இளமை விகடனில் சிறந்த பதிவுகள் பகுதியில்
இது ஒரு அவசர யுகம். எப்படி நான் முந்தி சென்று முன்னேறுவது என்ற எண்ணம் தான் பலரிடம் காணப்படுகிறது. அவன் முந்துவதால் அடுத்தவன் பாதிக்கப் படுவது பற்றி சிந்தித்து கூடப் பார்ப்பதில்லை. சில சமயங்களில் இத்தகைய முன்னேற்றம் அவனறியாமல் சில பல உயிர்களை கூட பலியாக்கியிருக்கும்.
நம்மில் பலர் அலுவலகம் செல்வதற்கு இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் பயன் படுத்துகிறோம். அலுவலகத்திற்கு செல்ல 90% பேர் அவசரமாகவும், வேகமாகவும், பல சமயங்களில் சாலைவிதிகள் மறந்து கூட செல்கிறோம். இங்கு அலுவலகத்தை அடையும் சுயநலம் மட்டுமே உள்ளது. "அவசர ஊர்தி" இது தாமதமானால் என்ன நடக்கும்? பெரும்பாலும் உயிர் போகும். நாம் அலுவலகத்துக்கு தாமதமாக புறப்பட்டு சுயநலமாக செயல்படுவதால் இது போன்று பல உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய இத்தகைய அலட்சியத்தால் போக்கு வரத்து நெறிசல் ஏற்பட்டு அந்த "அவசர ஊர்தி" சரியான நேரத்திற்கு மருத்துவமனை செல்ல இயலாமல் நமக்கு பரிட்சயமில்லாத நபர் உயிரிழக்க நேரிடுகிறது. ஒரு நாள் இத்தகைய நிலை நமக்கும் நேரலாம். போக்கு வரத்து நெறிசல் இருக்கும் என நமக்கு முன்னரே தெரிந்திருந்தாலும் காலத்தை கணக்கிட்டு முன்னரே புறப்படுவதில்லை. ஒருவரை ஒருவர் முந்த முயன்று ஒருவரும் செல்ல இயலாமல் சாலையை அடைத்து விடுகிறோம்.
உயிரின் மதிப்பு நம் குடும்பத்தில் யாராவது பாதிக்கப் பட்டால்தான் தெரிகிறது. அடுத்தவனுக்கு நேர்ந்தால் அது ஒரு உயிராகத் தெரிவதில்லை. வெறும் செய்தி அவ்வளவுதான். இந்த போக்குவரத்து நெறிசலின் காரணகர்த்தாக்களில் நம்மை போன்றார்களை விட பெரும்பங்கு வகிபவர்கள் மூன்று சக்கர வாகன (ஆட்டோ) ஓட்டிகள்தான். இவர்களில் பலருக்கு சாலைவிதி என்றால் என்னவென்றே தெரியாது போல.
அடுத்து நம் அரசியல்வியாதிகள். இவர்கள் சாலையை கடந்து செல்ல பொது மக்கள் மட்டுமல்லாமல் இத்தகைய "அவசர ஊர்திகளும்" நிறுத்தப் படும். இவனுங்களுக்கெல்லாம் உயிர் மேல அவ்வளவு ஆசை. அடுத்தவன் உயிர் என்றால் அது வெறும் தூசு. இன்னொரு தரத்தினரும் இவ்வுலகில் காண முடிகிறது.
இவர்கள் எப்படி என்றால் இத்தகைய அவசர ஊர்திகளை பின் தொடர்பவர்கள். அதன் பின்னே சென்றால் விரைவாக இலக்கை அடைந்து விடலாம் என்ற சுயநலம். இன்னொரு ரகம் என்னவென்றால் இந்த "அவசர ஊர்தியை" தவறாக பயன் படுத்தி போக்குவரத்து நெறிசலில் இருந்து தப்பிக்கும் "அவசர ஊர்தி" ஓட்டுனர்கள். இது போன்ற ஓட்டுனர்களால் பொது மக்களுக்கு அவசர ஊர்தி எழுப்பும் ஒலி உண்மையா? பொய்யா? என்ற குழப்பத்தால் கூட வழி விடாமல் செல்கின்றனர்.
