ஒரே ஊர்க் காரராக இருந்தாலும் இது வரை நேரில் சந்தித்திராத பதிவுலக நண்பர் க.பாலாசி-யின் அழைப்பை ஏற்று நானும் இந்தத் தொடர்ப் பதிவை எழுதுகிறேன்..... இந்தப் பதிவு தோழி தேனம்மைலக்ஷ்மனனுக்காகவும்
1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு?
பெயர் முருகவேல், என்னத்த சொல்ல-னு என்னுடைய சுயவிவரத்திலேயே சொல்லியிருப்பேன். இருந்தாலும், மயிலாடுதுறையில் MCA முடித்து விட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். எல்லா மனிதர்களைப் போலவே இந்த நாட்டிற்காகவும் கஷ்டப்படும் மக்களுக்காகவும் ஏதாவது செய்ய முடியுமான்னு எண்ணிக்கொண்டே இருப்பவன் (இது வரை எதுவும் செய்யவில்லை.). கடவுள் மீது நம்பிக்கை இல்லாத மனிதன்.
2) தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம்?
பனிரெண்டு வயது என நினைக்கிறேன். எதிர்வீட்டு மாமா அணுகுண்டு வெடித்துக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தபோது எங்கள் வீட்டு செல்ல நாய் பற்ற வைத்திருந்த வெடியின் மீது மூத்திரமிட்டத்தை கண்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தது.....
3) 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?
மயிலாடுதுறையில் தான். வேறெங்க போறது எங்க அப்பா அம்மாவ உட்டுட்டு.
4) தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள்?
தீபாவளி என்றால் முதலில் உற்சாகப் பட வேண்டியது குழந்தைகள் தான். ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தீபாவளியை "தொலைக்காட்சிப் பெட்டியில்" தான் கொண்டாடுகிறார்கள். வழக்கமாக தீபாவளியன்று உறவினர்கள் நண்பர்களிடையே செய்யப் படும் அன்புப் பரிவர்த்தனைகள் குறைந்திருக்கிறது.
5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்களா ?
மூன்று மாதத்திற்குப் பிறகு அப்பா அம்மாவையும், சொந்த ஊரையும் பார்க்க வேண்டும் அவ்வளவுதானேத் தவிர தீபாவளிக் கொண்டாட வேண்டுமென்ற எண்ணமில்லை. நட்பு ஒருவர் எடுத்துக் கொடுத்த பிறந்தநாள் சட்டையும் அதற்கு அழகு சேர்க்க நான் ரெங்கநாதன் தெருவில் வாங்கிய கால்சட்டையும் தான்.....
6) உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?
வழக்கம் போல் முறுக்கு அப்பறம் அம்மா அன்புடன் எனக்குப் பிடித்த சீடையும் அண்ணனுக்குப் பிடித்த ரவா லட்டும் செய்திருந்தார். அப்பா ஒரு இனிப்பகத்திலிருந்து எனக்கும் என் அண்ணனுக்கும் பிடித்த "பாசமுள்ள" மைசூர் பாகு வாங்கி வந்திருந்தார்.
7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி...சென்ற ஆண்டு வரை என்னுடன் பள்ளியில் படித்த ஒரு நண்பனிடமிருந்து வாழ்த்து அட்டை வந்துகொண்டிருந்தது. இந்த ஆண்டு அவனும் தொலைபேசிதான்.....
8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா?
காலைப் பத்து மணிக்கு புறப்பட்டால் இரவு பனிரெண்டு வரை பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் தான்..........தொலைக்காட்சியில் புதைவது பிடிக்காது.......
9) இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள்? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம் ?
இத்தனை ஆண்டுகளாக இத்தகைய திருநாளில் யாருக்கும் உதவி செய்ததில்லை. இந்த ஆண்டு என் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பணம் சேகரித்து எங்கள் ஊரில் உள்ள "அன்பகம்" என்ற ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று இனிப்பு மற்றும் உணவு வழங்கி வந்தோம்.
10) நீங்கள் அழைக்கவிருக்கும் இருவர், அவர்களின் வலைத்தளங்கள்?
அவர்களையும் தமிழர் மீது பற்று கொண்ட கோபக்கார நண்பர் "வெண்ணிற இரவுகள்" கார்த்தியையும் நிச்சயம் என் அழைப்பை ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில் அழைக்கிறேன்.........
25 விவாதங்கள்:
உங்களின் விவரங்களோடு விவரித்தல் அருமை நண்பா...
நாய்... வெடி விஷயம் சிரிப்பாய் இருந்தது.
நன்றி நண்பா... தகவல்களுக்கு.
பிரபாகர்.
கூடுதல் விவரங்கள் அறியத் தந்தமைக்கு நன்றி.நாய் வெடி சூப்பர்.
நன்றி பிரபாகர், வானம்பாடிகள்....
அட... நாய் அசத்தியிருக்கே
ஹ..ஹ....ஹா
சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
//எல்லா மனிதர்களைப் போலவே இந்த நாட்டிற்காகவும் கஷ்டப்படும் மக்களுக்காகவும் ஏதாவது செய்ய முடியுமான்னு எண்ணிக்கொண்டே இருப்பவன் (இது வரை எதுவும் செய்யவில்லை.). கடவுள் மீது நம்பிக்கை இல்லாத மனிதன்.//
உங்களால் முடிந்த சிறு உதவிகளை பொருளாகவோ, உடல் உழைப்பாகவோ இந்த கஷ்டப்படும் மானுடத்துக்கு செய்திடுங்க....
