கடவுளை மற..மனிதனை நினை..

16 June 2010

அங்காடித்தெருக் கடையும், நடிகர் சூர்யாவும்

1:28:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 58 comments

நடிகர் சூர்யா, இவரைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல வெற்றிப் படங்களின் மூலம் தன்னை தமிழ் சினிமாவில் தக்க வைத்திருக்கும் ஒரு நடிகர். தான் ஆரம்பித்த அகரம் ஃபவுண்டேசன் மூலம் பல ஏழைகளின் படிப்புகளுக்கு உதவி செய்பவர். இவை மட்டும்தான் மேலோட்டமாக தமிழர்கள் மனதில் பதியப் பட்ட விடயங்கள்.

எல்லாம் சரிதான் இப்போது அவர் கைக் கோர்த்திருப்பது முதலாலித்துவ வியாபாரிகளான சரவணா ஸ்டோர்சுடன். சரவணா ஸ்டோர்ஸின் ஆளுமைக்கு தீனி போட அவர்களால் புரசைவாக்கத்தில் பெரிய கிளை ஒன்றுத் திறக்கப் பட்டுள்ளது.

அதற்கு விளம்பர தூதராக அறிவிக்கப் பட்டிருப்பவர்தான் இந்த நடிகன். இந்த நடிகனால் ஆரம்பிக்கப் பட்ட அகரம் ஃபவுண்டேசன் மூலம் இந்த ஆண்டு ப்ளஸ்-டூ தேர்வில் வெர்றி பெற்றவர்கள் அவர்களின் மேல் படிப்புக்கு ஆகும் செலவை தாராளமாக எங்களிடம் கேளுங்கள் நாங்கள் உதவுகிறோம் என அவரேக் கூறியிருந்தார்.

ஏன் சூர்யா, அந்த சரவணா ஸ்டோர்ஸில் வேலைப் பார்ப்பவர்களில் படிப்பார்வம் மிக்க படிக்கவியலாப் பிள்ளைகள் இருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

அவர்கள் அடிமைகள் போல் கால் கடுக்க பல மணி நேரம் பணி புரிவது நியாயம் என தோன்றுகிறதா?

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தினர் அடிமட்டத்திலிருந்து பெரிய நிலைக்கு வந்தவர்கள், என்னைப் போலவே (?!). அவர்களது நிறுவனத்துக்கு நான் விளம்பரத் தூதராக இருப்பது பெருமைக்குரியது எனக் கூறியிருக்கிறான் அந்த நடிகன்.

கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்க்ள் முதலாலித்துவம் காட்டலாம் என்று சொல்கிறீர்களா?

தான் நடிக்கும் படங்களுக்கான சம்பளத்தில் பத்து சதவீதத்தை ஏழைகளுக்குத் தருவதாகக் கூறியுள்ளவர்தான் இந்த நடிகன். நீங்கள் அவ்வாறு கொடுப்பதை விட இது போன்ற முதலாளிகளுக்குத் துணை போகாமலிருப்பதே சிறந்தது.

முன்னர் இதே நடிகன் பெப்ஸி விளம்பரத்தில் நடித்தார். போபால் ஆண்டர்சனை விடக் கொடியவர்க்ள் இந்த பெப்ஸி கோக் நிறுவனத்தார். ஆய்த எழுத்துப் படத்தில் ஒரு வசனம் வரும் "உங்க நிலத்துத் தண்ணிய உறிஞ்சி காசு பாத்து பழகிட்டாங்க. எப்புடித் தடுக்கப் போறீங்க?" என்றவாறு. இதைப் பேசியவர் அந்த சூர்யாதான்.

இது போன்று படத்தில் பேசும் வசனங்களைக் கண்டு நடிகனுக்கு கொடிப் பிடித்த, பிடித்து கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான முட்டாள்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது. பணத்திற்காக எதுவும் பேசுபவன்தான் நடிகன்.

மது அருந்துவதை மகா குற்றம் என சொல்லும் இவரின் தந்தைக்கு பெப்ஸி, கோக் குடிப்பது நியாமாகத் தெரிந்திருக்கிறதா?

மனித ரத்தத்தை உறிஞ்சும் அத்தகையக் குளிர்பான வியாபாரிகளுக்குத் தன் மகன் குடை பிடிப்பதை ஆதரிப்பது நியாயம் தானா?

இவையனைத்தும் மனிதத்திற்கு எதிரான செயல்களே. அதில் நான் சொல்லியிருப்பது கொஞ்சமே. இது போன்று மனிதத்திற்கு எதிராக செயல்படும் நடிகர்கள் மனிதத் துரோகிகளே!


58 விவாதங்கள்:

Romeoboy said...

முருகவேல் எனது அன்பான வேண்டுகோள் ஒருவரை புறம் பேசும் போது கூட மரியாதையை கடைபிடிக்கவேண்டும் என்கிற பண்பு நம்மிடம் இருந்தால் தான் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள். உங்கள் கோபங்கள் எல்லாம் சரி அதை வெளிபடுத்தும் முறையை மாற்றிகொள்ளுங்கள். ஒரு நண்பனாய்.

sathishsangkavi.blogspot.com said...

உங்க கோபம் புரிகிறது....

Subankan said...

//நடிகர் சூர்யா, இவரைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை//

இவரை என்று மரியாதையாகத் தொடங்கியது

//அதற்கு விளம்பர தூதராக அறிவிக்கப் பட்டிருப்பவன்தான் இந்த நடிகன்//

இப்படி மாறுவது சரியாகப்படவில்லை. நீங்கள் எந்த நோக்கத்துக்காக எழுதினீர்களோ, அதை இதுமறைத்துவிட்டது.

