வணக்கம் தோழர்களே! நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் பதிவை எழுதுகிறேன். அலுவல் பணி இரவு பகலாக சென்றதால் கடந்த பதினைந்து நாட்களாக யாருடைய பதிவையும் படிக்கவில்லை. அதனால் பதிவுலகில் நடந்த பிரச்சினைகள் எனக்குத் தெரியவில்லை. நேற்று நண்பர் ஊடகன் மூலம் "பூக்காரி" பிரச்சினைத் தெரிய வந்தது. அது குறித்த பதிவுகள் நீக்கப் பட்டிருப்பினும், வினவு தளம் அதன் பிரதியை வெளியிட்டிருந்தது.
பதிவுலகமும் மற்ற செய்தி ஊடகங்களைப் போல சாக்கடையாகத்தான் மாறிக் கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு பெண்ணைக் கேவலப் படுத்தும் பதிவு என்ற நோக்கிலேயே எதிர்ப்புகள் பல வெளி வந்தன. அது பெண்ணைக் கேவலப் படுத்தும் பதிவல்ல மனிதத்தைக் கேவலப் படுத்தும் மிருகப் பதிவு.
நர்சிம், கார்க்கி என இரண்டு மிருகங்கள் சேர்ந்து ஒரு மனித இனத்தைத் தாக்கியிருக்கின்றன. இதுவே என் பார்வை. பெண்ணின் பிரச்சினை எனப் பிரித்து ஆணாதிக்கம் காட்டாதீர்கள். மனிதத்திற்கு ஏற்பட்ட கலங்கம் என எண்ணுங்கள். இதுவே அவர்களுக்குள் தனிப்பட்ட விரோதம் தனியிடத்தில் தாக்கிக் கொண்டார்கள் என்றால் அது பற்றி நாம் கவலை கொள்ளப் போவதில்லை.
ஆனால் இந்தப் பிரச்சினை நடந்திருப்பது ஒரு பொது வெளியில். அதுவும் சக பதிவருக்கு சக பதிவரால் நடந்திருக்கிறது. இதை வெறும் செய்தி போல் பாவித்து பலர் தங்கள் அனுதாபங்களையும், எதிர்ப்புகளையும் அரசியல் கட்சிகள் போலவேக் காட்டியிருந்தனர். நன்றாக இருக்கிறது உங்கள் பதிவுலக அரசியல்.
பதிவர்களாகிய நாமும் நம் பதிவுகளில் சுடச்சுட செய்தி வெளியிட்டு பின் அது பற்றி மறந்து போகும் வியாபார செய்தி ஊடகங்கள் போல் செயல் படுகிறோம். அந்த பிரச்சினைகளும் நமது அரசியலால் கிடப்பில் போய் விடுகிறது. யார் தீர்வு காண்பது? என யாரும் யோசிப்பதில்லை.
அந்த தோழியின் "'பூக்காரி'களுக்கும் சுயமரியாதை உண்டு" என்ற பதிவைப் படித்தேன். அவரது தைரியம் கண்டு வியந்தேன். பெண் என்ற அடிமைத்தனம் இல்லாதவராக இருக்கிறார். இதில் சிலர் இந்த பிரசினையை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள் என அறிவுரை வேறு. அறிவுரை செய்தவர்களில் பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்கும் ஒரு பெண்ணும் உண்டு என்பதுதான் எனக்கு வருத்தமளிக்கிறது.
அந்த தோழியின் பதிவிற்கும், அதற்கு ஆதரவான வினவின் பதிவிற்கும் தமிழ்மணத்தில் விழுந்த மைனஸ் வாக்குகளைப் பார்க்கும் போது, எவ்வளவு ஆணாதிக்க வாதிகள் உலவும் இடம் இந்த பதிவுலகம் என்பதுப் புரிகிறது. இங்கு பலர் கருத்துக்களுக்கும், பதிவுகளுக்கும் வாக்களிப்பதில்லை. எனக்கு நீப் போட்டியா? உனக்கு நான் போடுறேன் என்றுதான் போய்க் கொண்டிருக்கிறது. ஏன் நான் கூட ஆரம்ப காலத்தில் அப்படித்தானிருந்தேன்.
கருத்துக்கு வாக்களிப்பவர்கள் வெகு சிலரே. தயவு செய்து யாரும் குழு மனப்பான்மையில் வாக்களிக்காதீர்கள். குழுவாக இருங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. பதிவின் தரத்திற்கு மட்டும் அங்கீகாரம் கொடுங்கள். அப்போதுதான் இந்தப் பதிவுலகம் ந்நல்ல பாதையில் செல்லும்.
