கடவுளை மற..மனிதனை நினை..

22 August 2010

என்ன கைய புடிச்சி இழுத்தியா?

11:14:00 AM Posted by புலவன் புலிகேசி , , 12 comments

ஒரு விவாதத்தை முன்னிருத்தி பதிவெழுதும் போது அதற்கெதிரான விவாதங்கள் வருவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது மற்றும் வரவேற்கத் தக்கது. அந்த விவாதங்களின் மூலம் பதிவெழுதியவரும், விவாதம் செய்பவர்களும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து தெளிவு பெற முடியும்.

ஆனால் இன்று ஒரு விவாதம் துவங்கினால் அதை முற்றிலும் திசைத் திருப்பும் நோக்கில் பல்ர் செயல்படுகின்றனர். அந்த விவாதத்தையே சீர்குலைத்து விடுகின்றன அவர்களின் கருத்துக்கள். நீ முன்னாடி இப்புடி எழுதுன. இந்த மாதிரி கிரிக்கெட் பத்தி எழுதுன. அப்பறம் உன் கூட சண்டை போட்ட ஒரு பதிவரை திட்டுன என தற்போதைய விவாதத்தை விட்டு விட்டு முழுக்க முழுக்க திசைத் திருப்பி விட்டு ஆரோக்யமான விவாதத்தை சீர் குலைத்து விடுகின்றனர்.

15 வருடங்களுக்கு முன்னர் என்னிடம் உன் வயது என்ன என கேட்டவர்களிடம் 11 என சொல்லிக் கொண்டிருந்தேன்.

இபோதும் 11 என சொல்ல முடியுமா?
பிறந்த பொழுது உங்கள் அனைவருக்கும் அரசியல் தெரிந்து விட்டதா?
வேலை கிடைத்து விட்டதா?
நீங்கள் எழுதும் பதிவுலகம் புரிந்து விட்டதா?

இவையனைத்துடும் மாற்றங்களால் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன. அந்த மாற்றங்கள் வேண்டாம் என நினைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்.

இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாமலிருப்பது. அதை மறுப்பதற்கு யாராவது தயாரா? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீ மாற்றமடைந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இப்பல்லாம் எழுதாத ஒரு வருசம் கழித்து எழுது. அப்புடி எழுதுனாக் கூட நாங்க ஒரு வருசத்துக்கு முன்னாடி நீ எழுதுனத சுட்டிக் காட்டுவோம். விவாதிக்க வேண்டிய விடயத்திற்குள் வரவே மாட்டோம் என்பது ஆரோக்யமான விவாதமா?

அடுத்து தோழர்கள் அல்லது யாருடனாவது பிரச்சினை என வைத்துக் கொள்வோம். அவர்களை போல் சில ஒத்தக் கருத்துக்களுடன் இன்னொருவர் பதிவெழுதும் போது அவர்களையும் அந்த தோழர் லிஸ்ட்டில் சேர்த்து வைத்துக் கொண்டு எழுதிய கருத்தை விட்டு விட்டு "தோழர் தோழர்" என கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால் வடிவேல் ஒரு படத்தில் பஞ்சாயத்தில் நின்று "என்ன கைய புடிச்சி இழுத்தியா?" என கூறி அனைவரையும் கிறுக்கு பிடிக்க வைப்பது போல் உள்ளது.

நேரடி விவாதத்திற்கு கைடைசி வரை இவர்கள் வரப்போவதில்லை. அப்புறம் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தின் ஃபோரத்தில் மட்டுமே கும்மியடிப்பார்கள். கவனிக்க அப்போது கூட விவாதம் செய்ய மாட்டார்கள். அதை விட பெரிய பொதுவெளியான வலைப்பூவிற்கு அழைத்தால் பலர் காணாமற் போய் விடுகிறார்கள்.

அப்படியே விவாதத்திற்கு வந்தாலும் அது வெறும் வெட்டி விவாதமாகவே இருக்கிறது. பதிவின் கருத்து சம்மந்தமான ஆரோக்யமான விவாதமாக இருப்பதில்லை. இது போன்ற வெட்டி விவாதங்கள் தேவையா?

பன்னாடை பிரச்சினையில் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார், மாறி விட்டார் என சொல்லிக் கொண்டிருக்கும் இவர்கள் ஏன் என்னுடைய ஆரோக்யமான மாற்றத்தை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அவர்களால் என் கருத்து சரி என்றாலும் ஏற்றுக் கொள்ளும் மனபாவம் இல்லாததாகவே தெரிகிறது.

