ரஞ்சனி வீட்டில் சொந்தக் காரர்களின் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
ரஞ்சனிக்கு தோழிகளும் அழகுக் கலை நிபுனரும் அலங்காரம் செய்து கொண்டிருக்க ரஞ்சனி மகிழ்ச்சியில் திலைத்திருக்க நிச்சயதார்த்த ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
ஆனால் ரஞனிக்கு பயம் பற்றிக் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் மாப்பிள்ளையின் தம்பி பெயர் செந்தில் என்பதுதான்.
செந்திலுக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை. தன் அண்ணனுக்கு நிச்சயம் செய்யப் போகும் பெண்ணின் பெயர் ரஞ்சனி என்றதும் பதற்றமும் பயமும் தொற்றிக் கொண்டு ஒரு கணம் கடந்த காலம் கண்முன் வந்து சென்று ஒரு வேலை அவளாக இருக்குமோ? என எண்ண்த் தோன்றியது.
"செந்தில் பனிரெண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது ரஞ்சனி என்ற பெண் வகுப்புத் தோழி.செந்திலின் கூட்டாளிகள் ரஞ்சனியையும், செந்திலையும் சேர்த்து வைத்து உசுப்பேத்தி செந்திலின் மனதில் பள்ளிக் காதலை வளர்க்க ஒரு நாள் அவளிடம் சென்று காதலை (பள்ளிப் பருவ ஆசையை) சொல்லியதும் அவனுக்குக் கிடைத்ததே அந்த காதல் பரிசு.
வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு. வேறென்ன செறுப்படிதான். அன்றுடன் அந்தக் காதலுக்கு முழுக்குப் போட்டு விட்டு வந்தவன் தான். இன்று மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாலர் பணியில்....."
ரஞ்சனியின் வீடு வந்தது. அண்ண்ன் மற்றும் உறவினர்கள் அனைவரும் உள்ளே செல்ல செந்தில் மட்டும் தயங்கித் தயங்கி வாசலில் நுழைய ஜன்னலில் நின்று கொண்டிருந்த அவளைப் பார்த்து விட்டான்.
அவன் பயந்தது போலவே அவளே தான். ஆனால் செந்திலைப் பார்த்த ரஞ்சனி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
"அப்பாடா அந்த செந்தில் இல்லை!" ரஞ்சனி மும்பையில் உள்ள கல்லூரியில் பொறியியல்ப் படித்துக் கொண்டிருந்த போதுதான் அது நடந்தது. அவன் சென்னையை சேர்ந்தவன்.
அவ்னும் அங்கு ரஞனியுடன் படித்துக் கொண்டிருந்த போது தான் அவனுடன் கல்லூரிக் காதல் மலர்ந்தது.ஒரு நாள் அவனுடன் ஒரு "இரவு நடன விடுதிக்கு" சென்ற போதுதான் இருவருக்குள்ளும் அது நடந்தது.பின்னர் கருக்கலைப்பு நடந்து இருவரும் அவரவர்ப் பாதையில் பிரிந்து 4 வருடம் முடிந்து விட்டது.
நிச்சயதார்த்தம் முடிந்து அனைவரும் உணவுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்த போது செந்தில் அவளிடம் சென்று மன்னிப்புக் கேட்க அவளுக்கு அப்போதுதான் இந்த செந்திலை நினைவு வந்தது. இருவருக்குள்ளும் குற்ற உணர்வு எது பெரியது என்பதுதான் இங்கு கேட்கப்படாத கேள்வி? தெரிந்த விடை...
இதில் இரண்டாவது விசயம் செந்திலின் அண்ணனுக்குத் தெரியாத வரை விவாகரத்து இல்லை......ஒழுக்கமும் பண்பாடும் ஆண், பெண் இருபாலரிடமும் இதுபோல் சீர்குலைந்துதான் இன்று விவாகரத்துப் பெருகி வருகிறது......
எங்கு செல்கிறது இந்தியப் பண்பாடு..??? எங்கே இருக்கிறது என் இந்தியா???
24 விவாதங்கள்:
பண்பாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது
விடை தெரியாத கேள்வியை கேக்குறீங்களே தல..?