இன்றைய கவிதை said...

உங்கள் கோபம் நியாயமானதே , அந்த நடிகரும் இதுவரை நான் கேள்விப்பட்டதிலிருந்தும் படித்ததிலிருந்தும் பல நல்ல விஷயங்களை செய்து வருபவர்கள் இந்த ஒரு விஷயத்தில் கோட்டை விட்டிருக்கலாம் , அவரின் முன் காலத்தையும் இது வரை நாம் பார்த்தைதையும் வைத்து அவருக்கு இந்த கூற்றை தெரியப்படுத்தலாம்..கேட்பார் என நம்புவோம் இல்லையேல் வெறும் நடிகராய் பார்ப்போம் அவர் செய்யும் நற்செயல்கள் இது போன்ற நடவடிக்கையில் அடிபட்டு போகும்...

இது என் தாழ்மையான் கருத்து

நன்றி ஜேகே

புலவன் புலிகேசி said...

ரோமியோ, சுபன்கான், அந்த வார்த்தைகளால் திசை திரும்புவதை நான் விரும்பவில்லை. எனவே அதை மாற்றியிருக்கிறேன். உங்கள் நட்புக்கு நன்றி.

புலவன் புலிகேசி said...

//~~Romeo~~ said... 1
முருகவேல் எனது அன்பான வேண்டுகோள் ஒருவரை புறம் பேசும் போது கூட மரியாதையை கடைபிடிக்கவேண்டும் என்கிற பண்பு நம்மிடம் இருந்தால் தான் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள்.// இங்கு நான் யாரையும் புறம் பேசவில்லை நண்பா.

ஜில்தண்ணி said...

யோசிக்க வேண்டிய விடயம் தான்
இருந்தாலும் இந்த விடயங்களுக்காக "அவன்" என்று கூறுவது எனக்கு சரியா படல

இந்த மேட்டரை உலகிற்கு தெரியவைத்ததற்கு நன்றி அண்ணே

அன்புடன் நான் said...

சரியான சாட்டையடி.... பதில் வருமா?

வள்ளலார் said...

அவனுக்குத்தேவை பணம். வருமான வரியை ஏய்ப்பதற்காக ஏதாவது அறக்கட்டளை, சமூக சேவை என்று காரியமாக உளறுவார்கள். அதையெல்லாம் நம்ப வேண்டாம்.

Unknown said...

பல வகையில் ரசிகர்களை ஏமாற்றிப் பிழைக்கும் நடிகர்களில் சூர்யா தனிப்பட்ட முறையிலும் நடிகன் என்ற முறையிலும் மேம்பட்டவரே.

அகரம் ஆரம்பிதற்கு முன்னரே அவரால் பலன் பெற்ற ஏழை குழந்தைகள், மாணவர்கள் கோவை சூலுர், பல்லடம் பகுதிகளிள் ஏராளம்.
இதைத்தான் அகரம் பவுண்டேஷன் மூலம் விரிவு படுத்தியுள்ளார்.

இந்த நல்லெண்ணம் காரணமாகவே சீமானின் இயக்கம் கொழும்பு விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராய் கதாநாயகனாகவும், சூர்யா கவுரவ வேடத்திலும் நடித்த ரத்தசரித்திரம் என்ற படம் தென்னகத்தில் வெளியிடுவதை எதிர்க்க போவதில்லை என்று அறிவித்திருப்பது நினைவு கூறத்தக்கது.

தொழில் என்று வரும்போது வேறு வழியில்லாமல் சில கொள்கை மீறல்கள் ஏற்படத்தான் செய்கின்றன.
வாழ்க்கையில் ஏக பத்தினி விரதனாய் இருந்தாலும் சினிமாவில் அடுத்தவளை கட்டிப்பிடித்து நடிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

நாம் ச்ம்பாதித்தால்தான் அடுத்தவருக்கு உதவ முடியும், இல்லையென்றால் நாமும் அடுத்தவர் கையை எதிர் பார்த்துதான் வாழ முடியும்.

சில தவறுகள் செய்தாலும் பல நல்ல காரியங்கள் செய்து வரும் சூர்யாவை மரியாதைக் குறைவாக விளிப்பது என்னைப் பொறுத்தவரை சரி என்று படவில்லை.

சசிகுமார் said...

நண்பரே மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும் போது இவர் பரவாயில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

VELU.G said...

நிறைய கேள்விகளுக்கு பதிலில்லை

உங்கள் நண்பன் பாலசந்தர் said...

நீங்கள் சொல்லுவது நியாயமான ஒன்று தான். இவர்களை போல் இருக்கும் நடிகர்கள் திருந்தினால் இருக்கும் மக்கள் ஓரளவு திருந்த வாய்ப்பு இருக்கிறது.. ஊருக்கு ஒரு நியாயம் இவருக்கு ஒரு நியாயம்..... ஒருவர் மனதார உதவி செய்வதை பிறருக்கு தெரியபடுதுவதை யவரும் விரும்ப மாட்டார்கள்...ஆனால் இவர்களை போல் இருக்கும் நடிகர்கள் தனக்கு கோடி பிடிபதர்க்காகவே இப்படி இருகிறார்கள்.... நம் மக்கள் திருந்தினால் இவர்களை போல் இருக்கும் மாஸ் டம்மி கீழ்த்தரமான ஹீரோக்கள் திருந்துவார்கள்....

