திரைத்துறையினருக்கு இருக்க இடம் கொடுத்ததற்கு பாராட்டு விழா. இது போல் பல விடயங்களுக்கு தனக்குத் தானே பாராட்டு விழா எடுத்து பணத்தை வீணடிக்கிறார்கள். ஒரு பாராட்டு விழா நடத்த ஆகும் செலவைக் கணக்கிட்டுப் பார்த்தால் தலை சுற்றி விடும். ஒரு சாமான்யனின் ஆண்டு வருமானம் எல்லாம் அங்கு தூசு மாதிரி.
திரைத்துறையினருக்காவது வருமானத்திற்கு வழி இருக்கிறது. ஆனால் தினம் தினம் தெருவோரம், சாக்கடையோரம் வசிக்கும் நம் சக மனித உறவுகளுக்கு என்ன செய்ய யோசித்திருக்கிறார்கள்? எதுவும் கிடையாது. ஏனென்றால் அவர்களைப் பற்றி இந்த மக்களும் கவலைப்பட்டதில்லை, அரசியல் வியாதிகளும் கவலைப்பட்டதில்லை.
சென்ற ஆண்டில் நடத்தப்பட்ட பாராட்டு விழக்களுக்கு செய்த செலவை இவர்களின் நலத்திட்டத்திற்கு உதவியிருந்தால் இது போன்று சாலையோரம் வசிக்கும் 100 பேருக்காவது வீடும் வேலை வாய்ப்பும் வழங்கியிருக்கலாம். தற்பெருமை தேடும் இவர்களிடம் எங்கிருந்து மனிதத்தை எதிர்பார்ப்பது?
பிச்சைக் காரர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க எத்தனைத் திட்டங்கள் உருவாக்கப் பட்டிருக்கும்? அதில் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? இதை சிறப்பாக செயல் படுத்த முடியாதவர்களுக்கு திரைத்துறையினரின் தேவையை மட்டும் சிறப்பாக செயல்படுத்த முடிகிறது.
காரணம் விளம்பரம்தான். ஒரு பிச்சைக்காரனுக்கோ, சாலையோர வாசிக்கோ உதவினால் அதனால் ஒன்றும் பெரிய விளம்பரம் கிடைத்து விடாது. அதுவே மக்களை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் திரைத்துறைக்கு உதவினால் உடன் விளம்பரம் கிடைக்கும். தேர்தலில் வாக்குகளும் கிடைக்கும்.
அந்த விழாவில் ஒரு நடிகர் கோபமாகப் பேசி பாராட்டு பெற்றாரம். நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அரசியலாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். அது போன்ற பிரச்சினைகள் நடிகனுக்கு தேவையற்றது என்று பேசியிருக்கிறார். உங்களை எல்லாம் தூக்கி உச்சத்தில் உட்கார வைத்திருப்பது இந்த சமூகம்தான்.
சமூகப் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். ஒப்புக் கொள்கிறேன். உங்கள் திரைத்துறையினரிடம் இல்லாதப் பணமா? நீங்கள் அனைவரும் பகிர்ந்து செலவு செய்தாலே உங்கள் துறையில் கஷ்டப் படுபவர்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கலாம். ஏன் அரசாங்கம் கட்டித்தர வேண்டும்? யோசித்தீர்களா?
எங்கள் துறையினருக்கு நாங்கள் கட்டி கொடுத்து கொள்கிறோம். நீங்கள் வீடில்லாத சாதாரன மனிதர்களுக்கு உதவுங்கள் என்று சொல்ல யாருக்கும் தைரியமும் கிடையாது. மனமும் கிடையாது.
இது போன்ற சுயநலவாதிகளுக்கு கட் அவுட், சுவரொட்டிகள் வைப்பதை நிறுத்துவோம். இது போன்ற நடிகர்களுக்கு விழா எடுத்தால் கூட்டம், படம் வெளிவந்தால் கூட்டம் என நம் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதை விடுத்து இனிமேலாவது அவரவர் வாழ்க்கையை பற்றி யோசிப்போம். பணம் அதிகமிருந்தால் இல்லாதவனுக்கு உதவுவோம்.