பண்பட்ட வாழ்க்கை முறையே பண்பாடு என்றாகும். சில நேரங்களில் நாம் நினைக்கிற மாதிரி முடிவுகள் எடுக்கவியலா சூழல் வாழ்வில் அமைவதுண்டு. தவறுகளை திருத்திக் கொள்ள அக்கதா பாத்திரங்களுக்கு அத்திருமணம் ஒரு வாய்ப்பு அவ்வளவே. அதை விடுத்து ஒட்டு மொத்தமாக சமுதாயத்திற்க்கு கேள்வி விடுப்பது எப்படி பொருந்திப் போகும்? என் பார்வையில் பண்பாடு என்ற போர்வையில் பெண்ணடிமைத்தனம் தான் முன்னிறுத்தப் படுகிறது. இக்கதையில் விடுபட்ட அந்த மாப்பிள்ளைக் கதா பாத்திரத்துக்கு கூட ஒரு காதல் கடந்து போயிருக்கலாம் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
//வெண்ணிற இரவுகள்....! said...
பண்பாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது//
அழிந்துகொண்டிருக்கிறது நண்பரே....
//கலையரசன் said...
விடை தெரியாத கேள்வியை கேக்குறீங்களே தல..?//
என்னத்தலப் பண்றது........
//அந்த மாப்பிள்ளைக் கதா பாத்திரத்துக்கு கூட ஒரு காதல் கடந்து போயிருக்கலாம் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.//
நிச்சயம் இருக்கும்........அதைத்தான் முடிவில் சொல்லியிருக்கிறேன்...//ஒழுக்கமும் பண்பாடும் ஆண், பெண் இருபாலரிடமும் இதுபோல் சீர்குலைந்துதான் இன்று விவாகரத்துப் பெருகி வருகிறது......// என்று...
நவ “நாக” ரீகம் முற்றிக்கொண்டேபோகிறதின் எதிரொலியில் இன்னும் என்ன என்ன விபரீதங்களை தரப்போகிரதோ.
அழிவதிலிருந்து நம்மையாவது காப்பாற்றிக்கொள்ளவோம்..
விடை காணமுடியாத மௌன வினாக்களோடு நீங்களும் நானும் இந்தியாவும்...
இறுதியில் எனக்கு கொஞ்சம் குழப்பம் ......
மாபிள்ளை தம்பி செந்திலின் குற்ற உணர்வை
ரஞ்சனியின் குற்ற உணர்வுடன் ஒப்பிடக்கூடாது
இரண்டுக்கும் இடைவேளை அதிகம் ...
என் தாழ்மையான கருத்து
ஒன்று சொல்ல மறந்து விட்டேன்
கதையில் எதிர் பாராத திருப்பம்.... அருமையாக இருந்தது
கதை அருமை....
திரைக்கதையில், ஒரே குழப்பமா இருக்கு..........
12B படம் புரியாத மாதிரியே , இந்த கதையுளும் குழப்பம்...........
ஆனால் பல முறை படித்து புரிந்து கொண்டேன்...........
நல்ல முயற்சி...........வாழ்த்துக்கள்...........
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ஜி...
உங்களின் இந்த கதை நன்றாக உள்ளது நண்பரே...படித்தேன் மிக பிடித்தது. கடைசியில் ஒரு குழப்பம். மற்றபடி உங்களின் சொல்லாடல் சிறப்பாக உள்ளது. பாலவாஸ்கரன் சொன்னதுபோல இரண்டு நிலைகளுக்கும் பக்குவமென்பது வேறுவேறு என்றே கருதுகிறேன்.
நல்ல கதை....
//விடுதலைவீரா said...
விடை காணமுடியாத மௌன வினாக்களோடு நீங்களும் நானும் இந்தியாவும்...//
ஆம் நண்பரே...
//Balavasakan said...
இறுதியில் எனக்கு கொஞ்சம் குழப்பம் ......
மாபிள்ளை தம்பி செந்திலின் குற்ற உணர்வை
ரஞ்சனியின் குற்ற உணர்வுடன் ஒப்பிடக்கூடாது
இரண்டுக்கும் இடைவேளை அதிகம் ...//
உண்மைதான் நண்பரே...செந்தில் செய்தது தவறு இல்லை. ஆனால் அவன் அப்படிக் கருதுகிறான்....
