கடவுளை மற..மனிதனை நினை..

23 February 2010

சொந்த பந்தங்கள் - 3

6:23:00 AM Posted by புலவன் புலிகேசி , 25 comments

அண்ணன்

தன் இளவல் கற்க
தன் கல்வி இழந்தான்

தமையாளின் மணம் முடிக்க
தன் மணம் தள்ளினான்

இருவரும் இவன் மறந்து
இன்புற்றிருக்க இவனோ

துன்புற்றிருப்பினும் அவர்கள்
இன்பத்தில் திளைத்திருக்கிறான்

தம்பி

அம்மையப்பனின் செல்லப் பிள்ளை
அதனால் மூத்தவனின் பிள்ளைப்

பருவ எதிரி வளர்பருவத்
தோழன் வளர்ந்த பின்

பங்காளி

25 விவாதங்கள்:

இன்றைய கவிதை said...

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள், எத்தனை எத்தனை அண்ணண் தம்பி உறவுகள் இப்படி இன்னமும் இருக்கின்றன

ஜேகே

அரசூரான் said...

புலவரே
அண்ணன் தம்பிக்கு கவிதை
அக்கா தங்கைக்கு?

வலையுலக அக்கா தங்கையெல்லாம்
சண்டைக்கு வரப்போராங்கோ ?!

சே.குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு.

வானம்பாடிகள் said...

good one

கவிதை காதலன் said...

நன்றாக இருக்கிறது.. ஆனால் சரியான இடத்தில் நீங்க இடைவெளி (Space)விடலையோன்னு ஒரு சின்ன ஃபீல்.. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சைவகொத்துப்பரோட்டா said...

பாவம்தான் அண்ணன்.

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு. இன்னும் அழுத்தமான வார்த்தைகள் வைத்து முயற்சி செய்து பாருங்களேன்.

அகல்விளக்கு said...

இயல்பாய் விளக்கி விட்டீர்கள்...
அருமை நண்பா......

திவ்யாஹரி said...

//கவிதை காதலன் said...
நன்றாக இருக்கிறது.. ஆனால் சரியான இடத்தில் நீங்க இடைவெளி (Space)விடலையோன்னு ஒரு சின்ன ஃபீல்..//

அது தான் புலவரின் style நண்பா..

க.பாலாசி said...

இரண்டும் அருமை... ரசித்தேன்... தொடருங்கள்....

திவ்யாஹரி said...

அண்ணன், அக்கா.. எல்லாம் பாவம் நண்பா..
சில சமயம் தம்பி, தங்கைகளும் கூட..
வழக்கம் போல இயல்பா சொல்லிருக்கீங்க புலவரே.. நன்று..
அக்கா.. தங்கையை எதிர் பார்க்கிறோம்..

ஜெட்லி said...

பங்காளி.... நீங்க அண்ணனா தம்பியா,,,??

Mrs.Menagasathia said...

very nice!!

Chitra said...

துன்புற்றிருப்பினும் அவர்கள்
இன்பத்தில் திளைத்திருக்கிறான்

.......... beautiful!

ஹேமா said...

இரண்டுமே நல்லாயிருக்கு புலவரே.சுயநலமான உலகில் இப்படித்தான் !

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...

உண்மைய சொல்லி இருக்கீங்க . அருமை வாழ்த்துக்கள் .

ஓட்டும் போட்டாச்சு .

V.A.S.SANGAR said...

ஆனா ஒண்டு உங்களுக்கு அண்ணா தம்பி இருக்கு போல

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

பழைய ரஜினி படம் பார்த்த எஃபெக்ட் ..:)) (6-60)

புலவரே அசத்துங்க..:)

திகழ் said...

அருமை

ஸ்ரீராம். said...

மூத்தவர்களால இளையவர்களுக்குச் சில சங்கடங்கள்...இளையவர்களால் மூத்தவர்களுக்குச் சில சங்கடங்கள்...மயுசுவல்...

வினோத்கெளதம் said...

வாவ்..அருமை...

~~~Romeo~~~ said...

:) :)

சுசி said...

அருமையா சொல்லி இருக்கீங்க புலவரே..

அண்ணன் உருக்கம்..

தம்பி அப்டியே என் சின்ன அண்ணன்:))

thenammailakshmanan said...

உண்மைதான் புலவரே

ரோஸ்விக் said...

நல்லாயிருக்கு புலவா... :-)