கடவுளை மற..மனிதனை நினை..

16 February 2010

வெள்ளிநிலாவும் மாறிப்போன என் கதையும்

5:37:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments
ராமசாமியும் சோஸ்யக்காரனும்

சின்னையன் ஒரு மிகப்பெரிய சோஸ்யக்காரன்னு பேர் வாங்குனவன். இவனோட பொழப்பே அடுத்தவங்க எதிர்காலத்த பத்தி சொல்லி (?) சம்பாதிக்கறதுதான். ராமசாமி சின்னையனோட உதவியாளன்.

ராமசாமிக்கு உண்ண உணவும் இருக்க இடமும் தந்தான் சின்னையன். சம்பளம்னு இதுவரை எதுவும் கொடுத்ததில்லை. ராமசாமியும் சாப்பாடும் இடமும் கிடைச்சா போதும்னு இருந்துட்டான். சின்னையன் சொல்ல சொல்ல சோஸ்யக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களை எடுத்து வருவதுதான் ராமசாமியின் வேலை.

சின்னையனால் மட்டுமல்ல எந்த ஒரு சோஸ்யக்காரனாலயும் அடுத்தவர் எதிர்காலத்தை கணிக்க முடியாது. வருபவர்களின் வார்த்தைகளை கூர்ந்து கவனிப்பான் சின்னையன். பின்னர் அவரவர் மன நிலைக்கேற்ப அவர்களுக்கு சாதகமாக சோஸ்யம் சொல்லும் வித்தை தெரிந்தவன். நம் மக்களும் மூடநம்பிக்கையில் மூழ்கி போயிருக்கிறார்கள். அதுதான் சின்னையனின் முதலீடு

சின்னையன் சோஸ்யம் பாக்க வருபவர்களுக்கு சொல்லும் சில விடயங்கள்

"உங்க வீட்டுல கூடிய சீக்கிரம் ஒரு விசேசம் நடக்கப் போவுது"

"நீங்க தொழில்ல விருத்தி அடைவீங்க"

"உங்க சொந்தக்காரங்கள்ள ஒருத்தருக்கு உடல் நிலை சரியில்லாம போவும்"

"கொஞ்ச நாளைக்கு முன்ன உங்களுக்கே உடல்நிலை சரியில்லாம போயிருக்குமே?"

இது போன்ற பொதுப்படையான சோஸ்யம் மட்டுமே சொல்லத் தெரியும். இவை உலகில் உள்ள பலருக்கு பொதுவானது. அவர்களும் யோசிக்காமல் அட சரியா சொல்றாரேன்னு காசு கொடுத்து போவார்கள். இவனுக்கு மட்டுமல்ல ஊரில் திரியும் அனைத்து சோஸ்யக்காரர்களும் இது போலத்தான் வாழ்க்கையை ஓட்டி கிட்டிருக்காங்கன்னு ராமசாமிக்கு நல்லாவே தெரியும்.

ராமசாமிக்கு உடல்நிலை சரியில்லைன்னாலும் விடுப்பு எடுக்க முடியாது. அவன் தன் எடுபிடி வேலைகளை செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் சின்னையனிடம் திட்டு வாங்க வேண்டும். ராமசாமி ஒரு அடிமை போல் சின்னையனிடம் வேலை பார்த்து கொண்டிருந்தான்.

ராமசாமிக்கு அடிக்கடி தோன்றும் "என்னடா இவன் இந்த ஊர் மக்களை எல்லாம் ஏமாத்தி பொழப்பு நடத்திட்டுருக்கானே..நாம வேற அதுக்கு உடந்தையா இருக்கமே" இதெல்லாம் தப்புன்னு தெரிஞ்சும் வயத்துப் பொழப்புக்காக இப்புடி ஏமாத்தி திரியுறமேன்னு வருத்தப் படுவான்.

