இருந்தாலும் யானை அவனுக்கு ஒரு விந்தை உயிராகவே தெரிந்தது. யானையின் மணியோசை கேட்டால் உறக்கத்திலிருந்தாலும் எழுந்தோடுபவன். ஒரு நாள் பள்ளி முடித்து வரும் போது "நம்ம தெருவுக்கு யானை வந்துருக்காமுடா" என தெரு நண்பன் சொன்னதும் வழக்கம் போல் ஓடத் தொடன்கினான்.
அவன் ஓட்டத்தைத் தடை செய்ய முயன்ற காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடும் போது பக்க வாட்டு மரங்களும், வீடுகளும் எதிர்த் திசையில் ஓடிக் கொண்டிருப்பதாக உணர்ந்தான். தெருவை நெருங்கிய போது அவன் ஓட்டத்துடன் சேர்ந்து மரம் வீடுகளின் ஓட்டத்தின் வேகமும் குறைந்து யானைக்கருகில் வந்து நின்றே போனது.
மூச்சிறைப்புடன் நிமிர்ந்து பார்த்தவன் தனக்கு வாங்கும் மூச்சு ஏன் மரத்திற்கும், வீட்டிற்கும் வாங்கவில்லை என்ற குழப்பத்தை மறந்து அந்த விந்தை உயிரினத்தைப் பார்த்த போது பாகன் அதை அங்குசத்தால் குத்தியதைக் கண்டான். கண்களை மூடி அழுது கொண்டே வீடு நோக்கி ஓடினான். இப்போது எதிர்த்திசையில் ஓடிய அவை அவனுக்குத் தெரியவில்லை.அதன் பின் பலமுறை யானையின் கண்களில் வ(லி)ழியும் நீரைப்பார்த்து கலங்கியிருக்கிறான். இவனுடன் சேர்ந்து நாட்களும் ஆண்டுகளும் ஓட அப்பாவின் பணியிட மாற்றம் என ஓடி 28வயதைக் கடந்திருந்தான். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பின் மனைவியுடனும் கையில் குழந்தையுடனும் வந்தவன் அந்த கோவிலுக்கு சென்றான்.
யானையைப் பார்த்த அவனது குழந்தை சிரிக்க அதை இன்னும் மகிழ்வூட்ட பணப்பையிலிருந்து ஒரு 1ரூ நாணயத்தை எடுத்து யனையிடம் நீட்டினான். வாங்க மறுத்த யானையை பாகன் வழக்கம் போல் அங்குசத்தால் குத்த யானை அலறியது. இவன் பிள்ளையும் அலறினான்.
பாகனுக்கு பயந்த யானை அந்த காசை வாங்கிக் கொண்டு குழந்தையின் தலையில் தன் கையை வைத்ததும் குழந்தை சிரித்தான். இவனும் குழந்தையின் சிரிப்பில் மகிழ்ந்தான். இப்போது யானையின் கண்களில் வழிந்த நீர் அவனுக்குத் தெரியவில்லை.
37 விவாதங்கள்:
நல்லாருந்தது புலிகேசி ...
நல்ல உளவியல் கூறுகளை உள்ளடக்கிய கதை நண்பரே அருமை..
யானை என்றால் என்னவென்று தெரியாத ஒன்னறை வயது சிறுவனாக இருந்த போது அவன் அப்பாதான் யானை என நினைத்து சவாரி செய்து கொண்டிருந்தவன்
அருமை...
உண்மையும் கூட!!
அந்த பையன் நீங்களா புலிகேசி....
இவ்ளோ சின்ன கதை பல கதை சொல்லுதே! சூப்பர்!
கதை, ரொம்ப அருமையா இருக்கு. மனதை தொட்டது.
