கடவுளை மற..மனிதனை நினை..

06 March 2010

டரியல் (06-மார்ச்-2010)

6:19:00 PM Posted by புலவன் புலிகேசி 39 comments

சென்ற ஞாயிறு விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது மேற்கு மாம்பலம் அருகில் உள்ள மேட்டுப் பாளையம் அருகே வந்த போது எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா போட்ட பட்டம் என் முகத்தில் விழ மிதமான வேகத்தில் வந்ததால் வெறும் காயங்களுடன் தப்பித்தேன். சரியாக கண்ணுக்கருகே, மூக்கு கன்னம் மற்றும் கழுத்தில் சிறிதாக கிழித்து விட்டது அந்த நூல். விளையாட்டாக அவர்கள் செய்யும் இந்த மாஞ்சா வேலை பலரின் உயிரை பலி வாங்கியிருக்கிறது. இது தடை செய்யப் பட்டதோடு இல்லாமல் பொது மக்களும் கண்காணித்து தடுக்க வேண்டும்.
------------------------

சரி விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு வருவோம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. ஒரு காதல் கதையை அழகாகவும் இயல்பாகவும் தந்திருக்கிறார் கௌதம். சிம்புவா இது? என ஆச்சர்யப்படும் விதத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. இது போல் தேர்ந்தெடுத்து பந்தாக்கள் தவிர்த்து நடித்தால் மிகப்பெரிய எதிர்காலம் உண்டு சினிமாவில். எனக்கு அவ்வளவாக திரிஷா பிடிக்காது. ஆனால் இப்படத்தில் கௌதம் படவரிசை உடை அலங்காரத்தில் திரிஷா தேவதையாய்த் தெரிகிறார். காதல் வயப்பட்ட பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். முக்கியமாக இப்படத்தின் ஒளிப்பதிவு, நீங்கள் குறுந்தகடுகளில் பார்க்க வேண்டிய படமல்ல இது என சொல்லும் அளவு இருக்கிறது. அப்புறம் நம்ம தல ஏ.ஆர்.ரகுமான் பின்னனியிலும் பாடல்களிலும் பின்னி எடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் இப்படம் மசாலா ரசிகர்களுக்கானது அல்ல.
------------------------

ஒரு காதல் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். முடிந்ததும் மூன்று பகுதிகளாக வெளியிடலாம் என்றிருக்கிறேன். தலைப்பு கூட வச்சிட்டேன் "உன் சிரிப்பினில்". இது என் முதல் முயற்சி. இதற்கு உங்கள் வெளிப்படையான கருத்துக்களை எதிர் பார்க்கிறேன். சமீபத்தில் நான் சந்திக்க நேர்ந்த என்னைக் கவர்ந்த ஒரு பெண்தான் இக்கதை உருவாகக் காரணம். சென்னையில் இப்படி ஒரு பெண்ணைப் பார்க்க நேர்ந்தும் அவளிடம் ஒரு வார்த்தைக் கூட பேச முடியாமல் போனது. இது போல் இருக்கும் ஒரு பெண் மனைவியானால் வேறெதுவும் தேவையில்லை என எண்ண வைத்து விட்டாள். மீண்டும் சந்திப்பேனா? தோன்றவில்லை.
------------------------

இவர்கள் ஏன் இப்படி இருக்க வேண்டும்? நாம் கழிவு நீர்களில் கலக்க விடும் தேவையற்ற பிளாஸ்டிக், இதர குப்பைகளால்தான் இவர்கள் இப்படி. அரசு இதற்கு எந்திரம் வெளியிட்டிருக்கும் போதும் இவர்கள் இப்பணி செய்கிறார்கள் என்றால் அந்த எந்திரம் சரிவர வடிவமைக்கப் படவில்லை என்றுதான் அர்த்தம். அந்த எந்திரம் வடிவமைக்கப் பட்டு இவர்களுக்கு அரசு பயிற்சியளித்தால் இது போன்ற கொடுமைகள் தீரும். (இரண்டு நாட்களாக எங்கள் சாலையில் இவர்கள் போராடிக் கொண்டிருக்கையில் நாங்கள் மூக்கைப் பொத்திக் கொண்டு போய்க் கொண்டிருந்தோம்). குப்பைகள் சரியான் இடத்தில் போடப் படவேண்டும். இதற்கான விழிப்புணர்வு மக்களிடம்தான் வர வேண்டும்.
------------------------
இந்த வாரப் பதிவர்

