கடவுளை மற..மனிதனை நினை..

17 February 2010

உறக்கம் தொலைத்த உறவுகள்....

7:36:00 AM Posted by புலவன் புலிகேசி 49 comments

தமிழ் ஒரு நடுத்தரக்குடும்பத்தை சேர்ந்த திருமணமான இளைஞன். அவன் வேலைப்பார்ப்பது ஒரு கால் சென்டரில். இரவில் பணி பகலில் உறக்கம் என இன்பம் தொலைத்து பொருள் தேடும் பலரில் இவனும் ஒருவன். ஞாயிறு, இதுதான் அவனுக்குப் பிடித்த தினம். ஏனென்றால் அன்றுதான் அவன் கண்கள் முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்.

சனி இரவு பணி முடித்து திரும்பும் போது எதிர் வருபவை அவனுக்குத் தெரிந்ததில்லை. உறக்கத்தை நோக்கிப் பயணிப்பதில் ஒரு சுகம் அவனுக்கு. அந்தப் பயண வேகம் பல முறை நூறு கி.மீ கூடக் கடந்திருக்கிறது. இத்தனைக்கும் ஐந்து கி.மீ தொலைவிலிருக்கும் அலுவலகம் ஞாயிறு அதிகாலை மட்டும் ஐம்பதாக ஆகத் தோன்றும்.

அதனால்தான் இருளைக் கிழிக்கும் அந்த வேகம். வீட்டை நெருங்கியதும் வாகனத்தை சரியான இடத்தில் நிறுத்தக்கூட தோன்றவில்லை அவனுக்கு. அவன் வாகனம், அதுதான் தன் உறக்கத்தின் ஊன்றுகோல் எனத் தோன்றும் அவனுக்கு. வீட்டிற்குள் நுழைந்ததும் ஆடை மாற்றக் கூட அலுப்பாக எண்ணி அப்படியே கட்டிலில் சரிவான்.

அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் அவன் குழந்தையிடம் கொஞ்சி விளையாடுவது என்னவோ கணக்கிட்டுப் பார்த்தால் மாதத்திற்கு இரண்டு மணி நேரம் கூட இல்லை. அந்த குழந்தைக்குத் தெரிந்தது என்னவோ அம்மா மட்டும்தான். அப்பாவைக் கூட அந்நியனாகப் பார்க்கிறது அக்குழந்தை.

இரவுப் பணியிடை வேளைகளில் உறவுகள் பற்றி யோசிப்பான். அவனுக்குப் பிடித்த அவன் தங்கை "ரம்யா". இருவருக்குள்ளும் அப்படி ஒரு பாசப்பிணைப்பு. ரம்யா திருமணமாகி இருப்பது என்னவோ அருகில் உள்ள அம்பத்தூரில்தான். ஆனால் அவளைப் பார்த்து ஆறு மாதமாகிறது. ஒவ்வொரு ஞாயிறும் பார்க்க வேண்டும் என நினைப்பான்.

ஆனால் உறக்கம் அவனை இன்று வரை அனுமதிக்கவில்லை. அப்படி ஒரு ஞாயிறில் அதிகாலை முடிய வேண்டிய பணி ஒரு வெள்ளைக்காரனின் தொ(ல்)லைபேசியால் பத்து மணி வரை நீடித்தது. உறக்கம் அவன் உடலை வாட்டியதால் வாகனத்தை அலுவலகத்தில் விட்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து நுழைந்தான்.

அன்று ரம்யா கணவனுடன் அங்கு வந்திருந்தாள். ரம்யாவைப் பார்த்ததும் தன் மகிழ்ச்சியைக் கூட வெளிப்படுத்த முடியவில்லை அவனுக்கு. "வாம்மா! வாங்க மாப்ள" என சொல்லிக் கொண்டே சென்று கட்டிலில் சரியும் போது கேட்டான் "ரம்யா சாயங்காலமா பேசலாமா?". ரம்யாவுக்கு அதிர்ச்சி "சரிண்ணா"ன்னு சொல்லிட்டு அறைக்கதவை சாத்திச் சென்றாள்.

அண்ணன் அவளுக்கு அந்நியமாகப் பட்டான். மாலை வரை காத்திருந்தாள். சற்றே இருட்டத் தொடங்கியிருந்தது. தமிழ் இன்னும் எழுந்திரிக்கவில்லை. கணவர் வேறு அவசரப் பட அண்ணனிடம் சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டாள். "அண்ணன் ஏன் இப்படி மாறி விட்டான்? ஒரு வேளை வசதி அதிகம் வந்ததால் இந்தத் தங்கை அவன் கண்ணுக்குத் தெரியவில்லையோ?" என எண்ணிக் கொண்டே சென்றாள்.

உறக்க நித்திரையில் அவன் ரம்யாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.

49 விவாதங்கள்:

ப்ரியமுடன் வசந்த் said...

good one this all created by timegod o..!

Chitra said...

எல்லாம் "டாலர்" செய்யும் மாயம்........ வேறு என்ன?

Unknown said...

good one...

மீன்துள்ளியான் said...

