கடவுளை மற..மனிதனை நினை..

26 November 2009

புகையும் காதல்....

9:08:00 AM Posted by புலவன் புலிகேசி 34 comments
2010 சனவரி 13 சென்னை எழும்பூர் புகைவண்டி நிலையம்:. மயிலாடுதுறைக்கு செல்லும் வண்டி 8வது நடைமேடையில் இருந்து 10 மணி 30நிமிடத்திற்கு புறப்படும் என்ற அறிவிப்பைக்.கேட்டு கொண்டே ஆனந்த விகடன் வாங்கிக கொண்டிருந்தான் வேலு.

வேலு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளன். பொங்கல் திருநாள் விடுமுறையுடன் சேர்த்து தனக்கு பெண் பார்க்கும் ஏற்பாட்டிற்காகவும் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு செல்வதற்கு ஆயத்தமாக எக்மோர் நிலையத்திற்கு வந்து சேர்ந்தான். மயிலாடுதுறைக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அகலப்பாதை பணிகள் முடிந்து இன்றுதான் முதல் முறை புகைவண்டி இயக்கப்படுகிறது.

9 மணி 30 நிமிடம்: வண்டியில் ஏறி தனது இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்து விகடனை படிக்கத் தொடங்கினான். வெளியில் ஒட்டப்பட்டிருந்த பயணிகள் இருக்கை விபரத்தை பார்த்து கொண்டிருந்த 4 பெண்கள் தனியாக நின்று கொண்டிருந்த ஐந்தாமவளிடம் "ஏய் சந்தியா அந்த 6வது இருக்கை(சீட்) ஒரு பையன்டி" என்றதும் "இதே வேலையா போச்சு உங்களுக்கு வாங்கடி உள்ள" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் சந்தியா.

தனது இருக்கையின் எதிரே அமர்ந்திருந்த வேலுவுக்கு வணக்கம் (ஹாய்) சொல்லிவிட்டு அமர்ந்தாள் சந்தியா.பின்னால் வந்த தோழிகள் "என்ன சந்தியா எங்களுக்கு முன்னாடியே வந்து மச்சான கவுத்துட்ட போல" என்று சொல்லி கொண்டே வந்து இருக்கைகளில் அமர்ந்தனர். இந்த ஐந்துப் பெண்களும் சத்தியபாமா கல்லூரியில் மென்பொருள் பொறியியல் இறுதியாண்டு மாணவிகள்.

அதில் ஒருத்தி வேலுவிடம் "மச்சான் எங்க போறீங்க" என்றாள். விகடனை விலக்கி மயிலாடுதுறை என்றான். "ஏய் சந்தியா நீதான் முதல்ல ஏறுன கடைசி வரைக்கும் மச்சான் கூட போகப் போற! வண்டியில சொன்னன்டி" என்றவளை சந்தியா அதட்டினாள். சந்தியாவுக்கு மயிலாடுதுறை, மற்ற 4 பேரும் செல்லும் வழியில் உள்ள சிதம்பரத்தில் இறங்கி விடுவர்.

அனைவரும் கேலி செய்த போதும் புன்னகையயும் வெட்கத்தையும் மட்டும் பதிலாக அளித்து விட்டு அமைதியாக .ஆர். ரகுமான் இசையை அலைபேசி உதவியில் கேட்டு கொண்டிருந்த சந்தியாவின் மவுனம் அவனுக்குப் பிடித்திருந்தது. முதல் பார்வையில் காதலை சொன்னவர்கள் குறைவுதான். வேலுவும் அந்த ரகம் தான்.

பயணத்தின் போது வைத்திருந்த உணவு பண்டத்தை பகிர்ந்து கொண்டிருந்த சந்தியா "நீங்களும் எடுத்துக்குங்க" என்று வேலுவிடம் சொன்னாள். தோழிகள் மீண்டும் இருவரையும் இணைத்து கேலி செய்ய பயணம் கேலி, கிண்டல் கொஞ்சம் உறக்கத்துடன் சென்று கொண்டிருக்க சிதம்பரம் வந்தது. வேலுவிடமும் சந்தியாவிடமும் கேலி கிண்டலுடன் தோழிகள் விடை பெற்றனர்.

சிதம்பரம் தாண்டிய பின் சந்தியா "என்னுடைய தோழிகள் இவ்வளவு கேலி செய்த போதும் பொறுமையாகவும், மவுனமாகவும் அவர்களுக்கு பதில் சொன்னீங்களே...உங்களுக்கு கோபமே வராதா?" என்றாள். அதற்கு புன்னகையை பதிலாக அளித்து விட்டு இவன் .ஆர்.ரகுமான் (இப்போது ஆனந்த விகடன் அவள் கையில்) பாடல் கேட்க ஆரம்பித்தான். அவனின் அந்த பொறுமை அவளுக்கு பிடித்திருந்தது. உண்மையில் சொன்னால் அவளும் வேலு ரகம் தான்.

