கடவுளை மற..மனிதனை நினை..

23 September 2009

அரசு வேலைக்கு ஆட்கள் தேவை???

9:19:00 AM Posted by புலவன் புலிகேசி 8 comments
இந்த பதிவு விகடனின் நல்ல பதிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது..


எனது முந்தைய பகிர்வான "பள்ளி செல்ல ஆசையின்" தொடர்ச்சிதான் இது.....

"தமிழ்நாடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்றும் 6 லிருந்து 60 வரையிலானவர்கள் பதிவு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்".

ஆனால் இந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலை பெறுபவர்கள் பெரும்பாலும் ஆசிரியர் பணிக்குத் தான்.

அவர்கள் பணிநியமனம் செய்யப் படும் முறை சரிதானா என விவாதிப்போம்...

பதிவு செய்தவர்களின் வரிசைப் பட்டியல் மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யப் படுகின்றனர். ஒருவர் வேலை பெற வேண்டுமானால் அவர் அதற்கான கல்வித் தகுதி மட்டும் பெற்றிருந்தால் போதுமா???

இப்போது உள்ள பல அரசுப் பள்ளிகளில் "கல்வியின் தரம்" எவ்வாறு உள்ளது. நானும் அரசுப் பள்ளியில் பயின்ற ஒரு மாணவன் தான். எனது அனுபவத்திலிருந்து ஒரு எடுத்துக்காட்டு.

நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு கணித வகுப்பெடுத்த "அருணாசலம்" என்ற ஆசிரியர் தான் வகுப்பிற்கு வந்த முதல் நாள் எங்களிடம் கூறிய வார்த்தை "நீங்கள் தேர்ச்சி பெற 35 மதிப்பெண் பெற்றால் போதும். அதற்கு தேவையான பகுதிகளை மட்டும் உங்களுக்கு சொல்லித் தருகிறேன் அது போதும் என்றார்."

இன்னொரு தமிழாசிரியர் "சிங்காரம்" நான் உங்களுக்கு இலக்கணம் சொல்லித் தர வேண்டுமானால் ஒவ்வொரு மாணவனும் "25 ரூபா தர வேண்டும் என்றார்".

இவர்கள் அரசிடம் சம்பளம் வாங்கவில்லையா??? இவர்களின் மொத்த வேலை நேரம் ஒரு நாளைக்கு 4 மணி நேரம். இதைக் கூட சரியாக செய்ய முடியவில்லையா???

இத்தகைய பொறுப்பற்றவர்கள் ஆசிரியர்களாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் தேர்வு செய்யப் பட்ட முறை தான்.


ஆசிரியர்கள் தேர்வு செய்யப் படும் பொழுது தனியார் நிறுவனங்களில் நடப்பது போல் அல்லது வங்கி தேர்வுகளைப் போல் தேர்வு வைக்கப் பட்டு பின்னர் அவர்களின் தகுதியின் அடிப்படையிலும் , திறமையின் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப் பட்டால் தகுதியானவர்கள் ஆசிரியர்களாக வருவார்கள். கல்வியின் தரமும் உயரக் கூடும்.

தனியார்ப் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளிகளும் மாணவர்களின் தரத்தை உயர்த்தலாமே!!!

ஆசிரியர்கள் என்பதை விட தான் ஒரு மனிதன் என்பதை உணர்ந்து தன்னை கேட்பதற்கு யாருமில்லை என்றாலும் என் பணியை நான் சிறப்பாக செய்வேன் என பணியாற்றி வரும் ஒரு சில ஆசிரியர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் (என் பார்வையில் "மோகன்தாஸ்". எனது பனிரெண்டாம் வகுப்பு கணித ஆசிரியர்.)

உங்கள் கருத்து???

8 விவாதங்கள்:

vasu balaji said...

சரியான கருத்துக்கள் ஐயா. அப்படியே ஒரு சிலர் அக்கரையாய் சொல்லிக் கொடுத்தாலும் ஒரு சில பெற்றோர்களால் அலக்கழிக்கப் படுவதும் நடைமுறையாகி விட்டது

புலவன் புலிகேசி said...

ஆம் நிச்சயம் பெற்றோர்களுக்கும் பொறுப்பிருக்கிறது.

வெளியூர்க்காரன் said...

விடுங்க புலி சார்...
நம்ம விஜயகாந்த் அண்ணேன் ஆட்சிக்கு வந்துட்டா எல்லாம் சரியாய்டும்..

புலவன் புலிகேசி said...

விஜயகாந்த் அண்ணே இல்ல.....யார் வந்தாலும் மனுசனா இருந்தாதான் இது நிறைவேறும்..........

க.பாலாசி said...

சிந்திக்க வேண்டிய பகிர்வு அன்பரே...

முதலில் உங்களுக்கு இதைபோன்ற ஆசிரியர்கள் அமைந்ததற்கு எனது அனுதாபங்கள்...

இரண்டாவது நீங்கள் சொல்வதுபோல் எல்லா ஆசிரியர்களும் இவர்களைப் போல் இல்லை...

மூன்றாவது தாங்கள் கூறிய ஆசிரியரை தேர்தெடுக்கும் முறை நடைமுறைக்கு வந்தால் நல்லதுதான்.

இப்போதுள்ள ஆசிரியர்கள் பெரும்பாலானோர் லஞ்சம் கொடுத்தே அந்த வேலைக்கு வந்தவர்கள். அதனாலையே அவர்களின் கற்பிக்கும் தரம் கேள்விக்குறிதான்.

நல்ல இடுகை நண்பரே....

புலவன் புலிகேசி said...

//ஆசிரியர்கள் என்பதை விட தான் ஒரு மனிதன் என்பதை உணர்ந்து தன்னை கேட்பதற்கு யாருமில்லை என்றாலும் என் பணியை நான் சிறப்பாக செய்வேன் என பணியாற்றி வரும் ஒரு சில ஆசிரியர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் (என் பார்வையில் "மோகன்தாஸ்". எனது பனிரெண்டாம் வகுப்பு கணித ஆசிரியர்.)//

நன்றி நண்பரே!!! நானும் அனைத்து ஆசிரியர்களையும் சொல்லவில்லை.

Anonymous said...

As you said, The Teachers should be selected only by their Talent,Skills,Experience is important. if it is stabilize i will be also welcome. Bcoz any one never become without knowledge.

புலவன் புலிகேசி said...

Anonymous: நன்றி நண்பரே!!!