ஒரு நாள் ராமசாமி எப்படியாவது இந்த தொழிலில் இருந்து விலகனும்னு முடிவெடுத்தான். அதற்கு ஆயத்தமானான்.

---சின்னையன் சொன்ன சோஸ்யக்குறிப்பை எடுக்க வெளியில் வந்தவன் பல ஆண்டுகளாக பிரிக்கப்படாத தன் இறக்கையை விரித்து வான் நோக்கி பறந்தான். பறக்கும் போது தான் விடுதலையடைந்ததை விட இனி தன்னால் மக்கள் ஏமாற்றபட போவதில்லை என்ற சந்தோசமே ராமசாமியிடம் நிறைந்திருந்தது.

-------------------------------
இதுதான் வெள்ளிநிலாவிற்கு நான் அனுப்பியக் கதை. அதன் முடிவில் சில மாற்றம் செய்திருப்பதாக நண்பர் ஷர்புதீன் சொல்லியிருந்தார். அந்த முடிவு இதோ

----சில நாள் கழித்து சின்னையன் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தான். "ஏங்க யாராவது ராமசாமிய பார்த்தீங்களா? கொஞ்ச நாளா ஆளைக் காணோம்! என் ஜோஸ்ய குறீப்புகளையும் காணோம்."

இறுதி நேரத்தில் அனுப்பப்பட்டதால்தான் இந்த மாற்றம் நிகழ்ந்து போனது. இப்போ நீங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
--------------------------------

27 விவாதங்கள்:

ஸ்ரீராம். said...

எனக்கென்னவோ நீங்கள் சொல்லியுள்ள முடிவு சரியாய்ப் படுகிறது. குறிப்பாய்ச் சொல்ல வந்தது யாரை, அல்லது எதை என்பதைக் குறிக்க உங்கள் வார்த்தைகள் பொருத்தம்.

சைவகொத்துப்பரோட்டா said...

ஓ, கிளி ஜோசியம், உங்கள் முடிவுரை தெளிவாகவே இருக்கிறது.

Paleo God said...

நீங்க எழுதினது பதிவுக்கு,
அவர் எழுதினது பத்திரிகைக்கு,

ரெண்டும் சுவாரச்யமாதான் இருக்கு.:))

ஹேமா said...

மனுசன் பொழைக்க ஆயிரம் வழி தேடிக்கிறான்.அதில இதுவும் ஒண்ணு !

இன்றைய கவிதை said...

புலவரே

எனக்கு தங்கள் முடிவு பிடித்திருக்கிறது, அவரது முடிவு சற்றே செயற்கையாக படுகிறது....


நன்றி
ஜேகே

Jackiesekar said...

ரெண்டுமே நல்லாதான் இருக்கு...

Chitra said...

////---சின்னையன் சொன்ன சோஸ்யக்குறிப்பை எடுக்க வெளியில் வந்தவன் பல ஆண்டுகளாக பிரிக்கப்படாத தன் இறக்கையை விரித்து வான் நோக்கி பறந்தான். பறக்கும் போது தான் விடுதலையடைந்ததை விட இனி தன்னால் மக்கள் ஏமாற்றபட போவதில்லை என்ற சந்தோசமே ராமசாமியிடம் நிறைந்திருந்தது.///////


..........இந்த முடிவில் உங்கள் கொள்கை தெரிகிறது. உங்கள் கதை என்ற முத்திரை பதிக்கும் முடிவு.

சசிகுமார் said...
This comment has been removed by the author.
சசிகுமார் said...

அருமையான பகிர்வு நண்பா, தொடர்ந்து எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் தல....

ரெண்டு முடிவுமே நல்லாத்தான் இருக்கு...

இருந்தாலும் உங்களது முடிவுரை தெளிவு...

:-)

முனைவர் இரா.குணசீலன் said...

கதை அருமை நண்பா..

இதழிலும் படித்தேன்..

இதழில் வெளியானமைக்கு வாழ்த்துக்கள்.

