கடவுளை மற..மனிதனை நினை..

07 February 2010

இதுவல்லவோ திருமணம்

7:23:00 AM Posted by புலவன் புலிகேசி 16 comments


நேற்றைய டரியலில் ஒரு திருமணத்திற்கு சென்றதாக சொல்லியிருந்தேன். அங்கு நடந்த சுவாரஸ்யங்களையும் ஆச்சர்யங்களையும் இங்கு விவரிக்கப் போகிறேன்.

மாப்பிள்ளை பெயர் சண்முகம், ஒரு மென்பொருள் பொறியாளன். பெண் பெயர் ஜாஸ்மின். இவர்கள் இருவரும் என் முதுகலைப் படிப்பின் நண்பர்கள். சண்முகம் ஒரு இந்து குடும்பம், ஜாஸ்மின் ஒரு கிறிஸ்தவக் குடும்பம் (எப்புடி பிரிச்சாங்கன்னு புரியலப்பா). இவர்கள் இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே காதலித்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த விடயம் எங்கள் வகுப்பு நண்பர்கள் யாருக்கும் தெரியாது. கல்யாண பேச்சு அடிபட்ட போதுதான் தெரியும் அவ்வளவு ரகஸ்யமாக காதலித்திருக்கிறார்கள். நான் இவர்கள் திருமணத்திற்கு சென்றதன் முக்கிய காரணம் மணதோடு மதமும் கலக்கப் போகிறது என்பதற்காகத்தான்.

இரு மதங்கள் கலப்பதை முதன் முதல் பார்க்கும் ஆர்வம் என்னுள் ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருந்தது. காலை 7 மணிக்கு திருமணம் என்பதால் மயிலாடுதுறையிலிருது 6.30க்கு புறப்பட்டு 7.10க்கு கும்பகோணம் வந்தடைந்து திருமணம் நடைபெரும் கிறிஸ்தவ ஆலயம் வந்தடைந்த போது பெண் வீட்டார் மட்டுமே இருந்தனர். பெண்ணுக்கு ஒரு வணக்கம் சொல்லி வெளியே வந்த போது மாப்பிள்ளை உள்ளே வந்தான். அவனை கட்டியணைத்து வாழ்த்தி உடனிருந்தேன்.

பின்னர் என் கல்லூரி நண்பர்கள் சிலர் அங்கு வர பழங்கதைகள் பேசத்தொடங்கினோம். மோதிரம் கொடுத்த தோழியும் அங்கு வந்தார். அவருக்கு வருகிற செப்டம்பர் 5ம் தேதி திருமணம். அவரும் ஒருவரை காதலித்துதான் கரம் பிடிக்கிறார் (இப்போதாவது ஒப்புக் கொள்ளுங்கள் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்). அவரை 1வருடம் கழிந்து சந்தித்தும் சரியாக பேச முடியவில்லை. அவசர வேலை என உடன் கிளம்பி விட்டார்.
(இதில் சிவப்பு வட்டமிடப்பட்டிருப்பதுதான் அந்த ஜோடி)
பின்னர் ஆரம்பித்தது திருமண ஒப்பந்தம் பாதிரியார்கள் பைபிள் விளக்கம் கொடுத்து முடித்தவுடன் அந்த கிறிஸ்தவ ஆலயத்தில் நாதஸ்வரமும், கெட்டி மேளமும் முழங்கியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. இதுவரை இப்படி ஒரு நிகழ்வை பார்த்ததில்லை என்பதால் அது எனக்கு ஆச்சர்யம் தந்தது.

அதனையடுத்து பெண் மற்றும் மாப்பிள்ளையிடம் அனைவர் முன் சம்மதம் கோரப்பட்டது. சம்மதத்திற்கு பின்னர் பதிரியார் தாலி எடுத்து கொடுக்க என் நண்பன் என் தோழி கழுத்தில் கட்ட கெட்டி மேளம் மீண்டும் முழங்கியது. கிறிஸ்தவ முறை திருமணத்தில் கெட்டி மேளமும், தாலியும் என்னை ஆச்சர்யப்பட வைத்ததுடன் சந்தோசப்படவும் வைத்தது.