இப்படியே கும்மி மட்டும் அடித்துக் கொண்டிருங்கள். பதிவுலகம் முழுக்க நீங்கள் கொட்டும் குப்பைகள் மட்டுமே நிறைந்திருக்கும்.

நன்றி!


12 விவாதங்கள்:

மதன் said...

சரி விடுங்க பாஸு ஏதோ தமாசுக்கு பண்ணிட்டாங்க போல, நீங்க சூடாகாதீங்க்....

எண்ணங்கள் 13189034291840215795 said...

இவர்கள் ஏன் என்னுடைய ஆரோக்யமான மாற்றத்தை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அவர்களால் என் கருத்து சரி என்றாலும் ஏற்றுக் கொள்ளும் மனபாவம் இல்லாததாகவே தெரிகிறது.

--------------------

ஏற்க முடியாமல் இல்லை. எல்லாம் ஈகோதான் காரணம்.


இப்படி ஒரு பதிவு எழுத வைத்ததே அவர்களுக்கு வெற்றியும்.. விட்டுத்தள்ளுங்கள் குப்பையை...

வழமை போல நல்ல கருத்துகளை பரப்பிடுங்கள்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

தோழர்கள் அல்லது யாருடனாவது பிரச்சினை என வைத்துக் கொள்வோம். அவர்களை போல் சில ஒத்தக் கருத்துக்களுடன் இன்னொருவர் பதிவெழுதும் போது அவர்களையும் அந்த தோழர் லிஸ்ட்டில் சேர்த்து வைத்துக் கொண்டு எழுதிய கருத்தை விட்டு விட்டு "தோழர் தோழர்" என கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர்

---------------------

சொன்னவர் மன்னிப்பு கேட்டதால் மன்னிக்கலாமே..

மரா said...

// அப்புறம் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தின் ஃபோரத்தில் மட்டுமே கும்மியடிப்பார்கள். கவனிக்க அப்போது கூட விவாதம் செய்ய மாட்டார்கள். அதை விட பெரிய பொதுவெளியான வலைப்பூவிற்கு அழைத்தால் பலர் காணாமற் போய் விடுகிறார்கள்//

அண்ணே நாங்கல்லாம் ரெம்ப புத்திசாலிண்ணே..பில்டர் போட்றுவோம்(ஆராச்சும் புத்திசாலித்தனமா கேள்வி கேட்டா !!)

ஜானகிராமன் said...

விடுங்க புலிகேசி. அவர்கள் ஆக்கப்பூர்வமாக விவாதிக்காமல், திசைதிருப்புவதே, அவர்கள் பக்கம் அறம் இல்லை என்பதை உறுதிசெய்துவிடுகிறது. எல்லாரும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

ஜெயசீலன் said...

இது சம்மந்தம் இல்லாம அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் புலிகேசி...

ஜெயசீலன் said...

இது சம்மந்தம் இல்லாம அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் புலிகேசி...

நிகழ்காலத்தில்... said...

ஆரோக்கியமான விவாதத்திற்கு வெகுசிலரே தயாராக இருக்கின்றனர்.

ஆகவே நம் எதிர்பார்ப்பை மாற்றிக்கொள்வதுதான் சிறப்பு:)

அன்புடன் நான் said...

உங்க மனசுக்கு எது சரின்னு படுதோ அத செய்யுங்க ....

ஹேமா said...

எப்பவும்போல உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன் புலவரே.

Anonymous said...

உங்க பன்னாடைப் பதிவுலகத்தில இதுவரையில ஏதாவது ஒரு விவாத்ததுக்கு தீர்வு கண்டிருக்கிறீங்களாய்யா? அல்லது எவனாவது விவாதம் செய்யும்போது அடுத்தவன் சொல்லுறதும் சரியா இருக்கலாம் என்றாவது குறைந்தபட்சம் யோசித்திருக்கிறீர்களா? நான் சொல்றது சரி, அதை அடுத்தவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற பாங்கில்தானே உங்கள் விவாதங்கள் எல்லாம்? போங்கையா நீங்களும் உங்க பதிவுலகமும். நல்லா வாயில வருது

Anonymous said...

அட ஒரு காமெடிபீஸே
காமெடி செய்கிறதே!