கடவுளை மற..மனிதனை நினை..

14 September 2009

பிச்சை காரனின் பிள்ளைகள்.......

9:56:00 AM Posted by புலவன் புலிகேசி 7 comments

மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனது நிலையிலிருந்து தடுமாறும் பொழுது இந்தியாவின் மக்கள் தொகை தவறான முறையில் அதிகரிக்கிறது. இந்த தடுமாற்றம் பணக்காரன் முதல் பிச்சைக்காரன் வரை பொதுவானது. இதில் பணக்காரன் பெரும்பாலும் தப்பித்துக் கொள்கிறான். பிச்சைக்காரனுக்கு யார் சொல்வது கருத்தடை சாதனங்களை பற்றி??? இந்த அரசாங்கம் சொல்லும் வழிமுறைகள் அவனை சென்றடைகிறதா??? அவர்களுக்கு கருகலைப்பு செய்ய எந்த மருத்துவர் தயாராக உள்ளார்??? இந்தியா என்னதான் வளரும் நாடாக இருந்தாலும் பிச்சைகாரர்களின் எண்ணிக்கையிலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் ஏன் பிச்சை எடுக்க வேண்டும் என இந்த அரசாங்கம் எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா??? அப்துல் கலாம் கூட நல்ல பணக்கார குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் தானே சென்று அறிவுரைகள் எல்லாம் சொல்கிறார். இது போன்று பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்காக எதுவும் செய்ய வில்லையே!!! அரசாங்கத்தை சிந்திக்க வைக்க என்ன வழி உள்ளது?????

7 விவாதங்கள்:

ஊடகன் said...

இதுவரை நீங்கள் எழுதிய பதிவுகளிலே மிக சிறந்த பதிவு இதுதான்....
நல்ல யோசனையாகவும் இருக்கிறது.....
- ஊடகன்

வால்பையன் said...

இந்தியாவில் பிச்சை எடுக்க அனுமதி கிடையாது!
அவ்வாறு பிச்சை எடுப்பவர்களை காப்பகத்தில் வைத்து பாதுகாக்க அரசு ஒவ்வொரு வருடமும் பணம் ஒதுக்குகிறது, ஆனால் பணம் எங்கே போச்சுன்னு தான் தெரியல!

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல இடுக்கை இதை படிபவர்கள் ஒரு பிச்சைக்கார குழந்தையை தத்து எடுத்து படிக்க வைக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.இது வெறும் எழுத்தக்களில் மட்டும் இல்லாமல் நாமெல்லாம் செயல்களில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்

அன்பேசிவம் said...

நல்ல பதிவு நண்பா!

அகல்விளக்கு said...

குழந்தைகள் தினத்தன்று, சரியான நெத்தியடி பார்வை.

எனது இடுகையையும் பாருங்கள்.

மழலை எனும் மந்திரச்சொல் - http://agalvilakku.blogspot.com/2009/11/blog-post_14.html

முனைவர் இரா.குணசீலன் said...

அரசாங்கத்தை சிந்திக்க வைக்க என்ன வழி உள்ளது?????


ஒவ்வொரு தனிமனித சுயநலங்களும் சேர்ந்து தான் இப்படி பிச்சைக்காரர்கள் வடிவில் அழைகின்றன நண்பரே..

அன்புடன் அருணா said...

நல்ல வேளை வலைச் சரத்தினால் படிக்கக் கிடைத்தது!