கடவுளை மற..மனிதனை நினை..

02 March 2010

ஆசிரியை வீட்டுக் கொய்யாப்பழம் - பதின்மம்

6:11:00 AM Posted by புலவன் புலிகேசி , 43 comments

நண்பர் மீன் துள்ளியான் இத்தொடர்பதிவை எழுத அழைத்ததும் மீண்டும் பதின்மம் சென்று எழுத எத்தணித்து நினைவில் திரும்பியவைகளை எழுதியிருக்கிறேன். அப்போதெல்லம் எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும் எனத் தெரியாமல் கிட்டத்தட்ட எங்கள் ஊரிலிருந்து வைதீஸ்வரன் கோவிலுக்கு (14 கி.மீ) நடந்தே சென்றிருக்கிறேன். அதை இப்பொது நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உடன் படித்தப் பெண் "லாவண்யா". எனக்கும் இவளுக்கும் யார் முதல் மதிப்பெண் பெறுவது என்பதில் பெரும் சண்டையே நடக்கும். ஒரு முறை அவள் முதல் மதிப்பெண் எடுத்து விட்டு வந்து என்னிடம் காட்டி ஏளனம் செய்ய ஓங்கி நடுமண்டையில் நச்சென நான் குட்ட அவள் அழுது கொண்டே தலைமை ஆசிரியையிடம் புகார் செய்ய ஒரு நாள் முழுதும் முட்டி போட்டு நின்றேன்.

அன்று மாலை அழுது கொண்டே வந்து என்னிடம் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்டு ஐஸ் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்தாள். அவள் என் முதல் ஆட்டோகிராஃப். இப்போது திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பதாக கேள்விப் பட்டேன். மகிழ்ச்சி!

அடுத்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, ஒரு ஞாயிறில் பள்ளி ஆசிரியை ஒருவர் வீட்டில் சென்று கொய்யாப் பழம் திருட மூன்று பேர் சென்றோம் (சுட்டப் பழம்). அவர் வீட்டினருகேயிருந்த கோவில் கோபுரத்தில் நான், அருகிலுள்ள மதிலில் கோபால் என்ற நண்பன், மரத்தின் மேல் முத்து என்ற இன்னொருவன்.


அவன் பறித்து கொடுக்க நாங்கள் அதை ஒரு துண்டில் போட்டு சேர்த்துக் கொண்டிருந்த நேரம் அந்த ஆசிரியைப் பார்த்து விட்டார். அவ்வளவுதான் நானும் மதில்மேல் இருந்த நண்பனும் துண்டை சுருட்டி தோலில் போட்டு அருகிலிருந்த வாய்க்காலில் குதித்தோம் (நல்ல வேளை தண்ணி இல்ல). சில சிராய்ப்புகளுடன் எழுந்து பார்க்க இன்னொருவன் மரத்தின் மேல் அமர்ந்த படி அழுது கொண்டிருக்க ஆசிரியை வசை பாடிக் கொண்டிருந்தார். அந்த ராகம் பிடிக்காததால் நண்பனை அங்கேயே விட்டு நாங்கள் இருவரும் வீடு வந்தோம்(இதுவல்லவோ நட்பு).

சிறிது நேரம் கழித்து அவனும் தப்பி வந்தான். மறுநாள் பள்ளி சென்ற போது அவர்கள் இருவரும் வகுப்பு வாசலில் முட்டி போட்டிருப்பதைப் பார்த்து சிரித்து விட்டு என் வகுப்பில் நுழைந்தேன் (அந்த ஆசிரியைக்கு என்னை யார் எனத் தெரியாது. நான் வேறு வகுப்பு என்பதால்).

பதினோரம் வகுப்பு பயிலும் போது நான் சந்தித்த மிகப்பெரும் துயர சம்பவம். இன்றும் அவ்வப்போது அதை எண்ணி கலங்கியிருக்கிறேன். என் நெருங்கிய நண்பன் "மதன்பாபு" சாலை விபத்தில் இறந்து போனான். அச்செய்தி கிடைத்ததும் நம்பாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்ற போது நின்ற கூட்டத்தைப் பார்த்ததும் அழத் தொடங்கி விட்டேன். கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் விட்டு விட்டு அழுதிருக்கிறேன்.

இன்னும் என் கண்களில் நிற்கிறான். இப்பதின்ம நினைவுப் பதிவை அவனுக்காக சமர்ப்பிக்கிறேன். ஐ லவ் யூ மதன்.....

43 விவாதங்கள்:

ஜெட்லி said...

முதல் ஆட்டோகிராப்.....அப்போ இன்னும் நிறைய
இருக்கா.....

thenammailakshmanan said...

என்ன இப்படி அழ அடிச்சிட்டீங்க புலிகேசி

புலவன் புலிகேசி said...