சின்னையன் சோஸ்யம் பாக்க வருபவர்களுக்கு சொல்லும் சில விடயங்கள்

"உங்க வீட்டுல கூடிய சீக்கிரம் ஒரு விசேசம் நடக்கப் போவுது"

"நீங்க தொழில்ல விருத்தி அடைவீங்க"

"உங்க சொந்தக்காரங்கள்ள ஒருத்தருக்கு உடல் நிலை சரியில்லாம போவும்"

"கொஞ்ச நாளைக்கு முன்ன உங்களுக்கே உடல்நிலை சரியில்லாம போயிருக்குமே?"

இது போன்ற பொதுப்படையான சோஸ்யம் மட்டுமே சொல்லத் தெரியும்


முற்றிலும் உண்மை நண்பரே..

இது போன்ற அடிப்படை உளவியல் தெரிந்தவனெல்லாம் பெரிய சோதிடக்காரனாகிவிடுகிறான்..

ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருந்துகொண்டுதானே இருப்பார்கள்.

vasu balaji said...

/இனி தன்னால் மக்கள் ஏமாற்றபட போவதில்லை என்ற சந்தோசமே ராமசாமியிடம் நிறைந்திருந்தது./

ராமசாமியின் பங்கு மோசடியில் எதுவுமில்லையல்லவா? குறிப்பெடுத்துக் கொடுத்தது தவிர! அதனால்தான் முடிவை சுவாரசியமாக்க மாறுதல் செய்யப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். இன்னும் அழுத்தமாகத்தான் இருக்கிறது. உங்கள் முடிவுக்கு வலுசேர்ப்பதாகத்தான் இருக்கிறது.

க.பாலாசி said...

இரண்டு முடிவுகளுமே நன்றாகத்தான் இருக்கிறது...

நல்ல கதை....வாழ்த்துக்கள் நண்பா....

ஜெட்லி... said...

ரைட்....

வரதராஜலு .பூ said...

உங்கள் முடிவு நன்றாக இருக்கிறது.

கலகலப்ரியா said...

முடிவுகள் இரண்டும் நன்று... கதையும்... :)

பனித்துளி சங்கர் said...

கதை மிகவும் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே !

Thenammai Lakshmanan said...

முடிவு கூட ஒரு கதையோட ஒட்டத்தை மாத்துது புலவரே ரெண்டுமே அருமை அவரோடது கமர்சியல் பார்வை

"உழவன்" "Uzhavan" said...

இதழில் படித்தேன். வாழ்த்துகள்

balavasakan said...

இரண்டுமே நல்லாருக்கு ஆனா உங்கள் முடிவுதான் தெளிவு...சூப்பர் ..

Unknown said...

உங்கள் முடிவுக்கு தான் என் ஓட்டு

திவ்யாஹரி said...

உங்க முடிவு தான் அருமை நண்பா.. ஏமாற்று தொழிலில் இருந்து விலக நினைப்பவன், உங்க முடிவு படி தான் இருப்பான்..

Menaga Sathia said...

ரெண்டுமே நல்லா இருக்கு!!

DREAMER said...

புலவரே,
கதை அருமை...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

Romeoboy said...

நல்லா தான் இருக்கு சகா

Radhakrishnan said...

கடைசி வரிகளின் மனிதாபிமானத்தைச் சொன்னது சரிதான், தான் மட்டும் திருந்தினா போதுமா? அந்த சின்னையனும் திருந்தறமாதிரி, மக்கள் திருந்தறமாதிரி ஏதாவது பண்ணியிருக்கனும். மாற்றம் என்பது மொத்த உலக மக்களாலும் வந்து சேருவது. நல்ல கதை, ஆனால் முடிவு இன்னும் கொஞ்சம் வலுவாக இருந்திருக்கலாம். இப்பவும் பாருங்க, இது என்னோட கருத்துதான். நன்றி ஐயா.

inventsekar said...

nice work, nanba...i am ur new fan..let me read ur other works...

~sekar~