கடவுளை மற..மனிதனை நினை..

20 October 2009

பிச்சை எடுத்தாலும் பெருமை கொள்வோம்.......

8:16:00 PM Posted by புலவன் புலிகேசி 25 comments

தெருத்தெருவாய் திரிந்து கத்திக் கூச்சலிட்டு
பெற்ற பிச்சையை தான் மட்டும் உண்ணாமல்
தன சகாக்களையும் அழைத்து பகிர்ந்துக் கொள்ளும் 
காக்கை.....  

மனிதனிடம் குறைந்து விட்ட குணம். 
நம்மிடம் இருக்கும் ஒன்றை இல்லாதவனிடம் 
பகிர்ந்து உண்ண காக்கையிடம் கற்றுக் 
கொள்வதால் தான் அதை நம் 
முன்னோர்கள் என்று சொல்லியுள்ளனரோ???

25 விவாதங்கள்:

Menaga Sathia said...

//
மனிதனிடம் குறைந்து விட்ட குணம்.
நம்மிடம் இருக்கும் ஒன்றை இல்லாதவனிடம்
பகிர்ந்து உண்ண காக்கையிடம் கற்றுக்
கொள்வதால் தான் அதை நம்
முன்னோர்கள் என்று சொல்லியுள்ளனரோ???//

அருமையான வரிகள்!!

அகல்விளக்கு said...

//மனிதனிடம் குறைந்து விட்ட குணம்.
நம்மிடம் இருக்கும் ஒன்றை இல்லாதவனிடம்
பகிர்ந்து உண்ண காக்கையிடம் கற்றுக்
கொள்வதால் தான் அதை நம்
முன்னோர்கள் என்று சொல்லியுள்ளனரோ//

நச்சென்று.......

vasu balaji said...

வித்தியாசமான சிந்தனை. இருக்கலாம். :)

பிரபாகர் said...

மாறுபட்ட ஒரு கோணம் நண்பரே, முன்னோராய் உருகவித்தது.... அருமை.

ஈரோடு கதிர் said...

காக்கையிடம் கற்றுக்கொள்ள மறந்துபோனோம்

வெண்ணிற இரவுகள்....! said...

அற்புதமான கருத்து தோழர் ..............
நாம் இனிமேல் எந்த மனிதரையும் காக்கை என்று திட்ட கூடாது ...................
காக்கைகள் தன் இனத்தை காக்கின்றன ..........
மனிதன் .......?
மனித நேயம் என்று சொல்லாதிர்கள் .............
மனிதன் ஒருவனே நேயம் இல்லாதவன் ......!

ஊடகன் said...

//தெருத்தெருவாய் திரிந்து கத்திக் கூச்சலிட்டு
பெற்ற பிச்சையை //

ஐயா நீங்கள் கூருவது போல காக்கை பிச்சை எடுப்பதில்லை, அது தன் உணவை தேடி அலைந்து பெற்றுகொல்கிறது.......
இதற்கு பேர் பிச்சை என்றால் நம்மவர்கள் சாலையில் செய்வது என்ன.....?
நீங்கள் கூறும் கருத்தான உணவை பகிர்ந்து கொள்வதை மட்டும் ஏற்றுகொள்வேன்........

கடல் அலைகள்... said...

பயபுள்ள என்னமா யோசிக்கிறே....

நிகழ்காலத்தில்... said...

மனிதன் ஒருவனே நேயம் இல்லாதவன் ......!
\\\\

பட்டைய கிளப்புற வரிகள்..

வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

நன்றி Mrs.Menagasathia ,அகல் விளக்கு, வானம்பாடிகள், பிரபாகர், கதிர் - ஈரோடு, வெண்ணிற இரவுகள்...., கடல் அலைகள்.., நிகழ்காலத்தில்...

புலவன் புலிகேசி said...

//நீங்கள் கூறும் கருத்தான உணவை பகிர்ந்து கொள்வதை மட்டும் ஏற்றுகொள்வேன்......//

நன்றி ஊடகா

க.பாலாசி said...

//மனிதனிடம் குறைந்து விட்ட குணம்.
நம்மிடம் இருக்கும் ஒன்றை இல்லாதவனிடம்
பகிர்ந்து உண்ண காக்கையிடம் கற்றுக்
கொள்வதால் தான் அதை நம்
முன்னோர்கள் என்று சொல்லியுள்ளனரோ???//

மிகச்சரியான சிந்தனை. எல்லா உயிரினடத்திலும் பகிர்ந்துண்ணும் பழக்கம் மிகைந்துள்ளது. ஒரு சிலதை தவிர...சில மனிதர்களையும் சேர்த்து....

நல்ல இடுகை நண்பரே....

விக்னேஷ்வரி said...

எப்படியெல்லாம் யோசிக்குறீங்க. Great.

வால்பையன் said...

காக்கை நம் முன்னோர்கள் இல்லை!
பகிர்ந்து உண்ணும் பழக்கம் பல விலங்களிடமும் இருக்கிறது!

மிக முக்கியம் பறவை இனங்கள் நம் முன்னோர்கள் இல்லை!

வால்பையன் said...

இன்னோரு விசயம் காக்கா ப்கிர்ந்து உண்ணுவது ஒரு டுபாக்கூர்! உணவிற்காக சண்டையிவதை பலர் பார்த்திருக்கலாம்!

புலவன் புலிகேசி said...

நன்றி விக்னேஷ்வரி,க.பாலாசி,வால்பையன்

//உணவிற்காக சண்டையிவதை பலர் பார்த்திருக்கலாம்!//

நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவைகள் கூட்டமாக உண்ணுவதையும் பார்த்திருக்கிறேன்.

வால்பையன் said...

//நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவைகள் கூட்டமாக உண்ணுவதையும் பார்த்திருக்கிறேன். /

கல்யாண பந்தியில் கூடத்தான் மனிதர்கள் கூட்டமா உண்கிறார்கள்!

சத்ரியன் said...

//மனிதனிடம் குறைந்து விட்ட குணம். //

புலவரே,

தருணம் பார்த்து உணர்த்தியிருக்றீகள். தொடரட்டும் உங்கள் பயணம்...!

velji said...

நல்ல சிந்தனை!
படிக்காத நீங்க ...எங்க பகுத்தறிவாளர பாக்காதீஙக..,பாடுங்க...கா..கா..கா..!

ராமலக்ஷ்மி said...

அருமை. பகிர்தலை காக்கைகளிடமிருந்துதான் கற்க வேண்டும்.

அன்புடன் நான் said...

காக்கையையே மறந்துவிட்ட உலகம்... அதன் குணத்தை நினைவில் நிறுத்துமா??

நல்லபதிவுங்க.

ஹேமா said...

புலிகேசி எங்காவது ஒன்றிரண்டு மனிதர்கள் காக்கைபோல இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இல்லை என்று சொல்வதற்கில்லை.
யாருமேயில்லாத புலம்பெயர் நாடுகளில் எங்களை சில கரங்கள் அணைத்து வைத்திருக்கிறது காக்காபோல.

அனுபவம் said...

உண்மைதான் புலிகேசி!

மா.குருபரன் said...

சூப்பரா சொல்லியிருக்கிறீங்க புலிகேசி.... வாழ்த்துகள்

Anonymous said...

Ja, sennilega svo pad er