ரௌத்ரம் பழகும் கலக(ல)ப்ரியா. இவரது கவிதைகள் பல புரியாமல் போயிருக்கிறது. ஆனால் எழுத்துக்கள் அணல் தெரிக்கும். வெளிப்படையான எழுத்துக்கள் பல இவரிடம் உண்டு. பலர் பின்னூட்டங்களில் "லகலகா" என அழைப்பதும் உண்டு. இவருடைய பதிவுகளுக்கு வானம்பாடிகள் ஐயா எழுதும் பின்னூட்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.

இவரது வலைப்பூ: லகலகா
------------------------

இந்த வார டரியல் தோழி "அன்புடன் அருணா" எழுதிய "கடவுள் யார் பக்கம்????". படித்துப் பாருங்கள் எதனால் எனக்குப் பிடித்தது எனப் புரியும்.
------------------------

39 விவாதங்கள்:

Prathap Kumar S. said...

என்ன புலிக்கேசி காதல் வயப்பட்டுவிட்டீரோ... பார்த்து...

அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்கை கட்டி பறக்குது சரிதானா-???

சைவகொத்துப்பரோட்டா said...

ஆஹா!! புலவர் எங்கோ காதல் வலையில் மாட்டி இருப்பதாக தெரிகிறதே,
வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

பட்டம் விடும் நூலில் மஞ்சா தடவக் கூடாதெனும் சட்டம் பலகாலம் முன்னரே இருந்ததே? தண்டனை கடுமையாக்கப் படவேண்டும். சொன்னமாதிரி பொதுமக்களும் தட்டிக் கேட்க வேண்டும். நல்லவேளை சின்ன காயத்துடன் தப்பித்தீர்கள்.

துப்பரவுத் தொளிலாளி:(! நான் அனுபவிக்கும் அத்தனை வசதிக்குப் பின்னும் எத்தனை மனிதரின் கஷ்டங்கள், உழைப்பு?

பதிவர் கலகலப்ரியாவினை இம்மாத ‘தேவதை’ பத்திரிகையும் சிறப்பித்துள்ளது. அருணாவின் கவிதை அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள்!

டரியல் நன்று.

மங்குனி அமைச்சர் said...

//(இரண்டு நாட்களாக எங்கள் சாலையில் இவர்கள் போராடிக் கொண்டிருக்கையில் நாங்கள் மூக்கைப் பொத்திக் கொண்டு போய்க் கொண்டிருந்தோம்). //

எதார்த்தமான உண்மை .

//குப்பைகள் சரியான் இடத்தில் போடப் படவேண்டும். இதற்கான விழிப்புணர்வு மக்களிடம்தான் வர வேண்டும்.//

மிக சரியான தீர்வு

வெள்ளிநிலா said...

antha ponnu.....?!!!
:)

அகல்விளக்கு said...

இந்த வார டரியல் அருமை தல...

மாஞ்சாவும்... சுத்தம் செய்யும் எந்திரமும் யோசிக்க வைக்கின்றன....

அப்புறம்....
யாரந்த தேவதை தல.....

:-)

vasu balaji said...

இந்த மாஞ்சா தொல்லை பெரும் தொல்லை.
கவிதை எழுத ஆரம்பிச்சாச்சா? ரைட்டு:)
வலைப்பூ:கலகலப்ரியா:))
டரியல் குட்.

அன்புடன் நான் said...

காதல் வயப்பட்டதாக தெரிகிறது...
விண்ணைத்தாண்டி வருவாயா... படமும் பாத்திருக்கிங்க......(இரண்டையும்)
கணக்கு போட்டு காய நகர்த்து புலிகேசி!
(நீ என் இனமடா)

மரா said...

vtv ஓகே. அந்த கழிவுநீர் அகற்றும் மனிதர்கள் பலபேர் பலவிடங்களில் சொல்லியும் இன்னும் இது தொடர்வது வேதனையாக இருக்கிறது. இது சம்பந்தமான எட்வினின் அற்புதமான கவிதை ஒன்று ’சுகனில்’ படித்த நினைவு..இப்போது மறந்துவிட்டேன். தேடிப் பிடித்து பதிகிறேன். நன்றி

தாராபுரத்தான் said...

