கடவுளை மற..மனிதனை நினை..

15 February 2010

காதலர் தினத்தில் கிடைத்த காதல் பரிசு

7:42:00 AM Posted by புலவன் புலிகேசி 28 comments

5.30 மணிக்குள் சென்றே ஆக வேண்டும் என முடிவெடுத்தேன். ஆனால் இடையில் நட்பு ஒருவர் வீட்டுக்கு செல்ல வேண்டியக் கட்டாயம். அதனால் 6 மணிக்குத்தான் சென்றேன். (எங்கன்னு யோசிக்காதீங்க கேபிள் & பரிசலின் புத்தக வெளியீட்டு விழாவிற்குத்தான்). உள்ளே நுழையும் இடத்தில் வழியில் நின்று பேசிக் கொண்டிருந்த கேபிள் (ஓனர்னா ஓரமா போவ வேண்டியதுதான?) மற்றும் அப்துல்லா என்னை வரவேற்றனர்.
(ஜெட்லி, நான், ரோமியோ)
உள்ளே நுழைந்ததும் அண்ணன் "பட்டர்ஃப்ளை" சூர்யா அழைத்ததும் அருகில் சென்று அமர்ந்து பார்த்தால் வரிசையாக நமது பட்டாளங்கள் ஜெட்லி, சங்கர், பலாபட்டறை சங்கர், மயில்ராவணன், அண்ணன் உண்மைத்தமிழன், அண்ணன் ஜிப்பா தண்டோரா (ஜிப்பா சூப்பர்), காதல் மன்னன் ரோமியோ. வந்திருந்தவர்களில் பெரும்பாலோனோர் வலைப்பதிவர்கள்தான்.

பின்னர் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டோம். சட்டென மின்சாரம் நின்றுவிட்டது(அட நம்ம .பி). அப்போதுதான் தொடங்கியது புத்தக வெளியீட்டு விழா. சிறப்பு விருந்தினர்களாக பிரமிட் நடராஜன் (கேபிளாரின் சித்தப்பா), அஜயன் பாலா, அகநாழிகை வாசு ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

புத்தக வெளியீடும் தொடங்கியது. "லெமன்ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" என்ற கேபிளாரின் புத்தகத்தை பிரமிட் நடராஜன் வெளியிட அகநாழிகை வாசு பெற்றுக் கொண்டார். "டைரிக்குறிப்பும் காதல் ம்றுப்பும்" என்ற பரிசலின் புத்தகமும் வெளியிடப்பட்டது(முன்னாடி போய் இந்த ஒளிப்பதிவு செய்யுறவங்க நின்னதால யாரு குடுத்தா யாரு வாங்குனான்னு தெரியல).

வாழ்த்துரைகளின் தொடக்கம். முதல் வாழ்த்துரை அண்ணன் கேபிளாரின் மகன் சின்ன கேபிளார் "அப்பா ஒரு காமெடி பீசு" என சொல்ல அனைவரும் ஒட்டு மொத்தமாக சிரித்து விட்டோம்.
(சிறப்பு விருந்தினர்கள்)
அடுத்து வாழ்த்துரை கூறிய பிரமிட் நடராஜன் "தான் இன்று இந்த அளவு பெரிய தயாரிப்பாளராக, நடிகனாக வரக்காரணம் கேபிளாரின் தந்தை செய்த உதவிதான் என்றார். அதாவது அவர் 10ம் வகுப்பு முடித்து சென்னை வந்து வேலை தேடிய போது இருக்க இடம், உணவு கொடுத்து உதவியவர் கேபிளாரின் தந்தை.

"இந்நூல் என் பிரம்மாவும் குருவுமான என் தந்தைக்கு சமர்ப்பனம்!!" இது அப்புத்தகத்தில் கேபிளாரின் என்னுரை வரிகள்.

