கடவுளை மற..மனிதனை நினை..

11 November 2009

சென்னையில் மழை மனிதர்கள்..

9:00:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments
  சென்னையில் மழை என்றால் உண்மையில் மகிழ்ச்சியடைய வேண்டிய நாம் பொறுப்பற்ற அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

  2008 மழையை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். 4 நாட்கள் அலுவலகங்களும், கால வரையின்றி பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டது, அரங்கநாதன் கீழ்பாலத்தில் பேருந்து மூழ்கியது, மழை நீரில் மிதந்த குடிசைகள், கையில் பணமிருந்தும் உணவுக்காக அலைந்த என்னைப் போன்ற பேச்சிலர்ஸ், பிச்சைக் கிடைக்காமல் பட்டினியாயிருந்த பிச்சைக்காரர்கள், கொஞ்சம் மழை பெய்தாலும் மிதக்கும் வியாசர்பாடி, மழைக்கு பலியானோர் இவை அனைத்தும்  மழை என்றதும் கண்முன் வந்து போகிறது (ஒவ்வொரு ஆண்டுமே).

  வெயில் காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யாமல் "மழையால் உயிரிழந்தவர்களுக்கு மழையில் இறங்கி உதவி செய்த கலக்டர் மற்றும் அதிகாரிகள்" என ஊடகங்களில் பெயர் வாங்கும் கலக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்.

  மழையில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கும், குடும்ப அட்டை வைத்திருப்பவருக்கும் நிவாரன உதவி(?). அந்த நிதியில் பாதி அரசியல்வாதியிடம். மீதி நிதியைக் கொடுக்க லஞ்சம் கேட்கும் கேடுகெட்ட அதிகாரிகள்(?). போலியாக நிதிபெற்ற பொதுமக்கள். 

சென்னையை விட அதிகம் பாதிக்கப்படும் கிராமமக்கள். அங்கும் அதேபோல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளூம் (இதைப் பற்றி விவரிக்க வேண்டுமானால் இந்த ஒரு பதிவு பத்தாது).

இதை எல்லாம் தேர்தலின் போது ஐந்தாண்டு சாதனைகளாக கூறிக்கொள்ளும் தந்திர அரசியல்வா(வியா)திகள். எல்லாம் தெரிந்திருந்தும் வேறு வழியில்லாமல் வாக்களிக்கும் பொதுமக்கள்.

 இவர்கள் அனைவரும் காலம் காலமாகவே "பரினாமவளர்ச்சியடையா மழை மனிதர்கள்".

25 விவாதங்கள்:

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் அதிகாரிகள் மெத்தனமாக இருக்கிறார்கள் புலிகேசி ......................

வனம் said...

வணக்கம் புலிகேசி

ரோம்ப சரியாத்தாம்ல பதிந்து இருக்கின்றீர்கள்,

ஆனால் அதிகாரிகளையும், அரசியலாலர்களையும் மட்டும் குறை சொன்னால் போதாது, நாமும் தான் காரணம், அவங்க உதவியில் பங்குவைத்துக்கொள்கின்றார்கள் சரி

நாம கோடையில் முன்னெச்சரிக்கையாக ஏதாவது செய்யனும்ல பாஸ்.

லட்குமிகுமாரன் ஞானதிரவியம் ஒரு கவிதை எழுதி இருந்தார் இப்போது வரிகள் நிணைவுக்கு வரவில்லை நாளை படித்துவிட்டு வந்து சொல்கின்றேன்.

இராஜராஜன்

vasu balaji said...

வனம் சொன்னாற்போல் நம் பங்கு எதுவுமே இல்லையா? போர் போராக குப்பையை கால்வாயில் கொட்டி அடைக்கிறோமே. பத்து அடி நடந்து போய் குப்பைத் தொட்டியில் கொட்ட சலித்து இரவில் கொட்டி அடைக்கிறோமே. மொத்ததில் ஒருவரை ஒருவர் குறை சொன்னாலும் நட்டம் நமக்குத்தான். நல்ல இடுகை

கடல் அலைகள்... said...

எதற்கெடுத்தாலும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் குற்றம் சொல்வது எனக்கு சரியாக படவில்லை. அவர்களும் நம்மில் ஒருவரே.