அதென்ன மூன்று பகுதி ..ஒரே பகுதியில் ..

வினோத் கெளதம் said...

நினைத்தேன் எங்கயோ மாட்டி இருக்கிங்கனு..''நடக்கட்டும் நடக்கட்டும்''..:)

மனிதர்களை இதேப்போல் வேலைக்கு பயன்ப்படுத்துவதை தவிர்க்கும் அளவிலாவது விஞ்ஞானம் வளரவேண்டும்..

பட்டம் மேட்டர் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை உடம்பை பார்த்துக்கொள்ளவும்..

வெற்றி said...

எனக்கும் அந்த மாஞ்சாவை பிடிக்காது..பின்ன அதுதானே சர்வம் படத்துல த்ரிஷாவுக்கு விபத்து ஏற்பட காரணம் :(

thiyaa said...

வாழ்த்துகள்
உங்கள் எதிர்காலம் வளமாகட்டும்

அன்புடன் அருணா said...

அட! டரியலில் அறிமுகமா! நன்றிங்க புலிகேசி!

நினைவுகளுடன் -நிகே- said...

வாழ்த்துகள்
உங்கள் எதிர்காலம் வளமாகட்டும்

திருவாரூர் சரவணா said...

சென்னையில வானொலி தொகுப்பாளரா இருக்குற கண்மணின்னு ஒரு பொண்ணோட கழுத்துல மாஞ்சா நூல் எப்படி கிழிச்சிருக்குன்னு தேவதை (march 1-15) புத்தகத்துல படிச்சதும் rombave ஷாக். வடசென்னை பிரச்சனை இப்ப தென்சென்னைக்கும் வந்துடுச்சா?
http://ilaiyabharatham.blogspot.com/2010/03/blog-post_06.html

தர்ஷன் said...

விரைவில் உங்கள் தேவதையை சந்திக்க வாழ்த்துக்கள்

Paleo God said...

ரைட்டு புலவரே..:)

Cable சங்கர் said...

காதல் கதையா.. கலக்குங்க.. வி.தா.வ.. பார்த்துவிட்டு வந்தவர்களுக்கெலலாம் இதுதான் நிலைமை

கலகலப்ரியா said...

அன்புக்கு நன்றி புலிகேசி...:)..

டரியல் வழக்கம்போல நன்னாயிட்டு உண்டு...

ராமலக்‌ஷ்மி... உங்களுக்கும் நன்றி...:)

ரோஸ்விக் said...

விண்ணைத்தாண்டி வருவாயா போயி... மாஞ்சா தாண்டி வருவாயா என ஆகிவிட்டதோ?? :-))

அந்த பெண்ணை மீண்டும் சந்திக்கவும், எதிர் பார்த்தது போல மனைவி அமையவும் வாழ்த்துகள்.
அந்த பெண்ண உம்மில் ஏற்படுத்திய பாதிப்புக்காகவேனும் அந்த கதையை வாசிக்கலாம் என்றிருக்கிறேன். பார்ப்போம்.

பிரியா - என்றும் பிரியமுடன் கலகலவென... (கவிதைக்கு பல நேரம் நான் காத தூரம் ஓடிவிடுவேன். மற்ற எழுத்து நடைகள் பிடிக்கும்)

துப்புரவு... :-((

ரோஸ்விக் said...

கடவுள் யார்?? பக்கம் -1, பக்கம் - 2 - னு போட்டா?? ;-)

'பரிவை' சே.குமார் said...

nanbarey
kayam perithillaithaney... ippa eppadi irukku. paravayillaiya


ஆஹா!! புலவர் எங்கோ காதல் வலையில் மாட்டி இருப்பதாக தெரிகிறதே,
வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

avvv அந்த புள்ளை மயக்கிடுச்சா வேல்?

சாக்கடை மேட்டர் வருத்தமாத்தான் இருக்கு...

பிரின்ஸ் பதிவு வழக்கம்போலவே கலக்கல்

பா.ராஜாராம் said...

