கடவுளை மற..மனிதனை நினை..

20 February 2010

டரியல் (20-பிப்ரவரி-2010)

6:31:00 AM Posted by புலவன் புலிகேசி 20 comments
"வெள்ளி நிலா" என்ற பதிவர்களுக்கான முதல் பத்திரிகை வெளிவந்திருக்கிறது. அதில் என் கதை வெளிவந்து முடிவு மாற்றம் செய்தது குறித்து முன்னரே எழுதியிருந்தேன். அந்த மாற்றம் என்னைக் கேட்காமல் நிகழ்ந்தது. அது குறித்து ஷர்புதீனிடம் நேரடியாக கேட்டேன். "தவறான புரிதலும்,நேரமின்மையும் காரணம் எனக் கூறினார்". அதில் உண்மையிருந்தது.

ஆனால் இனி ஒரு இதழ் வெளியிடும் போது ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வரும் எழுத்துக்களை மட்டும் படித்து பரிசீலனைக்கு எடுத்து கொண்டு தேவைப்பட்டால் அதை அனுப்பியவரிடம் அனுமதி பெற்று மாற்றம் செய்ய வேண்டியது அவரது பொறுப்பு.

மேலும் இந்த முதல் இதழில் வந்த கட்டுரை, கதை, நகைச்சுவை, புகைப்படங்க்கள்(அதிலும் அந்த பவ்ய புகைப்படம்) அனைத்தும் நன்றாகத்தான் இருந்தது. ஒரு சிறிய வேண்டுகோள் "இனி பதிப்புகளை கதை, கட்டுரை, சினிமா,கவிதை எனப் பிரித்து அதற்கேற்றார் போல் பக்கங்கள் வடிவமைக்கப் பட்டு வெளியிட்டால் நன்றாக இருக்கும்".

வெள்ளி நிலாவின் முயற்சி பாராட்டுதலுக்குரியது. அது மென்மேலும் வளர்ந்து ஒரு பெரிய ஊடகமாக மாற என் வாழ்த்துக்கள். அப்பறம் அடுத்த இதழுக்கான என் படைப்பைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் அனுப்பி வைக்கிறேன் ஷர்புதீன்.

----------------------

சென்ற பதிவின் பின்னூட்டத்தில் வானம்பாடிகள் ஐயா "கள்ளக் காதல் என ஏன் சொல்கிறீர்கள்?" எனக் கேட்க அதற்கு நான் அதை எப்படி கூறுவது என வினவ, அவர் "அதற்கு எப்பெயரும் இட வேண்டியதில்லை" என சொல்ல, "அப்படியே விட்டு விட வேண்டுமா?" என நான் ஆதங்கம் தெரிவிக்க "அதை நீங்களே யோசிங்கன்னு" முடிச்சிட்டாரு. கடைசி வரைக்கும் என்ன சொல்ல வந்தாருன்னு புரியவே இல்ல.

அதற்கு நான் அளித்த பதில் பின்னூட்டம்

எனது பார்வையில் அது தவறான ஒன்று. கண்டிக்கத்தக்கது. அது போல் கணவனிடம்/மனைவியிடம் பாசமோ, காதலோ கிடைக்கவில்லை என நினைத்தால் "திருவாரூர் சரவணன்" சொன்னது போல் விவாகரத்து பெற்று பிடித்தவனை/பிடித்தவளை மணம் செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து இது போன்ற உறவுகள் தவறானது.

//திருவாரூரிலிருந்து சரவணன் said...

கணவனுடன் ஒத்துப்போகாத நிலையில் விவாக ரத்து செய்து வேறொரு பொருந்தும் துணியை தேடிக்கொள்ளலாம். ஆனால் அவன் சம்பாதிக்கும் பணம் மட்டும் வேண்டும்,ஆனால் சுகத்துக்கு மற்றொருவன் என்ற விஷயம் நம்மில் பெரும்பாலானோர் விரும்பத்தகாத ஒன்றுதான்.மைன்ட் ஒப்பன் பண்ணினா அது நம்மை இன்னும் செம்மைப்படுத்தக்கூடியதாதான் இருக்கணும். எந்த கட்டுப்பாடும் இல்லைன்னா எல்லா ஆணும் ஏன் சில பெண்களும் கூட குழந்தையை பெற்றுக்கொள்ளவோ அல்லது பராமரிக்கவோ விரும்ப மாட்டார்கள். இப்போது பெற்றோரின் (?!) அரவணைப்பு இருக்கும்போதே பல குழந்தைகள் தடம் மாறிப்போகிறார்கள். இப்படி ஒரு கலாச்சாரம் இல்லாமல் கட்டற்ற காமம் பின் பற்றப்படும் என்றால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். நாட்டுதான் சொல்கிறேன். கதையில் சொல்லப்பட்டிருக்கும் கள்ளக்காதலுக்கான காரணம் வெறும் காரணம் தானே தவிர,அதுநியாயப்படுத்தக்கூடியது இல்லை என்பது என் கருத்து.//

இப்ப நீங்க சொல்லுங்க உங்க கருத்தை.