இந்தப் பூக்காரிப் பிரச்சினையின் துவக்க வாரத்தில் வந்த எதிர்ப்புகள் இப்போது காணப் படவில்லை. அது பழைய செய்தியாகவே மாற்றப் பட்டிருக்கிறது.
//ஒரு முக்கிய அறிவிப்பு.. கொஞ்ச நாட்கள் இதே வேலையாக எல்லோரும் கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். //
இந்த வரிகள் இந்தப் பிரச்சினைக்கு பின் அவரின் "இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்?" என்ற பதிவில் வந்தவை. அரசியல் சூட்சுமங்கள் தெரிந்தவர். நாமும் கொஞ்ச நாட்கள் இது குறித்து பேசி விட்டு அவர் சொன்னது போலவே அடங்கிப் போயிருக்கிறோம்.
//நான் எழுதிய புனைவு சில பேரை காயப்படுத்தியிருக்கிறது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். சந்தனமுல்லை அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.//
இது தான் இந்தப் பிரச்சினையின் தீர்வா? ஒரு பெரிய கலங்கத்தை ஏற்படுத்தி விட்டு இரண்டு வரியில் மன்னிப்புக் கேட்டால் போதுமா?
//முல்லையையும் முகிலையும் நம்மையும் நர்சிம் சந்திக்கும் இடம் பதிவர் சந்திப்பாக இருக்க வேண்டும். பெண் பதிவர்கள் உள்ளிட்ட எல்லாப் பதிவர்களின் முன்னிலையில், இந்த விவாதத்தில் பங்கு பெற்ற எல்லா பதிவர்கள் மற்றும் வாசகர்கள் முன்னிலையில், உண்மைத் தமிழர் உள்ளிட்ட எல்லாத் தமிழர்களின் முன்னிலையில், நர்சிம், கார்க்கி முதலானோரும் தங்களது மன்னிப்பை வெளியிடட்டும். கள்ள உறவு கதை கட்டிப் பரப்பிய பெருமக்களும் தங்கள் முகத்தை அங்கே காட்டட்டும். முகத்தை வெளிக்காட்டும் தேவை இல்லாததால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்//
இந்தப் பிரச்சினையில் நான் வினவோடு ஒத்துப் போகிறேன். வினவில் சொல்லியிருப்பது போல் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்து அதில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப் பட்டு அங்கு அந்த இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
நான் கண்டனம் தெரிவிக்க எழுதவில்லை. தீர்வு கேட்டு எழுதியிருக்கிறேன். மனசாட்சி உள்ளவர்கள் பதில் சொல்லுங்கள்.
45 விவாதங்கள்:
//இதப்பத்தி என்ன நெனக்கிறீக???//
Onnum solrathukku illai
புலிகேசி உண்மை புலிகேசி ...............
யாரது நெகடிவ் வாக்கு செலுத்தியது
// வெண்ணிற இரவுகள்....! said...
யாரது நெகடிவ் வாக்கு செலுத்தியது
June 13, 2010 1:14 PM//
இங்கேயும் ஆரம்பிச்சுட்டாங்களா நண்பா??? நடத்துங்க மனிதநேயம் மிக்கவர்களே. இன்னும் எவ்வளவு குத்த முடியுமோ குத்துங்க.
Ithuvum kadanthu pogum.
This shall also pass on.
Boss ethai ye pesi romba bore adikkuthu boss. Adutha pirachanaiya aarambeenga. Yengala madiri gummaravagala kushipadutha vendama?
அன்பு பதிவாளரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன். தயவு செய்து பார்த்து கமெண்ட் போடவும். நன்றி!
//நர்சிம், கார்க்கி என இரண்டு மிருகங்கள் சேர்ந்து ஒரு மனித இனத்தைத் தாக்கியிருக்கின்றன.//
தாறுமாறா ரிப்பிட்டு அடிக்கிறனுங்கோ....
ஆங்....மறந்துட்டேன்
தலைப்பையும் ஒரு ரீப்பீட்டு அடிக்கிறனுங்கோ....