"உன் சிரிப்பினில்" சீக்கிரம் வரட்டும் புலவரே.

சுசி said...

நல்ல வேளை.. காயங்களோட தப்பிச்சீங்க புலிகேசி.

அடடடடடா.. காதல் என்ன மாதிரில்லாம் வருது..

ஸ்ரீராம். said...

விஜய்க்கு காதலுக்கு மரியாதை திருப்பம் தந்தது போல சிம்புவுக்கு இது ஒரு திருப்பமோ என்னமோ? ஓசானா பாடல் நன்றாக இருந்தாலும் அதன் சரணத்தில் ஒரு இடத்தில் பழைய 'நீ ஆண்டவனா' பாடல் சாயல் தெரிந்தது.

காதல் அற்புதமான உணர்வு..வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

நண்பர்களே இப்போது காயங்கள் சரியாகிப் போயிருக்கிறது. நலமாக இருக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி.

அப்புறம் அந்த தேவதை...எனக்கு நம்பிக்கை இல்லை மீண்டும் பார்ப்பேன் என்று.

ILLUMINATI said...

புது போஸ்ட் போட்டு இருக்கேன் பாஸ்.வந்து குமுறிட்டு போங்க.

http://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.html

ஈரோடு கதிர் said...

முருகவேல் தலைக்கவசம் போடறதில்லையா?

கண்ணா.. said...

//மொத்தத்தில் இப்படம் மசாலா ரசிகர்களுக்கானது அல்ல//

என்ன சொல்லவருகிறீர்கள்.....

மசாலா ரசிகர்கள் என்று ஓன்று உண்டா என்ன....

விதாவியில் மசாலாத்தனம் இல்லையென்றா சொல்ல வருகிறீர்கள்?

வெள்ளிநிலா said...

@ kathir!
"முருகவேல் தலைக்கவசம் போடறதில்லையா?"


Athuthaan Mr Kathir!

Chitra said...

மாஞ்சா கயிறால் வந்த காயங்கள், சீக்கிரம் சரியாகட்டும்.

அந்த மஞ்ச குருவி, உங்களை மீண்டும் சீக்கிரம் சந்திக்கட்டும்.

Thenammai Lakshmanan said...

யாரிந்த தேவதை புலவரே
என்னமோ போங்க ரொம்ப நல்லா எழுதுற ஆளெல்லாம் இப்படி விக்கெட் மாதிரி விழுந்துகிட்டு இருக்கு

அப்புறம் கலகலப்பிரியா மற்றும் அருணவுக்கு வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

//ஈரோடு கதிர் said...

முருகவேல் தலைக்கவசம் போடறதில்லையா?
//

அண்ணே நல்லாக் கேட்டீங்க போங்க..வீட்டருகே உள்ள இடம் அப்பொதுதான் அதைக் கழற்றினேன். நல்ல வேளை போட்டிருந்தா நேரா வழுக்கி கழுத்தில்தான் விழுந்திருக்கும் அந்த மாஞ்சா...

புலவன் புலிகேசி said...

//கண்ணா.. said...

//மொத்தத்தில் இப்படம் மசாலா ரசிகர்களுக்கானது அல்ல//

என்ன சொல்லவருகிறீர்கள்.....

மசாலா ரசிகர்கள் என்று ஓன்று உண்டா என்ன....

விதாவியில் மசாலாத்தனம் இல்லையென்றா சொல்ல வருகிறீர்கள்?
//

அப்படியில்லை கண்ணா...ஐந்து குத்துப் பாட்டு ஆறு சண்டையை எதிர் பார்ப்பவர்களைத்தான் மசாலா ரசிகர்கள் என சொல்லியுள்ளேன்...

Anonymous said...

டரியல் அத்தனையும் சுவையான பொரியல்

திவ்யாஹரி said...

இப்போ காயங்கள் ஆறிவிட்டதா புலவரே.. வண்டியில் செல்லும் போது மெதுவாகவே செல்லுங்கள் நண்பா.. அந்த பெண்ணை பற்றிய விவரங்கள் சேகரித்தாயிற்றா?

Romeoboy said...

ரைட் .. கழுத்துக்கு வந்தது கண்ணுக்கு கீழ் முடிந்தது.