கடவுளை மற..மனிதனை நினை..

22 August 2010

நேதாஜியும் விடுதலைப் போராட்டமும்

5:57:00 PM Posted by புலவன் புலிகேசி , , , 20 comments

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரின் போராட்டங்கள் தன்னைக் காத்துக் கொள்வதற்காக அல்ல. இந்திய மக்களை காப்பதற்காக மட்டுமே இருந்தது. பாரத திருநாட்டை 200 ஆண்டுக் காலம் அடிமைப் படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

23 வது வயதில் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்ட இவர் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் கிடைத்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்ற முற்பட்டு காந்தியின் எதிர்ப்பால் தோல்வியைத் தழுவினார். ஆனால் 1929ம் ஆண்டு நேரு தலைமையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

1938ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தனது 41வது வயதில் நியமிக்கப் பட்டார். 1939ம் ஆண்டு தேர்தலில் மகாத்மா காந்தியால் நிறுத்தப்பட்ட பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்தார். பட்டாபியின் தோல்வி தன் தோல்வி என காந்தி கூறியதாம் மன வருத்தமடைந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் திரிபூரியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவிற்கு அடுத்த ஆறு மாதங்களில் பிரிட்டிஷ் அரசு முழு விடுதலை அளித்துவிட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற நேதாஜி முயன்றார். ஆனால் காந்தியவாதிகளின் எதிர்ப்பால் தோல்வியடைந்தது. காந்தியுடனான பிரச்சினைகளால் தலைவர் பதவியிலிருந்து நேதாஜி விலகினார்.

கட்சிக்குள்லேயே ஒரு முற்போக்கு அணியைத் தொடங்கினார். அதற்கு ஆதரவு வலுத்தது. காங்கிரஸ் கட்சியில் எந்த பொறுப்பும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நேதாஜி வகிக்க கூடாது என தலைமை முடிவெடுத்தது. இந்நிலையில் தான் 2ம் உலகப் போர் மூண்டது. வெள்ளையரை எதிர்த்து முற்போக்கு அணியினர் கடு பிரச்சாரம் செய்தன்ர்.

1940ம் ஆண்டு நேதாஜி சிறையிலடைக்கப் பட்டார். தன்னை விடுவிக்காவிடில் இங்கேயே பட்டினி கிடந்து சாவென் என அவர் சொன்னதால். பிரிட்டிஷ் அவரை வீட்டுக் காவலில் அடைத்தது. 1941 ஜனவரி 14 அன்று வீட்டுக் காவலில் இருந்து தப்பினார் நேதாஜி.

1943-ஆம் ஆண்டு அவருடைய கனவு நிறைவேறியது. ஜெனரல் மோகன் சிங் தலைமையில் துவக்கப்பட்டு ஆனால் செயல்படாமல் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் சுணங்கி கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு உயிர்கொடுத்தார்.

1944 ஆம் ஆண்டு தனது தலைமையகத்தை பர்மா தலைநகர் ரங்கூனுக்கு மாற்றிக்கொண்டார் நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்திற்கு நிதியுதவியும், பொருளுதவியும் தாராளமாக வழங்குமாறு நேதாஜி விடுத்த வேண்டுகோளை ஏற்று சிங்கப்பூர், மலேசியா, பர்மா நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் மனமுவந்து பெரும் அளவில் நிதியுதவி செய்தனர்.

பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய உரை என்னவெனில்

"அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது - எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி :"

ஆனால் இந்திய தேசிய ராணுவத்தின் வெற்றியை அப்போது பெய்த பெருமழை தடுத்ததுடன் தோலிவியடைய செய்தது. ஆனால் அப்போது நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்காக உரையாற்றினார்.

"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. . . விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"

இதை அவர் சொன்னது ஆகஸ்ட்-15 1945ம் ஆண்டு சரியாக அதிலிருந்து 2 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரமடைந்தது. ஆனால் நேதாஜியின் விருப்பம் போல் இல்லாமல் இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடாக.

இப்படியெல்லாம் நேதாஜி போன்றவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத்தந்த சுதந்திரத்தின் இன்றைய நிலையும் அதை நாம் காக்க வேண்டிய கடமையும் புரியாமல் திரிகிறோம்.


20 விவாதங்கள்:

Unknown said...

நேதாஜி, பிரிடிஷ் ஏகாதிபத்யத்தை அழிக்க இன்னொரு நாஸி ஏகாதிபத்ய விரும்பி ஹிட்லருடன் கை கோர்த்தார். நல்ல வேளை அது வெற்றியடையவில்லை.

நேதாஜியின் உரை ஒன்றில் எப்போதோ படித்தது - பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் மரணதண்டனையில் காந்திக்கும் பங்கு உண்டென்று. அந்த ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறென். கிடைத்ததும் பகிர வேண்டும். நேதாஜி காந்திக்கு வைத்த பெயர் - மென்மையான மனம் படைத்த சர்வாதிகாரி.

மற்றபடி நேதாஜி காணாமல் போனதில் கூட காந்தியின் கை இருப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது.

புலவன் புலிகேசி said...

அந்த சர்வாதிகாரியுடனான பேச்சு தோல்விக்கு காரணம் இந்தியாவை முழு சுதந்திர நாடாக்க வேண்டும் என நேதாஜி கேட்டமைக்கு முடியாஹ்டு என சொன்னதுதான்.

யூர்கன் க்ருகியர் said...

Nethaji is great person! thx for this article. i liked it.

யூர்கன் க்ருகியர் said...

