பாலா, சீனு இருவரும் ஒரே கல்லூரியில் எம்.சி.ஏ மாணவர்கள். பாலா வகுப்பில் முதல் பென்ச். சீனு எப்போதுமே கடைசி பென்ச் தான்.
ஆசிரியர்களின் பார்வையில் பாலா நன்றாகப் படிக்கக்கூடியவன். ஆம் உண்மைதான் கணிதமாக இருந்தாலும் மனப்பாடம் செய்துவிடுவான்.
ஆனால் சீனு சுமாராகப் படிக்கக்கூடியவன் என்பது ஆசிரியர்களின் பார்வை. நமது கல்வித்திட்டத்தில் மனப்பாடம் செய்பவன் புத்திசாலி, செய்முறையில் முயற்சிப்பவன் அறிவில் குறைந்தவன் தானே.
சீனுவும் அப்படித்தான், எது படித்தாலும் அதை முயற்சித்துப் பார்ப்பான். தான் முயற்சித்ததைத்தான் தேர்விலும் எழுதுவான். மனப்பாடம் செய்து எழுதும் பழக்கமில்லாதவன்...
தேர்வுகளில் கேட்கப்பட்ட புரோகிராம்களின் உதவியில் சீனு பெற்ற மதிப்பெண்கள் 56%.ஆனால் பாலா 91% (என்னே நமது கல்விமுறை).
கல்லூரியின் இறுதியாண்டில் டி.சி.எஸ் நிறுவனத்திலிருந்து பணிக்கானத் தேர்வு அந்தக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள குறைந்தது 60% மதிப்பெண்கள் தேவை. அதனால் சீனுவால் கலந்து கொள்ள இயலவில்லை.
பாலா அதில் கலந்துகொண்டு பணிநியமன ஆணை பெற்றான். கல்லூரி முடிந்து நான்கு ஆண்டுகள் முடிந்திருந்தது. பாலா டி.சி.எஸ் சிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு ஓராண்டுகாலமாகியிருந்தது.
அப்போது ஒரு நிறுவனத்திலிருந்து அவனுக்கு பணிக்கான தேர்வுக்கு அழைப்பு வந்தது. டி.சி.எஸ் அனுபவத்தால் பணியும் கிடைத்தது. பணிநியமன ஆணை பெறுவதற்கு எம்.டி அறைக்கு சென்றவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். காரணம் அந்த நிறுவனத்தின் எம்.டி சீனு...
28 விவாதங்கள்:
நல்ல கதை நண்பா பின்நவீனத்துவ பாணியில்
கண்டிப்பா நம்ம கல்வி முறை மதிப்பெண்ணை வைத்து அறிவை நிர்ணயிப்பதாக இருந்தாலும்,நம்ம தொழில் நிறுவனங்கள் அறிவை வைத்து தான் வேலைக்கு சேர்க்கினறன.
இது போன்று அமரர். சுஜாதாவின் கதை ஒன்று படித்துள்ளேன். இரண்டிலும் ஒரே முடிவு.
உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது. தொடரவும்.
உண்மைதான் நண்பா. இப்போது மெட்ரிக் பள்ளியிலிருந்தே இந்த மனப்பாடம் செய்யும் பழக்கம் ஆரம்பித்துவிட்டது.
புரிந்துணர்வுடன் படிப்பவர்கள் குறைவு.
தங்களின் கதை நன்றாக உள்ளது சிந்தனையுடன்...வாழ்த்துக்கள்.
சின்னது! ஆனா.. வீரியம்!!
நல்ல கதை. இது உண்மையும் கூட. நமது கல்வியின் தரம் அறிவில் இல்லை. பாடத்தின் மனப்பாடம் செய்யும் முறையில் தான் உள்ளது. நன்றி.
அப்ப அங்கேயும் அப்பிடியா..........
ஒரு விடயத்தை வகுப்பில் நடத்தும் போதே உலக வாழ்க்கையோடு சரி சமப்படுத்தி நடத்தினால் எந்த பாடமும் புரியும்........
ஆனால், இன்று அந்த மாதிரி நடத்துபவர்கள் ஒரு சிலரே.............. ஆதலாலே மாணவர்கள் மனனம் செய்து படிக்கிறார்கள்...........
நல்ல பதிவு...........
நல்ல கதை.:)
முருகவேல்...
கதை நல்லாயிருக்கு
//நமது கல்வித்திட்டத்தில் மனப்பாடம் செய்பவன் புத்திசாலி, செய்முறையில் முயற்சிப்பவன் அறிவில் குறைந்தவன் தானே.//
நெத்தியடி....
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், பின் தர்மம் வெல்லும்.
நல்லாருக்கு நண்பா...
பிரபாகர்.
நல்ல கதை வாழ்த்துகள்
சூப்பர்ர்!!
MCA மட்டுமல்ல.....எல்லா துறைகளிலும் இதே நிலைதான்...:-(
விரிவான விடை எழுதும் கேள்விகளுக்கு பதிலாக work out செய்து நான்கில் ஒரு விடையை தேர்வு செய்யும் முறை வந்தால் சீனுக்கள் முதல் மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது........
நல்லா இருக்கு நண்பா. கலக்குங்க :-)
நண்பா உங்கள் படைப்பை படித்த பின்..எனக்கு
சுஜாதா எழுதிய பீட்டர் சிறுகதை நினைவுக்கு
வந்தது.நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.
அது சரி, டி சி எஸ்-ஐ குறி வைத்துத் தாக்குறீரே?!
வேலை கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்களோ?!!
-கேயார்
good story
கதை நல்லா இருக்கு
This is really true...
மதிபெண்களை வைத்தே நமது கல்வி ஒருவனை புத்திசாலி அல்லது முட்டாள் என முடிவு செய்வதை அருமையாக சொன்னீர்கள் தோழரே...
இந்த அவலம் மாற வேண்டும்...
//நமது கல்வித்திட்டத்தில் மனப்பாடம் செய்பவன் புத்திசாலி, செய்முறையில் முயற்சிப்பவன் அறிவில் குறைந்தவன் தானே.//
excellent pulikesi
நல்லாயிருக்கு. நமது கல்விமுறை அப்படித்தான் இருந்து தொலைக்கிறது. என்ன செய்ய ?
கதை ரொம்ப உண்மை.. மனப்பாடமும் பண்ணாம, pratical அறிவும் இல்லாம படிக்காமையே பாஸ் ஆகும் கோஷ்டி கூட உண்டு :)
அருமையான கதை புலிகேசி
தோழரே உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்
http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html
நல்ல கதை நண்பரே...
வாழ்வியல் உண்மைகள் இதை விட எதார்த்தமானவை....
கதை முடிவு வாழ்வியல் உண்மையைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.
இன்றுதான் படித்தேன் சிறுகதை.நல்லாருக்கு.
Post a Comment