கடவுளை மற..மனிதனை நினை..

22 December 2009

நினைவில் நில்லாமல்

2:13:00 AM Posted by புலவன் புலிகேசி 41 comments

முதன் முதல்

தாய் கொடுத்த முத்தம்
பெயர் சூட்டிய பெருவிழா
தொட்டிலில் கண்ட கனவு
அணிந்த ஆடை

முளைத்த பல்
பார்த்த முகம்
தடுக்கி விழுந்த தளம்
ரசித்த ஒலி

ருசித்த உணவு
தந்தை அடித்த அடி
பள்ளி சென்ற நாள்
படித்த பாடம்

பிடித்த ஆசான்
கிடைத்த நண்பன்
எத்தனை முறை யோசித்தாலும்
நினைவு வராமல்...

41 விவாதங்கள்:

ப்ரியமுடன் வசந்த் said...

//பிடித்த ஆசான்
கிடைத்த நண்பன்
எத்தனை முறை யோசித்தாலும்
நினைவு வராமல்...
//

மிகச்சரி...!

Anonymous said...

wooooww..............
supperb annan...!!
kavithai..kavithai!!

-raavan rajhkumar-jaffna.

பிரபாகர் said...

நினைவிற்கு வராதது நினைவிற்கு வருவது விந்தையல்லவோ... நன்று புலிகேசி...

பிரபாகர்.

balavasakan said...

பிடித்த ஆசான்
கிடைத்த நண்பன்

இவை இரண்டும் எனக்கு நினைவுக்கு வருகிறது நண்பா ஏனெனில் இரண்டும் ஒரு 8 வயசுக்கு பிறகு தான் வந்தது

அன்புடன் நான் said...

ஆமாம்... மறந்தால் தானே...மீண்டும் நினைவுக்கு வருவதற்கு?

இளவட்டம் said...

உண்மைதான் நண்பா! அருமையான கவிதை.

முனைவர் இரா.குணசீலன் said...

நினைவுத் தூண்டிலால் கடந்தகாலத்தை மீட்டெடுக்க முயல்கிறது கவிதை...
நன்றாகவுள்ளது நண்பா..

Paleo God said...

புலவரே ...கலக்கல்.. ::)

சிவாஜி சங்கர் said...

கவிதையிலும் க.க.க.போ...

சங்கர் said...

கவிதை அருமை,

// பிரபாகர் said...
நினைவிற்கு வராதது நினைவிற்கு வருவது விந்தையல்லவோ... //

அதானே!!

வெற்றி said...

புலவரின் ஆட்டோகிராப்.. :)

ராமலக்ஷ்மி said...

//எத்தனை முறை யோசித்தாலும்
நினைவு வராமல்...//

ஆமா, வரத்தான் மாட்டேன்கிறது:)! நல்ல கவிதை.

பித்தனின் வாக்கு said...

//தந்தை அடித்த அடி
பள்ளி சென்ற நாள்
படித்த பாடம்

பிடித்த ஆசான்
கிடைத்த நண்பன்//
முதல் இரண்டு பாராக்களும் மிக அருமை. அவை யோசித்தால் நினைவு வருவது சிரமம். அனால் மேலே இருக்கும் வரிகள் நினைவுக்கு வரலாம். நான் முதலில் வாங்கிய அடி. பள்ளி சென்ற நாள். பிடித்த ஆசான். முதலில் கிடைத்த நண்பன் ஆகியவற்றிக்குப் பதிவுகள் இட்டுள்ளேன். நன்றி. நல்ல கவிதை. நன்றி.

Unknown said...

கவிதை அருமை...,

divyahari said...

கவிதை நன்றாக இருக்கிறது நண்பா.. தொட்டிலில் குழந்தை அழகா இருக்கு..

Thenammai Lakshmanan said...

அருமை புலவரே அசத்துறீங்க

க.பாலாசி said...

//ருசித்த உணவு//

தாய்ப்பாலாகத்தான் இருக்கவேண்டும், அது மட்டும் நிச்சயம்...

நல்ல கவிதை நண்பா...

ரோஸ்விக் said...

பங்காளி முதல் முதலா புடிச்ச புள்ள நினைவிருக்கா?? :-))

vasu balaji said...

அழகான புகைப்படம். அருமையான கவிதை.

