கடவுளை மற..மனிதனை நினை..

19 September 2009

பள்ளி செல்ல ஆசை!!!...............

9:21:00 AM Posted by புலவன் புலிகேசி 17 comments

அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டம் எந்த அளவிற்கு வெற்றியடைந்துள்ளது எனப் பார்ப்போம்....

தமிழகத்தில் அடிப்படைக் கல்வி கூட கிடைக்காத குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு??? தமிழக அரசு அறிவித்த "அனைவருக்கும் கல்வித் திட்டம்" அவர்களை சென்று சேர வில்லையா???

நிச்சயம் சேர்ந்திருக்கிறது.. ஆனால் அந்த திட்டத்தில் தான் குறைபாடு உள்ளது. என்ன குறைபாடு என விவாதிப்போமா???

எனது முந்தைய பகிர்வான "பிச்சைகாரனின் பிள்ளைகளை" படிக்காதிருந்தால் படித்துவிட்டு தொடருங்கள்...(இந்த பகிர்வுக்கும் அதற்கும் தொடர்பு உள்ளது.)

நம் அரசு மக்களுக்கு நல்லது செய்வதாக காட்டிக் கொள்வதற்காக அறிமுகப் படுத்தியது போல் தோன்றுகிறது இந்தத் திட்டம். உண்மையில் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு முன் அதற்கான மூல காரணம் அறியப்பட வேண்டும்.

இங்கு மூல காரணம் என்னவென்றுப் பார்த்தால் வறுமை. ஒரு குழந்தை நல்ல கல்வி பெற வேண்டுமென்றால் அதற்கு நல்ல உணவு,உடை போன்றவைகளுடன் பெற்றவர்களின் ஆதரவும் தேவை.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் படிக்க வரும் குழந்தையின் குடும்பத்தின் வறுமையை போக்க என்ன வழி என்பதையும் இந்த அரசு யோசித்திருக்க வேண்டும் (கல்வி அறிவில்லாதவர்கள் ஆட்சி நடத்தும் பொழுது நாம் இதை எதிபார்ப்பது தவறு தான்).

குழந்தை தொழிலாளர் முறையை அரசு குற்றம் என சொல்லுகிறது. "நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை அதிகாரிகளுக்கு தேநீர் வாங்கி வருவது ஒரு 8 வயது குழந்தை???"

குற்றப் பதிவு செய்தால் தான் அதைப்பற்றி கருத்தில் எடுத்துக் கொள்ளுமோ காவல் துறை??? காவலாளிகள் மனிதர்கள் இல்லையோ???(அனைத்துக் காவலர்களையும் சொல்லவில்லை)

பொது மக்களாக நம்மால் செய்ய முடிந்தது குறைந்தது ஒரு அனாதை குழந்தைக்காவது நமது ஓய்வு நேரத்தில் குறைந்த பட்ச கல்வியையாவது கொடுக்க முயற்சி செய்யலாமே!!!

உங்கள் கருத்துக்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்!!!

17 விவாதங்கள்:

ஊடகன் said...

// குழந்தை தொழிலாளர் முறையை அரசு குற்றம் என சொல்லுகிறது. "நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை அதிகாரிகளுக்கு தேநீர் வங்கி வருவது ஒரு 8 வயது குழந்தை???" //

நெத்தியடி நண்பரே ...........!

புலவன் புலிகேசி said...

நன்றி நண்பரே!!!

அகல்விளக்கு said...

//பொது மக்களாக நம்மால் செய்ய முடிந்தது குறைந்தது ஒரு அனாதை குழந்தைக்காவது நமது ஓய்வு நேரத்தில் குறைந்த பட்ச கல்வியையாவது கொடுக்க முயற்சி செய்யலாமே!!!//


இதை பேச்சளவோடு நிறுத்தாமல்
நிச்சயம் செய்வோம் நண்பா...

புலவன் புலிகேசி said...

நன்றி நண்பரே!!! நானும் தொடருகிறேன்.........

vasu balaji said...

நல்ல கருத்துக்கள். செய்யலாமே.

புலவன் புலிகேசி said...

நன்றி நண்பரே!!!

வெண்ணிற இரவுகள்....! said...

கலக்குறிங்க புலி

ஹேமா said...

அருமையான சமூகச் சிந்தனை.மற்றைய பதிவுகளையும் பார்க்கவேண்டும் மீண்டும் வருவேன்.

புலவன் புலிகேசி said...

நன்றி தோழியே!!!

Anonymous said...

thala whts happening turning into a social workers, let me know if you start a political party.

பழமைபேசி said...

உருக்கமா இருக்கு.... நன்றியும் வாழ்த்துகளும்!

புலவன் புலிகேசி said...

பழமைபேசி: நன்றி நண்பரே!!!
Anonymous: Am not going to start a politicla party. Just wanted to help the people as a people

butterfly Surya said...

பெருந்தலைவர் காமராஜர் செய்யாத திட்டங்களா..?? அவரும் பெரிய கல்வி அறிவு இல்லாதவரே..??

கல்வி அறிவில்லாதவர்கள் ஆட்சி நடத்தும் பொழுது நாம் இதை எதிபார்ப்பது தவறு தான்/////

சுயநல அரசியல்வாதிகள் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்..

புலவன் புலிகேசி said...

காமராஜர் ஒரு சிறந்த படிக்காத மேதை. நான் அவரை இக்கால சுயநல அரசியல்வாதிகளுடன் ஒப்பிட விரும்ப வில்லை. அரசியல்வாதி என்பதே கெட்டவார்த்தையாக மாற்றப்பட்டிருப்பதால் அந்த வார்த்தை காமராஜருக்கு பொருந்தாது (அவர் ஒரு மனிதநேயம் மிக்க மனிதர் அவ்வளவுதான்) . தவறாக நினைக்க வேண்டாம்.

அன்புடன் மலிக்கா said...

அருமை அருமை அருமை, சமூக சிந்தனையில் வரிகள் மிக தெளிவு, விடாது எழுதுங்கள் தொடர்ந்து படிக்கிறோம்

புலவன் புலிகேசி said...

//அருமை அருமை அருமை, சமூக சிந்தனையில் வரிகள் மிக தெளிவு, விடாது எழுதுங்கள் தொடர்ந்து படிக்கிறோம்//

நன்றி நண்பரே!!!

Anonymous said...

படிக்காத மேதை இதற்கு அர்த்தம் புரியவில்லை ............. காமராஜர் தான் செய்த பணிகளில் இருந்து பல விடயங்கள் கற்றுக்கொண்டார்........... பட்டப்படிப்பு முடித்தவர்கள் அனைவரும் படித்தவர் ஆகமுடியுமா ..... படிப்பு என்பது நிகழ்வு அல்ல அது வாழ்கை.....