நண்பா நீ யாருக்கும் பேச மாட்டாய் என்று நினைத்தேன் ,,,,நீ தையிரியமாய் பேசியதை கண்டு சந்தோஷ படும் நண்பன் நான் .............. பெருமைபடுகிறேன் ............... உன் கருத்தை தெரிவிதததால்
நண்பா இதற்க்கு ஐந்து வாக்குகள் மைனஸ் கவலை படதே ...... இந்த பன்னாடைகள் தன் ஜாதி விடயத்தையும் , ஆணாதிக்கத்தையும் விடுவதாய் இல்லை ........... ???? அப்படியே ஒத்துக்கொண்டாலும் தன் கருத்தை மற்றிகொள்வதில்லை கவலைபடாதே உன் பதிவிலே போராடு .......பெருமை படுகிறேன் நீ நண்பனாய் இருப்பதற்கு முதன்முதலாய்
//பதிவர்களாகிய நாமும் நம் பதிவுகளில் சுடச்சுட செய்தி வெளியிட்டு பின் அது பற்றி மறந்து போகும் வியாபார செய்தி ஊடகங்கள் போல் செயல் படுகிறோம்//
அது தான் நடந்து கொண்டு இருக்கிறது நண்பா. நிதியானந்தாவை பற்றி செய்தி வந்ததும் எல்லாரும் பெரிய யோக்கியங்கள் போல அதை பத்தி எழுத ஆரம்பிச்சிடாங்க. ஏன் இப்படி இருக்காங்க. ஏதோ நாளேடுகள் அதை பணத்திற்காக செய்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு என்ன, எந்த தளத்தில் பார்த்தாலும் ஒரே நிதியான்தா. திருந்துங்கள் பதிவர்களே.
இந்த பரச்சனை பற்றி நிறைய பேருக்கு நிறைய கருத்து பரிமாற்றங்கள் எனினும் நாமும் கருத்து சொல்லி எதோ ஒரு பக்கம் இருந்தால் தான் நாம் உண்மை பதிவர்கள் என்ற கருத்து எனக்கு உடன்பாடாக இல்லை, நீங்கள் கருத்து சொல்வதால் இது முடிந்து போக போவதும் இல்லை, அன்றி சொல்லாமல் விட்டாலும் ஒன்றும் நடக்க போவது இல்லை. சமூகத்தில் நடக்கும் எல்லா பிரச்சனைகளையும் பார்த்து நீங்கள் கருத்து சொல்லி விட்டால் முடிந்து போகுமா அது, என்னை கேட்டால், இப்படி எழுதுவதற்கு பதில் நாம் செயல்பட வேண்டும். இந்த பதிவுலக அரசியல் எனக்கு பெரிய அபத்தமாக படுகிறது இதெல்லாம் எதனால் விழைந்தது, புகழ்ச்சிக்காக எழுதினால் இது போல பல விழைவுகளை சந்திக்க நேரும்,நேர்மையான எழுத்தாக இருந்தால் இதை போன்ற பிரச்சனைகளில் யாரும் சிக்க தேவை இல்லை.
//இனியாள் said... 15
இந்த பரச்சனை பற்றி நிறைய பேருக்கு நிறைய கருத்து பரிமாற்றங்கள் எனினும் நாமும் கருத்து சொல்லி எதோ ஒரு பக்கம் இருந்தால் தான் நாம் உண்மை பதிவர்கள் என்ற கருத்து எனக்கு உடன்பாடாக இல்லை, நீங்கள் கருத்து சொல்வதால் இது முடிந்து போக போவதும் இல்லை, அன்றி சொல்லாமல் விட்டாலும் ஒன்றும் நடக்க போவது இல்லை. சமூகத்தில் நடக்கும் எல்லா பிரச்சனைகளையும் பார்த்து நீங்கள் கருத்து சொல்லி விட்டால் முடிந்து போகுமா அது, என்னை கேட்டால், இப்படி எழுதுவதற்கு பதில் நாம் செயல்பட வேண்டும். இந்த பதிவுலக அரசியல் எனக்கு பெரிய அபத்தமாக படுகிறது இதெல்லாம் எதனால் விழைந்தது, புகழ்ச்சிக்காக எழுதினால் இது போல பல விழைவுகளை சந்திக்க நேரும்,நேர்மையான எழுத்தாக இருந்தால் இதை போன்ற பிரச்சனைகளில் யாரும் சிக்க தேவை இல்லை.