உங்களில் ஒருவன் said...

சார்,

உங்களது ஒரு நல்ல பதிவுதான் அதில் மாற்றுக்கருத்து இல்லை எனக்கு, ஆனால் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது, அதாவது, உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறேன், நான் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி ஒரு கடை வைத்து பிறகு அதை பெரிதாக்கி மற்ற தொழிலார்களை வேலைக்கு அமர்த்தினால் அது தப்பா அல்லது வேறு எந்த விதத்தில் அது தப்பானது, அதாவது சரவணாஸ்டோரின் நடவடிக்கைகள், ஆளுமைத்திறன் தப்பானதா? தயவு செய்து விளக்குங்கள்,

\\மது அருந்துவதை மகா குற்றம் என சொல்லும் இவரின் தந்தைக்கு பெப்ஸி, கோக் குடிப்பது நியாமாகத் தெரிந்திருக்கிறதா?

மனித ரத்தத்தை உறிஞ்சும் அத்தகையக் குளிர்பான வியாபாரிகளுக்குத் தன் மகன் குடை பிடிப்பதை ஆதரிப்பது நியாயம் தானா?\\

இது சரியான கேள்விதான்,

கண்ணா.. said...

நம்ம மக்கள்கிட்ட இருக்கற ஓரு கெட்ட பழக்கம் என்னன்னா ஓண்ணுமே செய்யாம இருக்கறவன விட கொஞ்சமா செய்றவனை கேள்வி கேட்டே டார்ச்சர் பண்ணுறது...

நீங்களும் அந்த லிஸ்ட்ல சேராதீங்க.... :)

vasu balaji said...

நாம கூட வண்டி பயன் படுத்தாம, பஸ்ல போகாம நடந்தோ அல்லது ரயில் மூலமோ போனா சுற்றுப்புறச் சூழலுக்கு நல்லது. மனிதம். குளிர்சாதனப் பெட்டி, ஏர்கண்டிஷனர் பயன் படுத்தாம இருந்தா சுற்றுப் புறச் சூழல் பாதிக்கப்படாது. கதர் ஆடை அணிந்தால் ஒரு ஏழை நெசவாளி வீட்டில் கஞ்சி குடிப்பான். குறளகத்துலையும் செருப்பும் ஷூவும் விக்கறாங்க. வாங்கினா கைத்தொழில் பெருகும். மனிதம். தெரியாம கேக்குறேன், 18 வயதானா ஒரு ஆளுக்கு அவன் பெற்றோர் பொறுப்பாளர் இல்லாத போது சம்பந்தமில்லாம சூர்யாவோட அப்பாவின் பெயரை ஏன் சொல்கிறீர்கள்? சரவணா ஸ்டோரில் வேலை செய்யும் பையனுக்கோ பெண்ணுக்கோ படிக்க உதவமாட்டேன் என்று சூர்யா சொல்லவில்லையே. அவர் படிக்க உதவினால், அவன்/அவள் குடும்பத்துக்கு யார் உதவுவார்கள்? நடிகன் என்று திரும்ப திரும்ப எழுதுவதில் என்ன சமாதானம் கூறினாலும் ஒரு இழிவு தெரியத்தான் செய்கிறது. முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்கு முதல் படி அப்படி இல்லாத ஒரு முதலாளியிடம் வேலை செய்வதுதான். உங்கள் கம்பெனி அதிபர் முதலாளித்துவவாதியா இல்லையா என்று உறுதிப்படுத்திக் கொண்டா வேலைக்கு சேர முடியும்?

அழகிய அனானி said...

முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்கு முதல் படி அப்படி இல்லாத ஒரு முதலாளியிடம் வேலை செய்வதுதான்./////

இதைவிட பொது அறிவு இல்லாமல் ஒருவர் பேசவும் முடியுமா? என்ட குருவாயூரப்ப்ப்பா.....

அகல்விளக்கு said...

நிறைய கேட்விகளுக்கு பதில் இல்லை நண்பா...

இதில் சிவகுமார் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. வேண்டுமென்றால் ஸெம்மொலி மானாட்டில் இவர் பங்கு பற்றி பின்னர் பேசுவோம்...

Anonymous said...

ஏங்க...அரசாங்கம்,அங்கு பொருள் வாங்கும் மக்கள் செய்யாததை அந்த நடிகன் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது ஏன்?மக்கள் அனைவரும் ஒன்று திரட்டி குழந்தை தொழிலாளர் பிரச்சனை,கொத்தடிமை க்கு எதிராக போராடுங்கள்

vasu balaji said...

அழகிய அனானி said... 17
முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்கு முதல் படி அப்படி இல்லாத ஒரு முதலாளியிடம் வேலை செய்வதுதான்./////

இதைவிட பொது அறிவு இல்லாமல் ஒருவர் பேசவும் முடியுமா? என்ட குருவாயூரப்ப்ப்பா.....//

அனானி அண்ணே! குருவாயூரப்பன் எதுக்குங்க. சொன்னா தெரிஞ்சிக்கிறமுங்க. கும்பல்ல குனிஞ்சு நின்னு குரலெழுப்ப குருவாயூரப்பன் வேறைங்களா? அட கேனத்தனமா கேள்வி கேக்க நானே வெக்கப்படாமா பேரச் சொல்லிகிட்டு கேக்குறேன். விளக்கம் தெரிஞ்ச நீங்க ஏங்க வெக்கப்பட்டுக்கிட்டு. ச்ச்சும்மா அள்ளி விடுங்க ராசா:)

ஷர்புதீன் said...