----------------------


இது வேற ஒன்னும் இல்லீங்க. நம்ம சென்னை கூவம் தான். சொல்ல சொல்ல கேக்காம நாம உபயோகிக்கும் பிளாஸ்டிக் பேப்பர்களும், பாட்டில்களும் தான். இதே போல் நாம் தொடர்ந்தால் நிச்சயம் ஒரு நாள் கூவம் தேங்கிப் போய் சாக்கடைகள் வெளியேற்றப் படாமல் சென்னை வாசிகள் நோய்வாய்ப் பட்டு சென்னையை விட்டு அனைவரும் வெளியேறும் நிலை வரும்.

அத்தோடு நின்று விடாது. இதனால் காற்று மண்டலமும் பாதிக்கப் பட்டு பல சீரழிவுகள் நிகழ்வது நிச்சயம். இதைத் தடுக்க நாம் அனைவரும் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். என் கையை நான் உயர்த்தியாச்சு, என்னுடன் கைக் கோர்க்க விரும்புறவங்க பின்னூட்டத்துல கை கோர்த்து உறுதிமொழி எடுத்துக்குங்க.

----------------------

கேபிள் மற்றும் பரிசலின் புத்தகங்களை ஆன்லைனில் வாங்க

லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்

டைரிக்குறிப்பும் காதல்மறுப்பும்




மேலும் தொடர்புக்கு:
கேபிள் சங்கர் : 9840332666
பரிசல் காரன் : 9894747014
குகன் : 9940448599
---------------------

இந்த வாரப் பதிவர்

நம்ம நண்பர் .பாலாசி.

பதிவுகளைத் தேடிப்பிடித்து பின்னூட்டமிடுவதில் வானம்பாடிகள் ஐயாவை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இவரது பதிவுகள் சமுதாய தாக்கம் ஏற்படுத்துவதாக இருக்கும். மேலும் "குழந்தையின் குமுறல்களாக" இவர் எழுதும் கவிதைகள் நெஞ்சைத் தொடும். பதிவுலகில் எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களில் இவரும் குறிப்பிடத்தக்கவர். நாங்கள் இருவரும் ஒரே ஊர்க் காரர்கள். ஆனால் சந்தித்தது என்னவோ ஒரே ஒரு முறைதான்.

இவரது வலைப்பூ:சி@பாலாசி
----------------------

இந்த வார டரியல் நம்ம ஆரூரன் விஸ்வநாதன் அவர்களின் அனுபவப் பகிர்வான "கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி". கண்ணாடி அணிந்திருப்பவர்கள் அதைத் தவிர்க்க பாண்டிச்சேரியில் அளிக்கப்படும் பயிற்சி குறித்த விபரங்கள் இதில் தொகுத்து வழங்கியிருக்கிறார். பொது நல நோக்குடன் இதைப் பகிர்ந்த ஆரூரன் அவர்களுக்கு என் நன்றிகள்.

----------------------

20 விவாதங்கள்:

Paleo God said...

நன்றி புலவரே எனக்கு அந்த விடுதலைதான் வேண்டும், படித்துவிடுகிறேன். :)

அன்புடன் நான் said...
This comment has been removed by the author.
அன்புடன் நான் said...
This comment has been removed by the author.
அன்புடன் நான் said...

ஆனால் இனி ஒரு இதழ் வெளியிடும் போது ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வரும் எழுத்துக்களை மட்டும் படித்து பரிசீலனைக்கு எடுத்து கொண்டு தேவைப்பட்டால் அதை அனுப்பியவரிடம் அனுமதி பெற்று மாற்றம் செய்ய வேண்டியது அவரது பொறுப்பு.//

இதை நான் ஆதரிக்கிறேன்.... என்னத்தான் இருந்தாலும் படைப்பாளனின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்படும் திருத்தலை என் மனம் ஏற்க மறுக்கிறது.

