கடவுளை மற..மனிதனை நினை..

24 August 2010

யார் நம்பர் ஒன் டுபாக்கூர்?

10:42:00 AM Posted by புலவன் புலிகேசி , , 11 comments

இது முழுக்க முழுக்க கற்பனையே. யாருடைய மனமாவது புண்பட்டால் சேற்றை அள்ளி புண் மீது வைத்து கை வைத்தியம் செய்து கொள்ளவும்.

இந்தப் போட்டியில் மொத்தம் மூன்று பேர் பங்கேற்கின்றனர். ஒருவர் மிகப்பெரும்புள்ளி அவருக்கு தமிழகத்தில் பெரும் செல்வாக்கு. அவரது பெயர் நிதியமான் இவர் மகன் முசோலினி. இன்னொருவர் அவருக்கு பிஸினஸ் எதிரி. இருவரும் செய்வது ஒரே டுபாக்கூர் பிஸினஸ் தான். இவர் பெயர் செல்வி. இன்னொருவர் புதுசா இந்த பிஸினெஸ் ஆரம்பிச்சிருக்காரு. சினிமாவில் புகழ் வாய்ந்தவர். பெயர் விருட்சிககாந்த்.

இந்த மூவரும் ஒருவரையொருவர் தாக்கியே பெரிய ஆளாக பிஸினஸில் இடம் பெற முயற்சிப்பவர்கள். தாங்கள் செய்யும் டுபாக்கூர்களை நியாயப் படுத்தி பிஸினஸ் செய்கிறவர்கள். (இவிங்க என்ன ரகம்னே தெரியலையா???)

செல்வி: தமிழகத்தில் விலையேற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் பிஸினெசில் இருந்த போது 15 ரூ விற்ற சாப்பாடு இப்போது 50ரூ விற்கிறது.

நிதியமான்: தமிழ்நாட்டப் பத்தி மட்டும் பேசுறீங்க. ஏன் இந்தியாவப் பத்தி பேச மாட்டேங்கறீங்க. அதையும் பத்தி பேசுங்க எனக்கு கொஞ்சம் டைம் பாஸ் (மன்னிக்கனும் நேரம் போகனும். நான் தான் பச்சை மஞ்ச சிவப்பு தமிழனாச்சே) ஆகனும்.

நிதியமான்: டேய் மவனே முசோலினி! இந்தம்மா நெறைய ஊழல் செஞ்சதத் தான் தமிழ் நாட்டுக்கே போட்டுக் காடிருக்கோம்ல. அதனால் அதுல ஒரு கேசுல தொடர்ந்து வாய்தா வாங்கினுக்கீதே. அதக் கண்டிச்சி ஒரு ஆர்ப்பாட்டம் செஞ்சி நாம தப்பிச்சிக்கனும். என்ன புரியுதா?

முசோலினி: சரிப்பா நான் பாத்துக்குறேன்.

முசோலினி: பல ஆண்டுகளாக நடைபெறும் வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கிக் கொண்டிருக்கும் செல்வியை எதிர்த்து ஒரு ஆர்பாட்டம் செய்வோம். நம் நிறுவன தொழிலாளர்கள் எல்லாம் ஒன்று கூடுங்கள். அந்த வாயாடி ராணிக்கு கண்டனம் தெரிவிப்போம்.

செல்வி: என்னைப் பார்த்து வாயாடி என சொல்லி விட்டார்கள். பொறுத்தது போதும் நிர்வாக ஊழியர்களே. பொங்கி எழுங்கள். அவர்கள் கண்டனம் நடத்திய இடங்களில் எல்லாம் நாளை நாம் கண்டனம் நடத்த வேண்டும். அனைவரும் புறப்படுங்கள்.

வாடிக்கையாளர்கள்: நேத்து அந்தாளு கண்டனம். இனைக்கு இந்தாளு கண்டனம். நாம சோத்துக்கில்லாம திண்டாடிக் கிட்டிருக்கோம். இதுக்கு ஒன்னும் பண்ணக் காணோம். ஆனா இவிங்க ரெண்டு பேரும் நல்லாவே அடிச்சிக்கிறாங்கே.