நன்றி
நன்றி ஊடகன்,ஜெட்லி,க.பாலாசி
//இரண்டு நிலைகளுக்கும் பக்குவமென்பது வேறுவேறு என்றே கருதுகிறேன்.//
ஆம் நண்பா...
அந்த செந்திலின் கதை இந்த செந்திலுக்குத் தெரிந்திருந்தால் இந்த செந்தில் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டான். இந்த செந்திலின் கதை அந்த செந்திலுக்குத் தெரிந்திருந்தால் வாலாட்டியிருக்கவே மாட்டான். ரெண்டு செந்திலும் சந்தித்துப் பேசினால் மாப்பிள்ளை சேது ஆகி விடுவான்...இல்லை?
சாரி பாஸ். இந்தியப் பண்பாடு? அப்படியென்றால் ராஜாராம் மோகன்ராய் திரும்ப பிறக்கவேண்டும். 6வயசுல 8 வயசு பையனுக்கு கட்டி வைக்கணும். அவன் போய் சேர்ந்தா காலமெல்லாம் மூலையில உக்காந்து அழணும். உடன் கட்டை ஏறணும். ஒரு சார்பா பொண்ணு அபார்ஷன் பண்ணது தெரிஞ்சா விவாகரத்துன்னு கதை போகுது. அந்தய்யா புரிதல் உள்ளவரா இருந்தா ஏன் போகுது?
மன்னிப்பு கேட்கும் அளவிற்கு செந்திலுக்கு அது பெரிய விஷயமாகப்பட்டிருக்கிறது.
ரஞ்சனிக்கோ அவ்வாறில்லை.
என்னவென்று சொல்வது அவளின் நேர்மையை...
-----------------------------
எங்கு செல்கிறது இந்தியப் பண்பாடு?
வேறு எங்கு! சாக்கடையை நோக்கித்தான்.
பார்ப்பதே தப்பு என்று இருக்கவும் வேண்டாம் - படுக்கையைப் பகிர்வது கூட தவறில்லை என்றும் இருக்க வேண்டாம்...
அவனவன்(ள்) தலைவிதி.. என்னத்தைச் சொல்ல...
கதை நன்றாக உள்ளது , நாம் அழிவு பாதையை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம் வேறு என்ன சொல்றது.
கதையோடு நிறுத்தியிருந்தால் நல்லாயிருந்திருக்கும்.... பண்பாடோடு முடிச்சு என்பது கதையை சீர்குலைக்கிறது. (இது என் கருத்து)
//கதை நன்றாக உள்ளது , நாம் அழிவு பாதையை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம் வேறு என்ன சொல்றது.//REPEAT
பண்பாடெல்லாம் கெடாது!
நீங்கள் கூட படுத்த செந்திலாக இல்லாத வரைக்கும்!
எப்போதும் பெண்களையே குறை சொல்வதை நிறுத்துங்கள்!, ஆண்களுக்கு எங்க அறிவு போச்சு, திருமணத்திற்கு முன் தொட!
எங்கள் இந்தியா பண்பாட்டுடன் தான் இருக்கிறது....
ஓரிரண்டு இடங்களில் நடப்பதை வைத்து எதையும்
முடிவு செய்யக்கூடாது புலவரே!
அங்கங்கு தென்படும் சொற்பிழைகளைத் தவிர்த்திருந்தால்,
இன்னும் சோபை கூடியிருக்கும்!
-கேயார்
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஒழுக்கம் தேவை.
நாகரீக வளர்ச்சியால் எங்காவது ஓரிரண்டு அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்கிறது.
ஒட்டுமொத்தமாகக் குறை சொல்ல முடியவில்லை என்னால்.
Good story .If we like to change culture for example speak in English then we have to follow English culture.We don't cry only for sex .
Many village guys studied now settled in metro cities .Why nobody returning villages to settle? City guys thing that village guys only in virgin but than city villages have lot of sex stories and activities so village guys easily digest and changing their culture fastly that is the problem for India.
Post a Comment