//Blogger ஜெட்லி said...

முதல் ஆட்டோகிராப்.....அப்போ இன்னும் நிறைய
இருக்கா.....//

அந்த ஒன்னோட முடிஞ்சி போச்சி..அதுக்கப்புறம் சீரியஸா யாருமில்ல..அடுத்து என் வருங்கால மனைவியாத்தான் இருக்கும்...

புலவன் புலிகேசி said...

//Blogger thenammailakshmanan said...

என்ன இப்படி அழ அடிச்சிட்டீங்க புலிகேசி//

ம்..

Anonymous said...

நெருங்கிய நண்பன் மதன் பத்தி இன்னும் சொல்லியிருக்கலாம். நல்ல நினைவுகள்.

திவ்யாஹரி said...

(அந்த ஆசிரியைக்கு என்னை யார் எனத் தெரியாது. நான் வேறு வகுப்பு என்பதால்)//
உங்கள காட்டி கொடுக்காத.. அவர்கள் நல்ல நண்பர்கள் தான் புலவரே..

மதன்.. கலங்காமல் இருக்க முடியவில்லை நண்பா..

//அவள் என் முதல் ஆட்டோகிராஃப்.//

அதுக்கப்புறம் இல்லேன்னா "முதல்"னு வந்திருக்காதே புலவரே.. எங்கயோ இடிக்கிதே..

புலவன் புலிகேசி said...

//சின்ன அம்மிணி said...

நெருங்கிய நண்பன் மதன் பத்தி இன்னும் சொல்லியிருக்கலாம். நல்ல நினைவுகள்.
//

அவனைப் பற்றி எழுதினால் நிச்சயம் கண்ணீர்ப் பதிவாகத்தான் முடியும். அதனால்தான் எழுதவில்லை..

புலவன் புலிகேசி said...

//திவ்யாஹரி said...

(அந்த ஆசிரியைக்கு என்னை யார் எனத் தெரியாது. நான் வேறு வகுப்பு என்பதால்)//
உங்கள காட்டி கொடுக்காத.. அவர்கள் நல்ல நண்பர்கள் தான் புலவரே..

மதன்.. கலங்காமல் இருக்க முடியவில்லை நண்பா..

//அவள் என் முதல் ஆட்டோகிராஃப்.//

அதுக்கப்புறம் இல்லேன்னா "முதல்"னு வந்திருக்காதே புலவரே.. எங்கயோ இடிக்கிதே..
//

அதான் அடுத்து மனைவின்னு சொல்லிருக்கோம்ல..அப்ப அது முதல் தான..?

ROMEO said...

\\அவள் என் முதல் ஆட்டோகிராஃப். //

சேரன் அடுத்த படத்துக்கு ஒரு ஹீரோ தேடுறாராம். ட்ரை பண்ணுங்க பாஸ் .

மாதேவி said...

காட்டிக் கொடுக்காத இனிய நண்பர்கள்.

மதன் பற்றியது துயர நினைவுகள்..

இய‌ற்கை said...

nice:-)

முகிலன் said...

நல்ல பதிவு

வானம்பாடிகள் said...

நெகிழ்வான நனவோடை:)

Chitra said...

அவள் என் முதல் ஆட்டோகிராஃப். இப்போது திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பதாக கேள்விப் பட்டேன். மகிழ்ச்சி!

மதன் பற்றிய பகிர்வு.....

........ பதின்ம வயதின் அழியாத கோலங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

கொய்யாபழம் ருசி எப்படி இருந்தது :))

க.பாலாசி said...

//அதை இப்பொது நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.//

ஆமா நடந்துபோனதுக்கு என்னாத்துக்கு வேதனப்படுறீங்க...???

//மன்னிப்பு கேட்டு ஐஸ் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்தாள்.//

ஓ...இதுக்குப்பேர்தான் ஐஸ் வக்கிறதா???

தண்ணியில்லாத வாய்க்கால்ல குதிச்சா அடிபடனுமே... வெறும் சிராய்ப்புதானா??? என்ன கொடுமைங்க இது...

நண்பரையும் நினைவுகூர்ந்தவிதம் நன்று....

புலவன் புலிகேசி said...

//தண்ணியில்லாத வாய்க்கால்ல குதிச்சா அடிபடனுமே... வெறும் சிராய்ப்புதானா??? என்ன கொடுமைங்க இது... //

வாய்க்காலுக்கும் சுவற்றுக்கும் உயரம் மிகக் குறைவு நண்பா..நம்ம ரயில் நிலையம் போற வழியில இருக்கு அந்த இடம்...

புலவன் புலிகேசி said...