இத்தனை காரணங்களை வைத்து கொண்டு மற்றவரை குற்றம் சொல்லாமல் தனி மனிதனாக நான் என்னை திருத்தி கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் அலுவலகஹ்திற்கு 1 மணி நேரம் முன்னதாகவே புறப்படுகிறேன். அதனால் சாலை விதிப்படியும் அவசரமில்லாமல் சரியான நேரத்திற்கும் அலுவலகம் செல்ல முடிகிறது. அவசர ஊர்தியின் தாமதத்திற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்ற மகிழ்ச்சியும் இருக்கிறது.
இது போல் மனிதநேயம் கொண்டு ஒவ்வொரு தனி மனிதனும் முடிவெடுத்தால் நிச்சயம் பல உயிர்கள் காப்பாற்ற படுவதோடு அவரவர் வேலைகளும் சிரமமின்றி நடந்தேறும். "அவசர ஊர்தியில்" உயிருக்கு போராடி கொண்டிருக்கும் முகமறியா நண்பருக்கு இது நம்மால் செய்ய முடிந்த உதவியாக கூட இருக்கும். தனி மனிதக் கூட்டம் தான் சமுதாயம்.

33 விவாதங்கள்:
##அவசர ஊர்திகளை பின் தொடர்பவர்கள். அதன் பின்னே சென்றால் விரைவாக இலக்கை அடைந்து விடலாம் என்ற சுயநலம்.##
இப்படி எல்லாம் நடக்குதா....
அடப்பாவி ......
எங்கும் எதிலும் சுயநலம்
சுய நலத்துல சுன்னாம்பு அடிக்க...
//அவசர ஊர்தியின் தாமதத்திற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்ற மகிழ்ச்சியும் இருக்கிறது.//
மகிழ்ச்சி நண்பா...
//இவர்கள் எப்படி என்றால் இத்தகைய அவசர ஊர்திகளை பின் தொடர்பவர்கள். அதன் பின்னே சென்றால் விரைவாக இலக்கை அடைந்து விடலாம் என்ற சுயநலம்.//
கரெக்ட் புலிகேசி....
நான் கூட பல வாட்டி இதை வாட்ச் பண்ணிருக்கேன்
//உயிரின் மதிப்பு நம் குடும்பத்தில் யாராவது பாதிக்கப் பட்டால்தான் தெரிகிறது. அடுத்தவனுக்கு நேர்ந்தால் அது ஒரு உயிராகத் தெரிவதில்லை. வெறும் செய்தி அவ்வளவுதான்.//
உண்மை புலிகேசி
நல்ல பதிவு
//தனி மனிதக் கூட்டம் தான் சமுதாயம்.//தேவையான பதிவு..:)
நல்ல பதிவு புலிகேசி.
சுயநல மனிதர்கள் மாற வேண்டும்.
//இவர்கள் எப்படி என்றால் இத்தகைய அவசர ஊர்திகளை பின் தொடர்பவர்கள். அதன் பின்னே சென்றால் விரைவாக இலக்கை அடைந்து விடலாம் என்ற சுயநலம். //
எனக்குத் தெரிந்து சென்னையில் மட்டும்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள்.மற்ற ஊர்களில் நான் பார்த்ததில்லை.
நல்ல பதிவுதான். 2 நாள் டைம். அடுத்த கட்டத்துக்கு போங்க. இல்லீன்னா வட போச்சேன்னு வருத்தப் படக்கூடாது. நான் எழுதிருவேன்...எழுதிருவேன்..:))
//தனி மனிதக் கூட்டம் தான் சமுதாயம்.//
எல்லோரும் உணர வேண்டும். நல்ல பதிவு.
//ஒருவரை ஒருவர் முந்த முயன்று ஒருவரும் செல்ல இயலாமல் சாலையை அடைத்து விடுகிறோம்.//
உண்மைதான் நண்பா...நமக்குள்ளும் எத்தனைவிதமான குணங்கள்...
//அவசர ஊர்தியை" தவறாக பயன் படுத்தி போக்குவரத்து நெறிசலில் இருந்து தப்பிக்கும் "அவசர ஊர்தி" ஓட்டுனர்கள்//
பெரும்பாலும் இப்படி இருப்பதில்லை. ஒருசிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நல்ல இடுகை நண்பா..