அப்படி செய்தா நீங்க தான் கடவுள். :-)
//
தீபாவளி என்றால் முதலில் உற்சாகப் பட வேண்டியது குழந்தைகள் தான். ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தீபாவளியை "தொலைக்காட்சிப் பெட்டியில்" தான் கொண்டாடுகிறார்கள்//
ஆம் நண்பா ....இப்பொழுது எல்லாம் தீபாவளி கலை இழந்து விட்டது
நினைவுகள் அருமை:)!
பனிரெண்டு வயது என நினைக்கிறேன். எதிர்வீட்டு மாமா அணுகுண்டு வெடித்துக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தபோது எங்கள் வீட்டு செல்ல நாய் பற்ற வைத்திருந்த வெடியின் மீது மூத்திரமிட்டத்தை கண்டு அங்கிருந்த அனைவரும் சிரித்தது.....//
சிரிப்பா இருக்குங்க.
நீங்க மாயவரமா நல்லது..:)
அதிஸ்டசாலி நீங்க.அப்பா அம்மாகூட தீபாவளி."இனிப்பகம்" அருமையான தமிழ்ச்சொல்.
நாய் மேட்டர் சூப்பர். கொஞ்சம் உச்சா போக லேட் ஆகியிருந்தா லேட் நாய் ஆகியிருக்கும்.
உங்கள் பெயர் வித்தியாசமா இருக்கு. பெயர் காரணம் கூறுக
இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தெரிகிறது. சொந்த சமையலா? சென்னையில் வாசம் எங்கோ?
புலவரே எத்தனை நாளுக்கு தன இப்படி கட்டை பிரம்மா சாரியாக இருப்பீர்கள் ....
இந்தியாவில் பெண்களுக்கா குறைச்சல் தமன்னா வோ பாவனாவோ ஒண்ட பார்த்து கட்டுங்களேன் .....
அது சரி ஏதும் காதல் கதை இருக்கோ
// இத்தனை ஆண்டுகளாக இத்தகைய திருநாளில் யாருக்கும் உதவி செய்ததில்லை. இந்த ஆண்டு என் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பணம் சேகரித்து எங்கள் ஊரில் உள்ள "அன்பகம்" என்ற ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று இனிப்பு மற்றும் உணவு வழங்கி வந்தோம்.//
super sir!
தங்கள் அழைப்புக்கு மகிழ்ச்சி நண்பரே...
நன்றி கதிர்,ஸ்ரீ,ரோஸ்விக்,வெண்ணிற இரவுகள்,ராமலக்ஷ்மி,சி. கருணாகரசு ,வினோத்கெளதம் ,ஹேமா
நன்றி பின்னோக்கி
//உங்கள் பெயர் வித்தியாசமா இருக்கு. பெயர் காரணம் கூறுக//
என் தாய் தந்தையருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அவர்கள் வைத்தப் பெயர். அவ்வளவுதான் நண்பரே.........(முருகவேல்)
//ஸ்ரீராம். said...
இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தெரிகிறது. சொந்த சமையலா? சென்னையில் வாசம் எங்கோ?
//
ஆம் திருமணமாகவில்லை. சொந்த சமையல் வார இறுதி நாட்களில் மட்டும். சென்னையில் மேற்கு மாம்பலம்.
//Balavasakan said...
புலவரே எத்தனை நாளுக்கு தன இப்படி கட்டை பிரம்மா சாரியாக இருப்பீர்கள் ....
இந்தியாவில் பெண்களுக்கா குறைச்சல் தமன்னா வோ பாவனாவோ ஒண்ட பார்த்து கட்டுங்களேன் .....
அது சரி ஏதும் காதல் கதை இருக்கோ
//
காதலில் எல்லாம் அவ்வளவாக நாட்டமிருந்ததில்லை நண்பரே...எனக்கு தமன்னா பாவன்னாலாம் வேணாம் நல்ல தமிழச்சியாகப் பார்த்து இன்னும் இரண்டு வருடம் கழித்து திருமணம்.
நன்றி இன்றைய கவிதை,முனைவர்.இரா.குணசீலன்
//Blogger வினோத்கெளதம் said...
நீங்க மாயவரமா நல்லது..:)//
ஆமாம் தல நீங்க????
//எங்கள் ஊரில் உள்ள "அன்பகம்" என்ற ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று இனிப்பு மற்றும் உணவு வழங்கி வந்தோம்.//
நல்ல செய்தி...கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. தொடருங்கள். அன்பகத்திற்கு நானும் சென்றிருக்கிறேன்.
விடைகள் அனைத்தும் பிடித்திருக்கிறது.
நல்லவேளை நாய் உச்சா போறதுக்குள்ள வெடி வெடிக்காம இருந்துச்சே....
தமிழ் மீது பற்று கொண்டு ஆய்வுகள் செய்து வரும் அருமை நண்பர் "முனைவர்.இரா.குணசீலன்" ----------- ஐயோ , மகா மொக்கையாச்சே. என்னய்யா உனக்கு நாங்க பாவம் செஞ்சோம்?
Post a Comment