41 விவாதங்கள்:
கோடி கொடிய இவரு படத்துல சம்பாதிப்பரு ,பிரச்சனைய
மட்ரவர்கள் கவனிக்கணும் நல்ல புத்திசாலி.manian
இவங்க பிளாட் பாரம் வாசிகளுக்கு வீடு கட்டி கொடுக்குறத பத்தி அப்புறம் பேசுவோம். ஏற்கனவே இருக்குற குடிசை வாசிகளை அம்பது கிலோமீட்டருக்கு அப்பால துரத்தி அடிக்கிறாங்க. அதுக்கு அரசு சார்புல கொடுக்குற விளக்கம் என்ன தெரியுமா ? கோர்ட் உத்தரவ மீரா முடியாதாம். ரங்கா நாதன் தெரு கோடீஸ்வர பன்னாடைங்க மட்டும் எப்படி மீருராங்கன்னு தெரியல. இந்த குடிசை வாசிகளை அப்புற படுத்தினது இருக்கட்டும். இந்த வருஷம் பள்ளிப்படிப்பை முடிக்க கூட விடாம துரத்தி அடிச்சதுதான் வேதனையா இருக்கு. மதுரவாயல் ல இருந்து துறைமுகம் போக அதிவேக சாலை அமைக்க ஒன்பது கிலோ மீட்டர் நீலத்துல சாலை அமைச்ச கொடீஸ்வரன்களோட ஹோட்டலும் சினிமா தியேட்டரும் இடிபடும்னு பத்தொன்பது கிலோ மீட்டர் தூரம் சுத்தி வளைச்சு ரோடு போடுறாங்க. பத்தாயிரம் குடிசை வாசிங்க நடுத்தெருவுல? எங்கபோய் சொல்றது?
அவர்கள் விரும்பி கேட்கும் வாக்கு இங்கு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது,
நல்ல ஒப்பீடுதான்....
நல்ல உறுமல் புலிகேசி ..
இருக்குறவங்களுக்கே அள்ளிக்கொடுக்கும் சமூகம்
இல்லாதவங்களுக்கு
கிள்ளிக்கொடுக்கக்கூட
வருவதில்லை.
வருத்ததின் உச்சியில் மனம்..
//உங்கள் திரைத்துரையினரிடம் இல்லாதப் பணமா? நீங்கள் அனைவரும் பகிர்ந்து செலவு செய்தாலே உங்கள் துரையில் கஷ்டப் படுபவர்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கலாம். ஏன் அரசாங்கம் கட்டித்தர வேண்டும்? யோசித்தீர்களா?//
சரியாகச்சொன்னீர்கள்...
நல்லாத்தான் கேள்வி கேக்குறீய..
நல்ல சிந்தனைத்தான் நண்பா... அரசியலும் சரி...சினிமாவும் சரி விளம்பர வேர்களை நம்பி நடக்கும் பச்சொந்தித்தனம். அவர்களிடம் நியாயம் எதிர்பார்ப்பது நமது தவறு... அவர்களை நாம் விலக்கிவைப்பதே நல்லது. நல்ல இடுகை...
பிளாட்பாரங்களில் இருப்போர்க்ளில் பலருக்கு ஓட்டு இருக்காது..., ஓட்டு இல்லாதவர்கள் உயிரோடிருக்கும் பிணங்கள் அரசியல்வாதிகளை பொருத்த வரை...,-
//பேநா மூடி said...
பிளாட்பாரங்களில் இருப்போர்க்ளில் பலருக்கு ஓட்டு இருக்காது..., ஓட்டு இல்லாதவர்கள் உயிரோடிருக்கும் பிணங்கள் அரசியல்வாதிகளை பொருத்த வரை//
வழிமொழிகிறேன்.....
இந்த வயசுல உங்களுக்கு சமூகத்தின் மேல் உள்ள அக்கறையும், கோபமும் எனக்கு பிடிச்சிருக்கு.....அவன் பாத்துக்குவான்,இவன் பாத்துக்குவான்னு ஒதுங்கி போக கூடாது.....நீங்க இன்னும் ஆக்ரோசமா எழுதணும்.....நம்மால் களத்துல இறங்கி ஏதும் செய்ய முடியலைனாலும்...தூண்டிக்கொண்டே இருப்போம்....எங்கேயாவது ஒரு பொறி எரிமலையாகும்....