*அடுத்து அந்த கூவத்தை பார்க்கும் போதெ குமட்டுகிறது.
*அடுத்து அந்த இரண்டு பதிவர்களின் பதிவையும் படித்தாகிவிட்டது,
* உங்களோடு கை கோர்க்கிறேன் நானும்..... நெகிழியை தவிர்க்க.

தகவலுக்கு நன்றி,

சைவகொத்துப்பரோட்டா said...

நானும் கையை உயர்த்தியாச்சு.

ILLUMINATI said...

தல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html

Anonymous said...

`டரியல்` என்றால் என்ன?

Chitra said...

டரியல் - இந்த வாரம்: சமூதாய கண்ணோட்டம். அருமை.
கூவம், இன்னும் மோசமாக போவதுக்கு முன்னே, விழிப்புணர்வுடன் ஏதாவது உடனே செய்ய வேண்டும்.

Prathap Kumar S. said...

கண்ணாடியிலிருந்து விடுதலை எனக்கு வேணும்... பின்னோக்கி கூட ஒரு தடவை சொலலியிருந்தாரு... முயற்சிபண்ணுறேன்...

CS. Mohan Kumar said...

அட.. வாரம் ஒரு பதிவர்; மற்றும் நல்ல இடுகைகளும் அறிமுக படுதுரீன்களா? இத்தனை நாளா தெரியாம போச்சே நல்ல பணி! தொடர்க

வெள்ளிநிலா said...

கருணாகரசு, புலிகேசி - AGREED

க.பாலாசி said...

//அதை அனுப்பியவரிடம் அனுமதி பெற்று மாற்றம் செய்ய வேண்டியது அவரது பொறுப்பு.//

சரிதான்..

யப்பா அந்த பிளாஸ்ட்டிக் குப்பைகளை பார்த்தாலே பயமா இருக்குங்க....

//இந்த வாரப் பதிவர்
நம்ம நண்பர் க.பாலாசி//

மிக்க நன்றி நண்பா...

//பொது நல நோக்குடன் இதைப் பகிர்ந்த ஆரூரன் அவர்களுக்கு என் நன்றிகள்.//

நமது நன்றிகளும்...

ஸ்ரீராம். said...

கவிதை, கதை என பிரித்து வெளியிடச் சொல்லும் யோசனை நல்ல யோசனை.

Thenammai Lakshmanan said...

சென்னை மக்கள் மாறனும் புலிகேசி எங்கும் குப்பைதான்

ஜெட்லி... said...

முதல்லா பீச்சில் பிளாஸ்டிக் பொருட்கள்
யூஸ் பண்ண கூடாதுனு அரசு சட்டம் கொண்டு
வரணும்......நான் எப்பவோ உயர்திட்டேன்...

அகநாழிகை said...

நல்லாயிருக்குங்க. பகிர்தலுக்கு நன்றி.

MJV said...

வணக்கம் புலி. இந்த டரியல் கலக்கல். அறிமுகமும் அற்புதம். இப்பொழுதெல்லாம் கண்ணாடி கோப்பைதான் புலி!!!

Athiban said...

எனது வலைப்பதிவுக்கும் வருகை தாருங்கள் புலிகேசி. டரியல் சூப்பர்.

www.tn-tourguide.blogspot.com

திவ்யாஹரி said...

//இனி ஒரு இதழ் வெளியிடும் போது ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வரும் எழுத்துக்களை மட்டும் படித்து பரிசீலனைக்கு எடுத்து கொண்டு தேவைப்பட்டால் அதை அனுப்பியவரிடம் அனுமதி பெற்று மாற்றம் செய்ய வேண்டியது அவரது பொறுப்பு.//
"இனி பதிப்புகளை கதை, கட்டுரை, சினிமா,கவிதை எனப் பிரித்து அதற்கேற்றார் போல் பக்கங்கள் வடிவமைக்கப் பட்டு வெளியிட்டால் நன்றாக இருக்கும்"

ம்.. ம்.. சரியாக சொன்னீர்கள் நண்பா..

கையை உயர்த்திட்டேன் நண்பா..

நண்பர் பாலாசி இந்த வார பதிவராக வெளியிட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சி நண்பா..

பொது நல நோக்குடன் பகிர்ந்த ஆரூரன் அவர்களுக்கு என் நன்றிகள். இதை எங்களுக்கு தெரியப்படுத்திய உங்களுக்கு எங்கள் நன்றிகள் புலவரே..

ரோஸ்விக் said...

அருமை புலவா...

கூவம் பகீர். :-(