அக்கறையை நானும் ஏற்கிறேன்... நடக்க முயல்கிறேன்...
வாழ்த்துக்கள்....
நட்புடன்...
காஞ்சி முரளி....
sorry ...!
மறந்தே போச்சு...!
வாழ்த்துக்கள்....
100வது இடுகைக்கு....
நட்புடன்...
காஞ்சி முரளி....
Post a Comment