Nethaji is great person! thx for this article. i liked it.

Prathap Kumar S. said...

//நேதாஜியின் உரை ஒன்றில் எப்போதோ படித்தது - பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் மரணதண்டனையில் காந்திக்கும் பங்கு உண்டென்று. அந்த ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறென். கிடைத்ததும் பகிர வேண்டும். நேதாஜி காந்திக்கு வைத்த பெயர் - மென்மையான மனம் படைத்த சர்வாதிகாரி.
மற்றபடி நேதாஜி காணாமல் போனதில் கூட காந்தியின் கை இருப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது.//

அப்படியா...?? புதிய தகவல்களாக இருக்கிறது. இதைப்பற்றி நானும் ஆராய்கிறேன்....

Prathap Kumar S. said...

//நேதாஜியின் உரை ஒன்றில் எப்போதோ படித்தது - பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் மரணதண்டனையில் காந்திக்கும் பங்கு உண்டென்று. அந்த ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறென். கிடைத்ததும் பகிர வேண்டும். நேதாஜி காந்திக்கு வைத்த பெயர் - மென்மையான மனம் படைத்த சர்வாதிகாரி.
மற்றபடி நேதாஜி காணாமல் போனதில் கூட காந்தியின் கை இருப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது.//

அப்படியா...?? புதிய தகவல்களாக இருக்கிறது. இதைப்பற்றி நானும் ஆராய்கிறேன்....

மதுரை சரவணன் said...

thanks for sharing. good article.

எல் கே said...

//மற்றபடி நேதாஜி காணாமல் போனதில் கூட காந்தியின் கை இருப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது.//

உண்மை. நானும் படித்தேன் எதோ ஒரு புத்தகத்தில்

Thenammai Lakshmanan said...

நேதாஜியைப் பற்றி அறியாத தகவல்கள் .. நன்றி புலவரே

'பரிவை' சே.குமார் said...

நேதாஜி... சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களில் முக்கியமானவர். அவர் குறித்த இந்த பதிவு மிகவும் அருமை நண்பா. எல்லோரும் அறிய வேண்டிய பகிர்வு இது.

பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

Very good article. Thanks.

Unknown said...

//அந்த சர்வாதிகாரியுடனான பேச்சு தோல்விக்கு காரணம் இந்தியாவை முழு சுதந்திர நாடாக்க வேண்டும் என நேதாஜி கேட்டமைக்கு முடியாஹ்டு என சொன்னதுதான்//

பேச்சு தோல்வியடையவில்லை புலிகேசி, ஹிட்லர் தோல்வியடைந்து விட்டார்.

புலவன் புலிகேசி said...

ஹிட்லர் தோல்வியடையும் முன் பேச்சு நடை பெற்றது முகிலன். ஆனால் ஹிட்லர் ஒப்புக் கொள்ளவில்லை.

Anonymous said...

வாழ்த்துகள் தோழர். நீங்க புர்ச்சிகாரர் ஆனவுடன் நேதாஜி போன்ற புர்ச்சிகாரர்களைப் பற்றி எழுதத் துவங்கிட்டீங்க. சமூக மாற்றம் முதலில் உங்களிடம் இருந்தே துவங்குவது ஒரு மிகச் சிறந்த அறிகுறி.

Anonymous said...

அன்று அவர் செய்தது விடுதலை போராட்டம். இன்று தமிழர் செய்தால் திவிரவாதிகள்.

Unknown said...

அன்பிற்கினிய நண்பரே..,

நேதாஜி..எனக்கு மிகவும் பிடித்த தலைவர்களுள் ஒருவர். தமிழ்நாட்டில் சுபாஷ் மற்றும் அம்பேத்கார் போன்ற தேசியத் தலைவர்களை ஜாதிக்குள் நுழைத்து விட்டார்களே..

ஒரு ஒற்றுமை - காந்திக்கு இவர்கள் இருவரும் அறவே பிடிக்காது...

மிகவும் நல்ல பதிவு... இதைப்போல இன்னும் பல பதிவுகளை எழுதுங்கள் - இன்னும் விரிவாக.

நன்றி.......

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..,
அன்புடன்...ச.ரமேஷ்.

ஜெயசீலன் said...

முதலில் இதை மறுபடியும் நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி...

இரண்டாவது நீங்கள் சொன்னது போல் நாம் கிடைத்த சுதந்திரத்தை வீணடிக்கிறோம்....

பகிர்ந்தமைக்கு நன்றி புலி.... வாழ்க வளமுடன்...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

@நாஞ்சில் பிரதாப்
@முகிலன்

ஆம் , அது உண்மை தான் .காந்தி-இர்வின் ஒப்பந்தம் செய்யும் போது காந்தி ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் ,தூக்கு தண்டனை நிறுத்த பட்டிருக்கலாம் ...,அவர் அதை செய்ய வில்லை என்று Free Dom at midnight என்ற புத்தகத்தில் உள்ளது ....,இது நேதாஜி சொன்னது என்பது கேள்வி படாத ஒன்று ,,இருந்தால் லிங்க் ப்ளீஸ்

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு நன்றி..!

Hai said...

//நேதாஜியின் உரை ஒன்றில் எப்போதோ படித்தது - பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் மரணதண்டனையில் காந்திக்கும் பங்கு உண்டென்று. அந்த ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறென்.//

பேராசிரியர் சுப.வீ இதனை ஒரு புத்தகமாகவே எழுதி எப்போதோ வெளியிட்டு விட்டார்.