//அலுவலகஹ்திற்கு 1 மணி நேரம் முன்னதாகவே புறப்படுகிறேன். அதனால் சாலை விதிப்படியும் அவசரமில்லாமல் சரியான நேரத்திற்கும் அலுவலகம் செல்ல முடிகிறது. அவசர ஊர்தியின் தாமதத்திற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்ற மகிழ்ச்சியும் இருக்கிறது.//
பாராட்டுக்கள்..,
சரியாகச்சொன்னீர்கள் தல...
நமது பத்து நிமிட தாமதம் அவர்களை பல வருடங்கள் வாழ வைப்பதை பலர் உணர்வதில்லை...
//"அவசர ஊர்தியில்" உயிருக்கு போராடி கொண்டிருக்கும் முகமறியா நண்பருக்கு இது நம்மால் செய்ய முடிந்த உதவியாக கூட இருக்கும். தனி மனிதக் கூட்டம்தான் சமுதாயம்.//
சரியா சொன்னீங்க தல.நல்ல பதிவும்,நாம் அனைவரும் பின்பற்ற வேண்டியதும்..
நல்ல பதிவு நண்பா..
ஒரு சினிமாவில் அவசர ஊர்தி ஒன்று கடக்கும் போது அந்த படத்தின் நாயகி அதில் போகும் நபரை காப்பாற்ற வேண்டிக் கொள்வாள்.. அந்த நபர் அவளுக்கு சொந்தமோ பந்தமோ கிடையாது.. நல்லது எங்க இருந்தாலும் எடுத்துக்கணும்.. அதன்பின் என்னை கடக்கும் அவசர ஊர்தியில் உள்ள நபர் பிழைக்க நானும் பிரார்த்தனை செய்வேன்.. கடவுள் காப்பற்றுவாரோ என்னவோ... சிலரின் நம்பிக்கை அவரை காப்பாற்றும்.
அவசர ஊர்தி ஓட்டுனர்கள் சும்மா போகும்போது கூட சைரன் அலற விட்டுக் கொண்டு போவதாக நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்...எப்பொழுது நோயாளியுடன் போகிறது எப்போது சும்மா போகிறது என்பதைக் கண்டு பிடிக்க முடியாதே...
நல்ல சிந்தனை நண்பரே...
உயிரின் மதிப்பு நம் குடும்பத்தில் யாராவது பாதிக்கப் பட்டால்தான் தெரிகிறது.//
உண்மைதான் நண்பரே..
ஆக்கபூர்வமான படைப்பு
வாழ்த்துக்கள்
மீண்டும் சமூக விழிப்போடு நல்லதொரு பதிவு புலவரே.
சரிதான் புலிகேசி.இது போல் தனி மனித விழிப்புணர்வு எல்லோருக்கும் இருந்தால்...(முன்னதாய் கிளம்புதல்) அப்புறம் விபத்தேது...
நல்ல இடுகை.
பிரபாகர்.
நல்ல பகிர்வு. நல்ல சிந்தனை.
இதெல்லாம் விட, ஆம்புலன்ஸ் விரையும் போது அதைப் பின் தொடர்ந்து வேக வேகமாக விரையும் வண்டியோட்டிகள்.... ம்ச்.... இதெல்லாம் இங்கு (சென்னையில்) ரொம்ப சகஜம் ஆகி விட்டது..
-வித்யா
உங்களைப் போன்றே நானும் அவ்வப்போது மகிழ்ந்து கொள்வதோடு சரி.
நல்ல சமூக பதிவு.
தேவையான பதிவு புலிகேசி...
உயிரின் மதிப்பு நம் குடும்பத்தில் யாராவது பாதிக்கப் பட்டால்தான் தெரிகிறது. அடுத்தவனுக்கு நேர்ந்தால் அதுஒரு உயிராகத் தெரிவதில்லை. வெறும் செய்தி அவ்வளவுதான். ................. வெட்கப்பட வேண்டிய உண்மை.
நீங்களும் சொல்வதை கடைப்பிடித்து இருப்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம்.
உயிரின் மதிப்பு யாருக்குத்தான் தெரிகிறது.??????????????????????????
அருமையான, காலத்திற்கேற்ற , ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டியதை சொல்லும் பதிவு
நன்று.நன்றி.
வாழ்க வளமுடன்.
நன்றி நண்பரே!!!
//மற்றவரை குற்றம் சொல்லாமல் தனி மனிதனாக நான் என்னை திருத்தி கொண்டிருக்கிறேன்//
அருமையா சொன்னீங்க புலவரே
அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்...
Post a Comment