கடவுளை மற..மனிதனை நினை..

02 January 2010

டரியல் (02-சனவரி-2010)

6:08:00 AM Posted by புலவன் புலிகேசி 30 comments
இந்த வாரம் புத்தாண்டின் முதல் டரியல். 2009ன் இறுதியில் என் 50 பதிவை முடித்து 100+ நண்பர்கள் பெற்றேன். அது மட்டுமல்லாது விகடன் எனக்கு 3 புத்தகங்கள் (மின்னிதழ்) பரிசளித்துள்ளது. அவை

1) என்.எஸ். கிருஷ்ணன்
2) அம்பேத்கர்
3) தெருவாசகம்

இப்பதான் ஒன்னொன்னா படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.

--------------------------------

கேபிளார் சொன்னபின் நேற்றைய தினமணி வாங்கி படித்தேன். நம் வலைப்பூக்கள் பற்றி ஒரு சிறப்பு கட்டுரை வெளிவந்திருந்தது. அதில் நம் நண்பர்கள் பலரது வலைப்பூக்கள் சுட்டப் பட்டிருந்தது. தினமணிக்கு நன்றிகள். நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது ஒரு ஆரோக்யமான வளர்ச்சி. இதை நல்ல விடயங்களுக்காக பயன் படுத்துவோம். தயவு செய்து யாரும் சாதி மதங்கள் பற்றி சண்டையிட வேண்டாம். சமீபத்திய "பர்தா" பதிவால் வந்த சர்ச்சைகளை படித்து மிகவும் வருத்தமடைந்தேன். இது போன்று யாரும் எழுதவும் வேண்டாம். இதற்கு எதிர் பதிவு எழுதி சண்டையிடவும் வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். (நான் மதம் சாதி சித்தரிப்பு கடவுள்களை நம்பாமல் மனிதத்தில் கடவுள் காண்பவன்).

--------------------------------

என் பார்வையில் சென்ற ஆண்டு தமிழ் திரையுலகம்

சிறந்த படம்: பசங்க

ஒரு அருமையான வாழ்வியல் பிரதிபலிப்பாக வெளிவந்த இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. சிறுவர்களை வைத்து முதல் முறை ஒரு முழுநீளப் படம் எடுத்து அசத்திய பாண்டிராஜீக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

சிறந்த பாடல்: துளி துளி துளி மழையாய் (பையா)

2008 வாரணம் ஆயிரம் பாடல்கள் மனதில் நின்ற அளவிற்கு 2009ல் எந்த பாடலும் நிற்கவில்லை. இருந்தாலும் அயன் படத்தின் "விழிமூடி யோசித்தால்" ரசிக்கும் படியிருந்தது. பையா படப் பாடல்கள் முன்னரே கேட்டது போல் தோன்றினாலும் வரிகள் அழகு. பல பாடல்கள் வெளிவந்த நேரம் பிடித்து அப்புறம் அலுத்து விட்டது.

சிறந்த திரைத்துரை மனிதர்: . ஆர். ரகுமான்

இரண்டு ஆஸ்கர் விருது பெற்று கொடுத்த முதல் இந்தியர். எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர். அமைதியான அடக்கமான மனிதர். 2010-லாவது நிறைய தமிழ்பாடல்களை அவரிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.

--------------------------------

கடந்து வந்த தோல்விகளை
வாறியெடுத்து சேர்த்து
கட்டிய வெற்றி மாலையுடன்
பிறந்திருக்கிறது புத்தாண்டு
மலர் உதிர்வதற்குள் முயற்சி
கொண்டு பெற்று விடுவோம்

புத்தாண்டு வாழ்த்து பதிவில் சேர்க்கலாம் என தோன்றியது. ஆனால் முன்னரே வெளியிட்டதால் சேர்க்கவில்லை.

--------------------------------

எனது தொழில்நுட்ப வலைப்பூவில் (புலிகேசியின் Microsoft .Net) Microsoft .Net and SQL () பத்தி எழுதி வருகிறேன். நடுவில் சில காலம் அதில் எழுதவில்லை. இன்று முதல் தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். .Net இல்ல SQL தெரிஞ்ச யாராவது அதில் வரும் பதிவுகளில் கலந்துரையாட வாங்க.
தெரிஞ்சிக்கனும்னு ஆசை படுறவங்க வந்து பாருங்க.

--------------------------------

இந்த வார டரியல் நம்ம தோழி மலிக்காவின் "அரையடி நாக்கு" என்ற கவிதை பதிவு. யாகாவாராயினும் நாகாக்க என்பதை சுட்டும் கவிதை. படிக்கலைன்னா படிச்சிப் பாருங்க.

--------------------------------

30 விவாதங்கள்:

அண்ணாமலையான் said...

வாங்குன பரிசுக்கு வாழ்த்துக்கள்....

முனைவர் இரா.குணசீலன் said...

விகடன் எனக்கு 3 புத்தகங்கள் (மின்னிதழ்) பரிசளித்துள்ளது.

வாழ்த்துக்கள் நண்பரே..

முனைவர் இரா.குணசீலன் said...

இது போன்று யாரும் எழுதவும் வேண்டாம். இதற்கு எதிர் பதிவு எழுதி சண்டையிடவும் வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்//

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை.

முனைவர் இரா.குணசீலன் said...

