நிபந்தனைகள் :-
1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,
2. வரிசை முக்கியம் இல்லை.,
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...
1) அன்னை தெரேசா
இவ்வுலகில் பலரின் தாய். தாய் என்ற சொல்லுக்கு முழு அர்த்தமாய் வாழ்ந்தவர். என் தாய்க்கு பிறகு எனக்கு இவர் தான் தாய். இது போன்ற மனமுடையவர்கள் மிகச்சிலரே
2) சாந்தி
நான் பணிபுரியும் TNQ நிறுவனத்தின் C.O.O. தன்னம்பிக்கைக்கும், பொறுமைக்கும் எடுத்துக் காட்டாய் இவரைத்தான் சொல்வேன். பல விடயங்களில் எனக்கு ரோல் மாடல் இவர்தான். ஆயிரக்கணக்கில் பணியாளர்களைக் கொண்ட நிறுவனத்தின் பணிகளை நிதானமாக கையாளும் திறமை படைத்தவர்.
3) மரிய ஷரபோவா
டென்னிஸ் வீராங்கனை. இவரின் ஆட்ட வெளிப்பாடும், ஆர்வமும் என்னை வியக்க வைத்திருக்கிறது.
4) ஐஸ்வர்யா ராய்
உலக அழகிப் பட்டத்திற்கு முழு தகுதியானவர். தன்னால் எப்படிப் பட்ட கதாப் பாத்திரத்தையும் சிறப்பாக செய்ய முடியும் என நிரூபித்துக் காட்டியவர். தமிழில் உதாரணம்: இருவர்.
5) சரோஜினி நாயுடு
ஒரு கவிஞராகவும், தேசிய போராட்ட வீரராகவும் இருந்தவர். இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர். இந்தியாவின் முதல் மாநில பெண் ஆளுநர்.
6) கல்பனா சாவ்லா
விண்வெளி சென்ற முதல் பெண் வீராங்கனை.
7) புனிதா அரோரா (Lieutenant General.)
இந்தைய இராணுவத்தில் உயர் பதவி அடைந்த முதல் பெண் என்ற பெருமைக்குரியவர்.
8) தாமரை
சொல்லவா வேண்டும். சிறந்த பாடலாசிரியர். இவரைப் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறேன்
9) கேப்டன் துர்கா பேனர்ஜி (முதல் பைலட்)
இந்திய விமானத்துறையின் முதல் பெண் பைலட் என்ற பெருமை பெற்றவர்.
10) எஸ் ஜானகி
எல்லா விதமான குரலிலும் பாடக்கூடிய திறமை மிக்கவர். இன்றும் இவர்க் குரலை கேட்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.
யாரையும் தொடர் பதிவுகள் எழுத அழைப்பதில் விருப்பமில்லாததால், விருப்பமானவர்கள் எழுதலாம்.
21 விவாதங்கள்:
நாந்தான் பஸ்ட்.....தொடர் பதிவு எழுதற அளவுக்கு பெரிய ஆள் நான் இல்லங்க.... அதனால கெளம்பறேன்..
தேர்வுகள் அருமை நண்பா...
//2) சாந்தி- நான் பணிபுரியும் TNQ நிறுவனத்தின் C.O.O. தன்னம்பிக்கைக்கும், பொறுமைக்கும் எடுத்துக் காட்டாய் இவரைத்தான் சொல்வேன். பல விடயங்களில் எனக்கு ரோல் மாடல் இவர்தான். ஆயிரக்கணக்கில் பணியாளர்களைக் கொண்ட நிறுவனத்தின் பணிகளை நிதானமாக கையாளும் திறமை படைத்தவர்.//
உங்கள் தேர்வுகள் அருமை.. பகிர்வுக்கு நன்றி நண்பா.. நேரமின்மை காரணமாக பின்னூட்டம் இட முடியவில்லை..
நல்ல தேர்வுகள் புலவரே :)
){{{{{{{{{{{ அன்னை தெரேசா
இவ்வுலகில் பலரின் தாய். தாய் என்ற சொல்லுக்கு முழு அர்த்தமாய் வாழ்ந்தவர். என் தாய்க்கு பிறகு எனக்கு இவர் தான் தாய். இது போன்ற மனமுடையவர்கள் மிகச்சிலரே )))))))))))))))))
சரியாக சொல்லி இருக்கீங்க நண்பரே . இன்றைய நிலையில் தன் குழந்தையை சரியாக கவனிக்கவே இன்று பல தாய்கள் தள்ளாடும் நிலையில் எங்கோ பிறந்து தனது மொத்த வாழ்வையும் இந்தியாவிற்கு அர்ப்ணித்த அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட தாய் .இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தாய்தான் .
கூட வேலை பார்ப்பவரைப் பற்றியும் சொன்னது அருமை புலிகேசி
நல்ல தேர்வுகள்
தேர்வுகள் அருமை.
நல்ல தரவரிசை. :)
தொடரிடுகையில் இதுவும் வித்யாசமக உணர்கிறேன்... தேர்வுகள் நன்று.....
அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????
மீண்டும் வருவான் RDX !
நிறைய ஒத்துப்போகிறது புலிகேசி, நமக்குள்...
பிரபாகர்.
அருமையான தேர்வு புலவரே!!
தேர்வுகள் அருமை.
தேர்வுகள் அருமை.
nannaayittundu..
கலக்கல் தேர்வுகள்..
துர்க்கா பானெர்ஜி , அரோரா பற்றி எல்லாம் தெரிந்து கொண்டேன்.
நல்ல பதிவு புலவரே..
தகவல்கள் அனைத்தும் புதுமை
ஆஹா... கிட்டத்தட்ட சேம் பிளட்... என்னா நான் உள்ளூர் அழகிய போட்டிருக்கேன்... நீங்க உலக அழகிய போட்டிருக்கீங்க... அருமை.
Post a Comment