June 14, 2010 11:23 AM //
நடந்ததை நியாப் படுத்த நினைக்கிறீர்களா? நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தீர்வு தேடி எழுதியிருக்கிறேன். எதை நீங்கள் செயல்பாடு என்கிறீர்கள்? இதுவும் ஒரு செயல்பாடுதான். செய்தி ஊடகங்கள் போல் கருத்து சொல்லி மறைக்க விரும்பவில்லை. முதலில் பெண்கள் இப்பிரச்சினைக்கு தலைக் காட்டுங்கள். கருத்து சொல்லி ஒன்னும் ஆகப் போறதில்லைன்னு ஒதுங்கி அடிமையாவே நிக்காதீங்க..
yaruppa yintha Software Engineer? onnarai ruba blog aarambichuu vechittu ellar vuyiraiyum eduthuttu erukkar?
//INIYAAL
ஒதுங்கி இருப்பது தான் நேர்மையான எழுத்தா
இன்னொரு பண்ணாடை http://senshe-kathalan.blogspot.com/2010/06/blog-post.html
முதலில் சந்தனமுல்லையின் தைரியத்தை இங்கே பாராட்டியே ஆகவேண்டும். அதே சமயம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டியது சந்தனமுல்லையும், நர்சிம்-கார்க்கியும். சந்தனமுல்லை எக்காரணம் கொண்டும் மன்னிக்க முடியாது என்று சொன்ன பிறகு இந்தப் பிரச்சனையைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பதில் நியாயம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
மேலும் இத்தனை நாள் கழித்து ச.முவுக்கு ஆதரவாக கார்க்கி-நர்சிம்மை பன்னாடைகள் என்று விளித்து பதிவு எழுதிய நீங்கள் - சந்தனமுல்லைக்கு ஆதரவாக எழுதிய பதிவில் தேவையில்லாமல் மூன்று ஆண் பதிவர்களை பெண்பித்தர்கள் என்றும் கலகலப்ரியாவை மரணமொக்கைப் பதிவர் என்றும் எழுதிய வினவையும், எழுதிக்கொடுத்த சிவராமனையும் பார்த்து ஒப்புதல் வழங்கிய சந்தனமுல்லையையும் கொஞ்சம் கண்டித்திருக்கலாம்.
இரு பதிவர்களுக்கிடையிலான பிரச்சனையை ஜாதிப் பிரச்சனையாக்கியது வினவின் அந்த விஷப் பதிவுதான்.
அதோடு, இதே சந்தனமுல்லையும், இப்போது அவருக்கு ஆதரவாக சொம்பு தூக்கும் நீங்களும் லீனா மணிமேகலைக்கு எதிராக ம.க.இ.க பேயாட்டம் ஆடிய போது எங்கே போனீர்கள்? அப்போது நீங்கள் அமைதியாக இருந்ததற்குக் காரணம் ஆணாதிக்கமா இல்லை வேறு ஒன்றா என்பதை நீங்கள் விளக்கினால் மகிழ்வேன்.
முதன் முறையாக உங்களுக்கு மைனஸ் வாக்குப் போடுகிறேன். இந்த மைனஸ் வாக்கிற்கு அர்த்தம் நான் நர்சிம்முக்கு சப்போர்ட் செய்கிறேன் என்பதல்ல.
நீங்கள் உபயோகப் படுத்திய அநாகரீகமான வார்த்தைகளுக்கும் உங்களின் ஒருபக்க ஆணாதிக்க எதிர்ப்புக்கும்.
ஒருபக்க ஆணாதிக்க எதிர்ப்புக்கும்...
முகிலன் சார் அது என்னங்க ஒரு பக்க ஆணாதிக்க எதிர்ப்பு?
லீனா மணிமேகலைக்கு எதிராக ம.க.இ.க பேயாட்டம் ஆடிய போது எங்கே போனீர்கள்...........
முகிலன் சார்.. இந்த கேள்வியை கேக்குற நீங்கள் அன்று லீனாவுக்கு சொம்பு தூக்காமல் எங்கே போனீர்கள்? அப்போ உங்களோடதும் ஒரு பக்க ஆணாதிக்கமா?
முகிலன் சார்.. நீங்கன்னு மட்டுமில்ல இன்னிக்கு லீனா லீனான்னு பொலம்புற யாரும் அன்னிக்கு லீனாவுக்கு ஆதரவா ஒரு துறும்பை கூட கிள்ளி எரியல...
அதுதான் உண்மை!