நம்முடைய வேலைகள் மட்டும் நடந்தால் போதும் என்று நாம் இருக்கிறோம். இது நம்முள் இருக்கும் சுயநல அல்லது சுயசார்பு மனப்பான்மையை இது காட்டுகிறது. மற்றவர்கள் பற்றி நாம் கவலை படுவதில்லை.

ஜெட்லி... said...

வானம்பாடிகள் அய்யாவை வழிமொழிகிறேன் புலிகேசி

புலவன் புலிகேசி said...

நன்றி வெண்ணிற இரவுகள்,வனம்,வானம்பாடிகள்,கடல் அலைகள்,ஜெட்லி

//ஆனால் அதிகாரிகளையும், அரசியலாலர்களையும் மட்டும் குறை சொன்னால் போதாது, நாமும் தான் காரணம், அவங்க உதவியில் பங்குவைத்துக்கொள்கின்றார்கள் சரி

நாம கோடையில் முன்னெச்சரிக்கையாக ஏதாவது செய்யனும்ல பாஸ்.
//

//போர் போராக குப்பையை கால்வாயில் கொட்டி அடைக்கிறோமே. பத்து அடி நடந்து போய் குப்பைத் தொட்டியில் கொட்ட சலித்து இரவில் கொட்டி அடைக்கிறோமே.//

//வானம்பாடிகள் அய்யாவை வழிமொழிகிறேன் புலிகேசி//

நிச்சயம் பாஸ்...வானம்பாடிகள் ஐயா சொல்லியிருப்பது போல் நமக்கும் பங்கு இருக்கிறது.

புலவன் புலிகேசி said...

//எதற்கெடுத்தாலும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் குற்றம் சொல்வது எனக்கு சரியாக படவில்லை. அவர்களும் நம்மில் ஒருவரே.//

இந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நம்மில் ஒருவர் என்றால் நம்மைப் பற்றி கவலைப் பட்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகள் அப்படித்தான் இருக்கிறார்களா? இந்த மழைக் காலப் பாதுகாப்பில் நமக்கும் பங்கு இருக்கிறது அவ்வளவுதான்.

balavasakan said...

//எதற்கெடுத்தாலும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் குற்றம் சொல்வது எனக்கு சரியாக படவில்லை. அவர்களும் நம்மில் ஒருவரே.//

தமிழ் நாட்டு அரசியல் வாதிகளைப்பற்றி உலகமே அறியும்....உங்களில் ஒருவர் என்று சொல்லாதீர்கள்...உங்களைப் போல படித்தவர்கள் பலர் படிப்பு வேலை என ஒதுங்கி இருப்பதால் தான் குப்பைகள் அல்லாம் அரசியலுக்கு வந்து நாறடிக்கிறார்கள்....
கருணாநிதி குடும்பத்தில் எத்தனை ..பேர்... அவரகளை தவிர அங்கு படிச்சவன் அவனும் இல்லையா...

தமிழனுக்கு கேவலம் இந்த தமிழ் நாட்டு அரசியல் தான்....

ஹேமா said...

அரசியலில் யார் பொதுமக்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள் ?

கடல் அலைகள்... said...

நான் சொல்ல வந்தது..... அவர்களும் மக்கள் என்னும் நம்மிடமிருந்து தான் வந்தவர்கள்.

அவர்கள் யாரும் தனியாக பிறக்கவில்லை. அவர்களை வளர்த்துவிட்டது யார்???? நாம்தானே. ஒரு வோட்டின் விலை சில நூறுகள்....அதற்கு ஆசைப்பட்டு தானே அவர்களை பதவியில் அமர வைக்கிறோம்.

ஊடகன் said...

//வெயில் காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யாமல் "மழையால் உயிரிழந்தவர்களுக்கு மழையில் இறங்கி உதவி செய்த கலக்டர் மற்றும் அதிகாரிகள்" என ஊடகங்களில் பெயர் வாங்கும் கலக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்//

அரசியல் வாதிகளே இதை படியுங்கள்

ஜோதிஜி said...

நீங்கள் இணைத்துள்ள புகைப்படம் போல 2000/2001 பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் அனுபவித்த நினைவுகள் வந்து போகின்றது. வடிமைப்பும் கூட சிறப்பாக இருக்கிறது.

manwholara said...