ஸ்ரீராம். said...

நினைவு வந்ததும் மறக்காமல் எங்களுக்கும் சொல்லுங்க..

துபாய் ராஜா said...

நன்று. வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

நினைவில் வந்து
சொல்லாமல் சென்றது...

பாப்பா படம் அருமை. :))

na.jothi said...

நல்லா இருக்கு நினைவுகளைத்தேடி

இன்றைய கவிதை said...

Please continue boss!

-Keyaar

Unknown said...

அழகான கவிதை தோழா

கலகலப்ரியா said...

இதெல்லாம் யோசிச்சு பதிவு போடலாம்னு ஆரம்பிச்சு... கடைசில இப்டியா... =)).. ரொம்ப நல்லா இருக்கு புலிகேசி...

நசரேயன் said...

என்ன எழுதன்னு எனக்கே ஞாபகம் இல்லை

thiyaa said...

ஆகா அருமை

ஈ ரா said...

அருமை

சுசி said...

ரொம்ப நல்லா இருக்கு புலவரே..

படமும் ச்சோ ச்வீட்.

பூங்குன்றன்.வே said...

நல்லா இருக்கு நண்பா.. யோசித்து பார்த்தால் உண்மை தான்.

Priya said...

நல்ல கவிதை......

புலவன் புலிகேசி said...

நன்றி பிரியமுடன்...வசந்த்,Anonymous,பிரபாகர்,Chitra

புலவன் புலிகேசி said...

நன்றி //Balavasakan said...

பிடித்த ஆசான்
கிடைத்த நண்பன்

இவை இரண்டும் எனக்கு நினைவுக்கு வருகிறது நண்பா ஏனெனில் இரண்டும் ஒரு 8 வயசுக்கு பிறகு தான் வந்தது
//

உங்கள் முதல் நண்பன் 1வயதில் கூட கிடைத்திருக்கலாம்..அது யார் என நிச்சயம் யோசித்து பாருங்கள் நினைஉவருகிறதா என்று.

புலவன் புலிகேசி said...

நன்றி சி. கருணாகரசு,இளவட்டம்,முனைவர்.இரா.குணசீலன்,பலா பட்டறை,Sivaji Sankar,சங்கர்,வெற்றி,ராமலக்ஷ்மி

புலவன் புலிகேசி said...

//பித்தனின் வாக்கு said...

//தந்தை அடித்த அடி
பள்ளி சென்ற நாள்
படித்த பாடம்

பிடித்த ஆசான்
கிடைத்த நண்பன்//
முதல் இரண்டு பாராக்களும் மிக அருமை. அவை யோசித்தால் நினைவு வருவது சிரமம். அனால் மேலே இருக்கும் வரிகள் நினைவுக்கு வரலாம். நான் முதலில் வாங்கிய அடி. பள்ளி சென்ற நாள். பிடித்த ஆசான். முதலில் கிடைத்த நண்பன் ஆகியவற்றிக்குப் பதிவுகள் இட்டுள்ளேன். நன்றி. நல்ல கவிதை. நன்றி.
//

நன்றிங்க...முதல் அடி நிச்சயம் நினைவிருக்காது...அது 1வயதுக்கு முன்னரே விழுந்திருக்கலாம்.

புலவன் புலிகேசி said...

நன்றி பேநா மூடி,divyahari,thenammailakshmanan,

//க.பாலாசி said...

//ருசித்த உணவு//

தாய்ப்பாலாகத்தான் இருக்கவேண்டும், அது மட்டும் நிச்சயம்...

நல்ல கவிதை நண்பா...
//

ம் நிச்சயம்...

புலவன் புலிகேசி said...

நன்றி ரோஸ்விக்

//ரோஸ்விக் said...

பங்காளி முதல் முதலா புடிச்ச புள்ள நினைவிருக்கா?? :-))
//

ஹி ஹி ஹி

புலவன் புலிகேசி said...

நன்றி வானம்பாடிகள்,ஸ்ரீராம்,துபாய் ராஜா,ஜோதி,இன்றைய கவிதை,sridhar,கலகலப்ரியா,நசரேயன்,தியாவின் பேனா,ஈ ரா,சுசி,பூங்குன்றன்.வே ,Priya

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

இனியாள் said...

அருமை