அதைவிட பெரிய காமெடி என்னன்னா.. இன்னிக்கு லீனாவுக்காக வக்காலத்து வாங்குற யாரும் சந்தனமுல்லைக்கு ஆதரவா எழுதவில்லை.. ஆக இதிலேருந்து தெரியறது என்னன்னா..
எதுவும் செய்ய லாயக்கில்லாத அதே நேரத்தில் நடுநிலை வேசம் போடும் கயமைத்தனத்தினால் நிறைந்திருக்கு இந்த பதிவுலகம்.
முகிலன் said... 20
முதலில் சந்தனமுல்லையின் தைரியத்தை இங்கே பாராட்டியே ஆகவேண்டும். அதே சமயம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டியது சந்தனமுல்லையும், நர்சிம்-கார்க்கியும். சந்தனமுல்லை எக்காரணம் கொண்டும் மன்னிக்க முடியாது என்று சொன்ன பிறகு இந்தப் பிரச்சனையைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பதில் நியாயம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.//
மன்னிக்க முடியாதுன்னுதான் சொன்னாங்க. தீர்வு கிடைச்சிருச்சின்னு சொன்னாங்களா?
நர்சிம்-கார்க்கி, முல்லை பேசித் தீர்க்க இது ஒன்ரும் குடும்பப் பிரச்சினை இல்லை.
//சந்தனமுல்லைக்கு ஆதரவாக எழுதிய பதிவில் தேவையில்லாமல் மூன்று ஆண் பதிவர்களை பெண்பித்தர்கள் என்றும் கலகலப்ரியாவை மரணமொக்கைப் பதிவர் என்றும் எழுதிய வினவையும், எழுதிக்கொடுத்த சிவராமனையும் பார்த்து ஒப்புதல் வழங்கிய சந்தனமுல்லையையும் கொஞ்சம் கண்டித்திருக்கலாம்.//
அந்த மூன்று ஆண் பதிவர்களும், ஒரு பெண் பதிவரை மொக்கை என்றும் சொன்னது குற்றம் தான். இருக்கட்டும் ஆனால் அதுதான் உங்களுக்கு பெரிதாக்த் தெரிந்திருக்கிறது. முல்லையின் பிரச்சினை இல்லை. அப்படித்தானே.
//இரு பதிவர்களுக்கிடையிலான பிரச்சனையை ஜாதிப் பிரச்சனையாக்கியது வினவின் அந்த விஷப் பதிவுதான்.
//
என்னதுப் பதிவர்க்ளுக்கிடையேயான பிரச்சினையா? நல்லா இருக்குதய்யா நியாயம். இது மனிதம் மீதான பிரச்சினை. ஜாதிப்பிரச்சினையாக்குனது வினவு இல்லைங்க. ஜாதி வெறியைக் க்ட்டிய நர்சிம்மைக் காட்டிக் கொடுத்ததுதான் வினவு. அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் நீங்கள் இல்லையா? அல்லது நர்சிம்முக்கு சொம்புத் தூக்க முயற்சிக்கிறீர்களா?
அய்யா அழகிய அனானி,
என் பதிவுகளைப் படிச்சிப் பாத்துட்டு அதுக்கப்புறம் என்னைப் பத்தி எழுதுங்க...
லீனா மணிமேகலைக்கு எதிரா ம.க.இ.க நடத்திய அசிங்கப் போராட்டத்துக்கு எதிராவும் பதிவு போட்டிருக்கேன், சந்தனமுல்லையை கேவலமா எழுதின நர்சிம்மின் புனைவைக் கண்டிச்சும் பதிவு எழுதியிருக்கேன்.
//மன்னிக்க முடியாதுன்னுதான் சொன்னாங்க. தீர்வு கிடைச்சிருச்சின்னு சொன்னாங்களா?
நர்சிம்-கார்க்கி, முல்லை பேசித் தீர்க்க இது ஒன்ரும் குடும்பப் பிரச்சினை இல்லை//
மன்னிக்க முடியாதுன்னு சொன்னப்புறம் என்ன தீர்வு? நர்சிம்மையும் கார்க்கியையும் நடுத்தெருவுல நிறுத்தி கல்லால அடிக்கிறதா?
சந்தனமுல்லையே சொல்லிட்டாங்க எனக்காக யாரும், அவங்க கணவர் உட்பட, முடிவு எடுக்கத் தேவையில்லைன்னு, நீங்க வந்து தீர்வு வேணும் தீர்வு வேணும்னு சொன்னா எப்படி?