Government should ban on plastic.
Plastic takes thousands of years to decompose — but 16-year-old science fair contestant Daniel Burd made it happen in just three months.
http://www.wired.com/wiredscience/2008/05/teen-decomposes/

க.பாலாசி said...

//மீதி நிதியைக் கொடுக்க லஞ்சம் கேட்கும் கேடுகெட்ட அதிகாரிகள்(?). போலியாக நிதிபெற்ற பொதுமக்கள். //

சரியாக சொன்னீர்கள் நண்பா.....நகரங்களிலேயே இப்படி என்றால் கிராமப்புரங்களில் கேட்கவா வேண்டும்...அரசுத்துறை அலுவர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இந்த நிவாரணத்தை பெறுவதற்கே நாம் படாதபாடு படவேண்டும்...கொடுமை....

பிரபாகர் said...

ஆள்வோர்கள் நிம்மதியாய் நிம்மதியை கெடுத்துக்கொண்டு, வெக்கங்கெட்டவர்கள்...

மழையில்லையே என வருத்தம் ஒருபுறம்... வந்து அவஸ்தையால் ஒருபுறம். கேடுகெட்ட அரசியல் வாதிகள் எப்போது அடிப்படை வசதிகளை செய்து..... ம்..... பெருமூச்சுதான் பதில்...

பிரபாகர்.

Thenammai Lakshmanan said...

//வெயில் காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யாமல் "மழையால் உயிரிழந்தவர்களுக்கு மழையில் இறங்கி உதவி செய்த கலக்டர் மற்றும் அதிகாரிகள்" என ஊடகங்களில் பெயர் வாங்கும் கலக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்//
.
நன்றாகச் சொன்னீர்கள் புலவரே

ரோஸ்விக் said...

நண்பா! இன்னும் ஒற்றை சொல்ல விட்டுவிட்டீர்கள். மழை வெள்ளம் பெருசா வந்தா, டபக்குனு ஹெலிகாஃப்டர் எடுத்துக்குட்டு வருவாய்ங்கலே.....
அதுதான் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை டிவி-ல நல்லா காட்டுராய்ங்க....அதுபோக ரொம்ப செலவழிச்சு செயற்கைக்கோள் விட்டுருக்கோம். அதுவும் படம் புடிச்சு காட்டும். அப்புறம் இன்னாத்துக்கு இப்புடி கெளம்பி வாராய்ங்க?
உண்மையிலே தெரியாமத்தான் கேட்க்குறேன்..

ப்ரியமுடன் வசந்த் said...

நாமளும் இப்படி சொல்லிக்கிட்டேதான் இருக்கு ஆன அவங்கதான் அவங்க காதுல பஞ்சு வச்சுட்டு திரியுறாங்களே...

shortfilmindia.com said...

நல்ல பதிவு தலைவரே..

கேபிள் சஙக்ர்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதிவு புலிகேசி.

ஜெயந்தி said...

மழையில் மிதப்பதற்கும், வெயிலில் காய்வதற்கும் நாம் பழகிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

இன்றைய கவிதை said...

எல்லா அவலங்களையும்
'கவர்' கொடுத்து 'கவர்'
பண்ண முடியும் புலவரே!

எந்த யுகத்தில் இருக்கிறீர் ஐயா?!

-கேயார்

Anonymous said...

aam nanbar solvathu mutrilum unmai, kadum malaikaalangalil kirama puram ulla panchayat thalaivar matrum district collector evargalukku yeagappatta colleciton....irakkam atra arakkargal.

புலவன் புலிகேசி said...

நன்றி Balavasakan,ஹேமா, ஊடகன்,ஜோதிஜி. தேவியர் இல்லம்,manwholara,க.பாலாசி,பிரபாகர்,thenammailakshmanan,ரோஸ்விக்,பிரியமுடன்...வசந்த்,கேபிள் சஙக்ர்,ஸ்ரீ ,ஜெயந்தி,இன்றைய கவிதை,Mohamed

velji said...

இன்னும் இரண்டு மாதத்தில் தண்ணி இல்லை,கரண்ட் இல்லை என்ற வழக்கமான கொடுமையையும் சகிக்க வேண்டியதுதான்.
நல்ல பதிவு.