//தண்ணியில்லாத வாய்க்கால்ல குதிச்சா அடிபடனுமே... வெறும் சிராய்ப்புதானா???//

என்னா வில்லத்தனம் பாலாசி...

விக்னேஷ்வரி said...

ஆட்டோகிராஃப்?
ரைட்டு.

பதிவு முழுக்க சிரித்துக் கொண்டே வந்து கடைசி வரியில் கனத்து விட்டது. இது போன்றதொரு இழப்பு பெரும்பாலும் எல்லோருக்கும் இருப்பது வேதனையாய் உள்ளது.

susi said...

நல்ல நினைவுகள்..

மதனுக்கு..

நட்பின் இழப்போட வலி நானும் அனுபவிச்சிருக்கேன் :(((

அண்ணாமலையான் said...

ரைட்டு

ஈரோடு கதிர் said...

அஞ்சாவது படிக்கிறப்பவே ஆட்டோகிராபா.... ...

ம்ம்ம்ம்

அப்போ இப்போ...!!!???

Anonymous said...

FAKE IPL PLAYER IS BACK

www.fakeiplplayer.com

புலவன் புலிகேசி said...

//அஞ்சாவது படிக்கிறப்பவே ஆட்டோகிராபா.... ...

ம்ம்ம்ம்

அப்போ இப்போ...!!!???//

தேடிக்கிட்டே இருக்கேன் தல...

FAKE IPL said...

Hi Pulikesi,

How are you? Hope you are doing good. My blog is active once again. Looking forward to your feedbacks.

FAKE IPL PLAYER,
www.fakeiplplayer.com

FAKE IPL PLAYER said...

Hi Pulikesi,

How are you? Hope you are doing good. My blog is active once again. Looking forward to your feedbacks.

FAKE IPL PLAYER,
www.fakeiplplayer.com

FAKE IPL PLAYER said...

Hi Pulikesi,

How are you? Hope you are doing good. My blog is active once again. Looking forward to your feedbacks.

FAKE IPL PLAYER,
www.fakeiplplayer.com

மங்குனி அமைச்சர் said...

//இப்போது திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பதாக கேள்விப் பட்டேன். மகிழ்ச்சி!//
//மகிழ்ச்சி//

சார் வணக்கம் ( first time அதான் )
அது என்னா மகிழ்ச்சி
ஏன் வேற ஏதாவது எதிர் பாத்திங்களா? (செவ்வா இல்ல புளுடோ கிரகத்துக்கு போயிருபாங்குன்னு எதிர் பாத்திங்களா? )

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கலவையான நினைவலைகளைப் பகிர்ந்திருக்கீங்க.. புலிகேசி..

இழந்த நண்பர்களை நினைத்துப் பார்ப்பது கஷ்ட்மான விசயம்.

அகல்விளக்கு said...

//இப்பதின்ம நினைவுப் பதிவை அவனுக்காக சமர்ப்பிக்கிறேன். //


நெகிழ்ச்சியாய் இருக்கிறது நண்பா....

ராமலக்ஷ்மி said...

இதமான நினைவுகளுடன் ஆரம்பித்து நெகிழ்வாக முடித்திருக்கிறீர்கள்.

வினோத்கெளதம் said...

கொஞ்சம் மகிழ்ச்சி + கொஞ்சம் துன்பம்..

ஸ்ரீ said...

நெகிழ்ச்சியான இடுகை.

ஸ்ரீராம். said...

மனம் கொய்த நினைவுகள் புலிகேசி...

malarvizhi said...

நல்ல ஆட்டோகிராஃப். நன்றாக உள்ளது.இது போன்ற நினைவலைகள் அனைவருக்கும் இருக்கும்.

malarvizhi said...

நல்ல ஆட்டோகிராஃப். நன்றாக உள்ளது.இது போன்ற நினைவலைகள் அனைவருக்கும் இருக்கும்.

மயில்ராவணன் said...

எமது பழைய நினைவுகளையும் கிளறிவிட்டீர் புலவரே!

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

உள்ளம் கணத்துப்போய்விட்டது நண்பரே !

ILLUMINATI said...

Friend,புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

http://illuminati8.blogspot.com/2010/03/blog-post.html

இனியாள் said...

நல்ல பதிவு.

ers said...

அடல்ஸ் ஒன்லி
குழந்தைகள் பார்க்க வேண்டாம்.

சாமியாரின் காமக்கதை வீடியோ

சசிகுமார் said...

சுவாரஸ்யமான பதிவு ஆனால் முடிவில் என்னை அறியாமல் என் கண்கள் கலங்கின

ரோஸ்விக் said...

அஞ்சாவது படிக்கிறப்பவே ஆட்டோகிராபா... :-)))

அது குருவி கொத்துன கொய்யாப் பழமா தல??

மதன்... :-(