கடவுளை மற..மனிதனை நினை..

16 September 2009

பேருந்துக்குள் பிரளயம் (அவதியில் பொதுமக்கள்)

9:18:00 AM Posted by புலவன் புலிகேசி 11 comments

தமிழக அரசாங்கம் சாலை போக்குவரத்தில் சாதனைகள் புரிந்துள்ளதாக கூறிக்கொள்கிறது. இது உண்மையா??? என சிந்தித்து பார்ப்போம்.

தமிழக அரசாங்கம் நிறைய புதியவகை பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சொகுசுப் பேருந்துகளும், குளிர் சாதன பேருந்துகளும் ஏழைகளுக்கு எந்த விதத்தில் உதவி செய்ய முடியும்???

ஏழைகள் பயணம் செய்வதற்கு உகந்த "வெள்ளை நிற பலகை" பேருந்துகளின் எண்ணிக்கை எவ்வளவு???

அதுவும் காலை மற்றும் மாலை வேளைகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பேருந்துகளை காண்பது அரிதாகி விட்டது. வெள்ளை நிற பேருந்துகளில் M என்று ஒரு எழுத்தை சேர்த்துக் கொண்டு அதற்கு 1 ரூபாய் அதிகப் படுத்தியுள்ளது.

சரி இவ்வளவு வருமானங்களை அள்ளித் தரும் இந்த பேருந்துகளின் பராமரிப்பு???


இந்த அரசாங்கம் பேருந்து பராமரிப்புக்கு ஒதுக்கும் நிதி அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் தான் சென்றடைகிறது. பேருந்துக்கோ, பொது மக்களுக்கோ வருவதில்லை.

ஒவ்வொரு பேருந்தின் தினசரி லாபத்தில் 10% ஒதுக்கினால் போதும், அனைத்து பேருந்துகளும் தனியார் பேருந்துகளை போல் சிறப்பாகவும் மக்களுக்கு தொந்தரவு இல்லாமலும் செயல்பட முடியும்.

நம்மை போன்ற பொது மக்களுக்கும் இந்த பேருந்து பராமரிப்பில் பங்கு உள்ளது. பேருந்தை சேதப்படுத்தும் கல்லுரி மற்றும் பள்ளி மாணவர்கள் (அ) பொதுமக்கள் முதலில் தண்டிக்கப் படவேண்டும் (சேதாரத்தொகை வசூலிக்கலாம்).

இது சம்மந்தமாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கலாம்??? எப்போது என் இந்தியா சிங்கப்பூர் ஆக மாறும்???

11 விவாதங்கள்:

Ram said...

Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

Anonymous said...

Neengal sollum antha abaratha thogaium kuda manthiriyin accountuku thaan pogum yenbathai marakatheer nanbarey.

வானம்பாடிகள் said...

சமூக அக்கறையுடன் கூடிய உங்கள் படைப்புகள் பாராட்டத் தக்கவை. தொடருங்கள் அன்பரே

புலவன் புலிகேசி said...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. என்னால் இந்த உலகுக்கு எதாவது செய்ய முடியும் என்ற எண்ணத்தில் இந்த வலையை தொடங்கியுள்ளேன்.

Robin said...

//எப்போது என் இந்தியா சிங்கப்பூர் ஆக மாறும்???// - பொது மக்கள் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பக்குவத்தை அடையும்போது.

வனம் said...

வணக்க்ம புலிகேசி

தொடருங்கள் நானும் என்னால் இயன்ற கருத்துக்களை, செயல்களை தரத்தயாரக இருக்கின்றேன்

இராஜராஜன்

புலவன் புலிகேசி said...

நன்றி நண்பரே!!!

க.பாலாஜி said...

//ஒவ்வொரு பேருந்தின் தினசரி லாபத்தில் 10% ஒதுக்கினால் போதும், அனைத்து பேருந்துகளும் தனியார் பேருந்துகளை போல் சிறப்பாகவும் மக்களுக்கு தொந்தரவு இல்லாமலும் செயல்பட முடியும்.//

சிந்திக்க வேண்டிய வரிகள்..

மக்களாலும் பேருந்திற்கு சேதம் ஏற்படுவதை சுட்டிக்காட்டியது சிறப்பு...

நல்ல சிந்தனைப் பகிர்வு நண்பா...

புலவன் புலிகேசி said...

நன்றி நண்பரே!!!

நாகா said...

இதெல்லாம் நடக்கற காரியம்ங்களா?

Anonymous said...

My point is the govt should cut the bus fair in Deluxe buses and A/c buses. Bcoz publics are suffer from this bus fair directly everyday itself. Think even in city like chennai some persons like coolie,Painter,Turner,etc., getting a salary just Rs 50 or 60 per day, thats all. But they spend Rs 20 to 25 per day for their up and down travelling . Bcoz today running most of the buses in deluxe. We can't find white board buses and yellow board buses as easily. When we come at bus stop White board and yellow board buses comes only. White board and yellow board buses comes occasionally. So we must spend Rs 20 or 25 as i mentioned before. Everyday they spend like this how they survive their life, How they eat food well, how they spend for other things.

So they show their angry on buses definitly. if this problem to solve Anyway

We must induce the govt to reduce salary for ministers and go to the one part amount from their salary to bus maintenance.

Otherwise instead of that better they provide old buses i think.

Think...
How we save our peoples from bus fair.
After that
we Think together
How we save the bus from public.............
ok.............