:(

பிரத்யூஷ் ராமகிருஷ்ணன் said...

"உங்க நிலத்துத் தண்ணிய உறிஞ்சி காசு பாத்து பழகிட்டாங்க. எப்புடித் தடுக்கப் போறீங்க?"
இது மணிரத்தினம் எழுதிய டயலாக் சூர்யா அதில் நடித்தவர் மட்டுமே.

கோபம் கொள்ளவேண்டியது தான் , ஒருமையில் பேசியதை தவிர்திருக்கலாம்.

விளமபரத்தில் நடிதவ்ருகே இந்த கதி என்றல், கம்பெனி நடத்த அனுமதி அளித்த அரசங்கதே, அரசியல்வாதி இவங்களயல்லாம் என்னென்ன சொல்லுவிங்க .என்னோமோ போங்க .

priyan said...

தலைவா நீங்க என்ன உத்தம புத்திரரா? நீங்க நம்ம நாட்டு மக்களுக்கு எது நல்லதோ அத மட்டுந்தான் செய்வீரோ? அப்புறம் என்ன ம****துக்கு வெளிநாட்டுகாரனுக்கு உழைத்து கொண்டு இருக்கீறீர்...போய் உங்க சொந்த ஊருல விவசாயம் பாக்க வேண்டியதுதான... நீர் தினமும் குடிப்பீரே மினரல் வாட்டர் அதுவும் நம்ம நிலத்தடி நீர உறிஞ்சி குடிக்கிறதுதான்... அதனால அத விட்டுட்டு கார்பரேசன் குழாய் தண்ணிய குடி.... யோவ் பேசுறது யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பேசலாம்... அதுக்கு முன்னாடி உன் சூ****த்துல இருக்குற ஓட்டைய பாரும்....

வால்பையன் said...

இதுக்கு மூனு மைனஸ் ஓட்டு!
சமூக அக்கறையைவிட சூர்யா குசுவை குடிக்க தான் மக்களுக்கு ஆர்வம் போல, தக்காளி விளம்பரத்தால் தான் நாடே அழியிதுன்னு எப்போ தான் தெரியப்போகுதோ!

Unknown said...

ஒரு நடிகரை நடிகராகவே பாவிக்க வேண்டும். "Distribution of wealth" ஆக இதை பார்த்தோமானால் சூர்யா செய்வதில் எந்த தவறும் இல்லை. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்து அவர்களின் செல்வதில் ஒரு பங்கை பெற்று மற்றவர்களுக்கு அளிக்கிறார். இதில் தவறு ஒன்றும் இல்லை. மேலும் ஒரு தனி மனிதனாக யாருக்கு வேலை செய்ய வேண்டும் என்கிற முடிவை எடுக்க அவருக்கு முழு உரிமை இருக்கிறது. அதை குறை கூற நமக்கு உரிமை கிடையாது. இது என் தாழ்மையான கருத்து.

Bibiliobibuli said...

ஒரு நடிகன் சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் சமூக அநீதிகளை கண்டு பொங்கி எழவேண்டுமென்ற உங்கள் கோபம் நியாம் தான், புலவரே.

வெண்ணிற இரவுகள்....! said...

மூணு மைனஸ் வாக்கு என்ன சொல்ல நண்பா........................

வெண்ணிற இரவுகள்....! said...

@Arun Bharath
பிளாச்சிமடா போன்ற ஊர்களில் கோக் நடந்ததால் என்ன விளைவு என்பதை அங்கு உள்ள மக்கள் அறிவார்கள் .........நடிகர்கள் எடுக்கும் முடிவு மக்களை பாதிக்கும் பொழுது கேள்வி கேட்கலாம் ....முதலில் சொம்பு தூக்குவதை நிறுத்துங்கள்

வெண்ணிற இரவுகள்....! said...

@priyanதம்பி நானோ நீங்களோ பேசுவதால் பயன் இல்லை .....ஆனால் சூர்யா போன்ற நடிகரை இத்தனை பேர் சொம்பு தூக்குகிறார்கள் நீங்கள் உட்பட .........கெட்ட வார்த்தை பேசுகிறீர்கள் அந்த தலைப்பில் உள்ள நியாயம் உங்களுக்கு ஏன் புரிவதில்லை . .................சொம்பு தூக்குவதை நிறுத்துங்கள் பிரியன்

வெண்ணிற இரவுகள்....! said...

@?????????நண்பர் சசிகுமார் .....என்ன பராவில்லை ..........சூர்யா எத்தனை விளம்பரங்கள் ............பெப்சி கோக் விளம்பரத்தில் நடிப்பவனை மனிதனாகவே ஏற்றுக்கொள்ள முடியாது விதர்பா .............தெரியுமா பிளாச்சிமடா தெரியுமா சசிகுமார் .......

வெண்ணிற இரவுகள்....! said...

@?????????நண்பர் சசிகுமார் .....என்ன பராவில்லை ..........சூர்யா எத்தனை விளம்பரங்கள் ............பெப்சி கோக் விளம்பரத்தில் நடிப்பவனை மனிதனாகவே ஏற்றுக்கொள்ள முடியாது விதர்பா .............தெரியுமா பிளாச்சிமடா தெரியுமா சசிகுமார் .......

வெண்ணிற இரவுகள்....! said...