//அந்த மூன்று ஆண் பதிவர்களும், ஒரு பெண் பதிவரை மொக்கை என்றும் சொன்னது குற்றம் தான். இருக்கட்டும் ஆனால் அதுதான் உங்களுக்கு பெரிதாக்த் தெரிந்திருக்கிறது. முல்லையின் பிரச்சினை இல்லை. அப்படித்தானே//
முல்லையோட பிரச்சனை எனக்குப் பெரிசாத் தெரியலைன்னு நான் சொல்லலையே? அதே நேரத்துல நர்சிம்முக்கும் முல்லைக்கும் இடையில இருக்கிற பிரச்சனையில தேவை இல்லாம மத்த பதிவர்களைச் சேத்தது எதுக்காக?
லீனா மணிமேகலை விஷயத்துல வினவு என்ன பதில் சொல்லிச்சோ அதையே சந்தன முல்லைக்கும் சொல்லலாம் இல்லையா?
இன்னைக்கு தனக்கு ஆதரவா எந்தப் பெண் பதிவர்களும் வரலைன்னு சொல்ற சந்தனமுல்லை, லீனாவுக்கு ஆதரவா என்ன செஞ்சாங்க? ஒரு வேளை அங்க போராட்டம் நடத்துனது அவங்க தோழர்கள்ங்கிறதால குழுமனப்பான்மையோட சும்மா இருந்துட்டாங்களா? அப்பிடி இருந்தாங்கன்னா இன்னைக்கு குழு மனப்பான்மையோட இருக்காங்கன்னு சொல்ல என்ன தகுதி இருக்கு அவங்களுக்கு?
பர்தா பத்தி எழுதுன, இப்ப ஒன்னும் எழுதலைன்னு கலகலப்ரியாவை வம்பிழுத்தாங்களே? பர்தா மேட்டரும் இதுவும் ஒண்ணா??
ஏற்கனவே ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை இருக்குது. அதுல ஒருத்தரை இன்னொருத்தர் வம்பிழுக்கும்போதே அதன் எதிர்வினைகளுக்குத் தயாரா இருந்திருக்கனும். அப்பிடி ஒரு எதிர்வினை வரவும், பெண் அப்பிடிங்கிற ஆயுதத்தை எடுத்திக்கிட்டதுக்கும், கருணாநிதி ஆ.ராசாவைக் காப்பாத்த சாதியைக் கையிலெடுத்ததுக்கும் பெரிய வித்தியாசம் எனக்குத் தெரியலை.
//முகிலன் said... 34
பர்தா பத்தி எழுதுன, இப்ப ஒன்னும் எழுதலைன்னு கலகலப்ரியாவை வம்பிழுத்தாங்களே? பர்தா மேட்டரும் இதுவும் ஒண்ணா??// அப்ப இது ஒன்னும் பர்தா மேட்டர் அளவுக்கு பெரிய தப்ப்பில்லைன்னு சொல்றீங்க. அப்படித்தானே. எனக்கென்னவோ நீங்கதான் குழு மனப்பான்மையில சிக்கியிருக்கீங்கன்னு தோனுது.
//ஏற்கனவே ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை இருக்குது. அதுல ஒருத்தரை இன்னொருத்தர் வம்பிழுக்கும்போதே அதன் எதிர்வினைகளுக்குத் தயாரா இருந்திருக்கனும். அப்பிடி ஒரு எதிர்வினை வரவும், பெண் அப்பிடிங்கிற ஆயுதத்தை எடுத்திக்கிட்டதுக்கும்,// எதிர்வினையாக இருந்தால் பரவா இல்லை. எதிரில் வருவது அசிங்கமாக இருந்தால் பரவாயில்லைன்னு போயிருவீங்களா?
இந்த பதிவு போட்டதால மட்டும் நீங்க இந்த பிரச்சனைக்கு முடிவு கண்டுர முடியாது என்பது என் கருத்து, இதை அடிமைத்தனம்னு சொல்றது அபத்தமா இருக்கு, பொது விஷயங்களல்ல நாம கருத்த மொத ஏத்துகுற அளவுக்கு நாம் சொல்ற நிலைல இருக்கனும் இதான் நான் சொல்ல வரது, எனக்கு இந்த பிரச்னையை பற்றி எழுதுபவர்களை பார்த்தல் வெறும் விளம்பரத்திற்காக எழுதுவதாகவே படுகிறது.
@முகிலன்..