By.........தம்பி ......
நெத்தி அடி...
இந்த அரசியல் வாதிகள் சினிமாக்காரன் இவங்களோட இப்ப தொலைக்காடிக்காரனுகளும் சேந்து செய்யிற அலப்பறை இருக்கே அம்மாடி துரத்தணும்!!! எல்லாரையும் துரத்தணும்!!! நீங்க நினைச்சா எல்லாம் நடக்கும்
உரிமைகள் கேட்காமல் கிடைத்தது எல்லாம் ஒரு காலம் இப்பொழுதெல்லாம் கேட்டாலும் கிடைக்குமாஎன்கின்ற நிலையில் இருக்கிறோம் . வரவேற்கத் தகுந்த பதிவுதான் நண்பரே !
வாழ்த்துக்கள் !
\\ திருவாரூரிலிருந்து சரவணன் said...
இவங்க பிளாட் பாரம் வாசிகளுக்கு வீடு கட்டி கொடுக்குறத பத்தி அப்புறம் பேசுவோம். ஏற்கனவே இருக்குற குடிசை வாசிகளை அம்பது கிலோமீட்டருக்கு அப்பால துரத்தி அடிக்கிறாங்க. அதுக்கு அரசு சார்புல கொடுக்குற விளக்கம் என்ன தெரியுமா ? கோர்ட் உத்தரவ மீரா முடியாதாம். ரங்கா நாதன் தெரு கோடீஸ்வர பன்னாடைங்க மட்டும் எப்படி மீருராங்கன்னு தெரியல. இந்த குடிசை வாசிகளை அப்புற படுத்தினது இருக்கட்டும். இந்த வருஷம் பள்ளிப்படிப்பை முடிக்க கூட விடாம துரத்தி அடிச்சதுதான் வேதனையா இருக்கு. மதுரவாயல் ல இருந்து துறைமுகம் போக அதிவேக சாலை அமைக்க ஒன்பது கிலோ மீட்டர் நீலத்துல சாலை அமைச்ச கொடீஸ்வரன்களோட ஹோட்டலும் சினிமா தியேட்டரும் இடிபடும்னு பத்தொன்பது கிலோ மீட்டர் தூரம் சுத்தி வளைச்சு ரோடு போடுறாங்க. பத்தாயிரம் குடிசை வாசிங்க நடுத்தெருவுல? எங்கபோய் சொல்றது?//
இதை நான் வழிமொழிகிறேன்..
ஏன் அஜித் எது பேசினாலும் அதில் குறையை மட்டும் பேசுகிறீர்கள்... அவர் சொன்னதில் என்ன தவறு இருக்குன்னு எனக்கு தெரியல .... இங்கு நடந்த எந்த கூட்டத்தினாலும் யாருக்கும் எந்த நன்மையையும் கிடைப்பதில்லை என்றுதானே அவர் கூறினார்... உண்மைதானே அது ? நடிகர்கள் கலந்து கொண்டால் மட்டும் காவேரி நீர் நமக்கு வந்து விடுமா? mullai periyaaru பிரட்சனை தீர்ந்து விடுமா? யாரோ ஒரு சிலரின் சுயநலதிற்காக எல்லா நடிகர்களின் நேரத்தையும் வீணாக்க வேண்டாம் என்ற அர்த்தத்தில்தானே கூறினார்? சரி இப்டி பேசினால் அவருக்கு சமூக அக்கறை இல்லைன்னு சொல்லுறீங்களே ... சும்மா சும்மா கூட்டத்துல கலந்துகிட்டு mike பிடிச்சி பேசுனா பிரட்சன தீர்த்து விடுமா ? அப்டினா தினம் தினம் உங்க oorkulla எவ்ளோ பொது கூட்டம் நடக்குது , அதுல எவ்வளவோ நல்ல விசயங்களுக்காக நடக்கும்ல அங்க எல்லாம் நீங்க போய் கலந்துகிட்டீங்களா? maatteenka yennaa theriyum unkalukku athellaam வெட்டி வேல சிலரோட சுயநலத்துக்காக நடக்குற கூட்டம்னு.. அதுல நீங்க கண்டிப்பா கலந்துகிட்டுதான் ஆகணும்னு உங்களை யாரவது வந்து மெரட்டுனா உங்களுக்கு கோபம் வருமா வராதா? அந்த கோபம்தான் அஜித் மற்றும் ரஜினிக்கும்... ரஜினி இத பேசுனா அதும் அரசியல் ஆகி விடும் அதான் அஜித் பேசுன வுடனே எழுந்து நின்று கை தட்டினார் ... தயவு செய்து ethaiyum nallaa yositthu vittu eluthunkal
அவர் பேசியது சரி என்றுதான் எனக்கும் தோன்றுகிறது, இதுவரை அவர்கள் போட்ட கூட்டங்கள்
தொல்லை காட்சிகளின் வருமானத்தை பெருக்க மட்டுமே உதவி இருக்கிறது.
