கடவுளை மற..மனிதனை நினை..

20 December 2009

மழை பிழையா..?

7:05:00 AM Posted by புலவன் புலிகேசி 32 comments

மழையில் நனைய ஆசைதான்
அலுவல் ஆடைமுறை அனுமதி
மறுத்தாலும்

தலைக் கவச கண்ணாடி
விலக்கி முகம் நனைத்து
மகிழ்ந்தேன்

அலுவலகம் அருகாமை சாலையில்
மழைநீர் தேங்கியிருந்தது கண்டு
கோபம்

அரசு மீது வர வேண்டியது
பகுத்து ஆராயாமையால் வந்தது
மழை மீது

32 விவாதங்கள்:

Paleo God said...

அரசு மீது வர வேண்டியது
பகுத்து ஆராயாமையால் வந்தது
மழை மீது//

ரசித்தேன்.... :)) அருமை. எளிமையான வார்த்தைகள்... வாழ்த்துக்கள்.:))

ராமலக்ஷ்மி said...

//அரசு மீது வர வேண்டியது
பகுத்து ஆராயாமையால் வந்தது
மழை மீது//

இப்படித்தாங்க ஆகிவிடுகிறது பலசமயங்களில்:)! நல்ல கவிதை. அருமை.

சுசி said...

//தலைக் கவச கண்ணாடி
விலக்கி முகம் நனைத்து
மகிழ்ந்தேன்//

ரசனை.. அனுபவிங்க.

//அரசு மீது வர வேண்டியது
பகுத்து ஆராயாமையால் வந்தது
மழை மீது//

யதார்த்தம்.

Chitra said...

அரசு மீது வர வேண்டியது
பகுத்து ஆராயாமையால் வந்தது
மழை மீது ................ரசித்து, மகிழ்ந்து, கோப பட்டு ...... புலவர்களுக்கு உள்ள குணங்கள் தான்...... அருமை....

க‌ரிச‌ல்கார‌ன் said...

//அரசு மீது வர வேண்டியது
பகுத்து ஆராயாமையால் வந்தது
மழை மீது//

நித‌ர்ச‌ன‌ வ‌ரிக‌ள்

பிரபாகர் said...

மேலே எல்லோரும் சொன்னது போல் மழையின் மீதான கோபம் அருமை...

பிரபாகர்.

balavasakan said...

இங்கும் மழை...... ஹா..ஹா..
நல்லாருக்கு நண்பா..

பூங்குன்றன்.வே said...

கவிதை நிதர்சனம்; அப்படிதான் மாறிபோய் விட்டது நண்பா நம் மனதும்!!!

என் நடை பாதையில்(ராம்) said...

கவிதை மழையில் நனஞ்சிடேன்....

செ.சரவணக்குமார் said...

கவிதையும் புகைப்படமும் அசத்தல்.

Ashok D said...

நல்லாயிருக்கு புலிகேசி :)

ஸ்ரீராம். said...

ஆஹா...நல்ல கவிதை...பரிசாகப் பிடியுங்கள் கொஞ்சம் வெய்யில்...

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லாருக்கு புலிகேசி..

ஜெட்லி... said...

எளிதாக எனக்கு புரிந்த கவிதைகளில் இதுவும் ஒன்று...
பையன் படம் சூப்பர்

கமலேஷ் said...

மிக எளிமையான அழகான கவிதை...
வாழ்த்துக்கள்..

divyahari said...

//தலைக் கவச கண்ணாடி
விலக்கி முகம் நனைத்து
மகிழ்ந்தேன்//

ரசனையான வரிகள்.. மகிழ்ச்சி என்பது பெரிய பெரிய வெற்றிகளில் இல்லை.. இது போன்ற சின்னச் சின்ன விசயங்களில் உள்ளது என்று உணர்த்துகிறது..

அன்புடன் மலிக்கா said...

யாரந்த குட்டீஸ் அழகாக இருக்கான்
நண்பனின் கவிதையைப்போல.

ஆற்றாமை அரசுடனே இருக்கட்டும் நம்ம மழைமீது வேண்டாம்...

திருவாரூர் சரவணா said...

ரொம்ப சரியா சொல்லனும்னா அரசு மேல இல்லைங்க...லட்சக்கணக்குல செலவழிச்சு வேட்பாளரா நிக்கிறவங்களை ஓட்டுப் போட்டு ஜெயிக்க வெக்கிற ஆளுங்க மேலதான் கோபப் படனும். அரசாங்கம் யாரு?...ஊருக்குள்ளே வர்றதே கிடையாது...ஒரு நாள் ரெண்டு நாள் வந்தாலும் ஊருல உள்ள அத்தனை பேர் பிழைப்பையும் கெடுத்துட்டுப் போற மோசமான ஆளுங்க கையில இருக்குறதுதான அரசாங்கம்?

ஆனா ஒன்னு பாஸ். இப்ப நாம மழையில நனைய நினைச்சாலும் பர்ஸ், செல் போன் நனைஞ்சிடுமேன்னுதான் கவலைப்படவேண்டியிருக்கு. நாம நனைஞ்ச ஒன்னரை ரூபா மாத்திரையில கூட சில நேரம் சரிசெஞ்சிடலாம். பர்ஸ், போன் அப்படின்னா எத்தனை ஆயிரம் காலியாகுமோன்னு பயமால்ல இருக்கு?

தமிழ் உதயம் said...

அரசு மீது வர வேண்டிய கோபம் மழை மீது வரும்... ]]]]]]]]]]] மழை பெய்யா விட்டால் மழை மீது வர வேண்டிய கோபம் அரசு மீது வரும்

விஜய் said...

நிதர்சன வலி

விஜய்

இளவட்டம் said...

நல்லாயிருக்கு நண்பரே.

ஹேமா said...

புலவே உங்கள் பதிவுகளில் உங்கள் குணம் நல்லாவே தெரிது.
அவ்ளோ கோவம்.

வெற்றி said...

//மழையில் நனைய ஆசைதான்
அலுவல் ஆடைமுறை அனுமதி
மறுத்தாலும்//

எனக்கும் இதே பிரச்னை தான் தல...

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் கோபம் திசை மாறினாலும்
கவிதை சரியான திசையில் தம் கருத்தை விளக்கியுள்ளது..

அழகு!!
அருமை!!

க.பாலாசி said...

நல்ல சிந்தனையுள்ள கவிதை நண்பா...ரசிக்கிறேன்... தொடருங்கள்...இம்மாதிரியான இலக்கியப்பயணத்தினை...

நசரேயன் said...

கோபம் நியாயம்தான்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

யதார்த்தம்.:-))))

Thenammai Lakshmanan said...

அழகான கவிதை புலிகேசி
நல்லா இருக்கு

ரோஸ்விக் said...

புலவனுக்கு பாட்டெழுத சொல்லியா கொடுக்கணும்.
ஆனா, பழங்காலப் புலவர்கள் அரசை புகழ்வார்கள். ஆனால் என் நண்பன் நீயோ, அரசை எதிர்த்து.... :-)
அடிக்கடி கோபப்படுங்க அவய்ங்க மேல. :-))

vasu balaji said...

தேவையான கோபம். கவிதை அழகு

அரங்கப்பெருமாள் said...

சரியாச் சொன்னீங்க...

இனியாள் said...

புகைப்படம் உயிரோட்டமாய் இருக்கு....