அவர் பேசிக் கொண்டிருக்கையில் தமிழ்ப்படம் இயக்குனர் சி.எஸ்.அமுதன் வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்த போது நடராஜன் சொன்னார் "எனக்கு இன்னும் படத்துக்கு டிக்கெட் கிடைக்கலீங்க". நடராஜன் முடிக்கையில் தான் திரைத்துரையில் சாதித்தவன் என்பதை விட கேபிளாரின் சித்தப்பா என்பதில் பெருமிதம் கொள்வதாக சொன்னார்.
(தமிழ்ப்படம் சி.எஸ்.அமுதன்)
பின்னர் பேசிய அமுதன் தன் படத்திற்கு விமர்சனம் எழுதிய வலைப்பதிவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அதிலும் வலைப்பதிவு விமர்சனம் படித்தப் பின் ஒரு ந்ம்பிக்கை வந்ததாக சொன்னார். அதன் பின் பேசிய அஜயன் பலா நீண்ட நேரம் பேசினார். எழுத்துலகில் அவர் பட்ட கஷ்டங்கள், கேபிளாரின் புத்தகத்தில் அவருக்குப் பிடித்த கதைகள் என விவரித்தார்.

அதன் பின் என்னுரை வழங்கிய பரிசல் நகைச்சுவையாக பேசினார். "விருந்தினர்கள் எலாரும் இன்னும் புத்தகத்தைப் படிக்கலன்னு சொன்னங்க. அதனாலதான் வந்துட்டாங்க போலருக்கு" என்றதும் மீண்டும் சிரிப்பொலி.

நிகழ்ச்சியை
அழகாக தொகுத்து வழங்கிய திரு சுரேகா அவர்களுக்கு நன்றி. ஒரு வழியாக விழா முடித்து வெளியில் வந்து ஒரு பதிவர் சந்திப்பும் முடித்தோம்.

மேலே சொன்னப் பதிவர்கள் தவிர்த்து கார்கி, அத்திரி, வெள்ளி நிலா ஷர்புதீன், வீடு திரும்பல் மோகன் ஆகியோரையும் சந்தித்து பேசிவிட்டு நான் வீடு திரும்பினேன்.

பி.கு: நானும் இன்னும் புத்தகத்தைப் படிக்கல படிச்சிட்டு டரியல்ல விமர்சனம் பன்றேன். நடராஜன் பேசுகையில் யூத்துன்னு திரியுற கேபிளின் எழுத்துக்கள் 55வயதுக்காரரின் எழுத்து போல் இருப்பதக சொன்னார் (அனைத்து வலைப்பதிவர்களும் சிரித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்). இந்த இருப் புத்தகங்களும் எனக்குக் கிடைத்த காதலர்தின பரிசுகள்.

புகைப்பட உதவி: பலாபட்டறை சங்கர் (சுட்டாலும் போடனுமா இல்லையா)

மேலும் புகைப்படங்களுக்கு: பலாபட்டறை சங்கர்

28 விவாதங்கள்:

அத்திரி said...

உன்னை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி புலிகேசி

cheena (சீனா) said...

நல்லதொரு வர்ணனை - புத்தக வெளியீட்டு விழாவினைப் பற்றி

நல்வாழ்த்துகள் புலிகேசி

மரா said...

நேற்றைய தினம் ஒரு மறக்கமுடியாத நாள் தான்.எவ்ளோ பேர் அறிமுகம். அருமையாய் பதிவு செய்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..சின்ன கேபிள் தான் ஹீரோ!!

திருவாரூர் சரவணா said...

நான் புத்தகத்துக்கு மணி ஆர்டர் பண்ணிட்டேன். விழாவுல கலந்துக்க முடியாதவங்களுக்கு இது ஆறுதல்.புத்தகத்தைப் படிச்ச பிறகு தனியா ஆறுதல் தேவைப்படாம இருந்தா சரிதான்.

