கடவுளை மற..மனிதனை நினை..

11 December 2009

டரியல் (02-திசம்பர்-09)

11:28:00 PM Posted by புலவன் புலிகேசி 23 comments
சென்ற வாரம் அலுவலகப் பணி பலமாக இருந்ததால் டரியல் எழுத முடியவில்லை. அலுவலகம் அடையாறிலிருந்து எஸ்.ஆர்.பி டூல்ஸ் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகனம் 8 கி.மீ அதிகமாக பயணிக்கிறது. எரிபொருள் செலவும் இனி வரும் மாதச் செலவுகளில் அதிகமாகும் (அவ்வ்வ்வ்!!).

------------------------

முந்தைய தினம் அலுவல் முடித்து வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்த போது டைடல் பார்க் அருகில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் திடீரென சலையில் உடைந்திருந்த பாதாளசாக்கடையில் வாகனம் செருகி கீழே விழுந்தனர். நல்ல வேலை அவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்ததால் தப்பித்தனர். சாலையை பழுது பார்க்க மாட்டோம் சாக்கடையை அடைக்க மாட்டோம் என்பதால் தான் அரசாங்கம் தலைக்கவசத்தை கட்டாயமாக்கியது போல. இது மட்டும் இல்லீங்க சென்னையின் முக்கிய இடமான ..டி அருகில் உள்ள சாலையின் நிலை கிராமச்சாலைகளை கூட தோற்கடித்து விடும்.

------------------------

அரசு தன் சாதனைகளாக சொல்லிக் கொள்ளும் பாலம் கட்டுதல் பணி. உண்மையில் போக்குவரத்துக்கு நல்லதுதான். ஆனால் அதை திறந்து வைக்க அவர்கள் செய்யும் அலும்பு இருக்கிறதே. உண்மையில் பொது மக்களுக்காக மட்டும் செயல் படும் சமூக சேவகனாக இருந்தால் அதை திறந்து வைக்க தான் தான் வர வேண்டும் என எண்ணியிருக்க மாட்டார். தான் வந்தால் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப் படுவர் என்ற எண்ணம் நிச்சயம் வந்திருக்கும். தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்பவரிடம் இதை எல்லாம் எதிர் பார்க்க முடியாதுதான்.

------------------------

சென்ற வாரம் எனக்கு தியா மற்றும் பித்தனின் வாக்கு ஆகியோரிடமிருந்து ஒரு விருது கிடைத்துள்ளது.விருது வாங்கி நாமளே வச்சிக் கிட்டா எப்புடி??? இதோ
இந்த விருதை இவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1) கவிதை மழை பொழியும் ஹேமா

2) ரௌத்திரம் பழகும் கலகலப்ரியா

3) நகைச்சுவை மன்னர் வானம்பாடிகள்

4) குழந்தையாகக் குமுறும் க.பாலாசி

5) டீ டைம் நண்பர் அகல் விளக்கு

6) கல்லூரியில் இணைந்த நண்பர்களின் பார்த்ததும் படித்ததும்

7) சிறகுகள் பாலவாசகன்

------------------------

சென்ற வாரம் விட்டுப் போனதால் இந்த வாரம் இரண்டு பேரை டரியலாக்கலாம் என்றிருக்கிறேன்.

1) நண்பர் பாக்தாத்திலிருந்து பூங்குன்றன் அவர்களின் “LOVE YOU DADDY- குட்டி கதை.” பாசத்தையும் கோபத்தையும் அழகாக விளக்கியிருக்கிறார்.

2) நம்ம வால் பையனின் “சோதிடமும், சந்திரனும்!”. தல என்னமா ஆராய்ச்சி பன்றாரு. நெறைய பேருக்கு புரிய வைக்க வேண்டியிருக்கு..

------------------------

23 விவாதங்கள்:

vasu balaji said...

டரியல் வழமைபோல் நன்று. பரிசுக்கு நன்றி! (நகைச்சுவை மன்னர் போனஸா ஹாஹாஹா.)

நசரேயன் said...

vaalththukkal

ப்ரியமுடன் வசந்த் said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..

