கடவுளை மற..மனிதனை நினை..

27 January 2010

சொந்த பந்தங்கள் - 1

6:30:00 AM Posted by புலவன் புலிகேசி , 24 comments

தாத்தா



கைத்தடி தாங்கி நடக்கும்
தள்ளாத வயதிலும்
பேரனை தூக்கி நடந்தார்
பள்ளிக் கூடத்திற்கு

பாட்டி


தள்ளாத வயதிலும் பாடம்
முடித்து வரும் பேரப்பிள்ளைக்காக
பனியில் காத்து கிடக்கும்
இன்னொரு தாய்

24 விவாதங்கள்:

Chitra said...

நீங்கள் ஒவ்வொரு முகத்திலும் உள்ள உணர்வுகளை மதித்து, அதனோடு மனித நேயத்துடன் ஒன்றுவது, உங்கள் பதிவுகளில் தெரிகிறது.

ராமலக்ஷ்மி said...

தாயாய் தந்தையாய் தொடர்கிறார்கள் என்றும். அருமை புலிகேசி!

Unknown said...

நல்லா இருக்குங்கண்ணா கவிதை..

சைவகொத்துப்பரோட்டா said...

இயந்திரமாகிவிட்ட நம்மிடையே இன்னும் இருக்கும் மனிதர்கள்.

வெற்றி said...

அருமை !

மாதேவி said...

குடும்பத்தின் பாசமலர்கள்.

vasu balaji said...

mm. சபாஷ்

முனைவர் இரா.குணசீலன் said...

மிகவும் நன்றாகவுள்ளது நண்பரே..

முனைவர் இரா.குணசீலன் said...

ஒரு முறை கி.வா.ஜா அவர்கள் நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். வண்டி பழுதடைந்து நின்று விட்டதாம். வண்டியைத் தள்ளினால் தான் செல்லும் என்ற நிலையாம்.

நண்பர்கள் வண்டியைத் தள்ளும் போது கிவாஜா அவர்களையும் அழைத்தார்களாம்..

இலக்கியச்சுவைபட இரண்டு பொருள்பட பேசுவதில் வல்லவரான கிவாஜா சொன்னாராம்.

“ இது எனக்குத் தள்ளாத வயது“
என்று தங்களுக்குத் தெரியாது என்றாராம்.


தங்கள் கவிதையில் தள்ளாத என்ற சொல்லைப் பார்த்தவுடன்,

எனக்கு இந்த நிகழ்ச்சி தான் நினைவுக்கு வந்தது நண்பரே..

“தள்ளாத வயதிலும்..
உறவுகளையும்,
உழைப்புகளையும் தள்ளாத முதியோர்..

நமக்கு நிகழ்கால எடுத்துக்காட்டு!!

கவிதை அருமை.
பல நினைவுகளைத் தூண்டுவதாகவுள்ளது..

Anonymous said...

பொருத்தமான படங்கள். கவிதையும் அருமை

ரோஸ்விக் said...

ம்ம்ம்...தல தாத்தாவும் பாட்டியும் காண ஜோரு... எதிர்கால சந்ததிகள் இந்த உறவுகளை, அவர்களின் பாசங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவது வேதனை.

இன்றும் நான் மிகவும் அன்பு செய்யும் ஒரு பெண் என் அப்பத்தா ... :-)

க.பாலாசி said...

நல்ல இடுகை... படங்களும் வரிகளுக்கும் மிக பொருத்தம்.

ஸ்ரீராம். said...

இதெல்லாம் செய்தால்தான் சோறு என்று மருமகள் சொல்லி விட்டாளோ என்னமோ..?

பாசம் பாதி...பசி பாதி..

அன்புடன் மலிக்கா said...

நெகிழ்வித்த கவிதை வரிகள்

பனித்துளி சங்கர் said...

புகைப்படத்திற்கு ஏற்ற வரிகள் உணர்வுகளின் வெளிப்பாடு அற்புதம் .

sathishsangkavi.blogspot.com said...

படங்களும் வரிகளுக்கும் நல்லா இருக்குங்க...

Menaga Sathia said...

படங்களும் அதற்கேற்ற வரிகளும் அருமை...

Radhakrishnan said...

அருமையான வரிகளும், அழகான படங்களும்.

வினோத் கெளதம் said...

அருமை..

நிலாமதி said...

புகைப்படத்திற்கு ஏற்ற வரிகள் உணர்வுகளின் வெளிப்பாடு அருமை.

தாராபுரத்தான் said...

யோசிக்க சொல்லும் கவிதை.

விக்னேஷ்வரி said...

அழகான வார்த்தகளுடன் பொருத்தமான புகைப்படங்கள்.

திவ்யாஹரி said...

படமும், அதற்கேற்ற கவிதை வரிகளும் மனதை தொடுகிறது புலவரே..

சினிமா புலவருக்கு பின்னூட்டமே இட முடியவில்லை.. எதனால் என்று பாருங்கள் நண்பா..

balavasakan said...

நல்லாருக்கு நண்பா எலக்சன் சூடு குறைஞ்சு இப்பத்தான் நேரம் வந்திச்சு