உங்கள் தளத்தை பார்த்துவிட்டுத்தான் எழுதினேன் சார்.
லீனாவுக்க ஆதரவாக எழுதப்பட்டதாக சொல்லும் அந்த இரண்டு வரிகளில், கருத்து சுதந்திரத்தை காக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும் நீங்கள் இங்கு ஆணாதிக்கத்தை பற்றி ஏன் பேசுகிறீர்கள். இரண்டாவுது லீனாவின் கருத்தை முடக்க நீனைத்த நேற்று முளைத்த அமைப்பான இந்து மக்கள் கட்சியை பற்றி எழுதிய நீங்கள் இங்கு வினவை ப்ற்றி ஏன் பேசுகிறீர்கள்.
வினவின் ஆணாதிக்க போக்கை பற்றி நீங்கள் எழுதியிருந்தால் சொல்லுங்கள் பார்க்கிறேன்
அடுத்த்து நர்சிமுக்கு கண்டிச்சு பதிவு என்னும் அண்டப்புளுகு.. உண்மையிலேயே உங்கள் பதிவில் 'பின்னூட்டத்திற்காக மட்டும் நர்சிம் இப்படி எழுதியிருக்கமாட்டார' என்ன நர்சிமுக்கு பச்சையாக சொம்பு தூக்குகிறீர்கள். நீங்கள் இப்பிடி எழுதலாமா என நர்சிமிடம் மன்றாடுகிறீர்கள் ஆனால் முல்லையின் பின்னூட்டம் அசிங்கமான போக்கு என்று விமர்சிக்கிறீர்கள். நர்சிமை திட்டி எழுதிய மாதவராஜை விமர்சிக்கிறீர்கள்
இதிலும் இரட்டை நிலை, நீங்கள் ஆதரிக்கும் கலகலப்ரியா என்னும் பதிவர் JAR FERNANDO என்னும் சக பதிவரை தனது பின்னூட்டங்களில் PORUKKI... PORAMBOKKU... BEMANI என்றும் இன்ன பிற F வார்த்தைகளை கொண்டும் திட்டியதை நீங்கள் கண்டிக்கவுமில்லை, கேள்வியெழுப்பவுமில்லை
தனக்குத்தானே மொக்கை, மொக்கையோ மொக்கை என்று TAG போட்டும் எழுதும் கலகலப்ரியாவை மொக்கை பதிவர் என்று எழுதியதில் என்ன தவறு. பர்தாவுக்கு எழுதியவர் இதுக்கு எழுதலியே என்று கேட்டதில் என்ன தவறு? இப்போ நீங்க புலிகேசியை லீனாவுக்கு எழுதவில்லை இதுக்கு ஏன் எழுதினாய் என்று கேட்கவில்லை? அப்போ உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா?
//அப்ப இது ஒன்னும் பர்தா மேட்டர் அளவுக்கு பெரிய தப்ப்பில்லைன்னு சொல்றீங்க. அப்படித்தானே. எனக்கென்னவோ நீங்கதான் குழு மனப்பான்மையில சிக்கியிருக்கீங்கன்னு தோனுது.//
ஆமாம் பாஸ். இது ஒரு தனிப்பட்ட நபரைத்தாக்கி எழுதப்பட்ட பதிவு. அது ஒரு பொதுக்கருத்து.
தனிப்பட்ட இருவருக்கிடையில் கருத்துச் சொல்லாமல் ஒதுங்கி இருக்கலாம். ஆனால் பொதுவிசயத்தைப் பற்றி யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கலாம்.
நாளையே நர்சிமும் சந்தனமுல்லையும் சமாதானமாகப் போகக்கூடும். அப்போது அவரைப் பன்னாடை என்று அழைத்த நீங்கள் எங்கே முகத்தை வைத்துக் கொள்வீர்கள்?
இங்க குழு மனப்பான்மைன்னு பெர்மனெண்டா எதுவுமே கிடையாது பாஸ். ஒருத்தரோட கருத்தோட ஒத்துப் போவும்போது சேந்து சத்தம் போடுறோம் அவ்வளவுதான்.
சச்சினைப் பத்தி வெண்ணிற இரவுகள் கார்த்திக் பதிவு போட்டப்போ அதுக்கு நீங்க எதிர்வினை செஞ்சீங்க. அப்போ உங்களுக்கு சப்போர்ட் செஞ்சேன். இப்போ நீங்க ச.முவுக்கு ஆதரவா பதிவு போட்டிருக்கீங்க. கார்த்திக் உங்களுக்கு சப்போர்ட் பண்றார். நீங்க எழுதினது எனக்கு சரியாப் படலை. நான் எதிர்க்கிறேன். அவ்வளவுதான்.