சங்கர் said...

விருதுக்கு நன்றி ஐயா

கலகலப்ரியா said...

ரொம்ப ரொம்ப நன்றி புலிகேசி...

Chitra said...

சாலையை பழுது பார்க்க மாட்டோம் சாக்கடையை அடைக்க மாட்டோம் என்பதால் தான் அரசாங்கம் தலைக்கவசத்தை கட்டாயமாக்கியது போல. .................ஹா, ஹா, ஹா........


விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்களுக்கும்.

பூங்குன்றன்.வே said...

//வாகனம் 8 கி.மீ அதிகமாக பயணிக்கிறது. எரிபொருள் செலவும் இனி வரும் மாதச் செலவுகளில் அதிகமாகும்//

பாவம் தான் பாஸ் நீங்க.

//சாலையை பழுது பார்க்க மாட்டோம் சாக்கடையை அடைக்க மாட்டோம் என்பதால் தான் அரசாங்கம் தலைக்கவசத்தை கட்டாயமாக்கியது போல.//

சாட்டையடி !

//தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்பவரிடம் இதை எல்லாம் எதிர் பார்க்க முடியாதுதான்.//

:))))

விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த வாரம் என்னை டரியலாக்கிய நண்பர் புலிகேசிக்கு நன்றி :)

malarvizhi said...

vaazhthukkal

balavasakan said...

ரொம்ப நன்றி நண்பா...

ராமலக்ஷ்மி said...

விருது பெற்ற உங்களுக்கும் மற்றவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

Subankan said...

டரியல் கலக்கல் நண்பா

விருது பெற்ற உங்களுக்கும் மற்றவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

thiyaa said...

அருமை ,கலக்கல்
விருது பெற்ற உங்களுக்கும் மற்றவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

//தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்பவரிடம் இதை எல்லாம் எதிர் பார்க்க முடியாதுதான்.//

இது ரைட்டு...

விருதை எனக்கும் பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி நண்பா....

ஜெட்லி... said...

நன்றி....

ஈரோடு கதிர் said...

மக்கா வாழ்த்துகள்

ரோஸ்விக் said...

//உண்மையில் பொது மக்களுக்காக மட்டும் செயல் படும் சமூக சேவகனாக இருந்தால் அதை திறந்து வைக்க தான் தான் வர வேண்டும் என எண்ணியிருக்க மாட்டார். //

போங்கப்பூ போங்க.... நாங்க என்ன சமூக சேவை செய்யவா வந்துருக்கம்? எங்களுக்கும் ஒரு விளம்பரம் வேணாம்?? நாங்க இது மாதிரி விளம்பரத்துக்காக கட்டாத பாலத்தை ஒரு தடவையும்.... கட்டின அப்புறம் ஒரு தடவையும் தொறந்து வச்சிருக்கோம்...

அதான் நீங்களே சொல்லீடிங்களே! "தனக்குத் தானே விருது கொடுத்துக் கொள்பவரிடம் இதை எல்லாம் எதிர் பார்க்க முடியாதுதான்"

....ம்ம்ம்க்கூம்

Unknown said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...,

பிரபாகர் said...

நகைச்சுவை சக்ரவர்த்திதான் பொறுத்தமாய் இருக்கும் நண்பா...

அறிமுகப்படுத்திய எல்லோரும் என்னால் தொடரப்படுகிறவர்கள் என்பதில் அதீத சந்தோஷம்...

பிரபாகர்.

malarvizhi said...

ஓஹோ !!!!!!! அப்படியா !!!!! நமக்கும் மயிலாடுதுறை நெருங்கிய உறவுதான்..... போனவாரம் கூட போயிருந்தேன்.

அகல்விளக்கு said...

தனக்குத்தானே விருது வழங்காமல், பெற்ற விருதைக்கூட பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி தல...

:-)))

ஹேமா said...

புலவரே அள்ளி எடுத்துப் போகிறேன் என் விருதை.நன்றியும்கூட.

விஜய் said...

டரியல் வாழ்த்துக்கள்

விஜய்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

விருதுக்கு வாழ்த்துகள்.