@?????????நண்பர் சசிகுமார் .....என்ன பராவில்லை ..........சூர்யா எத்தனை விளம்பரங்கள் ............பெப்சி கோக் விளம்பரத்தில் நடிப்பவனை மனிதனாகவே ஏற்றுக்கொள்ள முடியாது விதர்பா .............தெரியுமா பிளாச்சிமடா தெரியுமா சசிகுமார் .......

வெண்ணிற இரவுகள்....! said...

@????? ??????என்ன சிறு தவறுகள் ........... விவசாயின் ரத்தத்தை குடிக்கும் பெப்சி விளம்பரம் சின்ன விடயமா ........... விதர்பாவில் இரண்டு லட்சம் vivasaayi iranthirukkiraargal .... athu சின்ன vidayama என்ன ????sollungal ...
vilambarathirkkaaga nallathu seivathai pol kaatikkolvathai etrukolla முடியாது ...........
nanbargale nadikarkalukku kodi pidikka vendam

Unknown said...

@வெண்ணிற இரவுகள்....! தங்கள் கோபம் புரிகிறது.. ஆனால் ஒருவனது தனி மனித உரிமையை நாம் தட்டி கேட்க முடியாது.. நானும் பெப்சி கோக்கிற்கு எதிரானவந்தான்.. இம்மாதிரி அந்நிய நிறுவனங்களை நம் நாட்டில் பரவ விட்டது அரசாங்கத்தின் குற்றம்.. அதை நானும் எதிர்க்கிறேன்.. என் கருத்தை தெளிவு படுத்தவே இந்த பதில்.. ஒரு நடிகனுக்கு சமுதாயத்தில் மிகப் பெரிய அந்தஸ்து அளித்து அவர்களது ஒவ்வொரு செயலையும் விமர்சனம் செய்வது யார் குற்றம்?

வால்பையன் said...

//ஒருவனது தனி மனித உரிமையை நாம் தட்டி கேட்க முடியாது//


கொள்ளையடிப்பது தனி மனித உரிமையில் சேருமா?

கோக் கம்பெனி அதை தான் செய்யுது, அதற்கு உடந்தை சூர்யா!?

உங்கள் பெருந்தன்மை எங்களுக்கு இல்லையே நண்பா, நாங்க தெரியாதனமா சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறோமே!


அரசியல்வாதிகளை தங்க கூட்டில் வைத்து, சூர்யாவை இரும்பு கூண்டில் வைக்கவில்லை, அரசியல்வாதிகள் செய்த தவறை தொடர்ச்சியாக செய்து கொண்டிருப்பது தான் தவறு என்கிறோம்!

Unknown said...

@வால்பையன்ஆதியிலே தவறு இருக்கிறது. அதை தடுக்க வேண்டும். ஒரு தனி நபரை குறை கூறுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பதே என் தாழ்மையான கருத்து.

புலவன் புலிகேசி said...

//Arun Bharath said... 36
@வால்பையன்ஆதியிலே தவறு இருக்கிறது. அதை தடுக்க வேண்டும். ஒரு தனி நபரை குறை கூறுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பதே என் தாழ்மையான கருத்து//

நண்பர் அருண் பரத். இப்படியே ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சொல்லிதான் இன்று எல்லாத் தவறுகளும் கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. நானும் உங்களைப் போல் இருந்தவன் தான். இந்த விடயங்கள் புரிய நிறைய ஆழ்ந்து பார்க்க வேண்டும். ஒரு நடிகன் என்பவன் நம் சமுதாயத்தில் தனி மனிதனாகப் பார்க்கப் படுபவனல்ல. பல கோடி மக்களின் பார்வையில் தினசரி அவனது நடவடிக்கைகள் கவனிக்கப் படுகின்றன. அவனைப் பின்பற்றும் இளைஞர்கள் பலர் உண்டு. ரஜினிகாந்தைப் பார்த்து தம் அடிக்கப் பழகியவர்கள் பலர் உண்டு. அதனால் இனி நடிகனை நடிகனாக மட்டும் பார்க்காதீர்கள். அவனது செயல்கள் ஒவ்வொன்றும் விமர்சனத்திர்குரியவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

புலவன் புலிகேசி said...

//
தொழில் என்று வரும்போது வேறு வழியில்லாமல் சில கொள்கை மீறல்கள் ஏற்படத்தான் செய்கின்றன.
வாழ்க்கையில் ஏக பத்தினி விரதனாய் இருந்தாலும் சினிமாவில் அடுத்தவளை கட்டிப்பிடித்து நடிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

நாம் ச்ம்பாதித்தால்தான் அடுத்தவருக்கு உதவ முடியும், இல்லையென்றால் நாமும் அடுத்தவர் கையை எதிர் பார்த்துதான் வாழ முடியும்.

சில தவறுகள் செய்தாலும் பல நல்ல காரியங்கள் செய்து வரும் சூர்யாவை மரியாதைக் குறைவாக விளிப்பது என்னைப் பொறுத்தவரை சரி என்று படவில்லை.//

நண்பர் பரிதி நிலவன், இங்குதான் சுரண்டல்களும், மக்களை ஏமாற்றும் வித்தையும் ஆரம்பமாகிறது. நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது என்றால் ஊர் மக்களை கொள்ளையடித்து அதில் பாதி பங்கு பெற்று மன்னிக்கும் கோவில் கல் சாமி(?)கள் போல் இருக்க வேண்டும். அப்படித்தானே? தொழில் என்று வந்தால் திருடலாம், கொலை செய்யலாம். அப்ப ரவுடிங்களையும், திருடர்களையும் ஆதரிப்பீங்களா?