பிழைப்பிற்காக எவ்ளோவோ மாறியாச்சு .. என்ன பண்றது .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாவம் தான்..

முழிச்சதும் போன் செய்து பேச சொல்லுங்க.. :)

பிரபாகர் said...

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க புலிகேசி. வாழ்வின் முறைகளையும் பிழைப்புக்காக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது...

பிரபாகர்.

அகல்விளக்கு said...

உண்மைதான் நண்பா....

பிழைப்புக்காக உறவுகளைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்..

சைவகொத்துப்பரோட்டா said...

டச் பண்ணிடீங்க புலவரே.

butterfly Surya said...

வாழ்க்கைகாகதான் வேலையே என்ற நிலை போய் வேலைக்காக வாழ்க்கை என்று மாறிவிட்ட சமூகத்தின் வெளிப்பாடு.

அருமை.

வாழ்த்துகள்.

thiru said...
This comment has been removed by the author.
Unknown said...

ஹம்ம்..., பாவம் தான்.., என்ன செய்வது ??

ஸ்ரீராம். said...

இயந்திர வாழ்க்கை

vasu balaji said...

சுடும் யதார்த்தம்:(

Anonymous said...

பாவம். சாப்பாட்டுக்கு எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு.

sathishsangkavi.blogspot.com said...

அண்ணன் மட்டுமல்ல இந்ந மாதிரி நிறைய கணவன்கள், அப்பாக்களும் இருக்கின்றனர்...

ஹேமா said...

வாழ்வின் நாகரீகம் நாளுக்கு நாள் வளர்ந்தபடிதானே புலவரே.பிடிக்குதோ பிடிக்கலயோ நாங்களும் சேர்ந்தோடத்தானே இருக்கு.

தமிழ் அமுதன் said...

ம்ம்ம்.... வலைக்குள் வாழ்க்கை..!

Radhakrishnan said...

என்னையும் தமிழுடன் இணைத்துப் பார்க்கிறேன். உறவுகளை மனதில் நினைத்துக்கொண்டிருந்தாலும், வெளியே தொலைத்தது போல் தான் இருக்கிறது. அருமையான இடுகை ஐயா. இதற்கு ஒரே வழி, எப்போதாவது அநாவசியமாக நேரம் செலவழிக்க வேண்டி வந்தால் அதை உறவுகளுக்கென ஒதுக்கி வைத்துவிட்டால் உறக்கம் கூட ஒதுங்கிக் கொள்ளும். :)

கண்மணி/kanmani said...

:((
வாழ்வதற்காகவே வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

சங்கர் said...

:((

க.பாலாசி said...

யதார்த்தமான கதை... இப்போதைய பலரின் வாழ்க்கை இப்படித்தான் கழிகிறது...

நல்ல கதை நண்பா...

சுந்தரா said...

சுடுகிற நிஜம்...

என்னசெய்ய,எல்லாம் பணம் படுத்தும் பாடு.

Rajan said...

உள்ளேன் ஐய்யா !

"உழவன்" "Uzhavan" said...

உறக்கம் வந்தா என்ன பண்ண முடியும். கஷ்டம்தான்

பனித்துளி சங்கர் said...

பலரின் எழுதப்படாத ஏக்கங்கள் இப்படித்தான் . . அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

எதை இழந்து எதைப் பெறுகிறோம் என சிந்திக்க மறந்தால் தூக்கத்தில் புலம்பத்தான் வேணும் போல. சொல்லியிருக்கும் விதம் நன்று.

தாராபுரத்தான் said...

என்ன சொல்லறதுன்னே தெரியிலே . காசை குறைத்து கொடுத்தாவது எட்டு மணி நேரம் மட்டும் லேலை வாங்கித் தொலைத்தான் தான் என்ன? பாவம் உறவுகள்.

வெற்றி said...

இது கதையாகவே இருந்து விட்டால் நலம்..யாருக்கும் இந்த அனுபவம் ஏற்படக்கூடாது:((

Romeoboy said...

அவன் அவன் பாடு அவன் அவனுக்கு தான் தெரியும் சகா. :(

புலவன் புலிகேசி said...

நன்றி

பிரியமுடன்...வசந்த்

Chitra

sujatha

மீன்துள்ளியான்

முத்துலெட்சுமி/muthuletchumi

பிரபாகர்

அகல்விளக்கு

சைவகொத்துப்பரோட்டா

//butterfly Surya said...

வாழ்க்கைகாகதான் வேலையே என்ற நிலை போய் வேலைக்காக வாழ்க்கை என்று மாறிவிட்ட சமூகத்தின் வெளிப்பாடு.

அருமை.

வாழ்த்துகள்.
//

நன்றி சூர்யா..உண்மைதான்

புலவன் புலிகேசி said...

நன்றி

பேநா மூடி

ஸ்ரீராம்.

வானம்பாடிகள்

சின்ன அம்மிணி

//Sangkavi said...

அண்ணன் மட்டுமல்ல இந்ந மாதிரி நிறைய கணவன்கள், அப்பாக்களும் இருக்கின்றனர்...
//

ஆமாம் நண்பா..இதே அண்ணன் அப்பா, கணவன் என்ற ஸ்தானத்திலும் இருக்கிறான்..