(அடுத்த பிஸினஸ் கூட்டனி குறித்த விவாதங்கள் வருகின்றன)

செல்வி: தம்பி நீங்க நம்ம கூட சேந்து பிஸினெஸ் செய்யனும். ஏத்துக்குவீங்கன்னு நம்பறேன். அப்பத்தான் அந்த நிதியமானுக்கு ஒரு பாடம் புகட்ட முடியும்.

விருச்சிககாந்த்: அப்புடி வாங்க. போன தடவ நான் தனியா பிஸினஸ் செய்யலாமுன்னு வந்தப்போ உங்க பிஸினஸ் முழுசா பாதிச்சி தோத்து போனீங்க. அந்த பயம் இருக்கட்டும். நான் உங்க கூட பிஸினஸ் செய்யனும்னா ஒரு கண்டிசன். "எனக்கு நீங்க பிஸினஸ்ல துணைத்தலைவர் பதவி கொடுக்கனும்". இதுக்கு சம்மதம்னா மேல பேசலாம்.

வாடிக்கையாளர்கள்: செம காமெடிம்மா!

(பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது.)

விருச்சிககாந்த்: என்ன நம்மள அந்தாளு கூப்புடவே மாட்டேங்கறாரே? சரி நாமளா ஒரு அறிக்கைய உடுவோம். "செல்வி, நிதியமான் இவர்கள் இருவருமே ஊழல் பெருச்சாளிகள். அதனால் அவர்களுடன் கூட்டு வைத்து சாப்பிட...ச்சீ அவர்களுடன் கூட்டு வைத்து பிஸினெஸ் செய்ய மாட்டேன்."

நிதியமான்: என்னை ஊழல் பெருச்சாளி என சொல்லும் இவர் சினிமாவில் நடித்த போது வாங்கிய சம்பளங்களுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. என்னைப் பற்றி பேச இந்த ஊழல்வாதிக்கு என்ன தகுதி இருக்கிறது.

வாடிக்கையாளர்கள்: "பாம்பின் கால் பாம்பறியும்"-னு சொல்லுவாங்களே அது இதுதானோ???

விருச்சிககாந்த்: பொறியல்...அடச்சே! கூட்டு குறித்து எனது இறுதி அறிக்கை இது. "என்னைத் தலைமையாக ஏரற்கும் முதலாளிகளுடந்தான் நான் கூட்டனி வைப்பேன்."

வாடிக்கையாளர்கள்: யம்மா முடியலப்பா. 2010-ட செம காமெடியன் இவுருதான். என்னமா கமெடி செய்யுறாரு...எப்பவுமே மப்புலதாம்பா அறிக்கை உடுறாரு.


11 விவாதங்கள்:

Unknown said...

நல்ல முயற்சி.

ஜெயசீலன் said...

குசும்பு....

Anonymous said...

//யார் நம்பர் ஒன் டுபாக்கூர்? //

இதுல சந்தேகமே வேண்டாம் புலவரே. நீங்கதான் எப்பவும் நம்பர் ஓன் டுபாக்கூர்.

புலவன் புலிகேசி said...

ஓ நான் நம்பர் ஒன்னா? ரொம்ப சந்தோசம். நான் அனானிகளுக்கு இப்படித்தான் பதிலளிப்பேன். பெரிதாக எடுத்துக் கொள்ள் மாட்டேன்.

சசிகுமார் said...

அருமை நண்பா

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னைத் தலைமையாக ஏரற்கும் முதலாளிகளுடந்தான் நான் கூட்டனி வைப்பேன்."

//

எப்படியும் பிடிச்சிருவாங்க ஆட்சிய 2199 ல ... அப்பாடா அத பாக்க நான் இருக்கமாட்டேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

நீங்கதான் எப்பவும் நம்பர் ஓன் டுபாக்கூர்.

//

அடப்பாவி அனானி.. புலிகேசி டுபாக்கூருன்னா நம்ம நாட்டில இருக்கிற வெள்ளை சட்டை வேட்டியெல்லாம் என்னன்னு சொல்லுவீங்க...

'பரிவை' சே.குமார் said...

நல்ல முயற்சி.
குசும்பு அதிகமுன்னாலும் பல இடங்களில் உண்மை பேசுகிறது.

Chitra said...

வாடிக்கையாளர்கள்: செம காமெடிம்மா!

...:-)

Unknown said...

Idhu matteru

கமலேஷ் said...

ரைட்டு...