ஆனாலும் உங்க சமுதாய சிந்தனை பாரட்டப்பட வேண்டியது புலவரே.
தேவையான கோபம் தான்,,, தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, நம்ம அரசியல் வியாதிகளின் அடிகளை வருடிக் கொண்டிருக்கும் பலர்... அதில் விருப்பமில்லாத சிலரையும் சேர்த்து தான் தொல்லைபடுத்தி வருகிறார்கள்.
கலைஞரின் விருது ஆசைகள் எப்போது தணியும் என்று புரியவில்லை... திரைத்துறையில் மிகவும் சிரமப்படுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழில் பெயரிட்டால் தரும் வரிவிலக்கு... யாருக்கு பயன்படுகிறது??
நாட்டில் சொந்த இடம் இல்லாமல் தவிப்போர் அனைவருக்கும் இலவச வீட்டு மனை வழங்குவதை விடுத்தது ஒரு குறிப்பிட்ட துறையினருக்கு மட்டும் வழங்குவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.
அது அதுங்க பட்டு திருந்துனாதான் உண்டு தல..
//நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அரசியலாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். அது போன்ற பிரச்சினைகள் நடிகனுக்கு தேவையற்றது//
யாருப்பா இந்த அறிவாளி..?? மொத்தத்ல அந்தாளு தன்னை மனுஷனாவே பார்க்கலை போலயே..!! (வீட்லயும் நடிப்பு மட்டும்தானா.. பாத்ரூம் போற வரைக்கும்.. சாரிப்பா...).. அத விட அரசியல்வாதிங்க பார்த்துப்பாங்கன்னு சொல்றது ரொம்ப டமாஷுப்பா...
//இது போன்ற சுயநலவாதிகளுக்கு கட் அவுட், சுவரொட்டிகள் வைப்பதை //
எல்லாம் சுயநலவாதிங்கதான் அப்பு... அதனால யாருக்கும் கட் அவுட் வைக்க தேவை இருக்காது..! அவங்க அரசியல்வாதிங்க பண்ணுவாங்கன்னு சொல்றத ஜனங்க பண்ணலாம்.. இந்தத் தண்டச் செலவுக்கு பதிலா..
ah solla maranthutten.. superb pathivu pulavare..!
நல்லாக் கேட்டிருக்கீங்க புலிகேசி!
உங்கள் ஆதங்கம் நியாயமானது புலிகேசி
கேள்வி : உலகிலேயே கேடு கேட்ட இனம் எது ?
பதில் : தமிழ்
கேள்வி: அந்த இனத்தின் தலை நகர் எது ?
பதில் : தமிழ்நாடு
கேள்வி: இந்த இனத்தை திருத்த முடியுமா?
பதில் : முடியாது, பல வேற்று இனத்தலைவர்கள் (பெரியார் உட்பட ) முயன்று, கிடைத்தது தோல்வி.
கேள்வி: இவர்கள் உருப்படியாக செய்யும் செயல் என்ன ?
