கடவுளை மற..மனிதனை நினை..

16 July 2010

மனிதம் இருந்தால் படியுங்கள் - 4

8:34:00 AM Posted by புலவன் புலிகேசி 7 comments

### வாரன் ஆண்டர்சன் நீதி மன்றத்தில் ஆஜராகாமல் புறக்கணித்து வந்ததால் யூனியன் கார்பைடின் பங்குகளை முடக்க தலைமைப் பெருநகர மன்றம் முடிவு செய்தது. இதையடுத்து சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பங்குகளை விற்று வரும் பணத்தில் போபால் மருத்துவமணைக் கட்டி அதில் தனது வழக்குரைஞர் சர் இயான் பெர்சிவல் தலைமையில் ஒரு டிரஸ்ட் அமைக்கப் படும் என அறிவித்தார் ஆண்டர்சன்.

ஆனால் இதை அந்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்து பங்குகளை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதை எதிர்த்து ம.பி உயர் நீதி மன்றத்தில் யூனியன் கார்பைடு வழக்குத் தொடுத்தது. ஆனால் இங்கும் அவர்களுக்கு எதிராகவேத் தீர்ப்பளிக்கப் பட்டது. அதன் பின் உச்ச நீதி மன்றத்தின் மூலம் தங்களுக்கு சதகமானத் தீர்ப்பைப் பெற்றது யூனியன் கார்பைடு.

யூனியன் கார்பைடின் பங்குகள் விற்கப் பட்டு வந்த பணம் முழுதும் சிறுகசிறுக யூனியன் கார்பைடு உருவாக்கிய டிரஸ்டிடமே போய் சேர்ந்தது.

### பத்து ஆண்டு சிறை தண்டனை பெறும் வகையில் வழக்குத் தொடுக்கப் பட்டிருந்த இந்தியக் குற்றவாளிகள் 9 பேரும் உச்ச நீதி மன்றத்தை அனுகினர்.அதில் தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம்

"சம்பவம் நடந்த அன்று நிர்வாகிகளா ஆலையை இயக்கினார்கள்? அன்று விபத்து நடக்கப் போவதை அவர்கள் என்ன அறிந்தா இருந்தார்கள்?" போன்ற மனிதமற்ற கேள்விகளுடன் அவ்வழக்கை சாதரண சாலை விபத்து போன்ற வழக்காக மாற்றினர். வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டனைப் பெறும் வழக்க்காக அது மாற்றப் பட்டது

### இதன் பின் 2001-ம் ஆண்டு டௌ கெமிக்கல்ஸ் யூனியன் கார்பைடு கார்பரேஷனைக் கைப் பற்றியது. போபால் ஆலையையும், அதன் சுற்றியுள்ளப் பகுதிகளையும் சுத்தப் படுத்த டௌ கெமிக்கல்ஸுக்கு உத்தரவிட வேண்டும் என போராட்ட அமைப்பினரால் ம.பி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டது. 2005-ம் ஆண்டு இந்திய அரசின் இரசாயணத் துறையும் இவ்வழக்கில் இணைந்து கொண்டு டௌ கெமிக்கல்ஸ் முதல் கட்டமாக 100கோடி ரூயை நீதி மன்றத்தில் கட்ட வேண்டும் என மனு செய்தது.

இந்திய அரசின் இரசாயணத் துறை இவ்வழக்கிலிருந்து விலகிக் கொண்டால் 1000 கோடி ரூ அளவிற்கு இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக அமெரிக்கர்களால் பேரம் பேசப் பட்டது. அப்போது முதலீடு கழகத் தலைவரான ரத்தன் டாட்டா டௌ கெமிக்கல்ஸை இவ்வழக்கிலிருந்து விடுவித்தால் இந்திய முதலாளிகளே பணம் போட்டு சுத்தப் படுத்தும் பணிகளை செய்வதாக கூறினார்.

அப்போதைய நிதியமைச்சர் பா.சிதம்பரம் இதற்கு ஆதரவுக் கடிதம் எழுதினார். அதன் பின் அர்ஜீன் சிங் தலைமையில் நடைபெற்று வந்த அமைச்சர்கள் குழுவைக் கலைத்து விட்டுப் புதிதாக அமைப்பதென்றும், நிவாரணப் பணிகளையும், சுத்தப் படுத்தும் பணிகளையும்மேற்பார்வையிடுவதென முடிவு செய்தனர். இதன் பொருள் டௌ கெமிக்கல்ஸை அப்பொறுப்புகளிலிருந்து கழட்டி விடுவது என்பதே.

### இந்த கொடூரக் கொலைகளுக்கு 25 வர்டங்கள் கழித்து இந்தியக் குற்றவாளிகள் 7 பேருக்கு வெறும் 2 ஆண்டுகள் சிறை த்ண்டணை மட்டுமே விதிக்கப் பட்டது. அதே சமயம் அவர்களை ஒரு மணி நேரம் கூட சிறையிலடைக்காமல் 25,000 ரூ பெற்று பிணையிலும் விட்டு விட்டது இந்தத் தீர்ப்பு.

தீர்ப்புகள், தீர்வுகள் எல்லாம் முதலாளிகளுக்கு மட்டுமே சாதகமாகி போன நிலையில் பொது மக்களைப் பற்றியோ, மனிதம் பற்றியோக் க்வலைப் பட எந்த அரசியல் வியாதிகளும் முன் நிற்க வில்லை. மாறாக டௌ கெமிக்கல்ஸின் சொம்பு தூக்கிகளாக மாறிப் போயிருக்கிறார்கள்.

யார் இந்த டௌ கெமிக்கல்ஸ்? என்ற வரலாற்றை அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.

நன்றி: புதிய ஜனநாயகம்

பி.கு: புதிய ஜனநாயகம் பி.டி.எஃப் டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக்கவும்.

7 விவாதங்கள்:

ஜோதிஜி said...

உங்கள் உள்ளார்ந்த அக்கறைக்கு வாழ்த்துகள்.

வெண்ணிற இரவுகள்....! said...

புலிகேசி அற்புதமான பதிவு இந்த டௌ இன்னும் கொடுமையானது வியட்நாம் போரில் பல பேர் உயிரிழக்க கா
காரணமானது

வினவு said...

சமூக அக்கறை என்பது ஓரிரு மணித்துளிகளில் முடிந்து விடும் ஃபேஷனாக இருக்கும் நேரத்தில் உங்களது விடாத போராட்டத்திற்கு நன்றியும், வாழ்த்துக்களும்!!

அன்புடன் நான் said...

உங்களின் பதிவு அனைவருக்கும் புரியும் விதத்தில் நன்றாக அலசப்பட்டுள்ளது.....
ஆனா நீதிதான் அநீதியாக்கப்பட்டுள்ளது!
வேதனை.

vasan said...

தெட‌ருங்க‌ள்,
ந‌ங்க‌ளும் உங்க‌ள் ப‌திவை
தெட‌ர்ந்து வ‌ருகிறோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெளிவாக தொடர் எழுதிவருகிறீர்கள்.. நன்றி

புலவன் புலிகேசி said...

நண்பா கார்த்தி இந்த டௌ எவ்வளவு அயோக்கியத் த்னங்களை செய்திருக்கிறது என்பதை படித்து விட்டேன். அடுத்தக் கட்டுரையில் இது குறித்து விவாதிக்க போகிறேன்.