ஊர் வந்ததும் இருவரும் இறங்கி காதலை சொல்லாமல் புகைவண்டி சினேகிதர்களாக பிரிந்தனர். பொங்கல் திருநாள் முடிந்து மூன்றாவது நாள் வேலுவுக்கு பெண் பார்க்கும் படலமாக பெண் வீட்டிற்கு சென்றனர். கையில் காபியுடன் வந்த பெண்ணைப் பார்த்து விட்டு அம்மாவிடம் "பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றான்.

இருவரும் வீட்டின் பின்புறமிருக்கும் கிணற்றடியில், வேலு அவளிடம் "சந்தியா நான் உன்னை காதலிக்கிறேன்" என்று தன் புகைவண்டி காதலை சொன்னதும் சந்தியா வெட்கத்தை சம்மதமாக கொடுத்து விட்டு உள்ளே ஓடினாள்.

பி.கு: இந்த சிறுகதையை “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.

34 விவாதங்கள்:

முனைவர் இரா.குணசீலன் said...

கதை மிகவும் நன்றாகவுள்ளது நண்பரே காதலை எத்தனை முறை சொன்னாலும் சுவை குன்றிப்போவதில்லை.

காதலை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...

முனைவர் இரா.குணசீலன் said...

2010 சனவரி 13

வித்யாசமான தொடக்கம்...

தொடக்கமே இந்தக்கதையைத் தொடர்ந்து படிக்கத் தூண்டுவதாக உள்ளது..

வெண்ணிற இரவுகள்....! said...

அருமையான கதை புலிகேசி ....எப்போ காதல் கதை எழுத ஆரம்பிச்சீங்க

vasu balaji said...

நல்லாருக்கு. பரிசு பெற வாழ்த்துகள். தமிழ்மணம் வாக்கு வீட்டில்தான் போடமுடியும். டேமேஜருக்கு கட்டைவிரல் பிடிக்காது போல.

ரோஸ்விக் said...

கதை மிக அருமை...
இது உங்க சொந்தக்கதை இல்லையே :-)) நீங்க எங்கயோ மாட்டுன மாதிரி இருக்குது....அம்மணி சௌக்கியமா??
கதியா இருந்தா நல்ல கற்பனை...உண்மையா இருந்தா நல்ல அனுபவம்...எதா இருந்தாலும் சரி...வாழ்த்துக்கள்.

தேவன் மாயம் said...

உண்மையில் நல்ல கதை!!

என் நடை பாதையில்(ராம்) said...

அது சரி! யார் அந்த சத்தியபாமா கல்லூரியில் மென்பொருள் பொறியியல் இறுதியாண்டு மாணவி?

அகல்விளக்கு said...

அருமை நண்பா...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இளவட்டம் said...

நல்லா இருக்கு சார்

க.பாலாசி said...

கதை நன்றாக இருக்கிறது நண்பா....நம்ம ஊரு பொண்ணுங்க இவ்வளவு மாடர்னா ஆயிட்டாங்களா? (மச்சான்னு கூப்பிடுற அளவுக்கு). சனவரி 13க்குள்ள நம்ம ஊருக்கு ரயில் விட்டுடுவாங்களா?

பெயர், கதைகளம்...இதெல்லாம் பார்க்கும்போது உண்மையோன்னு தோணுதே நண்பா...(அப்படியா?)

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்....

balavasakan said...

அருமை நண்பா.... எனக்கும் கதை எழுத ஆவலாய் உள்ளது பார்ப்போம்

ஜெட்லி... said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா

ஊடகன் said...

புதுமாதிரியான பழைய கதை.............

போட்டியில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.............

ஸ்ரீராம். said...

இருபது வருஷத்துக்கு முன்னாடி வந்த தமிழ்ப் படம் பார்த்த உணர்வு..!

Unknown said...

அட நல்லாதான்ப்பா இருக்கு interestinga...

புலவன் புலிகேசி said...

நன்றி முனைவர்.இரா.குணசீலன்,வெண்ணிற இரவுகள்

//வெண்ணிற இரவுகள்....! said...

அருமையான கதை புலிகேசி ....எப்போ காதல் கதை எழுத ஆரம்பிச்சீங்க//

இதுதான் முதல் தல

புலவன் புலிகேசி said...

நன்றி வானம்பாடிகள் ஐயா,ரோஸ்விக்

//ரோஸ்விக் said...

கதை மிக அருமை...
இது உங்க சொந்தக்கதை இல்லையே :-)) நீங்க எங்கயோ மாட்டுன மாதிரி இருக்குது....அம்மணி சௌக்கியமா??
கதியா இருந்தா நல்ல கற்பனை...உண்மையா இருந்தா நல்ல அனுபவம்...எதா இருந்தாலும் சரி...வாழ்த்துக்கள்.
//

நன்றி தல இது ஒரு கற்பனை தான். சந்தேகம் வேண்டாம்.