இ.பி. காரங்களை தப்பா சொல்லாதீங்க...கேபிள், பரிசல் - ரெண்டு பேரோட புத்தகம்தான் தமிழ் நாட்டையே வெளிச்சத்துக்கு கொண்டு வரப்போகுதுன்னு சிம்பாலிக்கா சொல்லிட்டாகளோ என்னவோ.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லதொரு பகிர்வு...

கௌதமன் said...

சுருக்கமா சிக்கனமா சிறப்பா சொல்லியிருக்கீங்க புலவன் புலிகேசி. சின்ன கேபிளார் கூறிய வரவேற்புரை, கட்டுரையில் எழுதியிருப்பதும், தமிழிஷ் . தமிழ் பத்து - ஆகியவற்றில் சிறு விளக்கத்தில் இருப்பதும் வேறு வேறாக உள்ளதோ? காமெடி / டம்மி ...?

Chitra said...

missed being there............ looks like, you all had great time.

வெள்ளிநிலா said...

படங்கள்.. நன்றாக ...!!

சைவகொத்துப்பரோட்டா said...

பகிர்வுக்கு நன்றி புலவரே.

அகல்விளக்கு said...

pakirvukku nandri Thala....

Varamudiyathala varuthama irukku.

//தண்டோரா (ஜிப்பா சூப்பர்),//

Ithakooda miss pannittane.....

:-(

ஜெட்லி... said...

நல்லா தொகுத்து போட்டு இருக்கீங்க புலிகேசி...
எங்கே எதிர்ப்பதிவு காணோம்??
கதைக்கு எதிரா....

CS. Mohan Kumar said...

தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி; நானும் படங்கள் போட்டுள்ளேன் முடியும் போது பாருங்கள்

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

vasu balaji said...

I missed it. :)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நான் கலந்துகொள்ள முடியவில்லை.:-(

செ.சரவணக்குமார் said...

அருமையான பகிர்வு நண்பா.

ஸ்ரீராம். said...

நிகழ்ச்சிக்கு வராதவர்கள் விஷயம் தெரிந்து கொள்ளுமளவு எழுதி உள்ளீர்கள். நன்றி.

Anonymous said...

நல்லா வர்ணிச்சிருக்கிங்க

க.பாலாசி said...

நல்ல அனுபவத்தினை சுவைத்திருக்கிறீர்கள்... சந்தோஷம்...

malarvizhi said...

வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வு.வர்ணிப்பும் ஜோர் .

balavasakan said...

பெறுமதியான பரிசுதான்!!!

ILLUMINATI said...

//நானும் இதுவரை யாரிடமும் சிக்காமல் தப்பித்து வாழும் அதிர்ஷ்ட சாலிதான்//
தல,அதனால தான் நீங்க இன்னம் புலவனா இருக்கீங்க.இல்லன்னா ‘புல்’வன் ஆகி இருப்பிங்க.just for fun. :)

Thenammai Lakshmanan said...

நல்ல பகிர்வு புலவன் புலிகேசி ...என்னுடைய படமும் உங்கள் பதிவில் போட்டு இருப்பதற்கு உங்களுக்கும் பலா பட்டறைக்கும் நன்றி...

Thenammai Lakshmanan said...

ஆமாம் புலிகேசி நானும் தேடித்தேடிப்பார்த்தேன் கண்டு பிடிக்க முடியல சரி வரலையோன்னு நினைச்சேன்

திவ்யாஹரி said...

நல்ல பகிர்வு நண்பா.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஹேமா said...

கடைசிப் பந்தியில் நானும்.
எங்களோடும் பகிர்ந்துகொண்டீர்கள்.
நன்றி புலவரே.

தாராபுரத்தான் said...

நாங்களும் கூட வந்திருக்கலாம்.

Romeoboy said...

\\காதல் மன்னன் ரோமியோ //

தம்பி ரொம்ப புகழாதிங்க .. ஹி ஹி ஹி