கமெண்ட்(மட்டும்) போட்டதாக(ச் சொல்லப்படுகிற) சந்தனமுல்லையையே கேவலமாப் பேசிப் பதிவு போட்ட நர்சிம், அவரை டைரக்டாத் திட்டிப் பதிவெழுதினா என்னவெல்லாம் செய்வாரோ அப்பிடிங்கிற பயத்துல விலகிப் போறதாவும் எடுத்துக்கலாமே?
//இந்த பதிவு போட்டதால மட்டும் நீங்க இந்த பிரச்சனைக்கு முடிவு கண்டுர முடியாது என்பது என் கருத்து, இதை அடிமைத்தனம்னு சொல்றது அபத்தமா இருக்கு, பொது விஷயங்களல்ல நாம கருத்த மொத ஏத்துகுற அளவுக்கு நாம் சொல்ற நிலைல இருக்கனும் இதான் நான் சொல்ல வரது, எனக்கு இந்த பிரச்னையை பற்றி எழுதுபவர்களை பார்த்தல் வெறும் விளம்பரத்திற்காக எழுதுவதாகவே படுகிறது/
எழுத்துக்கு எழுத்து ஆமோதிக்கிறேன்.
அழகிய அனானி -
http://pithatralkal.blogspot.com/2010/04/blog-post_16.html
இந்தப் பதிவில் நான் கண்டித்திருப்பது முழுக்க முழுக்க ம.க.இ.க என்னும் வினவை மட்டுமே.
என் பதிவைப் பற்றி.
1. நர்சிம் மீது எனக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. அப்படிப்பட்டவர் இப்படிக் கீழ்த்தரமாக எழுவதைப் படித்ததும் எனக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. வெறும் கமெண்டுக்காக ஒரு கீழ்த்தரமான பதிவைப் போடும் அளவுக்கு நர்சிம் மட்டமானவரில்லை. மயிலின் அந்தப் பதிவுக்கான பின்னூட்டங்களைப் படித்துப் பாருங்கள். மயிலை மதுரநீ என்ற ப்ளாகில் இருந்து அவரது பதிவில் போடத் தூண்டியதே சந்தனமுல்லையாகத்தான் இருக்கும் என்பது என் எண்ணம்.ஆகவே சந்தனமுல்லைக்கு என் கண்டனங்கள்.
2. எனக்கு யாரையும் பன்னாடை, பரதேசி என்று திட்டி பழக்கமில்லை. ஒருவருடைய கருத்தில் உடன்பாடில்லாத பட்சத்தில் அவரது கருத்தை எதிர்ப்பேனே ஒழிய அவரை இகழ மாட்டேன்.
3. மாதவராஜின் பதிவுக்கு சொல்லியது, அவர் சரியான கருத்தைக் கூறியிருந்தாலும் அவர் உபயோகப் படுத்திய அவன் இவன் என்ற பதங்கள் எதிராளியை கோபமூட்டுமே ஒழிய அவர் பதிவில் இருந்த நியாயம் கண்ணில் தெரியாமல் போய்விடும் என்பதால்.
4. கலகலப்ரியா அப்படி அழைத்தது எனக்குத் தெரியாது. அப்படி சொல்லியிருந்தால் அவருடைய கருத்துக்கு என் கண்டனங்களை இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.
//ஆமாம் பாஸ். இது ஒரு தனிப்பட்ட நபரைத்தாக்கி எழுதப்பட்ட பதிவு. அது ஒரு பொதுக்கருத்து.
தனிப்பட்ட இருவருக்கிடையில் கருத்துச் சொல்லாமல் ஒதுங்கி இருக்கலாம். ஆனால் பொதுவிசயத்தைப் பற்றி யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கலாம்.
நாளையே நர்சிமும் சந்தனமுல்லையும் சமாதானமாகப் போகக்கூடும். அப்போது அவரைப் பன்னாடை என்று அழைத்த நீங்கள் எங்கே முகத்தை வைத்துக் கொள்வீர்கள்?//
தனிப்பட்ட பிர்ச்சினைக்கு பொதுவெளியில் சண்டையிட்டாக் கேக்கத்தான் செய்வோம்.
Post a Comment