இது போன்ற திருமணங்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் நடை பெறுவது வியப்பிற்குரியது. இவை ஆதரிக்கப் பட வேண்டிய திருமணம். ஜாதி மதம் என்ற பாகுபாடுகள் ஒழிய இது பொன்ற திருமணங்கள் பெருக வேண்டும்.

பி.கு: 2வேளை நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு வீட்டுக்கு வந்து ஒரு 4 மணிநேரத்தூக்கத்திற்கு பின் மீண்டும் சென்னை புறப்பட்டு வந்தேன்.

16 விவாதங்கள்:

Paleo God said...

சடங்குகள் ஆத்மா திருப்த்திக்காக.. மனங்கள் இரண்டும் மணந்தால் போதும் வேறு எதுவும் முக்கியமில்லை..

மீண்டும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்..:)

சைவகொத்துப்பரோட்டா said...

மணமக்களுக்கு அடியேனின் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் புலவரே.

வெற்றி said...

என் வாழ்த்துக்களையும் அவர்களுக்கு சொல்லுங்கள்..

இதை போல் என் நண்பனின் காதலிலும் மதங்கள் வேறு வேறு..இப்போது அதுவே அவர்களை பிரித்து விடும் போல் இருக்கிறது :(((

வெள்ளிநிலா said...

அந்த மோதிரம் மேட்டர் இடிக்குதே... இரிப்பா வானத்த பார்த்து கொஞ்சம் யோசிப்போம்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

ஜெட்லி... said...

மோதிரம் மேட்டர் பத்தி தெளிவா சொல்லிட்டிங்க.....
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்....

ஸ்ரீராம். said...

படிக்க சந்தோஷமா இருக்கு.

செ.சரவணக்குமார் said...

படிக்கும்போதே அவ்வளவு சந்தோஷமா இருக்கு நண்பா. இதுபோன்ற திருமணங்கள் அதிகரிக்க வேண்டும். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

தம்பதியர் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள்..விடமால் எல்லா ஐட்டங்களும் சாப்பிட்டீங்களா?

sathishsangkavi.blogspot.com said...

சடங்கு என்ன சடங்கு.... இரு மனமும் சேர்ந்து காதலித்த பெண்ணையே திருமணம் செய்வதில் உள்ள சந்தோஷம் வேறு எதிலும் இல்லை நண்பா....

balavasakan said...

ம்..ம்.. ஆச்சரியந்தான் வாழ்க வளமுடன்...

Chitra said...

அன்பினால் கட்டுப்பட்ட குடும்பங்கள். சடங்குகளால் அல்ல, என்று காட்டி இருக்கிறார்கள். புது தம்பதியருக்கு, வாழ்த்துக்கள்.

சுசி said...

மணமக்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

என் உறவுக்காரங்க பலபேர் இன மத மொழி பேதமில்லாம கல்யாணம் பண்ணி இருக்காங்க.

//இது போன்ற திருமணங்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் நடை பெறுவது வியப்பிற்குரியது. இவை ஆதரிக்கப் பட வேண்டிய திருமணம். ஜாதி மதம் என்ற பாகுபாடுகள் ஒழிய இது பொன்ற திருமணங்கள் பெருக வேண்டும்.//

சரியா சொல்லி இருக்கீங்க.

DREAMER said...

மகிழ்ச்சியளிக்கும் சுவாரஸ்யமான தகவல்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

கலகலப்ரியா said...

interesting.. =).. romba miss pannitten polaye.. sry pulavare..

முனைவர் இரா.குணசீலன் said...

மன மாற்றங்கள் வரவேற்கத்தக்கன.