புலவன் புலிகேசி said...

//சசிகுமார் said... 11
நண்பரே மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும் போது இவர் பரவாயில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.// நண்பா முதலில் இவனுக்கு அவன் பரவாயில்லை, இதற்கு அது பரவாயில்லை என்ற எண்ணத்தை விட்டொழியுங்கள். இது ஏன் இப்ப்டி ஆனது? என யோசியுங்கள். திருடன்ல நல்லத் திருடன், கெட்டத் திருடன்னு இருக்கா என்ன?

புலவன் புலிகேசி said...

// நான் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி ஒரு கடை வைத்து பிறகு அதை பெரிதாக்கி மற்ற தொழிலார்களை வேலைக்கு அமர்த்தினால் அது தப்பா அல்லது வேறு எந்த விதத்தில் அது தப்பானது, அதாவது சரவணாஸ்டோரின் நடவடிக்கைகள், ஆளுமைத்திறன் தப்பானதா? தயவு செய்து விளக்குங்கள், // நல்ல கேள்வி நண்பா, கஷ்டப் பட்டு உழைத்து முன்னேறி விட்டால் ஆளுமை குணம் வருவது மிகத் தவறு. நீங்கள் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்த்தால் உங்களிடம் பணிக்கு வருபவனின் கஷ்டம் உங்களுக்கு புரியும். ஆனால் யாரும் அப்படி நினைப்பதில்லை. இங்குதான் முதலாளித்துவம் புகுந்து கொள்கிறது.

புலவன் புலிகேசி said...

/கண்ணா.. said... 15
நம்ம மக்கள்கிட்ட இருக்கற ஓரு கெட்ட பழக்கம் என்னன்னா ஓண்ணுமே செய்யாம இருக்கறவன விட கொஞ்சமா செய்றவனை கேள்வி கேட்டே டார்ச்சர் பண்ணுறது...

நீங்களும் அந்த லிஸ்ட்ல சேராதீங்க.... :)
// நண்பரே கண்ணா, அப்படி கொஞ்சமா உதவி செய்றவன் இந்த மாதிரித் தவறுகளைத் திருத்திக் கிட்டான்னா முழுசா உதவி செய்யலாமுல்ல. ஏன் இப்புடி மேம்போக்கான பார்வையில் ஏமாந்து போகிறீர்களோ???

புலவன் புலிகேசி said...

//மனிதம். தெரியாம கேக்குறேன், 18 வயதானா ஒரு ஆளுக்கு அவன் பெற்றோர் பொறுப்பாளர் இல்லாத போது சம்பந்தமில்லாம சூர்யாவோட அப்பாவின் பெயரை ஏன் சொல்கிறீர்கள்? // வானம்பாடிகள் ஐயா உங்களிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர் பார்க்க வில்லை. அப்ப உங்க பையனோ பொண்ணோ தப்பு பண்ணுனா உனக்கு பதினெட்டு வயசு ஆயிருச்சு இனிமே எதுவா இருந்தாலும் நீயே பாத்து செய். நான் உன்னை ஒன்னும் கேக்க மாட்டேன்னு விட்டுருவீங்க அப்படித்தானே?

புலவன் புலிகேசி said...

//முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்கு முதல் படி அப்படி இல்லாத ஒரு முதலாளியிடம் வேலை செய்வதுதான். உங்கள் கம்பெனி அதிபர் முதலாளித்துவவாதியா இல்லையா என்று உறுதிப்படுத்திக் கொண்டா வேலைக்கு சேர முடியுமா?// எங்கள் எம்.டி என்றில்லை, ஐ.டி நிறுவனங்கள் பலவற்றின் எம்.டிக்களிலிருந்து பெட்டிக்கடை வைத்திருப்பவர் வரை இந்த முதலாளித்துவம் இருக்கத்தான் செய்கிறது. அந்த சூழலில் பணி புரிவதாலும், தினசரி அது போன்ற மனிதர்களை சந்திப்பதாலும் தான் இது பற்றிப் பேச முடிகிறது.

புலவன் புலிகேசி said...

//ஏங்க...அரசாங்கம்,அங்கு பொருள் வாங்கும் மக்கள் செய்யாததை அந்த நடிகன் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது ஏன்?மக்கள் அனைவரும் ஒன்று திரட்டி குழந்தை தொழிலாளர் பிரச்சனை,கொத்தடிமை க்கு எதிராக போராடுங்கள்
// இந்த மாதிரி நடிகர்களின் கண்மூடித்தனமான விளம்பரங்களும் பேச்சுக்களும் மக்களை மடையர்களாக்கி அங்கு அழைத்து சென்று விடுகின்றன. அரசாங்க சாக்கடையில்தான் இந்த நாடே கெடக்குதே. மக்களை விழிப்படைய செய்யாமலிருக்க அவ்வப்போது மாநாடுகள், நடிகைகளின் மாராட்டங்கள், நடிகர்களின் பேச்சுக்கள், விளம்பரங்கள் என நடிகர்கள் துணை கொண்டு அரசியல் செய்பவர்க்ளின் ராஜ தந்திரம் புரியவில்லையா உங்களுக்கு?

புலவன் புலிகேசி said...