பதில்: நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்வது.
கேள்வி: இந்த இனத்தின் தலைவன் யார் ?
பதில்: இந்த கேள்வி பதில் வடிவத்திலேயே உங்களுக்கு புரிய வேண்டாமா, தலைவன் கலைஞன் யார் என்று.
// பணம் அதிகமிருந்தால் இல்லாதவனுக்கு உதவுவோம்.//
உதவி செய்யணும்னு மனசு இருந்தாலே போதும், இருக்கிற கொஞ்ச காசுலயும் உதவலாம்னு நான் நெனைக்கிறேன்.
கலகலப்ரியா கலகப்ரியாவா மாறிக்கிட்டிருக்காரு..வாழ்த்துக்கள்
சினிமாத் துறையினரின் கலைஞர் டி,வீ க்காவே நடத்தப்பட்ட நாடகம்.எத்தனை சொன்னாலும் அந்த மனிசனுக்கு புத்தி.......ம்ம்ம்
ungkaL kObam sariyAka iruppinum, pArAttu vizhA mUlam pala Ezhai thoziLAlarkaLukku vElai kidaikkiRathu enbathai mRukka mudiyAthu!
நீ என்னைத் தட்டிக் கொடு. நான் உன்னைத் தட்டிக் கொடுக்கிறேன். இதுதான் பாலிசி. சினிமா சார்ந்த பாலிடிக்ஸால் குட்டிச்சுவராகிறது தமிழகம். அருமையான இடுகை.
நாம் எவ்வளவுதான் சொன்னாலும் யாரும் மாறப்போவதில்லை. இது சாபக்கேடு.
அந்த விழாவில் ஒரு நடிகர் கோபமாகப் பேசி பாராட்டு பெற்றாரம். நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அரசியலாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். அது போன்ற பிரச்சினைகள் நடிகனுக்கு தேவையற்றது என்று பேசியிருக்கிறார். உங்களை எல்லாம் தூக்கி உச்சத்தில் உட்கார வைத்திருப்பது இந்த சமூகம்தான்.
அப்போ இனி நடிகன் அரசியலுக்கு வரக்கூடாதுனு யாரும் பக்கம் பக்கமா ப்ளாக்ல வெட்டியா எழுதாம இருக்கனும்,
யார் வீட்டுப்பணத்தை, யார், யாருக்கு தானம் செய்யறது..? இவங்களுக்கு என்ன கொறச்சல்.. இப்ப எதுக்கு தேவையில்லாம இந்த சலுகை..?
நல்லா எழுதுங்க தலைவா..
நன்றி...
நல்லா சொல்லி இருக்கிங்க!
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..
//"ராஜா" from புலியூரான் said...
ஏன் அஜித் எது பேசினாலும் அதில் குறையை மட்டும் பேசுகிறீர்கள்... அவர் சொன்னதில் என்ன தவறு இருக்குன்னு எனக்கு தெரியல .... இங்கு நடந்த எந்த கூட்டத்தினாலும் யாருக்கும் எந்த நன்மையையும் கிடைப்பதில்லை என்றுதானே அவர் கூறினார்... உண்மைதானே அது ? நடிகர்கள் கலந்து கொண்டால் மட்டும் காவேரி நீர் நமக்கு வந்து விடுமா? mullai periyaaru பிரட்சனை தீர்ந்து விடுமா? யாரோ ஒரு சிலரின் சுயநலதிற்காக எல்லா நடிகர்களின் நேரத்தையும் வீணாக்க வேண்டாம் என்ற அர்த்தத்தில்தானே கூறினார்? சரி இப்டி பேசினால் அவருக்கு சமூக அக்கறை இல்லைன்னு சொல்லுறீங்களே ... சும்மா சும்மா கூட்டத்துல கலந்துகிட்டு mike பிடிச்சி பேசுனா பிரட்சன தீர்த்து விடுமா ? அப்டினா தினம் தினம் உங்க oorkulla எவ்ளோ பொது கூட்டம் நடக்குது , அதுல எவ்வளவோ நல்ல விசயங்களுக்காக நடக்கும்ல அங்க எல்லாம் நீங்க போய் கலந்துகிட்டீங்களா? maatteenka yennaa theriyum unkalukku athellaam வெட்டி வேல சிலரோட சுயநலத்துக்காக நடக்குற கூட்டம்னு.. அதுல நீங்க கண்டிப்பா கலந்துகிட்டுதான் ஆகணும்னு உங்களை யாரவது வந்து மெரட்டுனா உங்களுக்கு கோபம் வருமா வராதா? அந்த கோபம்தான் அஜித் மற்றும் ரஜினிக்கும்... ரஜினி இத பேசுனா அதும் அரசியல் ஆகி விடும் அதான் அஜித் பேசுன வுடனே எழுந்து நின்று கை தட்டினார் ... தயவு செய்து ethaiyum nallaa yositthu vittu eluthunkal
//
நண்பரே அவருக்கு விருப்பமில்லை என்றால் போகட்டும். நடிகன் நடிப்பை மட்டும் பார்க்க வேண்டும். சமுதாயப் பிரச்சினைகள் தேவையில்லை என சொன்னது எந்த விதத்தில் நியாயம். சமுதாயப் பிரச்சினைகளை அரசிடம் எடுத்து செல்ல ஒரு பிரபலமான மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கு இந்த நடிகர்களின் தலையீடு தேவைதானே?
எனக்கென்ன போச்சு நான் ஏன் வேலைய ப்ஆக்குறேன்னு அவனுங்க நெனைக்கிற மாதிரி மக்களும் நெனச்சா ஒரு படமும் ஓடாது. படம் ஓட மக்கள் துணை தேவை. மக்களின் பிரச்சினை அவர்களுக்குத் தேவையில்லை. என்ன கொடுமை இது?
நல்ல சிந்தனை.. பாராட்டுக்கள்
நல்லா இருக்குங்க.. தலைவரே
//நண்பரே அவருக்கு விருப்பமில்லை என்றால் போகட்டும். நடிகன் நடிப்பை மட்டும் பார்க்க வேண்டும். சமுதாயப் பிரச்சினைகள் தேவையில்லை என சொன்னது எந்த விதத்தில் நியாயம். சமுதாயப் பிரச்சினைகளை அரசிடம் எடுத்து செல்ல ஒரு பிரபலமான மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கு இந்த நடிகர்களின் தலையீடு தேவைதானே?
எனக்கென்ன போச்சு நான் ஏன் வேலைய ப்ஆக்குறேன்னு அவனுங்க நெனைக்கிற மாதிரி மக்களும் நெனச்சா ஒரு படமும் ஓடாது. படம் ஓட மக்கள் துணை தேவை. மக்களின் பிரச்சினை அவர்களுக்குத் தேவையில்லை. என்ன கொடுமை இது//
சமுதாய பிரச்சனைகள் தேவை இல்லை என்று அவர் எங்கே சொன்னார் .... அந்த பிரச்சனைகளை தீர்பதாய் சொல்லி கொண்டு நடக்கும் சிலரின் சுயநலத்திற்காக மட்டுமே பயன் படுகின்ற கூட்டங்களை மட்டுமே அவர் தேவை இல்லை என்றார்... பிரபலமான நபர்கள் சொன்னால் இந்த அரசு எந்த பிரச்சனைகளையும் தீர்த்து விடுமா? அப்டி என்றால் ரஜினி சொன்னார் என்பதற்காக இந்நேரத்திற்கு நம் நாட்டில் நதிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும், காவேரி நீர் தஞ்சையில் கரைபுரண்டு ஊட வேண்டும்... முல்லை பெரியாறு
அணை நிரம்பி இருக்க வேண்டும்... அவங்க சொல்லி சமுதாய பிரட்சன தீர வேண்டாம் மோதல அவங்க பிரட்சன தீந்துட்சா? திருட்டு VCD காக எவ்ளோ போராட்டம் பண்ணுனாங்க ? இப்ப என்ன நாட்டுல திருட்டு VCD இல்லாம போச்சா என்ன?
Post a Comment