கேபிளாரின் லெமன்ட்ரீயுடன் நாகரத்னா பதிப்பகம் வெளியிட்ட இன்னொரு புத்தகம் பரிசல் கிருஷ்ணாவின் "டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்". இப்புத்தகம் மொத்தம் பதினேழு சிறுகதைகளை உள்ளடக்கியது. அது பற்றிய விமர்சனம் இது.
1) தனிமை-கொலை-தற்கொலை
காதலைக் காட்டிலும் நட்பு உயர்ந்தது என்பதைக் காட்டும் இக்கதை ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரஸ்யம் குறையவில்லை. காதலிக்காக நண்பனை கொலை செய்ய என்னுவதும், நட்புக்காக தற்கொலை முயற்சியும் என இக்கதை நட்பிற்கு சமர்ப்பனமாய்.
2) காதல் அழிவதில்லை
சினிமாவில் வருவது போல ஒரு ஈர்ப்புக் காதல் கல்யாணத்தில் முடிந்த பின்பு அந்தக் காதலின் நிலை என்ன என்பதை இரு ஆண் நண்பர்கள் மற்றும் ஒரு பெண்ணை வைத்து எழுதியிருக்கிறார். இதன் முடிவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் மனதில் பதியுமளவுக்கு இன்னும் ஆழமாக சொல்லப் பட்டிருக்கலாம் எனத் தோன்றியது.
3) காதலிக்கும் ஆசையில்லை
ஒரு தோழி தன் மீது வைத்திருக்கும் ஒரு தலைக்காதலை ஏற்றுக் கொள்ளவும் மனமில்லாமல், அவளின் நட்பையும் இழக்க விரும்பாத ஒருவன் என்ன செய்கிறான் என்பதை அழகாக விளக்கும் கதை. சொன்ன விதம் அருமை. ஊகிக்க முடிந்த முடிவு.
4) பட்டர்ஃப்ளை எபெக்ட்
இதற்கு ஏன் ஆங்கிலப் பெயர் வைக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு அழகான வாழ்வியல் கதை. இருவரும் வேலைப் பார்க்கும் வீடுகளில் குழந்தைகள் படும் சிரமத்தையும், அவர்கள் இழந்து கொண்டிருக்கும் சந்தோசத்தையும் அற்புதமக சொல்லியிருக்கிறார். படித்ததும் பசக் என மனதில் ஒட்டிக் கொண்ட கதை.
5) இருளின் நிறம்
தொலைக்காட்சியில் தொலைந்து கொண்டிருக்கும் உறவுகளையும், அங்கு பாசம் தேடும் நேரத்தையும் இரு அருகாமை வீட்டாரை வைத்து குட்டியா அழகா சொல்லிருக்காரு. இதுவும் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு.
6) நான் அவன் இல்லை
ஒரு பரபரப்பான கதை. வேலை தேடி அலையும் ஒருவன், உழைபை விட இலவசமாக கிடைக்கும் பணத்தை பெற சென்று சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். இதையும் சுவாரஸ்யம் குன்றாமல் கொடுத்திருக்கிறார்.
7) மாற்றம்
சவரக்கடையில் அமர்ந்து தன் சிறுவயது அனுபவன்களை அசைபோட்டு முடித்து வெளியில் வந்து சந்தித்த நபரை கண்டதும் அதிர்ச்சிக்குள்ளாகிறன் இக்கதை நாயகன். ஏன் அந்த அதிர்ச்சி என்பதையும் அழகாக வாழ்வியலோடு விளக்கியிருக்கிறார்.
8) மனிதாபிமானம்
நகர்ப்புற வாழ்வில் அவசர யுகத்தால் மனிதாபிமானமும், புரிதலும் அழிந்து போயிருக்கிறது என்பதை விளக்கும் கதை. யதார்த்தம் பளிச்சிடும் கதை.
9) நட்பில் ஏனிந்த பொய்கள்?
தன்னிடம் பொய் சொன்ன முகமறியா நண்பனுக்கு கடிதம் எழுதுவதாக ஆரம்பித்து அதை அனுப்ப முயல்கையில் அவனிடமிருந்து வந்த கடிதத்தை படித்து பின் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.
10) கைதி
சிறையிலிருந்து தப்பித்த கைதி பற்றிய அறிவிப்பு கார் வானொலியில், அதே காரில் லிப்ட் கேட்டு அமர்ந்த ஒருவன், அந்த கைதி யார்? என்பதை சுவாரஸ்யமாக விளக்கும் கதை
11) ஜெனிஃபர்
இந்த புத்தகத்தின் மிகச் சிறந்த கதை என்றுதான் சொல்வேன். என் மனதிலும் முகத்திலும் புன்னகை கசிய செய்த கதை. காதல் இப்படி கூட இருக்கலாமா? என சிந்திக்க வைத்த கதை. இப்படித்தான் இருக்க வேண்டும் என தோன்றியது. இதற்காக பரிசலுக்கு ஒரு சிறப்பு வாழ்த்து.
12) கடைசி ஓவரில் ஒரு ஆபரேசன்
கிரிக்கெட் பார்க்கும் ஒருவன் அலைபேசியில் அதன் நிலையறியும் ஒருவன். இறுதி ஓவரின் பரபரப்பு முடியும் தருவாயில் வந்த ஒரு செய்தி. அனைத்தையும் நன்கு விளக்கியிருக்கும் கதை.
13) டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்
புத்தகத் தலைப்பும் இதுதான். நல்ல கதை.ஒரு விபத்தையும் இன்னொரு நிகழ்வையும் ஒரு சேர கலந்தெழுதி அதை தொடர்பு படுத்திய விதம் பாராட்டுதலுக்குரியது.
14) மனசுக்குள் மரணம்
நடக்கப் போகும் நிகழ்வுகளை கனவில் காணும் மனிதனின் வாழ்வு குறித்த கதை. ஜனகராஜ் நடித்த பழைய படம் ஒன்றில் இது போல் பார்த்த நியாபகம் வருகிறது.
15) ஸ்டார் நெம்பர் ஒன்
ஒரு உதவி இயக்குனர், ஒரு திமிர் பிடித்த நடிகை இருவருக்குமான பிரச்சினை, சில வருடம் கழித்து அவன் இயக்குனரான பின் அந்த நடிகையின் நிலை குறித்த கதை. நன்று
16) நட்சத்திரம்
இரு குழந்தைகளுக்கிடையேயான நட்பையும், ஏற்ற தாழ்வுகளையும் விளக்கும் கதை. எனக்கு மிகப் பிடித்த இன்னொரு கதை இது.
17) சமூகக் கடமை
சமூக அக்கரைபற்றி பேசும் ஒருவர் செய்யும் அற்ப காரியம் அழகாக விவரிக்கப் பட்ட கதை
கேபிளார் அசைவக்கதை என்றால் இவர் சைவக்கதை. அதனால் இந்த "டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்" புத்தகம் "U" சர்டிபிகேட் பெறுகிறது.
டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - சுவையான சைவ சாப்பாடு
18 விவாதங்கள்:
கேபிள் மற்றும் பரிசலின் புத்தகங்கள் வாங்க
----------------
சென்னையில் திநகரில் புல்லேண்ட்,நார்த் உஸ்மான் ரோடு, சென்னை, கே.கே.நகரில்
டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை,
மஹாவீர் காம்ப்ளெக்ஸ்,
மேற்கு கே.கே.நகர்
அதுமட்டுமில்லாமல்
ஆன்லைனிலுல் கிடைக்கும்
http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=122
http://ezeebookshop.com/eshop/product_info.php?cPath=14_17&products_id=121
nice review. Thank you.
அட கதைகளுக்கும் இப்ப சென்சார் சர்டிபிகேட் இருக்கா :)) அருமை புலவரே.
சரிங்க நண்பா...
புத்தகம் படித்து விட்டிருந்தால் விமர்சனம் இன்னும் ரசிக்கும்.
ம்ம்..படிக்கனும்ங்க..
வணக்கம் புலி. அருமையாக விளக்கி சான்றிதழெல்லாம் கொடுத்து அமர்க்களப்படுத்தியிருக்கீங்க...
இந்த புத்தகத்தை நான் இன்னும் படிக்கவில்லை. படிக்கத் தூண்டுகிறது உங்கள் இடுகை. விரைவில் படிக்கிறேன்!!!!
படிக்கணும்.:)
விமர்சனம் எளிமையாயும் தெளிவாயும் இருக்கு புலிகேசி.
பிரபாகர்.
அருமையான விமர்சனம் புலவரே எனக்குப் பிடித்த அதே கதைகளே உங்களுக்கும் பிடித்து இருக்கிறது
புத்தகத்தின் வரிகள அடிக்கோடிட்டு வாசிக்கும் வாசகன் எங்கேயோ இருக்கும் எழுத்தாளரை மாலை அணிவித்து கௌரவிக்கிறான்..நீங்க ஆளுயர மாலையே போட்டுடீங்க சார்..நல்ல விமர்சனம் புலவரே..பரிசல் கிருஷ்ணா படிச்சார்னா ரொம்ப சந்தோசப்படுவாரு..!!
Good Review Ji... ;)
நல்ல விமர்சனம்.
கேபிள் சங்கர்
நண்பரே புத்தகத்திற்கு பதிவு செய்து இருக்கிறேன் . உங்களின் விமர்சனம் இன்னும் ஆர்வத்தை தூண்டுகிறது . வாழ்த்துக்கள்
அருமையான விமர்சனம் புலவரே..
Good review.
சர்டிபிகேட்டுக்கு நன்றி.
நன்றி பாஸ்!
Post a Comment