//விளமபரத்தில் நடிதவ்ருகே இந்த கதி என்றல், கம்பெனி நடத்த அனுமதி அளித்த அரசங்கதே, அரசியல்வாதி இவங்களயல்லாம் என்னென்ன சொல்லுவிங்க .என்னோமோ போங்க // இவங்களோட ஆட்டத்தை அடக்கனும்னா மக்களுக்கு முதலில் நடப்பது புரியனும். நடிகர்கள் மூலம் அவர்களின் மூளை மழுங்கடிக்கப் படுவதை தடுக்கனும்.

புலவன் புலிகேசி said...

//priyan said... 23
தலைவா நீங்க என்ன உத்தம புத்திரரா? நீங்க நம்ம நாட்டு மக்களுக்கு எது நல்லதோ அத மட்டுந்தான் செய்வீரோ? அப்புறம் என்ன ம****துக்கு வெளிநாட்டுகாரனுக்கு உழைத்து கொண்டு இருக்கீறீர்...போய் உங்க சொந்த ஊருல விவசாயம் பாக்க வேண்டியதுதான... நீர் தினமும் குடிப்பீரே மினரல் வாட்டர் அதுவும் நம்ம நிலத்தடி நீர உறிஞ்சி குடிக்கிறதுதான்... அதனால அத விட்டுட்டு கார்பரேசன் குழாய் தண்ணிய குடி.... யோவ் பேசுறது யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பேசலாம்... அதுக்கு முன்னாடி உன் சூ****த்துல இருக்குற ஓட்டைய பாரும்....
June 16, 2010 3:37 PM // நல்லா நாகரீகமாப் பேசுறீங்க. உங்கள மாதிரி சமூகத்தின் மீது அக்கரையே இல்லாத பேச்சு விதந்தாவாதியாக நானும் இருந்தவந்தான். ஒன்னு புரிஞ்சிக்குங்க ப்ல கோடி மக்களை பாதிப்படைய செய்யும் நடிகனின் செயல்கள். அந்த மினரல் வாட்டர் நிறுவனங்கள், கோக் பெப்ஸி எல்லாம் இந்த மாதிரி விளம்பரங்களை வைத்துதான் பிழைப்பு நடத்துகின்றன. இதுவே புரியாம பேச வந்துட்டீங்க.

புலவன் புலிகேசி said...

//வால்பையன் said... 24
இதுக்கு மூனு மைனஸ் ஓட்டு!
சமூக அக்கறையைவிட சூர்யா குசுவை குடிக்க தான் மக்களுக்கு ஆர்வம் போல, தக்காளி விளம்பரத்தால் தான் நாடே அழியிதுன்னு எப்போ தான் தெரியப்போகு// நல்ல விசயங்களுக்கு மைனஸ் குத்துறது ஒன்னும் நம்ம ஆளுங்களுக்கு புதுசில்லையே வால்.

பனித்துளி சங்கர் said...

///ஏன் சூர்யா, அந்த சரவணா ஸ்டோர்ஸில் வேலைப் பார்ப்பவர்களில் படிப்பார்வம் மிக்க படிக்கவியலாப் பிள்ளைகள் இருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
///////

அப்படி அவர்கள் படிக்கத் தொடங்கிவிட்டால்தான் படம் பார்க்க மாட்டார்களே . இவர்கள் சிந்திக்காத வரைதான் இப்படிப்பட்ட நடிகர்கள் எல்லோரும் சீமான்கள்.

பனித்துளி சங்கர் said...

////வால்பையன் said... 24
இதுக்கு மூனு மைனஸ் ஓட்டு!
சமூக அக்கறையைவிட சூர்யா குசுவை குடிக்க தான் மக்களுக்கு ஆர்வம் போல, தக்காளி விளம்பரத்தால் தான் நாடே அழியிதுன்னு எப்போ தான் தெரியப்போகு// நல்ல விசயங்களுக்கு மைனஸ் குத்துறது ஒன்னும் நம்ம ஆளுங்களுக்கு புதுசில்லையே வால்./////


என்ன செய்வது நண்பர்களே இன்னும் ஆறறிவு ஆடு ,மாடுகள் சில இருக்கத்தான் செய்கிறது இதுபோன்று மைனஸ் ஒட்டுப்போட
.

மரா said...

"ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட வலி தெரியும்னு” ஜெயமோகனோ யாரோ ஒரு படத்துல வசனம் எழுதியிருப்பார்கள். நீங்க சமீபகாலமா அம்ப விட்டுட்டு வில்லையே தாக்கி எழுதுகிறீர்களே என்ற வருத்தமே மிஞ்சுகிறது.உலகம் பெருசு தோழரே..

tamil4true said...

"அங்காடிதெரு" சொன்ன தொழிளாளர்களின் நிலைதான் இன்றைய அனைத்து இந்திய தொழிளாளர்களின் நிலையும். அன்னியா நாடு சென்ற தொழிளாளர்களின் நிலை இன்னும் மோசம். இந்நிலைக்கு முக்கிய காரணம் 1.அதிகமான் மனிதவளம் 2. மனித வளத்தை சரியாக பயன்படுத்தாத அரசாங்கம். அதனாலேயே இங்கு மனிதனிற்கோ அவனின் உழைப்பிற்கோ மதிப்பில்லை. இன்னும் எத்தனையோ கோடி பேர் எந்த வேலையும் இல்லாமல் உள்ளனர். அவர்களின் நிலை "அங்காடிதெரு" சொன்ன தொழிளாளர்களின் நிலையைவிடபலமடங்கு மோசம். அரசாங்கமே வேலை வாய்ப்பு திட்டத்தில் நிதம் 80 ருபாய் தானே தருகிறது. என்று சுயநலமற்ற அரசியில்வாதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்களோ அன்றுதான் தொழிளாளர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும். அது வரை இது தொடரும். தனிப்பட்ட சரவணா ஸ்டோரையோ அல்லது சூர்யாவையோ குறை கூறுவதில் அர்த்தமில்லை. ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு தன்சம்பளத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி உதவிக்கொண்டுஇருக்கும் சூர்யாவின் நல்ல மனசை பாராட்டாவிட்டாலும் பராவாயில்லை தயவுசெய்து அவர்மீது சேற்றை வாறீஇறைக்கவேண்டாம்.