........."மூச்சிறைப்புடன் நிமிர்ந்து பார்த்தவன் தனக்கு வாங்கும் மூச்சு ஏன் மரத்திற்கும், வீட்டிற்கும் வாங்கவில்லை என்ற குழப்பத்தை மறந்து அந்த விந்தை உயிரினத்தைப் பார்த்த போது பாகன் அதை அங்குசத்தால் குத்தியதைக் கண்டான். கண்களை மூடி அழுது கொண்டே வீடு நோக்கி ஓடினான். "
...........mmmmmmm.........
இந்த கதையில் மனித மனதின்.... உளவியலும் தெரிகிறது.. பாராட்டுக்கள்.
என்ன பாஸ், எல்லா ஏரியாலயும் கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.
இருக்கும் சூழ்நிலைதான் மனிதனின் மன நிலையைத் தீர்மானிக்கிறது என்பதை உணர்த்திய கதை.
யானையை அழவிட்டால் எனக்கும் அழுகைவந்துரும்.
பாவம்.... அந்த பெரிய ஜீவனை மனுசன் என்ன பாடு படுத்துறான் பாருங்க:(
சின்ன கதைக்குள் எத்தனை விஷயங்கள்?
sensational thala...........
மனதை தொட்டது.
கருதுள்ள கதை.....
இந்தக்கதை ரொம்பப்பிடிச்சிருக்குங்க
அருமை :)
அருமை :)
// இவனும் குழந்தையின் சிரிப்பில் மகிழ்ந்தான். இப்போது யானையின் கண்களில் வழிந்த நீர் அவனுக்குத் தெரியவில்லை.//
finishing natchinnu irukku
நச்சுனு இருக்கு..
யானை அளவிற்கு அருமை
கதை மனதைத்தொட்டது.. ரசித்தேன்...
ரொம்ப நல்லாயிருக்கு புலிகேசி:)
//குழந்தையின் சிரிப்பில் மகிழ்ந்தான். இப்போது யானையின் கண்களில் வழிந்த நீர் அவனுக்குத் தெரியவில்லை.//
இந்த இடத்தில் யதார்த்தம் சப்பணமிட்டு சிரிக்கிறது. அருமை நண்பா.
கதை சூப்பர் பாஸ்...
நாங்களும் வந்திருக்கம்
யதார்த்தம்...........
யானையின் கண்ணீர் வாயில்லா ஜீவன்...வலிக்கிறது கதையாக எண்ணமுடியவில்லை...
மனதை தொட்ட கதை...
எப்படியெல்லாம் வாழ்க்கையை வாழப் பழகிகொண்டோம் என அறிவுறுத்தும் அழகிய சொற் சித்திரம்.
யதார்த்தம் புலவரே
இது வெறும் கதை இல்ல புலவரே..
அதுவும் கண்ணீர் கண்.. அப்ப்பா..
எழுத்து நடை வித்யாசமா இருக்கு..
ஆழ்ந்த கருத்துள்ள எழுத்து.. நம் மக்களின் இன்றைய போக்கை படம் பிடித்துக் காட்டுகிறது...
நம் குழந்தையின் சிரிப்பில் வதை கூட மறக்கப்படுகிறது.நல்லாயில்லைங்க.
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..
//Blogger தாராபுரத்தான் said...
நம் குழந்தையின் சிரிப்பில் வதை கூட மறக்கப்படுகிறது.நல்லாயில்லைங்க.//
நல்லா இல்லைதான் என்ன செய்வது யதார்த்தமாய் இழந்த மனிதத்தை...
யானையோட பலத்த அதுக்கு கொடுக்கற வலியில மறக்க வச்சி நாம வாழற மாதிரி, வாழ்க்கையிலயும் பல விஷயங்கள நாம செஞ்சுக்கிட்டிருக்கோம்.. ம்ம் என்ன சொல்ல? நல்ல பதிவு புலவரே..
//நல்ல உளவியல் கூறுகளை உள்ளடக்கிய கதை நண்பரே அருமை//
Its very touchy...thanks for the post....
Pulavaa
Priyamudan
Dyena
Post a Comment