புலவன் புலிகேசி said...

நன்றி தேவன் மாயம்,என் நடை பாதையில்(ராம்)

//என் நடை பாதையில்(ராம்) said...

அது சரி! யார் அந்த சத்தியபாமா கல்லூரியில் மென்பொருள் பொறியியல் இறுதியாண்டு மாணவி?
//

யாராவது இருப்பாங்க தல...எதிர்காலத்துல வரலாம்

புலவன் புலிகேசி said...

நன்றி அகல்விளக்கு,இளவட்டம்,க.பாலாசி

//க.பாலாசி said...

கதை நன்றாக இருக்கிறது நண்பா....நம்ம ஊரு பொண்ணுங்க இவ்வளவு மாடர்னா ஆயிட்டாங்களா? (மச்சான்னு கூப்பிடுற அளவுக்கு). சனவரி 13க்குள்ள நம்ம ஊருக்கு ரயில் விட்டுடுவாங்களா?//

விட்டுருவாங்கன்னு ஒரு ஆசைதான்...

//பெயர், கதைகளம்...இதெல்லாம் பார்க்கும்போது உண்மையோன்னு தோணுதே நண்பா...(அப்படியா?)
//

அய்யய்யோ இன்னும் அந்த தகுதியெல்லாம் எனக்கு வரல தல. வயதிருந்தாலும் ஒரு பெண்ணை வைத்து காப்பாற்றும் வசதி என்ற தகுதிக்காக காதலில் விழாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...

புலவன் புலிகேசி said...

நன்றி Balavasakan

// அருமை நண்பா.... எனக்கும் கதை எழுத ஆவலாய் உள்ளது பார்ப்போம்
//

எழுதுங்க தல

புலவன் புலிகேசி said...

நன்றி ஜெட்லி,ஊடகன்,ஸ்ரீராம்,veera

க.பாலாசி said...

//புலவன் புலிகேசி said...
அய்யய்யோ இன்னும் அந்த தகுதியெல்லாம் எனக்கு வரல தல. வயதிருந்தாலும் ஒரு பெண்ணை வைத்து காப்பாற்றும் வசதி என்ற தகுதிக்காக காதலில் விழாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...//

நல்லது.... வசதியும், தகுதியும் நிறையும் போது எல்லாம் தானே வரும். வரட்டும்...

Anonymous said...

Really short and sweet.Don't mistake me i don't have Tamil font in my machine. when i read this story i really impressed by the way you written.this story was expressed as a movie.i'm very honor to wish you all the best. please keep writing keep on writing. it will give a nice experience to us. thanks

Sathees said...

Really short and sweet.Don't mistake me i don't have Tamil font in my machine. when i read this story i really impressed by the way you written.this story was expressed as a movie.i'm very honor to wish you all the best. please keep writing keep on writing. it will give a nice experience to us. thanks

லெமூரியன்... said...

அருமையா இருந்துச்சுங்க கதை....தொடக்கம் முதல் இறுதி வரை....மிகவும் ரசித்தேன் நண்பா..!

அன்புடன் நான் said...

கதை நல்லாயிருந்தது...வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இன்றைய கவிதை said...

எழுத்து மெருகேறி வருகிறது, வளர்கிறது!

வாழ்த்துக்கள்!!

-கேயார்

செ.சரவணக்குமார் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா.

thiyaa said...

வித்யாசமான தொடக்கம்...
நல்லாயிருக்குது

விஜய் said...

போட்டியில் வென்று வர வாழ்த்துகிறேன்

விஜய்

மணிஜி said...

எதிர்பார்த்த முடிவு..இருந்தாலும் உரையாடலும்,போக்கும் நன்றாக இருந்தது.பரிசு பெற வாழ்த்துக்கள் நண்பரே..

Anonymous said...

"கொஞ்சம் உறக்கத்துடன் சென்று கொண்டிருக்க சிதம்பரம் வந்தது. வேலுவிடமும் சந்தியாவிடமும் கேலி கிண்டலுடன் தோழிகள் விடை பெற்றனர்.

கடலூரை தாண்டிய பின் சந்தியா "என்னுடைய தோழிகள் இவ்வளவு கேலி செய்த போதும் பொறுமையாகவும், மவுனமாகவும் அவர்களுக்கு பதில் சொன்னீங்களே...உங்களுக்கு கோபமே வராதா?"


1 சிதம்பரம் வந்தது

2.கடலூரை தாண்டிய பின்

Puli I can't understand How it possible after the girl friend land Cuddalore or Cidambaram ??

so clear the mistake

yours
23m Pulikesi

புலவன் புலிகேசி said...

//2.கடலூரை தாண்டிய பின்

Puli I can't understand How it possible after the girl friend land Cuddalore or Cidambaram ??
//

thanks thala i wrongly updated that. i will correct it..

Veliyoorkaran said...

nan kooda kirukkan chancea miss panitaanu nenaichen...nalla irukkuthu oi...