Anonymous said...

vaayaa thangaru!

Cable சங்கர் said...

எனக்கென்னவோ.. இது கொஞ்சம் தாக்கி எழுதப்பட்ட பதிவோ என்று தோன்றுமளவுக்கு உங்களினின் குற்றச்சாட்டு இருக்கிறது. இது பற்றி பின்னூட்டத்தில் பேசுவதை விட நேரிலோ,தொலை பேசியிலோ பேசுவோம்.

புலவன் புலிகேசி said...

//மயில்ராவணன் said... 50
"ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட வலி தெரியும்னு” ஜெயமோகனோ யாரோ ஒரு படத்துல வசனம் எழுதியிருப்பார்கள். நீங்க சமீபகாலமா அம்ப விட்டுட்டு வில்லையே தாக்கி எழுதுகிறீர்களே என்ற வருத்தமே மிஞ்சுகிறது.உலகம் பெருசு தோழரே..// நண்பரே வில் இல்லை என்றால் அம்பு இருந்து ப்ரயோசனம் இல்லை. அதைத்தான் செய்ய வேண்டும் என சொல்கிறேன்.

புலவன் புலிகேசி said...

//tamil4true said... 51
"அங்காடிதெரு" சொன்ன தொழிளாளர்களின் நிலைதான் இன்றைய அனைத்து இந்திய தொழிளாளர்களின் நிலையும். அன்னியா நாடு சென்ற தொழிளாளர்களின் நிலை இன்னும் மோசம். இந்நிலைக்கு முக்கிய காரணம் 1.அதிகமான் மனிதவளம் 2. மனித வளத்தை சரியாக பயன்படுத்தாத அரசாங்கம். அதனாலேயே இங்கு மனிதனிற்கோ அவனின் உழைப்பிற்கோ மதிப்பில்லை. இன்னும் எத்தனையோ கோடி பேர் எந்த வேலையும் இல்லாமல் உள்ளனர். அவர்களின் நிலை "அங்காடிதெரு" சொன்ன தொழிளாளர்களின் நிலையைவிடபலமடங்கு மோசம். அரசாங்கமே வேலை வாய்ப்பு திட்டத்தில் நிதம் 80 ருபாய் தானே தருகிறது. என்று சுயநலமற்ற அரசியில்வாதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்களோ அன்றுதான் தொழிளாளர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும். அது வரை இது தொடரும். தனிப்பட்ட சரவணா ஸ்டோரையோ அல்லது சூர்யாவையோ குறை கூறுவதில் அர்த்தமில்லை. ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு தன்சம்பளத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி உதவிக்கொண்டுஇருக்கும் சூர்யாவின் நல்ல மனசை பாராட்டாவிட்டாலும் பராவாயில்லை தயவுசெய்து அவர்மீது சேற்றை வாறீஇறைக்கவேண்டாம்.
June 17, 2010 3:00 AM //

4தமிழ்மீடியா நண்பரே, அவர் மீது சேற்றை வாறி இறைக்க விரும்பவில்லை. அவரேஎ சென்று சேற்றுக்குள் விழுந்து விட வேண்டாம் என்றுதான் சொல்கிறேன். ஒருவன் நன்மை செய்பவனாகக் காட்டிக் கொண்டால் அவனது தவறுகளை சுட்டிக் காட்டக் கூடாது என்ற எண்ணத்திலிருந்து வெளியே வாருங்கள். அப்போதுதான் சிலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

vels-erode said...

எப்படி எழுதுவது, எப்படி எதி கருத்தினை வைப்பது, 'கேட்கும் தகைய சொல்'எனும் சூத்திரம் தெரியாத எழுத்து.இது ஒதுக்கப்பட வேண்டிய பதிவு. மன்னிக்கனும்,இதெல்லாம் ஒரு பதிவே இல்லை.

வால்பையன் said...

//"ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட வலி தெரியும்னு” ஜெயமோகனோ யாரோ ஒரு படத்துல வசனம் எழுதியிருப்பார்கள்.//


படத்தின் பெயர் ஹேராம்!
வசனம் கமல் தான்!

Anonymous said...

naa oru surya rasigan.. avar saravana stores in vilambara thoothara irukkurathula enakku udanbaadu illa thaan.. aana avara avan ivan nu solli thitta vename.. pls..


சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தினர் அடிமட்டத்திலிருந்து பெரிய நிலைக்கு வந்தவர்கள், என்னைப் போலவே (?!). அவர்களது நிறுவனத்துக்கு நான் விளம்பரத் தூதராக இருப்பது பெருமைக்குரியது எனக் கூறியிருக்கிறான் அந்த நடிகன். //

ithe pettila innonum sonnar.. pepsi ku vilambara thoothara irukka venam nu sila per sonnathala naa pepsi la irunthu vilagitatha sonnaru..