பசங்க படம் சென்ற ஆண்டு பார்த்த படங்களிலேயே மனதில் நிற்கும் படமாக அமைந்தது..
படம் பார்த்த அனைவருக்கும் தம் பள்ளிக்கால நினைவுகளை அசைபோட வைத்தது. இதுவே இந்தப்படத்தின் மாபெரும் வெற்றி..

முனைவர் இரா.குணசீலன் said...

அரையடி நாக்கு..

நல்ல அறிமுகம் நண்பரே..

சங்கர் said...

//இது போன்று யாரும் எழுதவும் வேண்டாம். இதற்கு எதிர் பதிவு எழுதி சண்டையிடவும் வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். //

அப்புறம் எப்படி ஹிட்ஸ் வரும், எப்படி பிரபலமாரது, என்னப்பா இது, பதிவுலக அடிப்படைகளே தெரியாம பேசிக்கிட்டு,

நான் கூட கொஞ்ச நாள் C# கத்துக்கிட்டேன், விட்டுட்டேன், எழுதுங்க திருப்பி ஆரம்பிக்கிறேன்

balavasakan said...

பசங்க அவளோ நல்ல படமா பாக்கல நண்பா இங்கு திரை அரங்குகளில் வேட்டைக்காரன் ஆதவன் தான்போடுவார்கள் இப்படியான படங்கள் எடுக்கமாட்டார்கள் சரி டிவிடி எடுத்து பாப்பம்...

Cable சங்கர் said...

puththandu vazhthukkal

பிரபாகர் said...

பசங்க அற்புதமான படம் புலிகேசி!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் நண்பரே.

Unknown said...

நண்பா.., பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

Priya said...

வாழ்த்துக்கள்!!!

ஈ ரா said...

புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே..

பூங்குன்றன்.வே said...

மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் புலிகேசி..!

ஜெட்லி... said...

கரெக்ட்ஆ சொன்னிங்க ...

Thenammai Lakshmanan said...

எனக்கும் பசங்க் படம் பிடிச்சு இருந்துச்சு புலிகேசி

மற்ற உங்க எல்லா கருத்துக்களும் அருமை

Subankan said...

பசங்கள் - எனக்கும் பிடித்தது. புத்தாண்டு வாழ்த்துகள் புலிகேசி..!

வினோத் கெளதம் said...

வரும் வருடங்கள் மேலும் பல சிறப்புகள் பெற வாழ்த்துக்கள் நண்பா..

பின்னோக்கி said...

பையா படப் பாட்டு ஆட்டத்துக்கு சேத்துக்க கூடாது. படம் இன்னும் வெளிவரலைல்ல.

ஒரு வெக்கம் வருதே - பசங்க. இந்த பாட்டு புடிக்குமா ?

ஸ்ரீராம். said...

விகடன் பரிசுகளுக்கு வாழ்த்துக்கள். நான் தினமணி கட்டுரை முனைவர் குணசீலன் பக்கத்தில் தெரிந்து கொண்டேன்.

சுசி said...

வாழ்த்துக்கள் புலிகேசி.

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் , said...

அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!

Paleo God said...

வாழ்த்துக்கள் புலவரே ::))

புலவன் புலிகேசி said...

நன்றி

@அண்ணாமலையான்

@முனைவர்.இரா.குணசீலன்

@சங்கர்

@Balavasakan

//பசங்க அவளோ நல்ல படமா பாக்கல நண்பா இங்கு திரை அரங்குகளில் வேட்டைக்காரன் ஆதவன் தான்போடுவார்கள் இப்படியான படங்கள் எடுக்கமாட்டார்கள் சரி டிவிடி எடுத்து பாப்பம்...//

மறக்காம பாருங்க தல

புலவன் புலிகேசி said...

நன்றி

@Cable Sankar

@பிரபாகர்

@சைவகொத்துப்பரோட்டா

@பேநா மூடி

@Priya

@ஈ ரா

@பூங்குன்றன்.வே

@கலகலப்ரியா

@ஜெட்லி

@thenammailakshmanan

@Subankan

@வினோத்கெளதம்

புலவன் புலிகேசி said...

நன்றி

@பின்னோக்கி

//பையா படப் பாட்டு ஆட்டத்துக்கு சேத்துக்க கூடாது. படம் இன்னும் வெளிவரலைல்ல.

ஒரு வெக்கம் வருதே - பசங்க. இந்த பாட்டு புடிக்குமா ?//

ம் பிடிகும் தல. ஆனா பையா பாடல் வெளியாயிடுச்சில அதான் சேத்துருக்கோம்..

புலவன் புலிகேசி said...

நன்றி

@ஸ்ரீராம்

@சுசி

@வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர்

@பலா பட்டறை

அன்புடன் மலிக்கா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

/இந்த வாரம் புத்தாண்டின் முதல் டரியல். 2009ன் இறுதியில் என் 50 பதிவை முடித்து 100+ நண்பர்கள் பெற்றேன். அது மட்டுமல்லாது விகடன் எனக்கு 3 புத்தகங்கள் (மின்னிதழ்) பரிசளித்துள்ளது./

இன்னும் பலபல பரிசுகள் வாங்கி இன்னும் நல்லபடைப்புகளை தர எல்லாம் வல் இறைவனிடன் வேண்டுகிறேன்

என்னுடைய பதிவை டயரியலில்.. இணைத்தமைக்கு மிக்க நன்றி தோழா..

திவ்யாஹரி said...

வாழ்த்துக்கள் நண்பா.. எனக்கும் "பசங்க" படம் பிடிக்கும்.