புலவன் புலிகேசி said...

நன்றி

ஹேமா

ஜீவன்

//V.Radhakrishnan said...

என்னையும் தமிழுடன் இணைத்துப் பார்க்கிறேன். உறவுகளை மனதில் நினைத்துக்கொண்டிருந்தாலும், வெளியே தொலைத்தது போல் தான் இருக்கிறது. அருமையான இடுகை ஐயா. இதற்கு ஒரே வழி, எப்போதாவது அநாவசியமாக நேரம் செலவழிக்க வேண்டி வந்தால் அதை உறவுகளுக்கென ஒதுக்கி வைத்துவிட்டால் உறக்கம் கூட ஒதுங்கிக் கொள்ளும். :)
//

நன்றி..நிச்சயம் செய்ய வேண்டும்.

புலவன் புலிகேசி said...

நன்றி

கண்மணி/kanmani

சங்கர்

க.பாலாசி

சுந்தரா

ராஜன்

"உழவன்" "Uzhavan"

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!!

ராமலக்ஷ்மி

//தாராபுரத்தான் said...

என்ன சொல்லறதுன்னே தெரியிலே . காசை குறைத்து கொடுத்தாவது எட்டு மணி நேரம் மட்டும் லேலை வாங்கித் தொலைத்தான் தான் என்ன? பாவம் உறவுகள்.
//

எட்டு மணி நேர வேலைய இருந்தாலும் அங்க இரவில்தான் வேலை செய்யனும் ஐயா. கொடுமை..

புலவன் புலிகேசி said...

//வெற்றி said...

இது கதையாகவே இருந்து விட்டால் நலம்..யாருக்கும் இந்த அனுபவம் ஏற்படக்கூடாது:((
//

நன்றி...இல்லை நண்பா, இன்று பலரது வழ்வில்நடக்கின்ற ஒன்றுதான் இது.

புலவன் புலிகேசி said...

//~~~Romeo~~~ said...

அவன் அவன் பாடு அவன் அவனுக்கு தான் தெரியும் சகா. :(
//

அதான் தல உறவுகளின் புரிதல் தவறிப்போய் விடுகிறதே..என்ன செய்வது

Thenammai Lakshmanan said...

ராமலெஷ்மி சொன்னது தான் எதை இழந்து எதைப்பெறுகிறோம் புரியவில்லை புலிகேசி

இன்றைய கவிதை said...

அருமை, வேலை என்று உறவுகளை தொலைத்து உணர்வுகளை கனவினில் வளர்க்கிறோம்.. இது உலகளவில் ஜாதி பேதமில்லாமல் நிதம் நடக்கும் நிதர்சன உண்மை
மிக அழகாக விவரித்திருக்கிறீர்கள்

நன்றி புலிகேசி

ஜேகே

ரோஸ்விக் said...

இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு வாழ்கை அப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவகையில், தற்போது நான் செய்யும் வேலையில் பளு இல்லை... அதனால் ஒட்டிகொண்டிருக்கிரேன் குறைந்த சம்பளத்தோட... சம்பளம் அதிகம் பெற வேலை மாறினால்... இந்த இன்பம் போகுமே என்ற பயமும் கூட... :-((

அன்புடன் மலிக்கா said...

மிக அருமை. எதார்த்தம் வரிகளில் விளையாடுகிறது புலி.

Paleo God said...

மாய வலை..:(

சுரேகா.. said...

தங்கை ஊரிலிருந்து வந்திருக்கிறாள்.
நான் இங்கே இணையத்தில்..
பேசிவிட்டு வருகிறேன் பாஸு!

அழகான உணர்வு முகிழ்ப்பு!

priyamudanprabu said...

எல்லாம் "டாலர்" செய்யும் மாயம்........ வேறு என்ன?

கே. பி. ஜனா... said...

எத்தனை எளிதாய் நேர்ந்து விடுகின்றன மிசன்டர்டேண்டிங்க்ஸ்!

கே. பி. ஜனா... said...

எத்தனை எளிதாய் நேர்ந்து விடுகின்றன மிசன்டர்டேண்டிங்க்ஸ்!

கே. பி. ஜனா... said...

எத்தனை எளிதாய் நேர்ந்து விடுகின்றன மிசன்டர்டேண்டிங்க்ஸ்!

RJ Dyena said...

//வாழ்க்கைகாகதான் வேலையே என்ற நிலை போய் வேலைக்காக வாழ்க்கை என்று மாறிவிட்ட சமூகத்தின் வெளிப்பாடு. //

very true...

i like the tamil terms u had used on this story...

vaazhthukkal

இனியாள் said...

Nadanthukondu irukirathu thozhare, nalla vivaranai...

amagesh said...

Yes. I agree. That people missing Parents,Relatives,Friends,Functions,Entertainment,etc. Even they will not be able to dpeak with their family as they think. Bcoz that is their job, they are earning for their life. we needn't angry on them. But how can contact with them to inform any bad\good news......
They are also should think about this........

ஆர்வா said...

பாவங்க.. நல்லா இருக்கு